கனடா-ரொறொன்ரோ, ஸ்காபுரோ பகுதியில் இரண்டு வீட்டு கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நால்வரை பொலிசார் தேடுகின்றனர். இவர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

நான்கு முதல் ஐந்து ஆண்கள் முகமூடி அணிந்தவாறு நவம்பர் மாதம் 30-ந்திகதி அதிகாலை 3.40மணியளவில் எல்ஸ்மியர் வீதி மற்றும் மார்க்கம் வீதியில் அமைந்துள்ள வீட்டில்  இருந்த மனிதனிடம் கொள்ளை அடித்துள்ளனர்.

இதே குழு குறிப்பிட்ட மனிதனிடம் இரண்டாவது தடவையாக டிசம்பர் 7ந்திகதி அதிகாலை 2.15 அளவில் மீண்டும் கொள்ளையடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இரண்டு வழக்குகளிலும் மூன்று அல்லது நான்கு சந்தேக நபர்கள் மனிதனை தாக்கியதுடன் அவரது தனிப்பட்ட உடமைகளையும் கொள்ளையடித்துள்ளனர்.
மூன்று  சந்தேக நபர்கள் பிறவுன் நிறமுடையவர்கள் எனவும் நான்காவது நபர் கறுப்பு நிறமுடையவர் எனவும் பொலிசார் கூறினர்.

ஒரு நபர் கொள்ளையின் போது கத்தி ஒன்றை வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கமராவில் பதிவாகியிருந்த இவர்களின் தோற்றங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிசாருடன் 416-808-7350 என்ற இலக்கத்தில் அல்லது அனாமதேயமாக கிரைம் ஸ்ரொப்பஸ் 416-222-8477 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

rob1rob2rob3rob4rob5rob6rob7rob8