Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

U 19 உலககிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள் கருத்துக்கள்

Featured Replies

U 19 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி

December 24, 2015

பங்களாதேஷில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான இஷான் கிஷான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக மற்றுமொரு விக்கெட் காப்பாளர் ரிஷ்பாப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் 6 துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் 7 பந்து வீச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி விபரம் வருமாறு

7809-720x480

Ishan Kishan (capt), Rishabh Pant (vice-capt), Washington Sundar, Sarfaraz Khan, Amandeep Khare, Anmolpreet Singh, Armaan Jaffer, Ricky Bhui, Mayank Dagar, Zeeshan Ansari, Mahipal Lomror, Avesh Khan, Shubham Mavi, Khaleel Ahmed, Rahul Batham

இந்த தொடரில் நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நோபால் அணிகளுடன் குழு ‘டி’யில் இடம்பெற்றுள்ள இந்தியா தனது முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கின்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=6630&cat=2

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

December 24, 2015

U-19  உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான முத்தரப்பு கிரிக்கட் தொடரில்  பங்கேற்றிருந்த 19 பேர் கொண்ட இலங்கை அணியிலிருந்து ஐவர் நீக்கப்பட்டு சரண நாணயக்கார அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். அத்துடன் சரித் அஸலங்க தொடர்ந்தும் அணித்தலைவர் பதவியை ஏற்றுள்ளார். அவருடன் இணைந்து சகலதுறை ஆட்ட விரர் ஷம்மு அஷான் துணைத்தலைவராக தெரிவாகியுள்ளார். தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணி விபரம் வருமாறு.

SLU19Squad-696x464-720x480

Kaveen Bandara, Salindu Ushan, Shammu Ashan (vc), Charith Asalanka (capt), Avishka Fernando, Wanidu Hasaranga, Kamindu Mendis, Charana Nanayakkara, Vishad Randika, Lahiru Samarakoon, Asitha Fernando, Lahiru Kumara, Jehan Daniel, Damitha Silva, Thilan Nimesh

U-19  உலகக்கிண்ண கிரிக்கட் தொடரானது எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பித்து நடைபெறவுள்ளது. இத் தொடரில் கனடா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை தனது முதல் போட்டியில் கனடாவை எதிர்கொள்ளவுள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=6626&cat=2

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அண்டர்-19 கிரிக்கெட் உலகக் கோப்பையிலிருந்து ஆஸ்திரேலியா விலகல்

 
கிரிக்கெட் ஆஸ்திரேலியா சேர்மன். | ஜேம்ஸ் சதர்லேண்ட்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா சேர்மன். | ஜேம்ஸ் சதர்லேண்ட்.

இந்த மாத இறுதியில் வங்கதேசத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்பபட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்காது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலியா விலகியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏற்கெனவே மூத்த ஆஸ்திரேலிய அணி வங்கதேச தொடரை இதே காரணங்களுக்காக ரத்து செய்த நிலையில் தற்போது உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரிலிருந்தே ஆஸ்திரேலியா விலக முடிவெடுத்திருப்பது சர்ச்சைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்தகவல்கள் இருப்பதால் ஆஸ்திரேலிய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க வங்கதேச பயணத்தை ரத்து செய்த ஆஸ்திரேலியா தற்போது அதே காரணங்களுக்காக உலகக் கோப்பை போட்டியையே துறக்க முன்வந்துள்ளது.

அதாவது வங்கதேசத்தில் ஆஸ்திரேலியர்களுக்கு ஆபத்து என்ற உறுதியான தகவல்களையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தலைவர் ஜேம்ஸ் சதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அயர்லாந்து அணி பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. பிரிவு-டி-யில் இந்தியா, நேபாளம், நியூஸிலாந்து அணிகளுடன் ஆஸ்திரேலியா இருந்தது, தற்போது அயர்லாந்து ஆஸ்திரேலியாவுக்கு பதிலாக விளையாடவுள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D19-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article8068848.ece?homepage=true

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
19 இன் கீழ் இலங்கை அணி பயிற்சிப் போட்டிகளில் வெற்றி
2016-01-25 20:20:27

14412sri-lanka-cricket-logo1.jpgபங்­க­ளா­தேஷில் நாளை ஆரம்­ப­மா­வுள்ள 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கு முன்­னோ­டி­யாக நடை­பெற்ற பயிற்சி ஆட்­டங்­களில் இலங்கை அணி தனது இரு போட்­டி­க­ளிலும் வென்­றுள்­ளது.

 

இன்று நடை­பெற்ற நேபாளம் அணி­யு­ட­னான போட்­டியில் இலங்கை அணி 65 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டி­யது. 

 

சவார் நகரில் நேற்று நடை­பெற்ற இப்­போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 45 ஓவர்­களில் 9 விக்கெட் இழப்­புக்கு 230 ஓட்­டங்­களைப் பெற்­றது. ஷம்மு அஷான் 74 பந்­து­களில் 4 சிக்­ஸர்கள், பவுண்­ட­றிகள் உட்­பட ஆட்­ட­மி­ழக்­காமல் 81 ஓட்­டங்­களைக் குவித்தார்.

 

அணித்­த­லைவர் சரித் அச­லங்க 68 பந்­து­களில் 71 ஓட்­டங்­களைப் பெற்றார். பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய நேபாளம் அணி  42.1 ஓவர்­களில் 165 ஓட்­டங்­க­ளுடன் சகல விக்­கெட்­க­ளையும் இழந்­தது. இலங்கை அணியின் பந்­து­வீச்­சா­ளர்­களில்  வனிது ஹச­ரங்க 9 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­களை வீழ்த்­தினார். 

 

கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி நியூஸிலாந்தை 4 விக்கெட்களால் வென்றமை குறிப்பிடத்தக்கது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14412#sthash.6ypf8EiI.dpuf
  • தொடங்கியவர்
19 வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம்
2016-01-27 10:31:05

(நெவில் அன்­தனி)

 

144602016_Under-19_Cricket_World_Cup_logசர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் இளம் வீரர்­களின் ஆற்­றல்­களைப் பரீட்­சிக்கும் 19 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான 11ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிகள் (அணிக்கு 50 ஓவர்கள்) பங்­க­ளா­தேஷின் நான்கு பிர­தான நக­ரங்­களில் இன்று முதல் எதிர்­வரும் பெப்­ர­வரி 14ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளன.

 

நடப்பு சம்­பியன் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் போட்­டிளை முன்­னின்று நடத்தும் வர­வேற்பு நாடான பங்­க­ளா­தே­ஷுக்கும் இடையில் சித்­தாகொங் ஸாஹுர் அஹ்மத் சௌதரி விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெறும் குழு ஏயிற்­கான போட்­டி­யுடன் 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மா­கின்­றன.

 

இங்­கி­லாந்­துக்கும் ஃபிஜிக்கும் இடை­யி­லான குழு சியிற்­கான போட்டி சித்­தாகொங் அஸீஸ் விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

 

இப்போட்­டி­களில் குழு பியில் பங்­கு­பற்றும் இலங்கை, தனது முத­லா­வது போட்­டியில் கன­டாவை சில்ஹெட் மாவட்ட கிரிக்கெட் மைதா­னத்தில் நாளை சந்­திக்­க­வுள்­ளது.

 

இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை நடை­பெற்­று­வரும் இப்போட்­டி­களில் மூன்று தட­வைகள் சம்­பி­ய­னான அவுஸ்­தி­ரே­லியா கடைசி நேரத்தில் பாது­காப்பு கார­ணங்­களைக் காட்டி போட்­டி­யி­லி­ருந்து வில­கிக்­கொண்­டது. இதனை அடுத்து அவுஸ்­தி­ரே­லி­யாவின் இடத்தை நிரப்பும் வகையில் அயர்­லாந்தை இணைத்­துக்­கொள்ள சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை தீர்­மா­னித்­தது.

 

 

 

19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்­ணத்தை மூன்று தட­வைகள் வென்ற மற்­றொரு நாடான இந்­தியா, நடப்பு சம்­பயின் தென் ஆபி­ரிக்கா, முன்னாள் சம்­பி­யன்­க­ளான இங்­கி­லாந்து, பாகிஸ்தான் (2) ஆகிய நாடு­க­ளுடன் மொத்தம் 16 நாடு­களின் அணிகள் இவ்வருட 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ணப் போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றன. அதா­வது 9 டெஸ்ட் விளை­யாடும் நாடு­களும் ஏழு இணை மற்றும் சேர்க்­கப்­பட்ட நாடு­களும் நான்கு குழுக்­களில் போட்­டி­யி­டு­கின்­றன.

