Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

‘‘கிடைத்தது ‘பெரியார்’ படம்... நன்றி கடவுளுக்கு!’’


pepsi

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

‘பெரியார்’ படப் பாடல் பதிவு.

‘‘கடவுளா... நீ கல்லா? மேலோர் என்று சிலரைப் படைத்து, கீழோர் என்று பலரைப் படைத்த கடவுளா நீ... கல்லா?’’ வைரமுத்துவின் தீத்தமிழுக்கு இசைப் பந்தம் ஏற்றிக் கணீரென்று பாடிக் காட்டுகிறார் வித்யாசாகர்.

p148axv8.jpg

ஆன்மிகம் கமழும் அவரது ‘வர்ஷாவில்லா’ இசைக் கூடத்தில் பரவியது கறுப்பு நெருப்பு.

‘‘பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்பவன் நான். ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்று மனதார நம்புகிறவன். ஆனால், பெரியார் என்ற மாமனிதரை மதிக்கிறேன். சாதி மறுப்பில் தொடங்கி பெண்ணடிமைத்தனம் வரை அத்தனைக்கும் புது ரத்தம் பாய்ச்சிய அவரது துணிவுக்கு தமிழ்ச் சமூகம் என்றென்றைக்கும் கடமைப்பட்டி ருக்கிறது. அவரது வாழ்க்கைக் கதைக்கு இசை அமைப்பது என் வாழ்வின் பாக் கியம்!’’ & பணிந்து சிரிக்கிறார் வித்யா.

‘‘ஒவ்வொரு கால கட்டத்தில் எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான் மாதிரியானவர்களின் ஆதிக்கம் இருந்த மாதிரி, இப்போது யாரும் இல்லையே?’’

‘‘இப்பத்தான் வாரத்துக்கு ஒரு இசையமைப்பாளர் புதுசாக அறிமுகம் ஆகி இசையமைக்கிறாங்களே! இயக்குநர்களேகூட டைரக்ஷனோடு சேர்த்து ஒரு இன்பச் சுமையாக இசையையும் எடுத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க. அங்கீகாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தீவிரமாக இயங்க வேண்டியதே இன்றைய படைப் பாளிக்கு முக்கியம். அதை உறுதியாக நம்புகிறவன் நான். காற்று போல, ஒளி போல இசையும் பரவி, யாரை யாவது எங்கேயாவது போய் அடைஞ்சுக்கிட்டே இருக்கணும். கொட்டுற இசை மழையில், எங்கேயாவது யாராவது துளிர்க்கணும்... பூக்கணும்! அடையாளம் தெரியாத இந்தப் பயணத்தை இசை செய்துக் கிட்டே இருக்கணும். இதுல நான் ஆதிக்கம் செலுத்தணுமா, போட்டியில் முதல் இடம் பிடிக்கணுமா என்பதெல்லாம் என் நோக்கம் இல்லை. இத்தனை வருஷமாக இயங்கிக்கிட்டே இருக்கேன். நிமிஷத் துக்கு நிமிஷம், நொடிக்கு நொடி என்னை நானே புதுப்பிச்சுக்கிட்டு இருக்கேன். இப்படிப்பட்ட நல்ல சூழலில் என்னை இறைவன் வைத் திருக்கும்போது நான் நிறைவாக உணர்வதுதானே நியாயம்!’’

p149bew8.jpg

‘‘ஒரு படத்தின் வெற்றியில், இசையமைப்பாளரின் பங்கு என்ன?’’

