Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண விளையாட்டு செய்திகள் 2016

Featured Replies

  • தொடங்கியவர்

அமரர் தனபாலன் ஞாபகார்த்த துடுப்பாட்டப்போட்டி!

1 days Ago | 121 |

800d90360470a29ed3d5f40c3422f4eb04a.jpg

சென் .ஜோன்ஸ் கல்லூரியின் மறைந்த முன்னாள் அதிபர் அமரர் தனபாலன் அவர்களின் ஞாபகார்த்த நினைவாக யாழ். மாவட்ட பாடசாலைகள் இணைந்த துடுப்பாட்டப்போட்டி சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் ஜெறோ செல்வநாயகம் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் அதிபர் அமரர் தனபாலன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 

                                                                   29673c94c8104520cf75a0e5e45ea2d4.jpg

                                                                   12fa2daf7ec7306210b1cc285e9255c9.jpg

                                                                   a760333f4f1ac2b8df71d4746410b25c.jpg

 

http://onlineuthayan.com/sports/cricket/QmhuUTNKcXpUakU9

  • 1 month later...
  • தொடங்கியவர்
கழுகுகள் கிரிக்கெட் இரவு: முடிசூடியது சாவகச்சேரி சிவன்
 
28-06-2016 09:05 AM
Comments - 0       Views - 65

article_1467204321-KazucriciravLEAD--Cha

அமரர் மார்க்கண்டு நாகராசா ஞாபகார்த்தமாக, வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், கடந்த வெள்ளிக்கிழமை (24), சனிக்கிழமை (25), ஞாயிற்றுக்கிழமைகளில் (26) தமது மைதானத்தில் நடாத்திய கழுகுகள் கிரிக்கெட் இரவு என வர்ணித்து நடாத்திய, அணிக்கு எட்டு பேர், ஆறு ஓவர்கள் கொண்ட, நாடாளாவிய ரீதியிலிருந்து 52 அணிகள் பங்கு கொண்ட, விலகல் முறையிலான மாபெரும் மென்பந்தாட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சம்பியனாக சாவகச்சேரி சிவன் விளையாட்டுக் கழகம், சம்பியனாக முடிசூடிக் கொண்டது.

article_1467204360-KAzucriikiaLEAD-1.jpg

சிவன் விளையாட்டுக் கழகத்துக்கும் மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தின் பி அணிக்குமிடையே இடம்பெற்ற இறுதிப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டிஸ்கோ பி அணி, சிவன் விளையாட்டுக் கழகத்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிவன் விளையாட்டுக் கழகம், ஆறு ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக தர்ஷன், எட்டுப் பந்துகளில், 2, ஆறு ஓட்டங்கள், 1, நான்கு ஓட்டம் உள்ளடங்கலாக 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில், டிஸ்கோ பி அணி சார்பாக, இரண்டு ஓவர்கள் பந்துவீசிய அபி, 11 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் இலங்கை தேசிய அணிக்கு தெரிவாகியிருந்த சஞ்சீவன், தனது ஓவரில், நான்கு ஓட்டங்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

article_1467204399-KazcriravuLEAD--Runne

பதிலுக்கு 45 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டிஸ்கோ பி அணி, ஆறு ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்று, பரிதாபகரமாக ஒரு ஓட்டத்தால் தோல்வியைத் தளுவியது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, மூன்று பந்துகளை எதிர்கொண்ட ஆனந், 2, ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில் சிவன் விளையாட்டுக் கழகம் சார்பாக, இரண்டு ஓவர்கள் பந்துவீசிய தீபன், 13 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், தர்ஷன் தனது ஓவரில், ஏழு ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.

மேற்படி இறுதிப் போட்டியின் நாயகனாக, சாவகச்சேரி சிவன் விளையாட்டுக் கழகத்தின் தர்சன் தெரிவானார்.

இத்தொடரில் பங்கேற்ற 52 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் 13 அணிகள் இடம்பெற்று, விலகல் முறையிலேயே போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

அந்தவகையில், குழு ஏயிற்கான காலிறுதிப் போட்டியில், கொக்குவில் ஸ்ரீ காமாட்சி விளையாட்டுக் கழகத்தை ஒன்பது ஓட்டங்களால் தோற்கடித்து, சாவகச்சேரி சிவன் விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு தகுதி பெற்றதுடன், குழு பியிற்கான காலிறுதிப் போட்டியில், பருத்தித்துறை வீனஸ் விளையாட்டுக் கழகத்தை இரண்டு விக்கெட்டுகளால் தோற்கடித்து அரியாலை ஐக்கியம் விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்ததுடன், குழு சியிற்கான காலிறுதிப் போட்டியில், மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தின் ஏ அணியினை ஆறு விக்கெட்டுகளால் தோற்கடித்து கொக்குவில் ஏ.பி விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு சென்றதுடன், குழு டியிற்கான காலிறுதிப் போட்டியில், வதிரி ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தினை ஐந்து விக்கெட்டுகளால் தோற்கடித்து மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தின் பி அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன.

முதலாவது அரையிறுதிப் போட்டியில், அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினை எட்டு ஓட்டங்களால் தோற்கடித்து சாவகச்சேரி சிவன் விளையாட்டுக் கழகம், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததோடு, இரண்டாவது அரையிறுதியில், கொக்குவில் ஏ.பி விளையாட்டுக் கழகத்தினை 38 ஓட்டங்களால் தோற்கடித்து மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழகத்தின் பி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.   

- See more at: http://www.tamilmirror.lk/175873/கழ-க-கள-க-ர-க-க-ட-இரவ-ம-ட-ச-ட-யத-ச-வகச-ச-ர-ச-வன-#sthash.6MslR0pM.dpuf
  • தொடங்கியவர்
நான்காவது சுற்றில் மணற்காடு சென். அன்ரனிஸ்
 
30-06-2016 06:22 AM
Comments - 0       Views - 6

article_1467291206-Kazuku-1dsathdtyrbja.

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தி வரும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் நான்காவது சுற்றுக்கு மணற்காடு சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.

சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே இடம்பெற்ற மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றே சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம், நான்காவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியில், சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக சுஜீபன் மூன்று கோல்களையும் அலெக்ஸ் ஒரு கோலினையும் பெற்றனர். யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக பெறப்பட்ட கோலை றமணன் பெற்றிருந்தார்.

article_1467291303-Kazuku-2kukamofhaj.jp

இப்போட்டியின் நாயகனாகத் தெரிவான சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தின் சுஜீபனுக்கான பதக்கத்தினை தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் அணிவித்திருந்ததுடன், வெற்றி பெற்ற அணியான சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்துக்கான பணப்பரிசினையும் வழங்கி வைத்திருந்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/175951/ந-ன-க-வத-ச-ற-ற-ல-மணற-க-ட-ச-ன-அன-ரன-ஸ-#sthash.cxZHMM4y.dpuf
  • தொடங்கியவர்
ஹென்றீசியன் சவால் கிண்ணம்: இறுதியில் ஞானமுருகன், டயமன்ஸ்
 
 

article_1467547037-Inhen16sgannrumdyLEAD

வட மாகாண ரீதியில் அழைக்கப்பட்ட 36 முன்னணிக் கழகங்களுக்கிடையில், இளவாலை யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம், தமது மைதானத்தில் நடாத்தி வரும் ஹென்றீசியன் சவால் கிண்ணம் 2016இன் இறுதிப் போட்டிக்கு மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக கழகம், வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியன தகுதி பெற்றுள்ளன.

article_1467547052-Indahen16dinaLEAD-2.j

ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்துக்கும் முல்லைத்தீவு சென். யூட் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான அரையிறுதிப் போட்டியில், 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற ஞானமுருகன் விளையாட்டுக் கழகம், இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தது.

இப்போட்டியின் ஆரம்பத்திலேயே ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்தின் முன்கள வீரரான ஆர்.ஜெகதீஸ், அடுத்தடுத்து அடித்த இரண்டு கோல்களின் மூலம் ஞானமுருகன் முன்னிலை பெற்ற நிலையில், பதில் கோல்களைப் பெற்று போட்டியைப் சமப்படுத்த சென். யூட் போராடிய போதும், ஞானமுருகன் கோல்காப்பாளர் இலாவகமாக செயற்பட்டு பல கோல் வாய்ப்புகளை தடுத்திருந்தார். எனினும் இரண்டாவது பாதியில் பெனால்டி ஒன்றின் மூலம் சென். யூட்ஸின் பகிரதன் கோலொன்றினைப் பெற, போட்டியை சமப்படுத்தும் முனைப்புடன் துடிப்பாக சென். யூட் ஆடியது.

எனினும் இரண்டாவது பாதியில் ஞானமுருகனின் ஆர்.ஜெகதீஸ், மீண்டுமொரு கோலைப் பெற்று, தனது ஹட்ரிக் கோலைப் பூர்த்தி செய்ததுடன், அதன்பின்னர் அவ்வணியின் வகின்சன் மேலுமொரு கோலினைப் பெற, இறுதியில் 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற ஞானமுருகன், இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இப்போட்டியின் நாயகனாக ஞானமுருகனின் ஆர்.ஜெகதீஸ் தெரிவானார். 

இதேவேளை, வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் சென்.ஹென்றீஸ் கல்லூரி அணிக்குமிடையிலான மற்றைய அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் சென்.ஹென்றீஸ் கல்லூரியை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு டயமன்ஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றிருந்தது.

குறித்த போட்டியின் 10ஆவது நிமிடத்திலேயே, தனது அணியின் நட்சத்திரவீரர் பிறேம்குமார் மூலம் கோலொன்றினைப் பெற்ற டயமன்ஸ் விளையாட்டுக் கழகம், சென்ஹென்றீஸ் கல்லூரி அணியை அழுத்தத்துக்குள்ளாக்கியிருந்தது. அதன்பின்னர், இரண்டாவது பாதியில், அவ்வணியின் துஷிகரன் பெற்ற கோலின் மூலம் 2-0 என்ற கோல்கணக்கில் டயமன்ஸ் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து, கோல்களைப் பெற்று போட்டியைச் சமப்படுத்த சென். ஹென்றீஸ் கல்லூரி அணி முயற்சித்த நிலையில், போட்டியின் 80ஆவது அவ்வணியின் ஆர். மதுசன் பெற்ற கோலின் மூலம் அவ்வணி ஊக்கம் பெற்று ஆடியபோதும், அதற்கு பிறகு கோலெதனையும் பெறமுடியாததால், இறுதியில் 1-2 என்ற கோல்கணக்கில் தோல்வியுற்றது. குறித்த போட்டியின் நாயகனாக ஹென்றீஸ் கல்லூரி அணியின் ஆர். மதுசன் தெரிவானார். 

இந்நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில், ஹென்றீசியன் கிண்ணம் யாருக்கு என வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகமும் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகமும் பலப்பரிட்சை நடாத்தவுள்ளன.

- See more at: http://www.tamilmirror.lk/176114/ஹ-ன-ற-ச-யன-சவ-ல-க-ண-ணம-இற-த-ய-ல-ஞ-னம-ர-கன-டயமன-ஸ-#sthash.b8REHcsj.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
சம்பியனானது நாவாந்துறை சென். மேரிஸ்
 
 

article_1467739287-LEAD--ChampionsThikka

யாழ். மாவட்ட ரீதியாக 60 அணிகளுக்கிடையே திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்திய தொடரில், நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம், சம்பியனாக முடிசூடிக் கொண்டது.

article_1467739354-LEAD--Runner-UpThikka

சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே இடம்பெற்ற இறுதிப் போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் விண்மீன் விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்த, நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாக முடிசூடிக் கொண்டது. இப்போட்டியின் 15ஆவது நிமிடத்தில் நிதர்சன் ஒரு கோலினைப் பெற்று சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு முன்னிலையை வழங்கியதுடன், போட்டியின் 40ஆவது நிமிடத்தில், நிரோஜன் (அன்ரனி ஜெனற்) பெற்ற கோலின் மூலம், அவ்வணி தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டது. இவ்விறுதிப் போட்டியின் நாயகனாக சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் நிரோஜன் தெரிவாகியிருந்தார்.