 

குழு ஏ: தென் ஆபி­ரிக்கா, பங்­க­ளாதேஷ், ஸ்கொட்­லாந்து, நம்பியா.
குழு பி: பாகிஸ்தான், இலங்கை, ஆப்­கா­னிஸ்தான், கனடா.
குழு சி: இங்­கி­லாந்து, மேற்­கிந்­தியத் தீவுகள், ஸிம்­பாப்வே, பிஜி.
குழு டி: இந்­தியா, நியூ­ஸி­லாந்து, நேபாளம், அயர்­லாந்து.

 

19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­பத்தில் இளையோர் உலகக் கிண்ணப்  அப் போட்­டி­களில் அவுஸ்­தி­ரே­லியா சம்­பி­ய­னா­கி­யி­ருந்­தது.

 

14460sri-lanka-u-19.jpg

 

 

19 வயதுக்குட்பட்ட இலங்கையின் உலகக் கிண்ண கிரிக்கட் குழாம் வீரர்களைப் படத்தில் காணலாம். அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக கவின் பண்டார, அசித்த பெர்னாண்டோ, சரித் அசலன்க (அணித் தலைவர்), ஷம்மு ஆஷான் (உதவி அணித் தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, நிற்பவர்கள் தமித்த சில்வா, கமிந்து மெண்டிஸ், ஜெஹான் டெனியல், சாலிந்த உஷான், விஷாந்த ரந்திக்க, லஹிரு குமார, லஹிரு சமரக்கூன், சரண நாணயக்கார, திலான் நிமேஷ்.


 

 

ஆனால் பத்து போட்­டிகள் என அழைக்­கப்­பட்­டது. அவுஸ்­தி­ரே­லி­யாவில் 1988இல் நடை­பெற்றவரு­டங்கள் கழித்தே மீண்டும் இளையோர் உலகக் கிண்ணப் போட்­டிகள் 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ணப் போட்­டிகள் என்ற பெயரில் புது­வ­டிவம் பெற்று இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை நடத்­தப்­பட்டு வரு­கின்­றது.

 

இவ்வருடப் போட்­டிகள் உப­கண்­டத்தில் நடை­பெ­று­வதால் பலம்­வாய்ந்த இந்­தியா நான்­கா­வது தட­வை­யாக சம்­பி­ய­னாகும் என்ற எதிர்­பார்ப்பு அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றது.

 

அதே­வேளை, வர­வேற்பு நாடான பங்­க­ளா­தே­ஷுடன் இலங்­கையும் சம்­பியன் பட்­டத்தைக் குறி­வைத்து களம் இறங்­கு­கின்­றன.

 

இம்முறை 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ணப் போட்­டி­களில் சம்­பி­ய­னா­கக்­கூ­டிய அதி சிறந்த வாய்ப்பு தனது அணிக்கு இருப்­ப­தாக இலங்கை பயிற்­றுநர் ரொஜர் விஜே­சூ­ரிய கூறி­யுள்ளார்.

 

அத்­துடன் கடந்த காலங்­க­ளிலம் பார்க்க இம்­முறை சக­ல­துறை வீரர்கள் பலர் இடம்­பெ­று­வ­தாகக் குறிப்­பிட்ட அவர் இலங்கை அணி சம­ப­லம்­வாய்ந்­தது எனவும் கூறினார்.

 

மேலும் இந்­தியா, இலங்கை, பங்­க­ளாதேஷ் ஆகிய மூன்று அணி­களும் தத்­த­மது பயிற்சிப் போட்­டி­களில் திற­மையை வெளிப்­ப­டுத்தி இல­கு­வான வெற்­றி­களை ஈட்­டி­யி­ருந்­தன. பாகிஸ்தான் ஒரு போட்­டியில் வெற்­றி­பெற்­றி­ருந்­த­ போ­திலும் இந்­தி­யா­வு­ட­னான பயிற்சிப் போட்­டியில் தோல்­வியைத் தழு­வி­யி­ருந்­தது.

 

இவற்­றை­விட தென் ஆபி­ரிக்கா, மேற்­கிந்­தியத் தீவுகள், இங்­கி­லாந்து ஆகிய நாடு­களும் வெற்­றிக்­கான முயற்­சியில் இறங்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

19 வய­துக்­குட்­பட்ட இலங்கை குழாம்
சரித் அச­லன்க (அணித் தலைவர், றிச்மண்ட், சக­ல­துறை வீரர்)
ஷம்மு ஆஷான் (உதவி அணித் தலைவர், ஆனந்த, சக­ல­துறை வீரர்)
கவீன் பண்­டார (டி. எஸ். சேனா­நா­யக்க, சக­ல­துறை வீரர்)
கமிந்து டிலன்க மெண்டிஸ் (றிச்மண்ட், துடுப்­பாட்ட வீரர்)
அவிஷ்க பெர்­னாண்டோ (மொறட்­டுவை புனித செபஸ்­தியார், துடுப்­பாட்­டக்­காரர்)

 

சாலிந்த உஷான் பெரெய்ரா (இஸி­பத்­தன, சக­ல­துறை வீரர்)
வனிந்து ஹச­ரங்க டி சில்வா (றிச்மண்ட், சக­ல­துறை வீரர்)
விஷாட் ரந்­திக்க டி சில்வா (இஸி­பத்­தன, விக்கெட் காப்­பாளர்)
ஜெஹான் கீத் சியொன் டெனியல் (மரு­தானை புனித சூசை­யப்பர், சக­ல­துறை வீரர்)

 

சரண ஜய­ஷன்க நாண­யக்­கார (தேர்ஸ்டன், சக­ல­துறை வீரர்)
லஹிரு சம­ரக்கூன் (கண்டி, தர்­ம­ராஜ, சக­ல­துறை வீரர்)
அசித்த மது­ஷன்க பெர்­னாண்டோ (கட்­டு­நே­ரிய புனித செபஸ்­தியார்)
லஹிரு சுதேஷ் குமார (கண்டி திரித்­துவம், சக­ல­துறை வீரர்)
தமித்த நவின் சில்வா (குரு­நாகல் மலி­ய­தேவ, சக­ல­துறை வீரர்)
திலான் நிமேஷ் குமார (மொறட்­டுவை ப்றின்ஸ் ஒவ் வேல்ஸ், சக­ல­துறை வீரர்)

 

14460small.jpg

 

 

கடந்த கால சம்­பி­யன்கள்

 

 

1988 அவுஸ்­தி­ரே­லியா, 1998 இங்­கி­லாந்து, 2000 இந்­தியா, 2002 அவுஸ்­தி­ரே­லியா, 2004 பாகிஸ்தான், 2006 பாகிஸ்தான், 2008 இந்­தியா, 2010 அவுஸ்­தி­ரே­லியா, 2012 இந்­தியா, 2014 தென் ஆபி­ரிக்கா.

 

