Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மது, சிகரெட் விற்பனையைத் தடுத்தால், ஆட்சி கவிழ்ந்து போகும்! - ஜனாதிபதி கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

maithri-warn-380-seithy.jpg

மது விற்பனையைத் தடை செய்ய முடியும், எனினும் மதுபானம் உபயோகிப்போர் கிளர்ந்தெழுந்து அரசாங்கத்தைக் கவிழ்ப்பதைத் தடுக்க முடியாது போகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். போதை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி ஏற்பாடு செய்திருந்த தேசிய போதைத் தடுப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்ட செயற்பாட்டு நிகழ்வு நேற்று கேகாலை சென். ஜோசப் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

   

நாட்டின் தலைவர் என்ற வகையில் மது மற்றும் சிகரட் விற்பினைக்கான அனுமதியை இரத்துச் செய்யத் தயார். எனது இரு கரங்களையும் உயர்த்தி முழுமையான ஆதரவை என்னால் வழங்க முடியும். எனினும் அது நடைபெறக்கூடிய காரியமல்ல. விற்பனையைத் தடை செய்ய முடியும். எனினும் குடிப்பதை நிறுத்த முடியாது. அவர்கள் ஒன்றிணைந்து அரசையே கவிழ்ப்பது உறுதி.

சிகரட் மற்றும் மது அருந்துவோரினால் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உலகில் குறிப்பாக மெக்சிகோ போன்ற நாடுகளில் மது கட்டுப்படுத்தல் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஹெரோயின் ஹசீஸ் மர்ஜுவான் போன்ற போதைவஸ்து வர்த்தகர்களால் உலகளவில் அரசாங்கங்களை உருவாக்குவதிலும் கவிழ்ப்பதிலும் முக்கியமானவர்களாகத் திகழ்கின்றனர். நாடுகளுக்கிடையில் போதைவஸ்து தொன் கணக்கில் பரிமாற்றப்படுகின்றது. இதன் மூலம் உலகில் போதைவஸ்து எந்தளவு முக்கியமானதொன்றாக உள்ளது என்பதை உணர முடிகிறது.

ஒரு பக்கம் உலக நாடுகள் மது ஒழிப்பு போதை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அதேவேளை, மறுபக்கம் இத்தகைய செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. சட்டத்தினால் இதனை கட்டுப்படுத்த தண்டனைகளை வழங்க முடியும். நாம் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் உச்ச அளவில் அதனை மேற்கொள்கின்றோம். எனினும் சமூக ரீதியில் தேவையான சமூக மறுசீரமைப்பு முக்கியமாகிறது. இதனால் மது பாவனையைக் கட்டுப்படுத்துவதே எமது செயற்பாடாக வேண்டும். இதற்கு பொலிஸார், மாவட்ட, பிரதேச செயலகங்கள், அரச நிறுவனங்கள் தத்தமது நிறுவனங்களில் மதுபானம் சிகரட் பாவிப்பதை நிறுத்த வேண்டும். இதற்காக நாம் ஜனாதிபதி செயலகத்தில் விசேட பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளோம். இதற்கான வழிகாட்டல்களையும் நாம் வழங்கியுள்ளோம் தெரிவித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=144999&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.