 

article_1467739409-LEAD--Champions--Capt

இதேவேளை, இளவாலை யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகத்துக்கும் மணற்காடு சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான மூன்றாமிடத்துக்கான போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம், மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தது.

article_1467739460-LEAD--Runner-Up--Capt

இத்தொடரின் நாயகனாக சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் நிதர்சன் தெரிவாகியதோடு, தொடரின் சிறந்த கோல்காப்பாளராக அதேயணியைச் சேர்ந்த சிந்துஜன் தெரிவானதோடு, தொடரின் வளர்ந்து வரும் வீரராக யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகத்தைத் சேர்ந்த சுபன் தெரிவானதோடு, மக்கள் மனம் கவர்ந்த வீரராக சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் மதிவதனன் தெரிவானதோடு, தொடரின் வளர்ந்துவரும் விளையாட்டுக் கழகமாக வரணி யூத் விளையாட்டுக் கழகம் தெரிவானதோடு, தொடரின் சிறந்த நன்நடத்தையை வெளிப்படுத்திய கழகமாக, மணற்காடு சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகமும் தெரிவானது.

article_1467739504-LEAD--Third-Place--Ca

இத்தொடரின் ஆரம்ப சுற்றுக்கள் விலகல் முறையில் இடம்பெற்று, எட்டு அணிகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றில், நவாலி சென். பீற்றர்ஸ், பொற்பதி சென். பீற்றர்ஸ், விண்மீன், சென். அன்ரனிஸ் ஆகியன ஒரு குழுவாகவும் சென். மேரிஸ், யங்ஹென்றீசியன், கருணையம்பதி கொலின்ஸ், சமரபாகு நியூட்டன் ஆகியன ஒரு குழுவாகவும் பிரிக்கப்பட்டு பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் இடம்பெற்றதுடன், ஒரு குழுவில் முதலிடம் பெற்ற சென். மேரிஸ், மற்றைய குழுவில் இரண்டாமிடம் பெற்ற சென். அன்ரனிஸ் ஆகியன ஒரு அரையிறுதிப் போட்டியில் மோதி சென், மேரிஸ் இறுதிப் போட்டிக்கு தெரிவானதுடன், மற்றைய குழுவில் முதலிடம் பெற்ற விண்மீன், அடுத்த குழுவில் இரண்டாமிடம் பெற்ற யங்ஹென்றீசியன் ஆகியன மோதிய அடுத்த அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, விண்மீனும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.

article_1467739541-LEAD--Fourth-Place--C

- See more at: http://www.tamilmirror.lk/176333/சம-ப-யன-னத-ந-வ-ந-த-ற-ச-ன-ம-ர-ஸ-#sthash.VpD3LVFT.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வட மாகாண வல்லவன்: சுப்பர் 8இல் பலாலி விண்மீன்
 
07-07-2016 09:34 AM
Comments - 0       Views - 2

article_1467882463-Kazuku-%281%29kazuuim

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன், வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தி வரும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு மூன்றாவது அணியாக பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.

விண்மீன் விளையாட்டுக் கழகத்துக்கும் கருணையம்பதி கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான நான்காவது சுற்றுப் போட்டியில், 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற விண்மீன் விளையாட்டுக் கழகம், சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில், விண்மீன் சார்பாக டேமியன் இரண்டு கோல்களையும் காண்டீபன் ஒரு கோலினையும் பெற்றதோடு, கொலின்ஸ் சார்பாக பெறப்பட்ட கோலை சசி பெற்றிருந்தார்.

article_1467882481-Kazuku-%282%29skuoajj

இப்போட்டியின் நாயகனாகத் தெரிவான டேமியனுக்கான பதக்கம், பணப்பரிசினை ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர் வசந்தகுமார் வழங்கி வைத்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/176489/வட-ம-க-ண-வல-லவன-ச-ப-பர-இல-பல-ல-வ-ண-ம-ன-#sthash.R3f7RqDN.dpuf
  • தொடங்கியவர்

சுப்பர் 8இல் ஊரெழு றோயல்
 
11-07-2016 02:35 AM
Comments - 0       Views - 4

article_1468149004-Kazuku--Winner1.jpg

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்தும் இவ்வாண்டுக்கான வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு ஐந்தாவது அணியாக, ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றுள்ளது. 

றோயல் விளையாட்டுக் கழகத்துக்கும் மன்னார் அந்தோனியார்புரம் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், இரண்டாம் பாதியின்போது, 3-1 என்ற கோல் கணக்கில் றோயல் விளையாட்டுக் கழகம் முன்னிலையில் இருந்தபோது, மத்தியஸ்தர்கள் தவறாக தீர்ப்பு வழங்குவதாகக் கூறி, சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில், றோயல் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே, றோயல் விளையாட்டுக் கழகம் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்றது. 

இப்போட்டியில், றோயல் விளையாட்டுக் கழகம் சார்பாக கஜகோபன் இரண்டு கோல்களையும் நேசன் ஒரு கோலினையும் பெற்றதோடு, சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் சார்பாகப் பெறப்பட்ட கோலை, சுதர்சன் பெற்றிருந்தார். இப்போட்டியின் நாயகனாகத் தெரிவு செய்யப்பட்ட றோயல் விளையாட்டுக் கழகத்தின் கஜகோபனுக்கான பணப்பரிசையும் பதக்கத்தையும், கழுகுகள் விளையாட்டுக் கழக நலன்விரும்பி சி.செல்வமாணிக்கம் வழங்கிக் கௌரவித்திருந்தார். 

article_1468149056-Kazuku--MOM.jpg

இதேவேளை, மன்னார் பனங்கட்டிகொட்டு சென். ஜோசப் விளையாட்டுக் கழகமும் மணற்காடு சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகமும் கடந்த வியாழக்கிழமை (07) மோதிய நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் வெற்றிபெற்ற சென். ஜோசப் விளையாட்டுக் கழகம், நான்காவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/176666/ச-ப-பர-இல-ஊர-ழ-ற-யல-#sthash.ip3vRWrP.dpuf
  • தொடங்கியவர்
கிளிநொச்சி மாவட்ட சம்பியனானது இந்து இளைஞர்
 
11-07-2016 05:16 AM
Comments - 0       Views - 8

article_1468150115-Kili-1.jpg

-எஸ்.என்.நிபோஜன்

இலங்கை கிரிக்கெட் சபை  நடாத்தும் பிரிவு 3 போட்டியின் இறுதிச் சுற்றில், மத்திய தீரர் அணியை எதிர்கொண்டு இந்து இளைஞர் அணி வெற்றிபெற்றது.