நடந்து முடிந்­துள்ள 19 வய­துக்­கு­பட்ட உலகக் கிண்ணப் போட்­டி­களில் விளை­யா­டிய பிறையன் லாரா, சனத் ஜய­சூ­ரிய, சந்­திக்க ஹத்­து­ர­சிங்க, ரொமேஷ் களு­வித்­தா­ரண, மிஸ்பா உல் ஹக், மைக்கல் அதர்ட்டன், நாசர் ஹுசெய்ன், க்றிஸ் கேல், ராம்­நரேஷ் சர்வான், க்ரேம் ஸ்வான், டில்­ஹார பெர்­னாண்டோ, டரன் கங்கா, அப்துல் ரஸாக், ஷொயெப் மாலிக், இம்ரான் தாஹிர், மைக்கல் க்ளார்க், ஷேன் வொட்சன், மிச்செல் ஜோன்சன், ப்றெண்டன் மெக்­கலம், இயன் பெல், இம்ரான் நஸிர், ஃபைஸால் இக்பால், மொஹமத் சமி, ஆல்பி மோர்க்கல், டென்­டெண்டா டய்பு, யுவ்ராஜ் சிங், ஜெஹான் முபாரக், மலிந்த புஷ்­ப­கு­மார, கௌஷால் வீர­ரட்ன, க்றிஸ் கேல், ஷிக்கர் தவான், விராத் கோஹ்லி, ஹஷிம் அம்லா, மொஹமத் அஷ்­ரஃபுல், ட்வேன் ப்ராவோ, டரன் சமி, இர்பான் பத்தான், ஃபெர்வீஸ் மஹறூப், உப்புல் தரங்க, ஜீவன் மெண்டிஸ், தம்­மிக்க பிரசாத், டிம் ப்றெஸ்னான், ஜெஸி ரைடர், உமர் குல், அஸ்ஹர் அலி, ரோஹித் ஷர்மா, ரவீந்த்ர ஜடேஜா, டேவிட் வோர்னர், மார்ட்டின் கப்டில், டிம் சௌதீ, மொயீன் அலி, ஷக்கிப் அல் ஹசன், முஷ்ஃ­பிக்குர் ரஹிம், ஏஞ்­சலோ மெத்யூஸ், திமுத் கரு­ணா­ரட்ன, ஆஷான் பிரி­யஞ்சன், சச்­சித்ர பத்­தி­ரன, லஹிரு திரி­மான்ன, தினேஷ் சந்­திமால், திசர பேரேரா, ஆஷான் ப்ரியஞ்சன், ஸ்டீவன் ஸ்மித், ஜொஷ் ஹேஸல்வூட், கேன் வில்­லி­யம்சன், கோரி அண்­டர்சன், ட்ரென்ட் போல்ட், மிச்செல் மார்ஷ், டக் ப்றேஸ்வெல், ஜொஸ் பட்லர், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், குவின்டன் டி கொக், ஜேசன் ஹோல்டர், அஹ்மத் ஷேஹ்ஸாத் உட்­பட இன்னும் பலர் தத்­த­மது நாடு­களின் சிரேஷ்ட அணி­களில் இடம்­பி­டித்­தமை , ஷக்கிப் அல் ஹசன், முஷ்ஃபிக்குர் ரஹிம், ஏஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரட்ன, ஆஷான் பிரியஞ்சன், சச்சித்ர பத்திரன, லஹிரு திரிமான்ன, தினேஷ் சந்திமால், திசர பேரேரா, ஆஷான் பிரியஞ்சன், ஸ்டீவன் ஸ்மித், ஜொஷ் ஹேஸல்வூட், கேன் வில்லியம்சன், கோரி அண்டர்சன், ட்ரென்ட் போல்ட், மிச்செல் மார்ஷ், டக் ப்றேஸ்வெல், ஜொஸ் பட்லர், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், குவின்டன் டி கொக், ஜேசன் ஹோல்டர், அஹ்மத் ஷேஹ்ஸாத் உட்பட இன்னும் பலர் தத்தமது நாடுகளின் சிரேஷ்ட அணிகளில் இடம்பிடித்தமை விசேட அம்சமாகும்.

- See more at: http://metronews.lk/article.php?category=sports&news=14460#sthash.ACZUfY6f.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 
 
19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ணம்: பங்களாதேஷ், இங்கிலாந்து வெற்றி
 
 

article_1453899874-TamilEngVijiU19.jpg19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள், பங்களாதேஷில் இன்று ஆரம்பித்த நிலையில், முதல்நாள் இடம்பெற்ற போட்டிகளில், பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகள் வெற்றிபெற்றன.

பங்களாதேஷ், தென்னாபிரிக்க அணிக்களுக்கிடையிலான போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. நஸ்முல் ஹொஸைன் ஷான்டோ 73 (82), ஜொய்ராஸ் ஷேக் 46 (50), பினாக் கோஷ் 43 (51) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் வியான் முல்டெர், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலளித்தாடிய தென்னாபிரிக்க அணி,  48 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் லியம் ஸ்மித் 100 (146) ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில், மெஹ்டி ஹஸன், மொஹமட் சய்புடின் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் சயீட் சர்கார், சாலே அஹ்மட் ஷவொன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணிக்கும் பிஜி அணிக்குமிடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் டான் லொவ்ரென்ஸ் 173 (150), ஜக் பேர்ஹம் 148 (137) ஓட்டங்களைப் பெற்றனர். பதிலளித்தாடிய பிஜி அணி, 27.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 72 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக, பெனி வுனிவாகா, 36 (74) ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் சஹிக் மஹ்மூட், சாம் குர்றான் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் பென் கிறீன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

- See more at: http://www.tamilmirror.lk/164833#sthash.fEl2r7MG.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அண்டர் 19 உலகக்கோப்பை: நேபாளிடம் நியூஸிலாந்து அதிர்ச்சித் தோல்வி

 

 
 

வங்கதேசத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேபாளத்திடம் நியூஸிலாந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

ஃபாதுல்லாவில் இன்று நடைபெற்ற பிரிவு-டி போட்டியில் நியூஸிலாந்து, நேபாள அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் ஜே.எல்.ஃபினி முதலில் நேபாளத்தை பேட் செய்ய அழைத்தார். இதில் நேபாள அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடியநியூஸிலாந்து இளையோர் அணி 47.1 ஓவர்களில் 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நேபாள அணி 10 ஓவர்களில் 39 ரன்களை மட்டுமே எடுத்து தமலா (15) என்பவரது விக்கெட்டை இழந்திருந்தது. ஆனால் மற்றொரு தொடக்க வீரர் சுனார் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து 3-வது விக்கெட்டாக வீழ்ந்தார், முன்னதாக கார்க்கி என்ற வீரர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். நேபாள் 19-வது ஓவரில் 68/3 என்ற நிலையில் இருந்தது.

பிறகு நேபாளத்தின் விக்கெட் கீப்பர் கேப்டன் ரிஜால், ஆரிப் ஷேக் இணைந்து ஸ்கோரை 129 வரை எடுத்துச் சென்றனர். அப்போது கேப்டன் ரிஜால் 6 பவுண்டரிகளுடன் 65 பந்துகளில் 48 ரன்களுக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்ததாக ஆரிப் ஷேக், ரஜ்பீர் சிங் இணைந்து ஸ்கோரை 176 ரன்களுக்கு இட்டுச் சென்றனர். ஆரிப் ஷேக் 39 ரன்களில் ஸ்மித் என்ற பவுலரிடம் வெளியேறினார். ரஜ்பீர் சிங் 24 ரன்களில் வெளியேற 43.2 ஓவர்களில் நேபாளம் 180/6 என்று ஆனது. இந்நிலையில் குஷல் பூர்டெல் என்ற வீரர் இறங்கி 23 பந்துகளில் 5 பவுண்டடரிகளுடன் 35 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். நேபாளம் 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது.

நியூஸிலாந்து தரப்பில் ஸ்மித் 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியை தமலா, ஆரிப் ஷேக் ஆகிய பவுலர்கள் நெருக்கினர். இருவருமே ஒவ்வொரு மெய்டனை வீசினர், இதனால் ரவீந்திரா (4) மற்றும் ஆலன் (11) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 9-வது ஓவரில் 31/2 என்று ஆனது. மற்றொரு தொடக்க வீரர் ஜி.டி.பிலிப்ஸ், கேப்டன் ஃபினி இணைந்து 17 ஓவர்களில் 72 ரன்களை மட்டுமே சேர்த்து ஸ்கோரை 26-வது ஓவரில் 103 ரன்களுக்கு உயர்த்தினர்.

ஆனால் அப்போது நன்கு செட்டில் ஆன தொடக்க வீரர் பிலிப்ஸ் 52 ரன்களில் தமங் பந்தில் வெளியேற, உடனடியாகவே கேப்டன் ஃபினியும் 37 ரன்களில் தமங்கிடம் வீழ்ந்தார். இது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. லியோபார்ட், கிளார்க்சன் ஆகியோரும் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை 40வது ஓவரில் 144/6 என்று நியூஸிலாந்து சரிவு கண்டது.

அதன் பிறகு டி.என்.பிலிப்ஸ் (41), ஸ்மித் (24) இணைந்து 43-வது ஓவர் முடிவில் 168/7 என்று இருந்த ஸ்கோரை அடுத்த 20 பந்துகளில் 34 ரன்களை விளாசி 46.2 ஓவர்களில் 202 வரை கொண்டு சென்றனர். அப்போது திபேந்திர சிங் அய்ரி என்ற வலது கை மீடியம் பேஸ் பவுலர் 13 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ரன்களை விளாசி அபாயகரமாகத் திகழ்ந்த ஸ்மித்தை நம்பமுடியாத பந்து ஒன்றினால் வீழ்த்தினார். பெரிய இன்ஸ்விங்கரை வீசினார் அய்ரி, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி பெரிய அளவில் உள்ளே ஸ்விங் ஆகி மிடில் அண்ட் லெக் ஸ்டம்பைத் தாக்கியது.

