Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலிய மண்ணில் சாதனை நிகழ்த்திய டெய்லர்: பாராட்டாத வீரர்கள்

Featured Replies

அவுஸ்திரேலிய மண்ணில் சாதனை நிகழ்த்திய டெய்லர்: பாராட்டாத வீரர்கள்
 
taylor_001.jpgஅவுஸ்திரேலிய மண்ணில் அதிகபட்ச ஸ்கோரை எட்டிய அயல்நாட்டு வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் டெய்லர்.

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 559 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் நியூசிலாந்து தக்க பதிலடி கொடுத்தது. அந்த அணியின் கேன் வில்லியம்சன் 166 ஓட்டங்களும், டெய்லர் 290 ஓட்டங்களும் குவித்தனர். டெய்லர் 290 ஓட்டங்கள் எடுத்து கடைசி வீரராக ஆட்டமிழந்தார்.

ஒரு நியூசிலாந்து வீரர் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அடித்த அதிக பட்ச ஓட்டங்கள் இதுவாகும். இந்த சாதனையைப் படைத்த டெய்லரை ஒரு அவுஸ்திரேலிய வீரர்கள் கூட கைகுலுக்கி பாராட்டவி்ல்லை.

இதனை நேரில் மற்றும் தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.

இதுகுறித்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடிய டிர்க் நன்னேஸ், டெய்லரை கைகுலுக்கி மரியாதை செலுத்த விரும்பாத   அவுஸ்திரேலிய வீரர்களின் செயல், விளையாட்டு வீரர்களின் நன்மைக்கு எதிராக படுபயங்கரமானது என்று கூறியுள்ளார்.

taylor_002.jpg      

http://sport.lankasri.com/view.php?23DA2cgMo42C4203lA3dKOJ22o02e2Ag2bUmD3

 

 
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுவது இருக்கட்டும் , முதலில் தூசன வார்த்தைகளால் டெய்லரைத் தைக்காமல் விட்டார்களே அதுவரை பிழைச்சுட்டார்...!

  • தொடங்கியவர்
2 hours ago, suvy said:

பாராட்டுவது இருக்கட்டும் , முதலில் தூசன வார்த்தைகளால் டெய்லரைத் தைக்காமல் விட்டார்களே அதுவரை பிழைச்சுட்டார்...!

ஹா ஹா நல்ல பன்ச்:)

227149.jpg

Mitchell Johnson gets a guard of honour, Australia v New Zealand, 2nd Test, Perth, 5th day, November 17, 2015

இதுதான் பண்பு

  • தொடங்கியவர்

ராஸ் டெய்லர் சாதனைக்கு கை கொடுத்து பாராட்டாத ஆஸி. வீரர்கள்: வர்ணனையாளர்கள் சாடல்

 

ராஸ் டெய்லர். | படம்: ஏ.எஃப்.பி.
ராஸ் டெய்லர். | படம்: ஏ.எஃப்.பி.

பெர்த் டெஸ்ட் போட்டியில் 290 ரன்கள் எடுத்து 111 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராஸ் டெய்லரை எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரும் பாராட்டவில்லை, அவர் கையை குலுக்கி வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தின் வர்ணனையாளரும் முன்னாள் வீரருமான டர்க் நேனஸ் சாடியுள்ளார்.

இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்டில் வெளியான செய்தி வருமாறு:

பெர்த் டெஸ்ட் போட்டியில் 290 ரன்கள் எடுத்த ராஸ் டெய்லர், ஆஸ்திரேலிய மண்ணில் அயல்நாட்டு வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக அதிக டெஸ்ட் ரன்னை ஒரு இன்னிங்சில் எடுத்த 2-வது வீரர் என்ற ஒரு அரிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

அவர் 4-ம் நாள் ஆட்டத்தில் நேதன் லயன் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவர் கூட டெய்லரின் மாரத்தன் இன்னிங்ஸிற்காக அவரிடம் சென்று கை கொடுக்கவில்லை.

அப்போது ஏபிசி-யில் வர்ணனை செய்து கொண்டிருந்த டர்க் நேனஸ், “290 ரன்களை எடுத்துள்ளார், ஆஸ்திரேலிய முகாமிலிருந்து ஒருவர் கூட டெய்லரிடம் சென்று கை கொடுக்கவில்லை.