முதலில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்து இளைஞர் அணி, கேட்டுக் கொண்டதற்கிணங்க முதலில் துடுபெடுத்தாடிய மத்திய தீரர் அணியால், 63 ஓட்டங்கள் மாத்திரமே பெற முடிந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக சுவிதரன் 16, ஜெனுசன் 14 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அனுக்ஷன் ஆறு, தர்ஷன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பதிலுக்கு 64 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்து இளைஞர் அணி, 21.3 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் பிரதீசன் 18, அனுக்ஷன் 14 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மத்திய தீரர்  அணி சார்பாக அஜித் ஏழு, லகிதரன் இரண்டு விக்கெட்டுகளைப் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக அனுக்சன் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக அஜித் தெரிவாகினார்.

article_1468150197-Kili-3.jpg

- See more at: http://www.tamilmirror.lk/176669/க-ள-ந-ச-ச-ம-வட-ட-சம-ப-யன-னத-இந-த-இள-ஞர-#sthash.hMAd8gU4.dpuf
  • தொடங்கியவர்
வட மாகாண வல்லவன் தொடர்: சுப்பர் 8இல் பாசையூர் சென். அன்ரனிஸ்
 
11-07-2016 12:11 PM
Comments - 0       Views - 2

article_1468230551-In10jun6aseKazuku--Wi

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்தும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு, ஆறாவது அணியாக பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.

article_1468230586-Injun10y6mayikfhKazuk

சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற சென். அன்ரனிஸ், சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இப்போட்டியின் ஆரம்பத்திலிருந்து கோல் பெறுவதனை நோக்காகக் கொண்டு இரண்டு அணிகளும் வேகமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த நிலையில், போட்டியின் 15ஆவது நிமிடத்தில் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தின் அஜித், ஒரு கோலினை அடித்து தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார். எனினும், அடுத்த நான்காவது நிமிடத்தில் ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்தின் ஜெகன், ஒரு கோலினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.

இந்நிலையில், தொடர்ந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தின் மதுஷன், கோலொன்றினைப் பெற்று, தனது அணிக்கு முன்னிலையை வழங்கியதுடன், போட்டியின் 74 ஆவது நிமிடத்தில், அவ்வணியின் அருள்தர்சன் மேலுமொரு கோலினைப் பெற்று தனது அணியின் வெற்றியை உறுதி செய்ய, இறுதியில், 3-1 என்ற கோல்கணக்கில் சென். அன்ரனிஸ் வெற்றி பெற்றிருந்தது.

article_1468230599-inju10dkfjsKazuku--MO

போட்டியின் நாயகனாக சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கஜகத்தின் சஜந்தன் தெரிவு செய்யப்பட்டு, அவரிற்கான பணப்பரிசு மற்றும் பதக்கத்தினை கழுகுகள் விளையாட்டுக் கழக ஆலோசகரும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமான இ.சுகந்தன் வழங்கி கெளரவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/176752/வட-ம-க-ண-வல-லவன-த-டர-ச-ப-பர-இல-ப-ச-ய-ர-ச-ன-அன-ரன-ஸ-#sthash.6qR0xJfr.dpuf
  • தொடங்கியவர்
சம்பியனானது சென்.பற்றிக்ஸ் கல்லூரி
 

article_1468324654-m6tks0rg.jpg-குணசேகரன் சுரேன்

வட மாகாண கல்வி விளையாட்டுத் திணைக்களத்தால் வட மாகாணப் பாடசாலைகளின் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்டு வரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில், 17 வயதுப் பிரிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனாகியது.

இச்சுற்றுப்போட்டி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று, இதன் இறுதிப் போட்டியில், சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி கடந்த வாரயிறுதியில் மோதியது.

முதற் பாதியாட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி கோல் ஒன்றை அடித்து முன்னிலை பெற்றது. இருந்தும், இரண்டாவது பாதியாட்டத்தில் பதில் கோலடித்த சென்.பற்றிக்ஸ் அணி போட்டியை சமநிலைப்படுத்தியது.

வழமையான ஆட்ட நேரம் வரையில் இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்றிருந்தமையால்,  போட்டியின் முடிவு பெனால்டிக்குச் சென்றது. இதில், சென்.பற்றிக்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

மூன்றாமிடத்துக்கான ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 2:0 என்ற கோல் கணக்கில் மன்னார் சென்.சேவியர் அணியை வீழ்த்தியது.

- See more at: http://www.tamilmirror.lk/176864/சம-ப-யன-னத-ச-ன-பற-ற-க-ஸ-கல-ல-ர-#sthash.3I5gVX2Z.dpuf

 

 

 

சம்பியனானது கிளிநொச்சி உருத்திரபுரம் வி.க
 

-நடராசா கிருஸ்ணகுமார்

article_1468324900-InkiurusaKili--Winner

மறைந்த கோரக்கன்கட்டு மக்கள் மற்றும் மறைந்த கழக அங்கத்தவர்களின் ஞாபகார்த்தமாக முரசுமோட்டை கோரக்கன்கட்டு விளைபூமி விளையாட்டுக் கழகம் நடத்திய கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

கோரக்கன்கட்டு விளைபூமி விளையாட்டுக் கழக மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், வட்டக்கச்சி இளந்தளிர் விளையாட்டுக் கழகமும் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகமும் மோதின.

இதில், உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. வெற்றியீட்டிய அணி, சிறந்த வீரர்களுக்கான பரிசில்களையும், வெற்றிக் கேடயங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வழங்கினார்.