பிறகு அதே ஓவரில் ஸ்காட் என்பவரது விக்கெட்டையும் வீழ்த்த, டி.என். பிலிப்ஸ் 41 ரன்களில் ரன் அவுட் ஆனார். நியூஸிலாந்து அணி 47.1 ஓவர்களில் 206 ரன்களுக்குச் சுருண்டு அதிர்ச்சித் தோல்வி தழுவியது. நேபாளுக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. ஆட்ட நாயகனாக நேபாள் தலைவர் ரிஜால் தேர்வு செய்யப்பட்டார்.

  • தொடங்கியவர்

ஜூனியர் உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி!

டாக்காவில் இன்று நடைபெற்ற ஜூனியர் (U-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், அயர்லாந்தும் மோதின.

ராகுல் திராவிடின் பயிற்சியின் கீழ் இஷன் கிஷான் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 268 ரன்கள் எடுத்தது. சர்ஃபராஸ் கான் அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அயர்லாந்து தரப்பில் லிட்டிலும் ஆண்டர்ஸும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதன்பிறகு ஆடிய அயர்லாந்து, 49.1 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மெக்கிலிண்டாக் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் ராகுல் பாதம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்தப் போட்டியில் இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

http://www.dinamani.com/sports/2016/01/28/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/article3249382.ece

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+196+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+
 
இலங்கை அணி 196 ஓட்டங்களால் வெற்றி print.png
 
 
 
 
19 வயதுக்கு கீழ் பட்டவர்களின் உலக கிண்ண போட்டியில் இலங்கை அணி பங்குபற்றிய முதல் போட்டியில் கனடா அணியை 196 ஓட்டங்களால் இலங்கை அணி வீழ்த்தியது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 315 ஓட்டங்களை பெற்றது.

அதிகபட்ச ஓட்டமாக அணித்தலைவர் சரித் அகலங்க 76 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணி 39 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
  • தொடங்கியவர்
ஆரம்பப் போட்டியில் இலங்கைக்கு அமோக வெற்றி
2016-01-29 11:53:47

14515u-19-wc-logo.jpg

 பங்களாதேஷில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இரண்டாம் நாளன்று சில்ஹெட் மாவட்ட விளையாட்டரங்கில் கனடாவை குழு பி போட்டியில் எதிர்த்தாடிய இலங்கை 196 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

 

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த கவீன் பண்டார (61), அணித் தலைவர் சரித் அசலன்க (76), உதவி அணித் தலைவர் ஷம்மு ஆஷான் (74 ஆ.இ.), விஷாத் ரந்திக்க டி சில்வா (51) ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியுடன் 50 ஓவர்களில் 6 விக்ெகட்டுகளை இழந்து 315 ஓட்டங்களைக் குவித்தது.

 

44 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது 2 விக்ெகட்டுகளை அடுத்தடுத்து இழந்த இலங்கைக்கு கவீன் பண்டாரவும் சரித் அசலன்கவும் மூன்றாவது விக்கெட்டில் பகிர்ந்த 109 ஓட்டங்கள் துணிவைக் கொடுத்தன.

 

தொடர்ந்து ஷம்மு ஆஷான் ஐந்தாவது விக்கெட்டில் விஷாத் ரந்திக்கவுடன் 82 ஓட்டங்களையும் 28 ஓட்டங்களைப் பெற்ற வனிந்து ஹசரங்கவுடன் ஆறாவது விக்ெகட்டில் 52 ஓட்டங்களையும் பகிர்ந்துகொள்ள இலங்கையின் மொத்த எண்ணிக்கை 300ஐக் கடந்தது.

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா 39.2 ஓவர்களில் சகல விக்ெகட்டு களையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. கனடா சார்பாக அர்ஸ்லான் கான் மாத்திரம் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்றார்.

 

இலங்கை பந்துவீச்சில் எண்மர் பயன்படுத்தப்பட்டனர். அவர்களில் அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார, திலான் நிமேஷ், தமித்த சில்வா ஆகியோர் தலா 2 விக்ெகட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சரித் அசலன்க.

 

 

ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் வென்றது

சில்ஹெட் சர்வதேச விளையாட்ட ரங்கில் நேற்று நடைபெற்ற குழு பியிற்கான மற்றொரு 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்ெகட் போட்டியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்களால் பாகிஸ்தான் இலகுவாக வெற்றி கொண்டது.

 

ஷதாப் கான், ஹசன் மொஹ்சின் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் பாகிஸ்தானின் வெற்றிக்கு வித்திட்டன.

 

எண்ணிக்கை சுருக்கம்
ஆப்கானிஸ்தான் 41.2 ஓவர்களில் 126 (தாரிக் ஸ்டனிக்ஸாய் 53, ஷதாப் கான் 9 க்கு 4 விக்., ஹசன் மொஹ்சின் 24 க்கு 3 விக்.)
நியூ­ஸி­லாந்தை அதி­ர­வைத்த நேபாளம்

 

ஃபட்­டுல்லாஹ் கான் ஷஹெப் ஒஸ்மான் அலி விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற குழு டியிற்­கான 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் நியூ­ஸி­லாந்தை அதி­ர­வைத்த நேபாளம் 32 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டி­யது.

 

தீப்­பேந்த்ரா சிங் ஆய்­ரியின் துல்­லி­ய­மான பந்­து­வீச்சும் விக்­கெட்­க­ளி­டையே ஓட்­டங்கள் எடுப்­பதில் நியூ­ஸி­லாந்து வீரர்கள் அடைந்த தடு­மாற்­றமும் நேபா­ளத்தின் வெற்­றிக்கு முக்­கிய பங்­காற்­றின.

 

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைக்­கப்­பட்ட  நேபாளம் 50 ஓவர்­களில் 7 விக்­கெட்­களை இழந்து 238 ஓட்­டங்­களைப் பெற்­றது.

 

அணித் தலைவர் ராஜு ரிஜால் (48), சந்தீப் சுனார் (39), ஆரிவ் ஷெய்க் (39), குஷால் புர்ட்டெல் (35 ஆ.இ.) ஆகியோர் துடுப்­பாட்­டத்தில் அதி­கப்­பட்ச பங்­க­ளிப்பை வழங்­கினர்.

 

நியூ­ஸி­லாந்து பந்­து­வீச்சில் நதன் ஸ்மித் 58 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார்.

 

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய நியூ­ஸி­லாந்து 47.1 ஓவர்­களில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 206 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்று தோல்­வியைத் தழு­வி­யது.

 

துடுப்­பாட்­டத்தில் க்ளென் பிலிப்ஸ் (53), டேல் பிலிப்ஸ் (41) ஆகிய இரு­வரே ஓர­ளவு திற­மையை வெளிப்­ப­டுத்­தினர்.

 

பந்­து­வீச்சில் தீப்­பேந்த்ரா சிங் ஆய்ரி 24 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் ப்ரேம் தமாங் 38 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்ட்­க­ளையும் கைப்­பற்­றினர். ஆட்­ட­நா­யகன்: ராஜு ரிஜால்.

 

இந்­தியா 79 ஓட்­டங்­களால் வெற்றி
அயர்­லாந்­துக்கு எதி­ராக மிர்பூர், ஷியரே பங்க்ளா தேசிய விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற குழு டியிற்­கான 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் இந்­தியா 76 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்­றது.

 

போட்­டியின் ஆரம்­பத்தில் சற்று தடு­மாற்­றத்தை எதிர்­கொண்ட இந்­தியா பின்னர் திற­மை­யாக விளை­யாடி வெற்­றி­பெற்­றது.

 

சர்வ்ராஸ் கான், தமிழ்­நாடு வீரர் வொஷிங்டன் சுந்தர் ஆகி­யோரின் அபார அரைச் சதங்­களும் இவர்கள் இரு­வரும் ஐந்­தா­வது விக்ெ­கட்டில் பகிர்ந்த 110 ஓட்­டங்­க­ளுமே இந்­தி­யாவின் வெற்­றிக்கு அடி­கோ­லின.