இந்த ஆட்டம் விளையாடப்படும் உணர்வை நினைத்துப் பார்க்கும் போது எனது ஏமாற்றத்தை வெளியிடாமல் இருக்க முடியவில்லை. ஒருவர் கூட டெய்லரிடம் சென்று அவரது கையை குலுக்கவில்லை. ஒரு வீரர் அபாரமான ஒரு இன்னிங்ஸை ஆடிவிட்டு வெளியேறுகிறார், அதனை பாராட்டக்கூட மனம் வராதது பயங்கரமான ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்பாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கற்றுக் கொடுக்கிறோம், பாராட்டக் கற்றுக் கொடுக்கிறோம் ஆனால் மைதானத்தில் அதைக் கடைபிடித்தால் என்ன ஆகிவிடப்போகிறது? ஆனால் இப்படி அடிக்கடி நடப்பது பார்க்க நன்றாக இல்லை” என்று சாடினார்.

முன்னாள் நியூஸிலாந்து அதிரடி வீரர் மார்க் கிரேட்பேட்ச் கூறும்போது, “இது அவமானகரமானது; ஆனால் இது ஆஸ்திரேலிய வீரர்களின் குணாதிசயத்தை நமக்கு தொகுத்தளிக்கிறது. அவர்கள் மிகவும் அராஜகமானவர்கள்.

டேவிட் வார்னர் முதல் இன்னிங்சில் 253 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த போது நியூஸிலாந்து வீரர்களில் பலர் ஓடி வந்து வார்னரின் கையை குலுக்கினர்” என்றார்.


ஆனால், ராஸ் டெய்லர் இதனைக் கண்டு கொள்ளவில்லை, அவரிடம் இது பற்றி கேட்ட போது, “அவர்கள் நேதன் லயனையும் கேட்ச் பிடித்த வெல்ஸையும் பாராட்டச் சென்றனர். இரண்டாவதாக, நான் மைதானத்தின் வேறு ஒரு பகுதியில் பெவிலியனுக்கு வேகமாகச் சென்றேன், அதனால் பாராட்டவில்லை என்று கருத இடமில்லை, இதெல்லாம் தற்செயல்தான்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article7888612.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சாதனை படைத்த ராஸ் டெயிலரை பாராட்ட மனமில்லாத ஆஸ்திரேலிய வீரர்கள் !

 

ண்மையில் பெர்த் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் , நியூசிலாந்து வீரர் ராஸ்டெயிலர் 290 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய மண்ணில், வெளிநாட்டு வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுதான்.

ras%20.jpg

ஆனால் ராஸ் டெயிலர் மைதானத்தில் இந்த சாதனையை படைத்த போது, அவரை பாராட்டி ஒரு ஆஸ்திரேலிய வீரர் கூட கைகொடுக்க முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தின் வர்ணணையாளரும் முன்னாள் வீரருமான டர்க் நேனஸ் தனது வர்ணணையின் போதே, குறை கூறி விட்டார்.

'' ஒரு வீரர் ஒரு சாதனை படைக்கிறார். அந்த சமயத்தில் எதிரணியை சேர்ந்த ஒருவர் கூட டெய்லரிடம் சென்று பாராட்டி கை குலுக்க முன்வரவில்லை. இது எந்தவிதமான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் என்று தெரியவில்லை. குழந்தைகளுக்கு நாம் நன்றி தெரிவிக்க, பாராட்ட கற்று கொடுக்கிறோம். மைதானத்திலும் அதனை கடைபிடிக்க வேண்டும்.'' என கூறினார் டர்க் நேனஸ்.

நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் கிரேட்பேட்ச், ''ஆஸ்திரேலியர்கள் எப்போமே அராஜகமாக நடந்து கொள்பவர்கள், இது அவமானகரமான செயல் '' என்றார். இதே போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் முதல் இன்னிங்சில் 253 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து வீரர்கள் வார்னரை பாராட்டத் தவறவில்லை.

இது குறித்து ராஸ் டெயிலர் கூறுகையில், “ என்னை கேட்ச் பிடித்து அவுட் செய்த நாதன் லயனை பாராட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் சென்றனர். நான் வேறு பகுதியில் இருந்து பெவிலியன் திரும்பினேன். தற்செயலாக நடந்து விட்டது '' என்றார்.

இந்த குற்றச்சாட்டினையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லேமென் ராஸ்டெயிலரை சந்தித்து கைகுலுக்கி தனது பாராட்டினை தெரிவித்தார்.

http://www.vikatan.com/news/article.php?aid=55203

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.