இதன்போது அவர் உரையாற்றுகையில், விளையாட்டுக்கள் மூலம் எமது இளைய தலைமுறை வழி தவறிச் சென்று தீய வழிகளைப் பின்பற்றுவதைத் தடுத்து ஆரோக்கியமான சமூகமாக வாழ்வதற்கு வழி ஏற்படுத்த முடியும். விளையாட்டுக்கள் ஒரு மனிதனை உடல், உள ரீதியாக ஆரோக்கியமடையச் செய்கின்றது.

ஆன்மீகமும் விளையாட்டும் இந்த நாட்டில் சரியான முறையில் பின்பற்றப்பட்டால், எமது நாட்டில்  இளைய தலைமுறையினர் வழிதவறிச் சென்று வாழ்க்கையை அழிக்கின்ற போதைவஸ்து மற்றும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு அடிமையாகமாட்டார்கள். எமது இனத் தனித்துவம், கலாசாரங்களைப் பேணுவதற்கும்  இப்படியான விளையாட்டுக்கள் துணைபுரிகின்றன’ என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/176865/சம-ப-யன-னத-க-ள-ந-ச-ச-உர-த-த-ரப-ரம-வ-க#sthash.ZqkVPZn1.dpuf

 

 

 

சுப்பர் 8இல் மன்னார் கில்லரி
 

article_1468325288-Kazuku--Winnerjulai11

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு ஏழாவது அணியாக மன்னார் கில்லரி விளையாட்டுக் கழகம் நுழைந்துள்ளது.

article_1468325332-Kazuku--Loserat11jual

கில்லரி விளையாட்டுக் கழகம், உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற கில்லரி விளையாட்டுக் கழகம், சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இப்போட்டியின் முதற்பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய கில்லரி விளையாட்டுக் கழகம், 30, 38 ஆவது நிமிடங்களில் ரெக்சனின் மூலம் இரண்டு கோல்களைப் பெற்று முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் 48ஆவது நிமிடத்தில் கில்லரி அணியின் கோல்காப்பாளரின் உதையினை, அவ்வணியின் வீரரொருவர் பின் நோக்கி உதைய, பந்து நவஜீவன்ஸ் அணியின் பிரியந்தனின் கால்களில் அகப்பட, அவர், கோல்காப்பாளரின் மேலால் தூக்கிப்போட்டு கோலாக மாற்றினார். அதன் பின்னர், 78ஆவது நிமிடத்தில் நவஜீவன்ஸ் அணியின் கெளதமன் ஒரு கோலினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.

பின்னர் ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் கில்லரி அணியின் தாசன், ரஞ்சா ஆகியோர் பெற்ற கோல்களின் மூலம், 4-2 என்ற கோல்கணக்கில் இறுதியில் கில்லரி வெற்றி பெற்றது.

article_1468325352-Kazuku--MOM6kul176j.j

போட்டியின் நாயகனாக கில்லரி அணியின் டிலக்சன் தெரிவு செய்யப்பட்டு, அவருக்கான பதக்கத்தினை நா.ரவீந்திரன் வழங்கியதுடன் அணிக்கான பணப்பரிசினை பருத்தித்துறை கால்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்க மத்தியஸ்தர் ம.நிதர்சன் வழங்கினார்.

- See more at: http://www.tamilmirror.lk/176866/ச-ப-பர-இல-மன-ன-ர-க-ல-லர-#sthash.elnrs0Sc.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சம்பியனானது றெயின்போ
 
18-07-2016 11:29 AM
Comments - 0       Views - 13

article_1468839601-In13reiLEAD--Champion

வல்வைக்குட்பட்ட றெயின்போ, தீருவில், சைனிங்ஸ், இளங்கதிர், நேதாஜி, உதயசூரியன், ரேவடி ஆகிய ஏழு கழகங்களுக்கிடையில், அமரர்களான கந்தசாமி குகதாஸ், குகதாஸ் ஜெயலட்சுமி, குகதாஸ் பார்த்தீபன் ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம், லீக் முறையில் நடாத்திய இருபதுக்கு-20 தொடரில் றெயின்போ விளையாட்டுக் கழகம் சம்பியனாகியுள்ளது.

article_1468839706-In13reicLEAD--Runner-

றெயின்போ விளையாட்டுக் கழகத்துக்கும் தீருவில் விளையாட்டுக் கழகத்துமிடையே இடம்பெற்ற இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தீருவில் விளையாட்டுக் கழகம், 17 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 62 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், பிரதீப் 23 ஓட்டங்களைப் பெற்றதோடு, பந்துவீச்சில் ருதேஷா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு 63 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய றெயின்போ விளையாடுக் கழகம், 14 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், பிரணவன் 21, பிரகலாதன் 12 ஓட்டங்களைப் பெற்றதோடு, பந்துவீச்சில் பிரதீப், குமரன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இறுதிப் போட்டியின் நாயகனாக ருதேஷா தெரிவானதோடு, தொடரின் நாயகனாக பிரதீப் தெரிவானார். தொடரில், 163 ஓட்டங்களைப் பெற்று பிரதீப் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றதோடு, 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தொடரில் அதிக விக்கெட்டுகளை சிறீகரன் கைப்பற்றியிருந்தார்.

லீக் முறையில் இடம்பெற்ற இத்தொடரின் லீக் போட்டிகள் ஆறிலும் வெற்றி பெற்று முதலாவது அணியாக ‘பிளே ஓஃப்’ சுற்றுக்குள் நுழைந்த றெயின்போ விளையாட்டுக் கழகம், லீக் போட்டிகள் நான்கில் வெற்றி பெற்று இரண்டாமிடம் பெற்ற தீருவில் விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தததுடன், தொடரில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற சைனிங்ஸ், தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இளங்கதிர் ஆகியன மோதிய போட்டியில் வெற்றி பெற்ற சைனிங்ஸ், தீருவில் ஆகிய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் இரண்டாவது அணியைத் தேர்வு செய்யும் போட்டியில், தீருவில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

- See more at: http://www.tamilmirror.lk/177348/சம-ப-யன-னத-ற-ய-ன-ப-#sthash.7bX35sF8.dpuf
  • தொடங்கியவர்

குப்பிளான் விக்னேஸ்வரா விளையாட்டு கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட அணிகள் மோதும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி. 

 

received_1086761028045740குப்பிளான் விக்னேஸ்வரா  விளையாட்டு கழகம்  நடாத்தும் யாழ் மாவட்ட அணிகள் மோதும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி.   