 

எண்­ணிக்கை சுருக்கம்:
இந்­தியா 50 ஓவர்­களில் 268 – 9 விக். (சர்வ்ராஸ் கான் 74, வொஷிங்டன் சுந்தர் 62, ரிக்கி பூய் 39, ஸீஷான் அன்­சாரி 36, ரோரி அண்டர்ஸ் 35 – 3 விக்., ஜொஷுவா லிட்ல் 52 – 3 விக்.)

 

அயர்லாந்து 49.1 ஓவர்களில் 189 (வில்லியம் மெக்லின்டொக் 58, லோர்க்கான் டக்கர் 57, ராகுல் பதம் 15 க்கு 3 விக்.)
ஆட்டநாயகன்: சர்வ்ராஸ் கான்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14516#sthash.qNQGkBOm.dpuf
  • தொடங்கியவர்

ஜூனியர் கிரிக்கெட் உலகக்கோப்பை: நியூசிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா

 

  • u19india.jpg

ஜூனியர் (U-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 120 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தைத் தோற்கடித்தது.

வங்கதேசத்தில் உள்ள மிர்புரில் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சர்ஃப்ராஸ் கான் 74 ரன்களும், ஆர்ஆர் பண்ட் 57 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 31.3 ஓவர்களில் 138 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் லெபர்ட் 40 ரன்களும், ஸ்காட் 29 ரன்களும் எடுத்தனர். இந்தியத் தரப்பில் மஹிபால் லோம்ரோர் 5 விக்கெட்டுகளையும் அவேஸ் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். அவேஸ் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 79 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தைத் தோற்கடித்தது. 2-வது போட்டியிலும் வெற்றி பெற்றதால் காலிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

http://www.dinamani.com/sports/2016/01/30/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/article3253002.ece

Sri Lanka Under-19s 184 (48.1 ov)
Afghanistan Under-19s 151 (44.5 ov)
Sri Lanka Under-19s won by 33 runs
 
 
Canada Under-19s 178 (48.3 ov)
Pakistan Under-19s 180/3 (40.5 ov)
Pakistan Under-19s won by 7 wickets (with 55 balls remaining)
 
 
Ireland Under-19s 131/9 (50.0 ov)
Nepal Under-19s 132/2 (25.3 ov)
Nepal Under-19s won by 8 wickets (with 147 balls remaining)
 
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அண்டர்-19 உலகக்கோப்பை: நியூஸிலாந்தை வீழ்த்தி காலிறுதியில் இந்திய அணி

 

அண்டர்-19 உலகக்கோப்பை முதல் 2 போட்டிகளில் அபாரமாக ஆடி அரைசதங்கள் கண்ட சர்பராஸ் கான். | கோப்புப் படம்.
அண்டர்-19 உலகக்கோப்பை முதல் 2 போட்டிகளில் அபாரமாக ஆடி அரைசதங்கள் கண்ட சர்பராஸ் கான். | கோப்புப் படம்.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் காலிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

மிர்பூரில் நடைபெற்ற இன்றைய பிரிவு டி போட்டியில் நியூஸிலாந்தை இந்திய அண்டர் 19 அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இஷான் கிஷண் தலைமையிலான இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது நியூஸிலாந்து, ஆர்.ஆர்.பண்ட் (57), மீண்டும் சர்பராஸ் கான் அதிரடி ஆட்டம் (74) ஆகியவற்றினால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்க்கு 258 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அண்டர் 19 அணி 31.3 ஓவர்களில் அவேஷ் கான், லோம்ரோ ஆகியோரது அபாரப் பந்து வீச்சுக்கு 31.3 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது.

அன்று நேபாளத்திடமும் நியூஸிலாந்து தோல்வி தழுவியது, இந்நிலையில் பிரிவு டி-யில் அயர்லாந்தையும் வீழ்த்தி நேபாள் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணியில் கேப்டன் இசான் கிஷன் 4 ரன்களில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்மித்திடம் வெளியேறினார். ஆர்.கே.புய் என்பவரும் 1 ரன்னில் வெளியேற இந்திய அணி 6-வது ஓவரில் 19/2 என்று சரிவு அபாயத்தில் இருந்தது.

ஆனால் மீண்டும் சர்பராஸ் கான் அபாரமாக விளையாடி 9 பவுண்டரிகளுடன் 80 ரன்களை எடுத்தார். இவரும் ஆர்.ஆர்.பன்ட் (57) ஆகியோர் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 89 ரன்களைச் சேர்த்தனர். பிறகு அர்மான் ஜாஃபர் (46), சர்பராஸ் கான் இணைந்து 4வது விக்கெட்டுக்காக 7 ஓவர்களில் 48 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். கான் 74 ரன்களில் 4-வது விக்கெட்டாக பெவிலியன் திரும்பினார்.

லோம்ரோர் 42 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுக்க இந்தியா 50 ஓவர்களில் 258 ரன்களை எட்டியது. நியூஸிலாந்து அண்டர் 19 தரப்பில் ஸ்மித் 2 விக்கெட்டுகளையும், ரவீந்திரா 2 விக்கெட்டுகளையும் கிப்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அவேஷ் கான் அபாரப் பந்து வீச்சு தொடக்கம்:

இலக்கைத் துரத்திய போது நியூஸிலாந்தின் ரவீந்திரா, பிலிப்ஸ், கிளார்க்சன், கேப்டன் ஃபீனி ஆகியோரை அவேஷ் கான் வீழ்த்த அந்த அணி 11-வது ஓவரில் 16/4 என்று சரிவு கண்டது. இதில் கிளார்க்சன், ரவீந்திரா ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அவேஷ் கான் ஹேட்ரிக் வாய்ப்பை பெற்றார். ஆனால் ஹேட்ரிக் எடுக்க முடியவில்லை. அவேஷ் கான் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இவருக்குப் பிறகு லோம்ரோர் என்ற 16 வயது இடது கை சுழற்பந்து வீச்சாளர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், நியூஸிலாந்து தரப்பில் லெபர்ட் என்பவர் மட்டும் அதிகபட்சமாக 40 ரன்களை எடுத்தார். 31.3 ஓவர்களில் அந்த அணி 138 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைய இந்திய அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D19-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article8172057.ece?homepage=true

  • தொடங்கியவர்

இலங்கையிடம் சுருண்டது ஆப்கானிஸ்தான்

January 31, 2016

19 வயதிற்குபட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்றப் போட்டியில் இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.  தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய இலங்கை 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 184 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

 

அந்த அணியின் அணித்தலைவர் அசாலங்க நிதானமாக விளையாடி 71 ஓட்டங்கள் எடுத்தார். ஆப்கான் அணியில் ஷாம்சர்ரஹ்மான் 3 விக்கெட் வீழ்த்தினார். 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆப்கான் அணியும் ஆரம்பத்திலே திணறியது. இலங்கை அணியின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாத நிலையில் அந்த அணி 44.5 ஓவர்களில் 151 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனால் இலங்கை அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றி பெற்று ’பி’ பிரிவின் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேற்றியது.

http://www.onlineuthayan.com/sports/?p=8638&cat=2

  • தொடங்கியவர்
நமீபியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், மே.தீவுகள் வெற்றி
 
 

article_1454251164-TamilnAmu19Bucket.jpgஇடம்பெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளில், இன்று இடம்பெற்ற போட்டிகளில், நமீபிய, இங்கிலாந்து, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் வெற்றிபெற்றன.

நமீபிய அணிக்கும் நடப்புச் சம்பியன்களான தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான போட்டியில், நமீபிய அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்தத் தோல்வியுடன், இந்த உலகக் கிண்ணத்திலிருந்து தென்னாபிரிக்கா வெளியேற்றப்பட்டது.

தென்னாபிரிக்கா: 136/9 (50 ஓவ.) (வில்லியம் லுடிக் 42 (98). பந்துவீச்சு: மைக்கல் வான் லிங்கென் 10-2-24-4, பிறிட்ஸ் கோட்ஸே 10-4-16-3.)

நமீபியா: 137/8 (39.4 ஓவ.) (லொஹான் லௌரன்ஸ் 58 (97). பந்துவீச்சு: ஸியாட் ஏப்ரஹாம்ஸ்; 8.4-3-18-2, ஸீன் வைட்ஹெட்; 7-0-27-2.

