Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாண சபை கூடும் நேரத்தை பயனுறுதி உடையதாக மாற்றுங்கள்

Featured Replies

8008.jpg

வீதியில் சென்ற இளைஞர்கள் இருவரை மானிப்பாய் பொலிஸார் கண்டபாட்டில் தாக்கிய சம்பவம் பொலிஸாரின் அத்துமீறலைக் காட்டுகிறது. இவ்வாறு தாக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவின் மகன் என்று தெரிய வருகிறது. 

வீதியில் சென்ற இரண்டு இளைஞர்கள் மீது தமக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிக மோசமாகத் தாக்குவதென்பதற்குள் தமிழ் இளைஞர்கள் என்ற அடிப்படை இருப்பதைக் காண முடியும். 
பொலிஸாரின் அத்துமீறல்கள் பல இடங்களில் நடக்கின்ற போதிலும் எதுவும் செய்ய முடியாது. நட வடிக்கை எடுக்க முற்பட்டால் தொடர்ச்சியான பழிவாங்கலுக்கே ஆளாக வேண்டி வரும் என்ற நிலைமை காரணமாக பேசாதிருக்கின்ற சம்பவங்களே நடந்து கொண்டிருக்கின்றன. 

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னர் பாராளுமன்றத்தில் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான தவராசாவின் மகனுக்கு இங்ஙனம் நடக்கிறது எனில் சாதாரண மக்களின் நிலைமை என்ன? என்பதை ஒரு கணம் நாம் சிந்தித்தாக வேண்டும்.
செய்திகள் வெளிவரவில்லை என்பதற்காக எதுவும் நடக்கவில்லை என்று யாரும் நினைத்து விடக் கூடாது. அதிலும் குறிப்பாக வீதிப்போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபட்டு வருகின்ற பொலிஸாரில் சிலர் பொதுமக்களை கடுமையாக அவகெளரவப்படுத்துகின்ற சம்பவங்கள் நிறையவே நடக்கின்றன. 
இத்தகைய நிகழ்வுகளுக்கு பின்னணியாக இன விவகாரம்தான் இருக்கிறது என்று எண்ணத் தோன்றும். எதுவாயினும் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மாகாண சபையின் நேரத்தில் மக்களுக்கு பயனுறுதி மிக்க விடயங்களை எடுத்துக் கொண்டு பேசுவது நல்லது. 

எதிர்க்கட்சித் தலைவரிடம் சிறந்த ஆளுமை இருப்பது வெளிப்படையானது. அதற்காக முதல மைச்சரை எதிர்க்கின்ற ஆளும் தரப்புடன் இணை ந்து கொண்டு முதலமைச்சரிடம் கேள்வி கேட்பது என்பது அவ்வளவு நல்லதல்ல. இது முதலமைச்ச ருக்கு எதிரானவர்கள் உங்களை உசார்ப்படுத்தி முத லமைச்சருக்கு எதிரான செயற்பாட்டை வலுப்படுத் தச் செய்யும் நடவடிக்கையாகும்.
 கடந்த மாகாண சபை அமர்வின் போது அமைச் சர்கள், செயலாளர்களின் வாகனங்கள் தொடர்பில் நீங்கள் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். அந்தக் கேள்வியின் இறுதிப் பயன்பாடு என்ன என்பதை உணர முடியவில்லை. 

முதலமைச்சரைக் கொண்டு பதில் அளிக்க வைப் பதை ஒரு வெற்றிச் செயலாகக் கருதிக் கொள்கின்ற அற்பத்தனமான செயல்களை மாகாண சபை உறுப்பினர்கள் செய்தாலும் அத்தகைய நேர விரயங்களை தடுப்பதில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தாங்கள் பங்காற்ற வேண்டும்.
ஆக, தமிழ் மக்கள் எத்தனையோ துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். தங்கள் மகன் உட்பட இரண்டு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கடுமையாகத் தாக்கிய சம்பவத்தை பாருங்கள். இது போன்ற ஏகப்பட்ட கொடுமைத் தன ங்கள், நிர்வாகத் தாமதங்கள், பழிவாங்கல்கள், பதவி எதேச்சாதிகாரங்கள் நம் மண்ணில் மிகத் தாராளமாக நடக்கின்றன. இதற்கு எதிராகக் குரல் கொடுங்கள். அது பயனுறுதி மிக்கதாக இருக்கும். 
இதை விடுத்து நீங்களும் சபையைக் குழப்புவர்களுடன் சேர்ந்தால், பாவம் தமிழ் மக்கள் என்று சொல்வதைத் தவிர வேறுவழி எதுவும் இருக்காது.   

http://www.valampurii.lk/valampurii/content.php?id=8008&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

 இதென்ன கொடுமை. நாங்கள் ஒரே நாட்டுக்கை ஒரே இனமாய்  வாழ முயற்சி எடுக்கிறோம். எல்லாத்தையும் கேள்வி கேட்டு குழப்ப போகினம். இதுக்கு நாங்கள் பொறுப்பான எதிர்க்கட்சியாய் இருந்து ஒருநாளும் இடமளிக்கமாட்டோம். துப்புக்கெட்ட சம்பந்தன் துள்ளி எழப்போறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.