‘‘கோடம்பாக்கம் பாலத்துக்கு மேல் நின்னுக்கிட்டு வலை வீசினால், அதில் சிக்குபவர்களில் நாலு பேராவது மியூஸிக் டைரக் டர்கள் இருப்பாங்க. அவங்க எவ்வளவு நாளைக்குத் தொடர்ந்து நிலைச்சு நிக்க முடியுது, எவ்வளவு நாள் நீடிக்கிறாங்கன்னு எல்லாமே கணக்கில் வரணும். எனக்குன்னு ஒரு பாணியை நான் வெச்சுக்கிட்ட தேயில்லை. இந்த ஆளுகிட்டே இருந்து எப்படிப்பட்ட இசை வரும் என்று யாராலும் யூகிக்க முடியாமல் இருந்திருக்கேன். இப்ப வர்றவங்கள்ல பல பேர் ஒரே மாதிரி இசையைத்தான் கொடுக் கிறாங்க. எங்களுக்கெல்லாம்‘ வெஸ்டர்ன், நாட்டுப்புறப்பாட்டு, மெல்லிசை, கர்னாடக இசை, இந்துஸ்தானின்னு பலதையும் முயற்சி பண்ணிப் பார்க்க வாய்ப்பு இருந்தது. இப்ப வர்றவங்களுக்கு அந்த மாதிரி வாய்ப்பு இருக் கான்னு தெரியலை. அவ்வளவு திறமைகள் வெளிப்படற அளவுக்கு யாரும் படமும் எடுக்கிறதில்லை. ஸோ... இப்ப இருக்கிற இசை யமைப்பாளர்களுக்கு உண்மை யிலேயே சிரமங்கள் குறைவு (சிரிக்கிறார்).’’

‘‘மெல்லிசையில் தாலாட்டு றவர் நீங்க. குத்துப்பாட்டுக்கோ, அதிரடியான ஒரு பாட்டுக்கோ இசையமைக்கும்போது உள்ளுக்குள்ளே கொஞ்சம் சங்கடமாக உணர்வீர்களா?’’

‘‘இல்லையில்லை! எதைச் செய்தாலும் அனுபவிச்சு செய்கிறவன் நான். குத்துப்பாட்டு போடும்போது அதுல எதுவரைக்கும் இறங்கி ஜனங்களைச் சந்தோஷப் படுத்தலாம்னு பார்ப்பேன். நமக்கு நாமே போட்டு வெச்சிருக்கிற லட்சுமணன் கோடு இருக்கவே இருக்கு. வேடிக்கை என்பது வேறு; கொச்சைப் படுத்துதல் என்பது வேறு. சபையில் பாடமுடிகிற பாடல்களுக்கு மட்டுமே நான் இசையமைக்கிறேன். என் பாடல்களைப் பாட யாரும் கூசினது கிடை யாது’.’ அதனால் நான் செய்கிற அதிரடி, குத்துப் பாடல்களுக்காக என்னிக்கும் வருத்தப்பட்டதே கிடையாது!’’

‘‘இன்றைய தலைமுறையில் உடனே ஞாபகத்துக்கு வர்ற மாதிரி யுவன்சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்னு இருக்காங்க. இவர்களின் இசைகளைக் கேட்பதுண்டா? இவர்களை மதிப்பிட முடியுமா?’’

‘‘கேட்ட வரையில் கவனிக்கப்படுகிற மாதிரி எதுவும் எனக்குப்படவில்லை. அதற்காக அவர் கள் சரியில்லைன்னு நான் சொல்ல வரலை. ஒரு ரசிகனாக என்னை எதுவும் கவரவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. பொதுவா, யார் செய்தாலும் அதில் ஒரு தனிச் சிறப்பு, தனித்துவம் இருக்கணும்னு நினைக்கிறேன். தனித்துவம் இருந்தால், நிச்சயமாக எல்லோராலும் கவனிக்கப்படும். இது யார் போட்ட பாட்டுன்னே தெரியாமல் இருந்தால், அது எப்படிப் பெரிய விஷயமாக இருக்க முடியும்..? அவங்க பாட்டுக்கள் எல்லாம் ஒரே சாயலில் இருக்கு. படத்தின் வெற்றியைப் பொறுத்தே அவர்கள் நிர்ணயிக்கப்படுகிறார்கள்; அவங்க தனித்தன்மையை வைத்து அல்ல என்பது என் அபிப்ராயம்.