இங்கிலாந்து, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில், இங்கிலாந்து அணி 129 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இங்கிலாந்து: 288/4 (50 ஓவ.) (ஜக் பேர்ஹம் 106 (104), டான் லோரன்ஸ் 59 (67), மக்ஸ் ஹோல்டென் 51 (90). பந்துவீச்சு: றுகாரே மகரிரா 10-0-36-2.)

சிம்பாப்வே:  159/10 (43.4 ஓவ.) (ஜேர்மி ஐவீஸ் 91 (132), பந்துவீச்சு: சகீப் மஹ்மூட்9.4-2-39-4.)

பங்களாதேஷ் அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்குமிடையிலான போட்டியில், இத்தொடரை நடத்தும் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது.

பங்களாதேஷ்: 256/6 (50 ஓவ.) (நஸ்முல் ஹொஸைன் ஷான்டோ ஆட்டமிழக்காமல் 113 (117), மெஹெடி ஹஸன் 51 (48), சாய்ப் ஹஸன் 49 (108). பந்துவீச்சு: மொஹமட் காபர் 10-0-60-4.)

ஸ்கொட்லாந்து: 142/10 (47.2 ஓவ.) (அஸீம் டார் 50 (89). பந்துவீச்சு: மொஹம்மட் ஸைப்புட்டின் 7.2-0-17-3, சாலே அஹ்மட் ஷவோன் 10-2-27-3, அரிபுல் இஸ்லாம் 10-0-28-2.)

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் பிஜி அணிக்குமிடையிலான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 262 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள்: 340/7 (50) (ஷமர் ஸ்பிறிங்கர் 106 (109), கிட்ரோன் போப் 76 (77), ஜைட் கூலி 66 (75). பந்துவீச்சு: சக்கக்வா டிகோய்சுவா 10-0-59-6)

பிஜி: 78/10 (27.3) (பெனி வுனிவக்கா 29 (49). பந்துவீச்சு: சக்கக்வா டிகோய்சுவா 10-0-59-6, பந்துவீச்சு: ஜிட்ரோன் போப் 7-2-24-4, அல்ஸாரி ஜோசப் 7-1-15-3, கிறிஸ்டன் காளிசரண் 6.3-1-21-2.)

- See more at: http://www.tamilmirror.lk/165072#sthash.S9tE5SCb.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இளையோர் உலகக் கோப்பை: 18 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய வீரர் உலக சாதனை!( வீடியோ )

 

ங்கதேசத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. மிர்பூரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி நோபாள அணியுடன் மோதியது. முதலில் விளையாடிய நேபாள அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. அடுத்து இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கியது.

rie.jpg

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரிஷப் பன்ட், இஷான் கிஷான் களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கம் முதலே நேபாள பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. அதிரடியாக விளையாடிய ரிஷப் பன்ட் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார். இது ஒரு  புதிய உலக சாதனை ஆகும்.

இதற்கு முன் 19 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ட்ராவான் கிரிஃப்பித் 19 பந்துகளில் அரை சதம் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை இந்திய வீரர் முறியடித்துள்ளார்.

 

 

                  



ரிஷப் பன்ட் 50 ரன்களை கடந்த பிறகு மேலும் அதிரடி காட்டினார்.  அடுத்த 6 பந்துகளில் மேலும் 28 ரன்களை ரிஷல் குவித்தார். மொத்தம் இந்த போட்டியில் 24 பந்துகளில் அவர்  78 ரன்களை அடித்தார்.  இதில் 9 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 325 ஆகும். மறுமுனையில் இஷான் கிஷான் தன் பங்குக்கு 52 ரன்களை அடிக்க, இந்திய அணி  18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து  175 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

http://www.vikatan.com/news/sports/58389-rishabh-pant-scores-fastest-ever-u-19-fifty.art

  • தொடங்கியவர்
இந்தியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து வெற்றி
 
01-02-2016 03:18 PM
Comments - 0       Views - 11

article_1454323909-TAINdAdNZBucket.jpgபங்களாதேஷில் இடம்பெற்றுவரும் பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இந்தியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

இந்திய அணிக்கும் நேபாள அணிக்குமெதிரான போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தாம் முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதாக தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி, போட்டி நடைபெற்ற 48 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, சந்தீப் சுனர் 37, ரஜ்பிர் சிங் 35, ப்ரேம் டமாங் 29 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அவேஷ் கான் 3, வாஷிங்டன் சுந்தர், மாயங் டகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரமே வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ரிஷாப் பண்ட் 78, இஷன் கிஷான் 52 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் நேபாளம் சார்பாக ப்ரேம் டமாங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதேவேளை, கனடா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி, 50 ஓவர்கள் முடிவில் சகலவிக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அர்ஸ்லன் கான் 38, அணித்தலைவர் அப்ராஷ் கான் 33 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ஷம்ஷூர்ரஹ்மான், முஸ்லிம் முஸா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 24.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, டாரிக் ஸ்டனிஸ்காய் 56, இஹசனுல்லா 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கனடா சார்பாக, மிராஜ் பட்டேல் 3, ஷிலோக் பட்டேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

நியூசிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஜக் டெக்டர் 56, அடம் டென்னிஸன் 46 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ரசின் ரவீந்திர, ஜோஷ் பின்னி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 40.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக பின் அலென் 97, டேல் பிலிப்ஸ் 58 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அயர்லாந்து அணி சார்பாக ரோரி அன்டேர்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

- See more at: http://www.tamilmirror.lk/165145/%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%B1-#sthash.TkYWpnUP.dpuf
  • தொடங்கியவர்

பந்து வீசாமலேயே ரன்னரை ரன் அவுட் செய்து காலிறுதிக்கு முன்னேறிய மே.இ.தீவுகள்: ஜிம்பாப்வே கேப்டன் கண்ணீர்

 

 
மேற்கிந்திய பவுலர் கெமோ பால், பவுலின் போடாமலேயே ஜிம்பாப்வே கடைசி வீரரை ரன் அவுட் செய்கிறார். | படம்: ஏ.எஃப்.பி.
மேற்கிந்திய பவுலர் கெமோ பால், பவுலின் போடாமலேயே ஜிம்பாப்வே கடைசி வீரரை ரன் அவுட் செய்கிறார். | படம்: ஏ.எஃப்.பி.

சிட்டகாங்கில் இன்று நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை போட்டியில் மேற்கிந்திய அணி சர்ச்சைக்குரிய முறையில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

கடைசி ஓவரில் ஜிம்பாவே வெற்றிக்குத் தேவை 3 ரன்கள். ‘டை’ செய்ய 2 ரன்கள். அப்போது மேற்கிந்திய பவுலர் கெமோ பால் கடைசி ஓவரை வீச வந்தார்.

ஜிம்பாப்வே வீரர் குண்டாய் மடிஜிமு (10 ரன்கள்) பேட்டிங் முனையில் இருந்தார், ரன்னர் முனையில் ரிச்சர்ட் என்கரவா என்பவர் இருந்தார்.

இந்நிலையில் மே.இ. வீச்சாளர் கெமோ பால் ஓடி வந்து பந்து வீசாமலேயே ரன்னர் முனையில் இருந்த பேட்ஸ்மெனை ரன் அவுட் செய்தார். அதாவது ரன்னர் முனை பேட்ஸ்மென் சாதாரணமாகவே முன்னேறியதாகவே தெரிகிறது, எப்படியாவது ரன் எடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் ரன்னர் முனை கிரீசை விட்டு அவர் கிளம்ப நினைத்ததாக தெரியவில்லை. ஆனால் பவுலர் கெமோ பால் ரன்னர் முனை பைல்களை தட்டி விட்ட போது ரன்னர் முனையில் இருந்த வீரரின் மட்டை கிரீஸின் மீது இருந்தது, கிரீஸுக்குள் இல்லை. இதனையடுத்து நடுவர்கள் இருவரும் விவாதித்தனர், மே.இ.தீவுகள் கேப்டன் ஹெட்மையரிடம் முறையீட்டை தக்க வைக்கிறீர்களா என்றனர், அவர் ஆம் என்றார். இதனையடுத்து மூன்றாம் நடுவர் ரிவியூவுக்குச் சென்றது, அதில் ரன்னர் முனை பேட்ஸ்மெனின் பேட் கிரீசுக்கு மேல் இருந்தது தெரியவந்தது. இதனால் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார். இது ரன் அவுட் என்றாலும் கிரிக்கெட்டில் ‘மன்கடட்’ என்றுதான் கிரிக்கெட்டில் அழைக்கப்படுகிறது.