இன்றைய முடிவுகள்

1)அச்செழு வளர்மதி vs அராலி சில்வஸ்ரார்2- 0

2)புத்தூர் விக்னேஸ்வரா vs அராலி . எ/எல்-6- 0

#நாளைய போட்டிகள்

அராலி திருமகள் vs குப்பிளான் . குறிஞ்சிகுமரன்

பாசையூர் சென் அன்ரனீஸ் vs நவன்டில் கலைமதி

received_1086761138045729

http://vilaiyattu.com/16437-2/

  • தொடங்கியவர்
யாழ்ப்பாணத்தின் கில்லாடியான பாடுமீன்
 
 

article_1469447886-AriyaalaiSassKilapadu-குணசேகரன் சுரேன்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 97ஆவது ஆண்டு நிறைவையொட்டி, யாழ்.மாவட்ட ரீதியில் நடத்திய கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பாடுமீன் அணி சம்பியனாகியது.

இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, அரியாலை பயிற்சி மைதானத்தில் அண்மையில் மின்னொளியில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணியை எதிர்த்து குருநகர் பாடுமீன் அணி மோதியது.

முதற்பாதியாட்டத்தில் இரு அணிகளும் எதிரணியின் கோல் கம்பங்களை ஆக்கிரமித்தன. மேரிஸ் அணியின் மரியதாஸ் நிதர்சன் முதலாவது கோலை அடித்தார். முதல் பாதியாட்டம் அந்தக் கோலுடன் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில் பாடும்மீன் அணிக்கு, தண்டனை உதை வாய்ப்பு ஒன்று கிடைக்க, அந்த அணி அதனை கோலாக்கியது. போட்டி நேர முடிவில் 1-1 என்ற கோல்கள் இருந்தமையால், வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. அதில் பாடுமீன் அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளையும் சேர்ந்த தலா ஒவ்வொரு வீரர்கள், விதிமுறைகளை மீறி ஆடியதாக நடுவரால் சிவப்பு அட்டை காட்டப்பட்ட வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இந்த இறுதிப்போட்டியின் நாயகனாக பாடும் மீன் அணியின் கோல் காப்பாளர் ஆர்.பிரதீபன் தெரிவு செய்யப்பட்டார்.

மூன்றாமிடத்துக்கான ஆட்டத்தில் ஊரெழு றோயல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மயிலங்காடு ஞானமுருகன் அணியை வென்றது.

- See more at: http://www.tamilmirror.lk/177919/ய-ழ-ப-ப-ணத-த-ன-க-ல-ல-ட-ய-ன-ப-ட-ம-ன-#sthash.qwIwkR42.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
சம்பியனானது வதிரி டயமன்ஸ்
 
25-07-2016 09:29 PM
Comments - 0       Views - 6

article_1469448123-LEADshadjs.jpg-குணசேகரன் சுரேன்

வட மாகாண ரீதியில் அழைக்கப்பட்ட 36 முன்னணிக் கழகங்களுக்கிடையில், இளவாலை யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம், தமது மைதானத்தில் நடாத்தி வந்த ஹென்றீசியன் சவால் கிண்ணம் 2016இனை, வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகம் கைப்பற்றியுள்ளது.

டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே இடம்பெற்ற இறுதிப் போட்டியில், 5-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற டயமன்ஸ் விளையாட்டுக் கழகம், சம்பியனாக முடிசூடிக் கொண்டது. இப்போட்டியில், டயமன்ஸ் சார்பாக, மதுசூதனன், துஷிகரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பிறேம்குமார் ஒரு கோலினையும் பெற்றனர். ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் சார்பாக ஸ்மித் இரண்டு கோல்களையும் தவரூபன் ஒரு கோலினையும் பெற்றனர்.

டயமன்ஸ் அணிக்கு அணிக்கு முதலாவது கோலை 10ஆவது நிமிடத்தில் எம். மதுசூதனன் பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 17ஆவது நிமிடத்தில் ரி. துஷிகரன் கோலைப் பெற்றுக்கொடுத்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஞானமுருகன் அணியின் ஸ்மித் 18ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்றார். எனினும், அதனை சுதாகரித்து ஆடிய டயமன்ஸ் அணி, 22 மற்றும் 30ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்றது. இதனை முறையே அவ்வணியின் துஷிகரன் மற்றும் மதுசூதனன் ஆகியோர் பெற்றுக்கொடுத்தனர்.

ஆனால், விடாப்பிடியாக தாக்குதல் ஆட்டம் மேற்கொண்ட ஞானமுருகன் அணி 31 மற்றும் 37ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டது. அந்தக் கோல்களை முறையே ஸ்‌மித் மற்றும் தவரூபன் ஆகியோர் போட்டனர். முதல்பாதியாட்டம் 4:3 என்ற கோல்கள் கணக்கில் முடிவடைந்தது. இரண்டாவது பாதியாட்டத்தில் வதிரி அணியினர் தடுப்பாட்டம் மேற்கொண்டமையால் ஞானமுருகன் அணியால் கோலைப் போடமுடியவில்லை. எனினும், கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி டயமன்ஸ் அணியின், பீமா என்று அழைக்கப்படும் எம்.பிறேம்குமார் 78 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். முடிவில் டயமன்ஸ் அணி 5:3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இறுதிப் போட்டியின் நாயகனாக டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் பிறேம்குமார் தெரிவானதோடு, தொடரில் ஐந்து கோல்களை பெற்றதோடு, ஆறு கோல்களைப் பெற உதவிய அதேயணியைச் சேர்ந்த மத்தியகள வீரர் மதுசூதனன், தொடரின் நாயகனாகத் தெரிவானார். தொடரின் சிறந்த கோல்காப்பாளராக, தொடரில் ஒரேயொரு கோலினை மட்டுமே விட்டு, 17க்கு மேற்பட்ட கோல் பெறும் வாய்ப்புகளை தடுத்த குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகத்தின் கோல்காப்பாளர் ஆர்.பிரதீபன் தெரிவானார். தவிர, தொடரில் ஏழு கோல்களைப் பெற்றதோடு, நான்கு கோல்களைப் பெற உதவிய ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்தின் ஜெகதீஸ், தொடரில் அதிக கோல்களைப் பெற்றவராக தெரிவானார்.