எது சந்தோஷம் தருதோ, உள்ளுணர்வைத் தூண்டுதோ... அதுவே நல்ல பாட்டு! பாடல்கள் தன்னளவில் முழுமை அடைஞ்சிருக்கணும். அந்தப் பாடல் காட்சியில் நடிக்கிற ஹீரோ, ஹீரோயின், அந்த நடன அமைப்பு, இதை யெல்லாம் சேர்த்துவைத்து ரசித்தால் அதை நல்ல பாடல்னு எப்படி ஏத்துக்கிறது? படம் வெற்றி பெற்றால், அதில் இருக்கிற மியூஸிக்கும் வெற்றியாக இங்கே சொல்லப்படுகிறது. படம் வெற்றி பெறாவிட்டால், அதில் உள்ள நல்ல பாடல்களையும் மக்கள் மறந்துவிடுவார்கள். இங்கே தரமல்ல... வெற்றி மட்டுமே இலக்கு!’’

p149gl7.jpg

‘‘பெரியார் படத்துக்கு இசையால் சிறப்புச் சேர்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது என்ற பொருள்படும்படி இளையராஜா சொல்லியிருக்கிறார். ‘பெரியார்’ படத்தின் இசையமைப்பாளர் என்ற முறையில் இதற்கு உங்களின் பதில் என்ன?’’

‘‘பெரியார் தலைமுறை தலைமுறையாக நீடிக்கப்போகிற தலைவர். அவரின் சுயசரிதத்தைச் சொல்கிற கதையில் என்னால் இசையமைக்க முடிஞ்சது என் பாக்கியம்.

இந்தப் படத்துக்கு இசையின் பங்கு முக்கியம், பாடல்களும் அவசியம் என்று நினைத்தார் இயக்குநர் ஞான.ராஜசேகரன். அவர் நினைத்திருந்தால், இதை ஒரு டாகுமென்ட்டரியாக எடுத்திருக்கலாம். ஆனால், அது அவர் எண்ணம் இல்லை.

டைரக்டரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிற மாதிரியும், கதை நடைபெறுகிற காலகட்டத்துக்கு ஏற்பவும் இதுக்கு இசையமைச்சிருக்கேன். அந்தக் கால இசை, அதற்கான அழகோடு வந்திருக்கு. பெரியாருக்கான அஞ்சலியில், அவரின் மேல் வீசப்படுகிற வண்ண மலர்களில் என்னுடைய பூக்களும் இருக்குங்கிற பூரிப்பு மனசில் நிறைஞ்சிருக்கு. படத்தில், பெரியார் தனிமையில் பாடக்கூடிய கன்னடப் பாட்டு கூட ஒண்ணு இருக்கு. பெரியார் படத்துக்கு இசையால் சிறப்பு சேர்க்க முடியாது என்பது இளையராஜாவின் கருத்தாக இருக்கலாம். ஆனால், அந்தப் படத்தின் கண்ணியத்துக்கும், கம்பீரத்துக்கும் ஒருபோதும் என் இசை இடைஞ்சல் செய்யாது.

பாரதியார் என்றால், உடனே நம் நினைவுக்கு வருவது கவிதையும் இசையும்! பெரியார் என்றால், நமது நினைவுக்கு வருவது அவரது நெஞ்சு நிமிர்த்திய பேச்சு. தெளிந்த ஒரு போராளிக்கு, தேர்ந்தசிந்தனா வாதிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது இயக்கு நருக்குத் தெரியும். இதில் என் பொறுப்பு என்ன என்பது எனக்குத் தெரியும். நான் என் தொழில் மீது பக்தியாகஇருக் கிறேன். இதில் எனது தனிப்பட்ட நம்பிக்கை களையோ, விருப்பு வெறுப் புகளையோ யார் மீதும் திணிக்க மாட்டேன்.

‘பெரியார்’ மாதிரி சரித் திரத்தில் இடம்பெறக்கூடிய ஒரு படத்துக்கு இசையமைக்கக் கிடைத்த வாய்ப்புக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்!’’

ஆர்மோனியத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு, கணீர்க் குரலில் பாடுகிறார் வித்யாசாகர்...

‘கடவுளா... நீ கல்லா..?’

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.