இது விதிப்படி சரியானதுதான் என்றாலும் எதிரணியினருக்கு சமவாய்ப்பு கொடுத்து வீழ்த்தும் கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்று இது சர்ச்சைக்குள்ளானது.

வெற்றி பெறத் தேவையான 227 ரன்களுக்குப் பதிலாக கடைசி ஓவரின் முதல் பந்து வீசப்படாத நிலையிலேயே ஜிம்பாப்வே 224 ரன்களுக்கு முடிந்து தோல்வி அடைந்தது மே.இ.தீவுகள் காலிறுதிக்கு இங்கிலாந்து அணியுடன் முன்னேறியது.

பரிசளிப்பு விழாவிற்கு ஜிம்பாப்வே கேப்டன் மவுதா பேச அழைக்கப்பட்ட போது கண்களில் கண்ணீருடன் குரல் மங்கி பேச முடியாமல் தவித்தார். கடைசியில் ஏதோ பேசிவிட்டுச் சென்றார்.

ஒரு முறை தென் ஆப்பிரிக்க வீரர் பீட்டர் கர்ஸ்டனை கபில்தேவ் இருமுறை எச்சரிக்கை செய்தும் அவர் பணியாததால் கடைசியில் பந்து வீச வருவது போல் வந்து ரன்னர் முனை பைல்களை அகற்றினார். இதனால் பீட்டர் கர்ஸ்டன் அவுட் ஆனார்.

1987 ரிலையன்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நாக் அவுட் போட்டியில் பாகிஸ்தானின் கடைசி வீரர் பந்து வீசும் முன்னரே கிரீசை விட்டு குடுகுடுவென ஓடி முன்னேறிய போது ஓடி வந்த மே.இ.தீவுகள் கார்ட்னி வால்ஷ், அவரை ரன் அவுட் செய்திருந்தால் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் வெஸ்ட் இண்டீஸ். ஆனால் கார்ட்னி வால்ஷ் அந்த பாக். வீரரை கிரீசிற்குள் செல்லுமாறு கூறினார். கடைசியில் இதனால் மேற்கிந்திய அணி தோற்றது, வெளியேறியது.

ஆனால் இந்த இளம் மே.இ.தீவுகள் அணி காலிறுதிக்கு நுழைவதற்காக எதிரணியின் கடைசி வீரரை பந்து வீசாமலேயே ரன்னர் முனையில் ரன் அவுட் செய்து காலிறுதிக்கு முன்னேறியது.

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணியில் ஸ்பிரிங்கர் என்ற வீரர் 71 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 61 ரன்களை அதிகபட்சமாக எடுக்க அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் மகரிரா 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் ஸ்னைடர் அதிகபட்சமாக 52 ரன்களை எடுத்தார். ஐவீஸ் 37 ரன்களையும், கீஃபி 43 ரன்களையும் எடுக்க ஜிம்பாப்வே வெற்றிக்கு அருகில் வந்து 49-வது ஓவர் முடிவில் 224/9 என்று இருந்தது. அப்போதுதான் இந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்து என்கரவா தகாத வழியில் ரன் அவுச் செய்யப்பட்டார்.

மே.இ.தீவுகள் தரப்பில் ஏ.எஸ்.ஜோசப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசியில் யார்க்கர்களை அபாரமாக வீசிய ஸ்பிரிங்கர் 4 ஓவர்களில் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/article8184529.ece

  • தொடங்கியவர்

12654660_979991662049528_877726424123586

இளையோர் உலக கிண்ணம் 2016.
காலிறுதிப் போட்டி அட்டவணை.
#Under19

  • தொடங்கியவர்
இலங்கையை வென்றது பாகிஸ்தான்
 
03-02-2016 05:39 PM
Comments - 0       Views - 5

article_1454515793-tamilU19Wc.jpgபங்களாதேஷில் இடம்பெற்றுவரும் பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில், இன்று இடம்பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில், பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

மிர்பூரில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான்; அணி 48.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து  212 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக,ஹசன் மொய்சன் 86 ஓட்டங்களையும்  மொஹமட் உமர் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக  திலான் நிமேஷ், வனிடு ஹசரங்க, தமித்த சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக்  கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக  கமிந்து மென்டிஸ் 68 ஓட்டங்களையும் விஷாட் ரந்திக 46 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக, ஷதாப் கான் 3 விக்கெட்களையும் சமீன் குல், ஹசன் மொய்சன், அஹமட் ஷாபிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

- See more at: http://www.tamilmirror.lk/165322/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%A9-#sthash.Bf2zeYBY.dpuf
  • தொடங்கியவர்
இலங்கை இளையோர் அணிக்கு முதலாவது தோல்வி: கால் இறுதியில் இங்கிலாந்தை எதிர்த்தாடவுள்ளது
2016-02-04 11:46:27

14644u%2019%20wc%20logo.pngபாகிஸ்­தா­னுக்கும் இலங்­கைக்கும் இடையில் மிர்பூர் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற 19 வய­துக்­குட்­பட்ட உல கக் கிண்ண குழு பி யிற்­கான கடைசிப் போட்­டியில் 23 ஓட்­டங்­களால் பாகிஸ்தான் வெற்­றி­ பெற்­றது.

 

எனினும் இந்தப் போட்­டிக்கு முன்­னேரே இரண்டு அணி­களும் குழு பி யி­லி­ருந்து கால் இறு­திக்கு தெரி­வா­கி­யி­ருந்­தன. குழுவில் எந்த அணி முத­லிடம் என்­பதைத் தீர்­மா­னிப்­ப­தாக அமைந்­தது.

 

இதன் பிர­காரம் டாக்­காவில் எதிர்­வரும் 8 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள மூன்­றா­வது கால் இறு­தியில் இங்­கி­லாந்தை இலங்கை எதிர்த்­தா­ட­வுள்­ளது.

 

இப்­ போட்­டியில் பாகிஸ்­தா­னினால் நிர்­ண­யிக்­கப்­பட்ட 213 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை 34 ஓவர்கள் நிறைவில் 4 விக்­கெட்­களை மாத்­திரம் இழந்து 147 ஓட்­டங்­களைப் பெற்று வலு­வான நிலையில் இருந்­தது.

 

அந்தச் சந்­தர்ப்­பத்தில் 96 பந்­து­களில் 66 ஓட்­டங்­களைப் பெற­வேண்­டி­யி­ருந்­தது. ஆனால் அது­வரை சிறப்­பாக துடுப்­பெ­டுத்­தாடிக் கொண்­டி­ருந்த கமிந்து மெண்டிஸ் ஆட்­ட­மி­ழந்­ததைத் தொடர்ந்து இலங்­கையின் சரிவு ஆரம்­ப­மா­னது.

 

துடுப்­பாட்டக்காரர்­களில் அவ­ரசத் துடுக்கை கார­ண­மாக கடைசி 6 விக்­கெட்கள் வெறும் 52 ஓட்­டங்­க­ளுக்கு சரிய, லீக் சுற்றில் இலங்கை தனது முத­லா­வது தோல்­வியைத் தழு­வி­யது.

 

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைக்­கப்­பட்ட பாகிஸ்தான் 48.4 ஓவர்­களில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 212 ஒட்­டங்­களைப் பெற்­றது.

 

ஐந்தாம் இலக்க துடுப்­பாட்­டக்­காரர் ஹசன் மொஹ்சின் 86 பந்­து­களில் 86 ஓட்­டங்­க­ளையும் சல்மான் ஃபயாஸ் 33 ஓட்­டங்­க­ளையும் பெற்று ஐந்­தா­வது விக்­கெட்டில் 61 ஓட்­டங்­களைப் பகிர்ந்து கொடுத்­தனர்.

 

இதுவே ஆட்­டத்தின் முத­லா­வது திருப்பு முனை­யாக அமைந்­தது. தொடர்ந்து 47 ஆவது ஓவரில் அசித்த பெர்­னாண்­டோவின் பந்­து­வீச்சில் மொஹ்சின் தனி ஒரு­வ­ராக விளா­சிய 23 ஓட்­டங்கள் அவ்­வ­ணிக்கு இரண்­டா­வது திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது.