தொடரின் வளர்ந்து வரும் வீரராக, சென். ஹென்றீஸ் கல்லூரியின் 17 வயதான ஜி.அன்ரனிராஜ் தெரிவானார். இவர், தொடரில் ஐந்து கோல்களைப் பெற்றதோடு, மூன்று கோல்களைப் பெறுவதற்கு உதவியிருந்தார். தொடரின் சிறந்த பயிற்றுவிப்பாளராக, சென்.ஹென்றீஸ் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளரான எம்.டனிஸ்டன் விஜயகுமார் தெரிவானார். தொடரின் பெறுமதி வாய்ந்த வீரராக, ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தின் கஜகோபன் தெரிவானார். தொடரின் சிறந்த நன்னடத்தையை வெளிப்படுத்திய அணியாக, மன்னார் பனங்கட்டிகொட்டு சென்.ஜோசப் விளையாட்டுக் கழகம் தெரிவானதோடு, தொடரின் சிறந்த போட்டியாக, குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகமும் சென். ஹென்றீஸ் கல்லூரி அணியும் மோதிய காலிறுதிப் போட்டி தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இது தவிர, இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்குத் தெரிவு செய்யப்பட்ட ஞானரூபனும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜெ.ஆர்.எம் ஜஸ்மினும், இறுதிப் போட்டி பரிசளிப்பு விழாவின்போது கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/177920/சம-ப-யன-னத-வத-ர-டயமன-ஸ-#sthash.SX7rCMRX.dpuf
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
புட்சாலில் சென்.பற்றிக்ஸ் சம்பியன்
 

-குணசேகரன் சுரேன்

கொழும்பு சென்.ஜோசப் கல்லூரியால் அழைக்கப்பட்ட 49 பாடசாலைகளுக்கிடையில் நடத்திய புட்சல் (அணிக்கு 5 பேர்) கால்ப்பந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனாகியது.

பாடசாலைகளின் 13 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் போல் வெற்றிக்கிணக்கத்துக்காக இந்தச் சுற்றுப்போட்டி நடத்தப்பட்டது. இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற போது, யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து அநுராதபுரம் மத்திய கல்லூரி மோதியது. இதில், சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

- See more at: http://www.tamilmirror.lk/178696/ப-ட-ச-ல-ல-ச-ன-பற-ற-க-ஸ-சம-ப-யன-#sthash.n3wGKew1.dpuf

 

 

சம்பியனாகியது மன்னார் விடத்தல்தீவு யுனைற்றட்
 
 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

article_1470311158-InvidauniteLEAD-Champ

மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கினால், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட  மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக் கழகம் சம்பியனாகி சாதனை படைத்தது.

அணிக்கு 7 பேர் கொண்ட விலகல் முறையிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது மன்னார் பொது விளையாட்டரங்கில் , கடந்த வாரயிறுதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் 36 அணிகள் பங்குபற்றின. இதில், விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக் கழகமும்,  ஜோசப்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக் கழகமும் இறுதிப்போட்டியில்  மோதின.

 போட்டி தொடங்கி 4ஆவது நிமிடத்தில் விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக் கழக வீரர் நிதர்சன் முதலாவது கோலையும் இரண்டாம் பாதியின் 6ஆவது நிமிடத்தில் வின்சன் பற்றிக் இரண்டாவது கோலையும் போட்டு 2 – 0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று விடத்தல்தீவு யுனைற்றட் சம்பியனாகியது.

ஆட்ட வேளையில் ஜோசப்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக் கழகம் தனக்கு கிடைத்த ஒரு பெனால்டியை தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இவ்விறுதிப்போட்டியின் சிறந்த வீரராக விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக் கழக  வீரர் நிதர்சனும் சிறந்த கோல்காப்பாளராக விடத்தல்தீவு யுனைற்றட் விளையாட்டுக் கழக  கோல்காப்பாளர்  ஜோண் வெஸ்லியும் தொடரின் சிறந்த வீரராக யோசவ்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக் கழக  வீரர் டெஸில் தேவ் அவர்களும் தெரிவாகி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் சம்பியன் அணிக்கு வெற்றிக்கிண்ணமும் 20,000 ரூபாய் பணப்பரிசும் கால்பந்தும்  2ஆம் இடத்தைப்பெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணமும் 10,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலன் அவர்களால் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/178692/சம-ப-யன-க-யத-மன-ன-ர-வ-டத-தல-த-வ-ய-ன-ற-றட-#sthash.ttB9JfLm.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இறுதிப் போட்டியில் வல்வை-ஞானம்ஸ்
 
09-08-2016 09:13 AM
Comments - 0       Views - 5

குரும்பகட்டி உதயசூரியன் விளையாட்டுக் கழகம் வடமராட்சி ரீதியாக நடாத்தி வந்த அணிக்கு 10 ஒவர், 11 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிக்கு, வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டுக் கழகமும் கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகமும் தகுதி பெற்றுள்ளன.

வல்வை விளையாட்டுக் கழகத்துக்கும் மாலி சந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே புற்றளை இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றே வல்வை விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மைக்கல் அணி 10 ஒவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 80 ஒட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக அணித்தலைவர் ரகுவரன் 54, வினோத்ராஜ் 12 ஒட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் வல்வை அணி சார்பாக, கபிலன், ருதேஷா, விதுஷன் ஆகியோர் தலா இரண்டு  விக்கெட்டுகளை வீழ்தினர்.

பதிலுக்கு 81 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய வல்வை அணி 9.2 ஓவர்களில் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, கபிலன் 36, சிறிகரன் 18, சஞ்சீவன் 13 ஒட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மைக்கல் அணி சார்பாக, தினோஜன் மூன்று, வேணுகானன், தர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தினர். போட்டியின் நாயகனாக கபிலன் தெரிவானார்.

article_1470664168-InkuriautaLEAD-1.jpg

கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் பருத்தியூர் இளந்தளிர் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், எட்டு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றே ஞானம்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடிய இளந்தளிர் விளையாட்டுக் கழகம், 10 ஓவர்கள் முடிவில், ஐந்து விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, தீபன் 16, தினேஷ் 14, ரஜீ 10 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஞானம்ஸ் அணி சார்பாக ஜொனி இரண்டு விக்கெட்டுகளையும் செந்திரன், ரஜீவன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.