 

1464417.jpgஇலங்கை பந்­து ­வீச்சில் திலான் நிமேஷ், ஹச­ரங்க டி சில்வா, தமித்த சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்­களைக் கைப்­பற்­றினர்.

 

பதி­லுக்கு துடுப்­பெ­டு­தத்­தா­டிய இலங்கை 46.4 ஓவர்­களில் சகல விக்கெட்­க­ளையும் இழந்து 189 ஓட்­டங்­களைப் பெற்று தோல்வி அடைந்­தது.

 

கவிந்து மெண்டிஸ் (68), ரந்­திக்க டி சில்வா (46) ஆகிய இரு­வரும் ஐந்­தா­வது விக்­கெட்டில் 84 ஓட்­டங்­களைப் பகிர்ந்து இலங்­கைக்கு தெம்­பூட்­டினர். தமித்த சில்வா ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

 

ஆனால் அணித் தலைவர் அசலன்க சரித், உதவி அணித் தலைவர் ஷம்மு ஆஷான் உட்பட ஏனையவர்கள் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டதால் இலங்கை தோல்வி அடைந்தது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14644#sthash.b3lc4Xem.dpuf
  • தொடங்கியவர்

அரை­யி­று­திக்கு முன்­னே­றி­யது பங்­க­ளாதேஷ்

 

19 வய­துக்குட்­பட்­டோ­ருக்­கான காலி­று­திப்­போட்­டியில் நேபாளம் மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் நேற்­றை­ய­தினம் மோதி­யி­ருந்­தன. நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்ற நேபாளம் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி­யது.

நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 9 விக்­கெட்­டுக்­களை இழந்து 211ஓட்­டங்­க­ளைப்­பெற்­றுக்­கொண்­டது. அவ்­வணி சார்­பாக அணித்­த­லைவர் ரிஜால் 72ஓட்­டங்­களைப் பெற்றார். பங்­க­ளாதேஷ் பந்து வீச்சில் மொஹமட் சைபுடீன் அதி­க­பட்­ச­மாக 2 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார்.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய பங்­க­ளாதேஷ் அணிக்கு ஆரம்பம் சிறப்­பாக அமைந்­தாலும் சீரான இடை­வெளியில் விக்­கெட்­டுக்கள் வீழ்ந்­தன. இதனால் 98 ஓட்­டங்­களைப் பெற்று தடு­மா­றிக்­கொண்­டி­ருந்­த­வேளை ஐந்­தா­வது விக்­கெட்­டுக்­காக இணைந்த சிஹர் ஹசன், மிராஸ் ஆகியோர் சிறப்­பான இணைப்­பாட்­டத்தை ஏற்­ப­டுத்தி போரா­டி­னார்கள்.

நிதா­ன­மாக ஆடிய சிஹர் ஹசன் (75), மிராஸ் (55) அரைச்­சதம் கடந்­த­தோடு ஆட்­ட­மி­ழக்­காது அணியின் வெற்­றி­யையும் உறு­தி­செய்­தனர். இதனால் 48.2 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்­களை மட்­டுமே இழந்த பங்­க­ளாதேஷ் இலக்கை அடைந்து முதற்­த­ட­வை­யாக அரை­யி­று­திக்கு முன்­னே­றி­யது.

இதே­வேளை காலி­றுதி பிளே ஓப் போட்­டி­களில் கன­டாவை எதிர்த்­தா­டிய சிம்­பாவே 6 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­யீட்­டி­யி­ருந்­தது. மற்­றொ­ரு­போட்­டியில் ஆப்கானிஸ்தான் 9 விக்கெட்டுக்களை இழந்து பெற்ற 340 என்ற இமாலய இலக்கை நோக்கி போராடிய பீஜி 114 ஓட்டங்களை மட்டுமே பெற்று 226 ஓட்டங்களால் தோல்வியைக் கண்டிருந்தது.

http://www.virakesari.lk/article/2827

  • தொடங்கியவர்

ரிஷப் பண்ட் சதம்: அண்டர் 19 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி

 

 
அண்டர் 19 உ.கோப்பை காலிறுதியில் சதம் எடுத்த இந்திய வீரர் ரிஷப் பண்ட். | கோப்புப் படம்.
அண்டர் 19 உ.கோப்பை காலிறுதியில் சதம் எடுத்த இந்திய வீரர் ரிஷப் பண்ட். | கோப்புப் படம்.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்திய அண்டர் 19 அணி முன்னேறியது. நமீபியாவை 197 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்தியா.

சனிக்கிழமை பாதுல்லவில் நடைபெற்ற காலிறுதியில் முதலில் பேட் செய்த இந்திய இளையோர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் குவிக்க, தொடர்ந்து ஆடிய நமீபிய அணி 39 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் இஷான் கிஷன் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் இஷான் கிஷன் சோபிக்கவில்லை 6 ரன்களில் 3-வது ஓவரில் கூட்சீயிடம் அவுட் ஆனார்.

ஆனால் அதன் பிறகு ரிஷப் பண்ட், அன்மோல்ப்ரீத் சிங் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 14 ஓவர்களில் 103 ரன்களைச் சேர்த்தனர். அன்மோல்ப்ரீத் சிங் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து அப்போது ஆட்டமிழந்தார்.

பண்ட் அரைசதம் கடந்த நிலையில் சர்பராஸ் கானுடன் இணைந்தார். இருவரும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 62 ரன்களைச் சேர்த்தனர். ரிஷப் பண்ட் 96 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 111 ரன்கள் எடுத்து ஸ்கோர் 29-வது ஓவரில் 183-ஆக இருந்த போது லெக் ஸ்பின்னர் ராட்டன்பாக் என்ற லெக் ஸ்பின்னர் பந்தை மேலேறி வந்து மிட்விக்கெட்டில் ஒரு சுழற்று சுழற்றினார், சரியாகச் சிக்கவில்லை கேட்ச் ஆனது.

ஆனால் மும்பை பள்ளித் தோழர்களான அர்மான் ஜாபர், சர்பராஸ் கான் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 98 ரன்களை 15 ஓவர்களில் விளாசினர். 44-வது ஓவரில் ஸ்கோர் 281 ரன்களுக்கு அதிகரித்த போது 76 பந்துகளில் 6 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் சர்பராஸ் கான் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பிறகு அர்மான் ஜாபர் 55 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது ஸ்கோர் 300-ஐக் கடந்து 318 ஆக இருந்தது. கடைசியில் லோம்ரோர் என்ற வீரர் 21 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்கள் விளாசி 41 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ இந்திய அணியின் ஸ்கோர் 349/6 என்று அபார ரன் எண்ணிக்கையை எட்டியது. நமீபியா தரப்பில் வான் லிஞ்சன் என்பவர் மட்டுமே விக்கெட் கைப்பற்றாவிட்டாலும், 10 ஓவர்களில் 42 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார்.

தொடர்ந்து ஆடிய நமீபியா அணி 9.3 ஓவர்களில் 59 என்ற ஓரளவுக்கு நல்ல தொடக்கம் கண்டது. டேவின் என்ற வீரர் 30 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து ஆவேசம் காட்டிய போது வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு தாகர், அன்மோல்ப்ரீத் சிங் அருமையாக வீசி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 118/7 என்று ஆன நமீபியா கடைசியில் 39 ஓவர்களில் 152 ரன்களுக்குச் சுருண்டு படு தோல்வி அடைந்தது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன்.

நமீபியா கேட்ச்களை கோட்டை விட்டது. அந்தக் கேட்ச்களை பிடித்திருந்தால் ஒருவேளை இந்தியாவை இன்னும் குறைந்த எண்ணிக்கையில் சுருட்டியிருக்கலாம்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-19-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article8202981.ece?homepage=true

  • தொடங்கியவர்

வீழ்ந்தது இங்கிலாந்து - அரையிறுதியில் இலங்கை

வீழ்ந்தது இங்கிலாந்து - அரையிறுதியில் இலங்கை

 

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின், காலிறுதிச் சுற்றில் இங்கிலாந்தை ஆறு விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ள இலங்கை, அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

பங்களாதேஷின் மிர்பூரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய அந்த அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 184 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து 185 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 186 ஓட்டங்களை விளாசி வெற்றியைத் தனதாக்கியது.
 
  • தொடங்கியவர்

943942_983031348412226_28014422819742195

12654239_983031471745547_571495895353042

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.