பதிலுக்கு 60 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஞானம்ஸ் அணி, 5.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஜீவன் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இளந்தளிர் அணி சார்பாக மது ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக ஜீவன் தெரிவானார்.


article_1470664120-kuruthainLEAD-2.jpg

- See more at: http://www.tamilmirror.lk/178965/இற-த-ப-ப-ட-ட-ய-ல-வல-வ-ஞ-னம-ஸ-#sthash.etKc4b1y.dpuf
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
முதலிடத்தில் கொக்குவில் சி.சி.சி
 
16-08-2016 06:35 PM
Comments - 0       Views - 27

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக் கழகம், ஜோர்ஜ் வெப்ஸர் வெற்றிக் கிண்ணத்துக்காக மேற்கொள்ளும் தரப்படுத்தலில், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப் பகுதியில் விளையாடிய 14 போட்டிகளில் 12 போட்டிகளில் வெற்றியீட்டிய, கொக்குவில் மத்திய சனசமூக அணி 91.78 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

யாழ்.மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடும் கழகங்களை வருடா வருடம் தரவரிசைப்படுத்தும் இந்தச் செயற்பாடானது கடந்த கடந்த 2010ஆம் ஆண்டு முதல் செய்யப்படுகின்றது.

50 ஓவர் போட்டியில் வெற்றியீட்டினால் ஐந்து புள்ளிகள், 30 ஓவரில் வெற்றியீட்டினால் மூன்று புள்ளிகள், இருபதுக்கு– 20 போட்டியில் வெற்றியீட்டினால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இதனை விட, பெறப்படும் தலா 10 ஓட்டங்களுக்கு 0.1 புள்ளிகளும் எதிரணியில் வீழ்த்தப்படும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் 0.1 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.

இந்தப் புள்ளி வழங்கல் அடிப்படையில் கொக்குவில் சி.சி.சி அணி முதலிடத்தையும் விளையாடிய 13 போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றிபெற்று 77.10 புள்ளிகள் பெற்ற திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் இரண்டாமிடத்தையும், விளையாடிய 13 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றிபெற்று, 66.62 புள்ளிகள் பெற்ற மானிப்பாய் பரிஸ் அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

தொடர்ந்து நான்காமிடத்தை 58.06 புள்ளிகள் பெற்ற ஜொலிஸ்ரார் அணியும் ஐந்தாமிடத்தை 57.89 புள்ளிகள் பெற்ற சென்றலைட்ஸ் அணியும் ஆறாமிடத்தை 57.68 புள்ளிகள் பெற்ற வட்டுக்கோட்டை ஓல்கோல்ட்ஸ் அணியும் ஏழாவது இடத்தை 55.73 புள்ளிகள் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியும் எட்டாவது இடத்தை 48.26 புள்ளிகள் பெற்ற ஜொனியன்ஸ் அணியும் ஒன்பதாவது இடத்தை 37.24 புள்ளிகள் பெற்ற பற்றீசியன் அணியும் 10 ஆவது இடத்தை 34.42 புள்ளிகள் பெற்ற ஹாட்லியைற்ஸ் அணியும் பெற்றுக்கொண்டன.

- See more at: http://www.tamilmirror.lk/179676/ம-தல-டத-த-ல-க-க-க-வ-ல-ச-ச-ச-#sthash.PBEztZmu.dpuf
  • 1 month later...
  • தொடங்கியவர்



யாழ். மாவட்ட பிரிவு 3 தொடர்: சம்பியனானது ஜொனியன்ஸ்
 
 

-குணசேகரன் சுரேன்

இலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு 3 அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில், யாழ்ப்பாண மாவட்ட அணிகளுக்கிடையிலான தொடரில், ஜொனியன்ஸ் அணி சம்பியனாகியுள்ளது.

சிங்கராஜா டக்ஸன், பத்மநாதன் லவேந்திரா ஆகியோரின் அபாரமான பந்துவீச்சாலும் அருளானந்தம் கானாமிர்தன், மாசிலாமணி ஹரிப்பிரவீன் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தாலும், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தியே, ஜொனியன்ஸ் அணி சம்பியனாகியது.

இதில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 19 அணிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவற்றிலிருந்து இறுதிப் போட்டிக்கு, கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியும், ஜொனியன்ஸ் அணியும் தெரிவு செய்யப்பட்டன. இறுதிப் போட்டி, கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துக் களமிறங்கியது. ஜொனியன்ஸ் அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல், 30.5 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் என்.நிசாந்த் 30, எஸ்.சசிதரன் 21, எஸ்.கேதீஸ் 17, ஏ.ஜெயரூபன் 12 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஜொனியன்ஸ் அணி சார்பாக, சிங்கராஜா டக்ஸன் 4 விக்கெட்டுகளையும் பத்மநாதன் லவேந்திரா 3 விக்கெட்டுகளையும், அலிஅக்பர் சஞ்சயன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

137 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ் அணி, 24.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அருளானந்தம் கானாமிர்தன் 56 ஓட்டங்களையும் மாசிலாமணி ஹரிப்பிரவீன் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் கொக்குவில் அணி சார்பாக சி.உத்தமன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

http://www.tamilmirror.lk/183725/ய-ழ-ம-வட-ட-ப-ர-வ-த-டர-சம-ப-யன-னத-ஜ-ன-யன-ஸ-



வட மாகாண வல்லவன் தொடர்: நாவாந்துறை சென்.மேரிஸ் வெற்றி
 
 

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடாத்தும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் குழு “பி” சுப்பர் 8 சுற்றுப் போட்டியொன்றில், நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான குறித்த போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில், சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கி நான்காவது நிமிடத்திலேயே, விண்மீன் விளையாட்டுக் கழகத்தின் உதயராஜ் பெற்ற கோலின் மூலமாக அவ்வணி முன்னிலை பெற்றது. பின்னர், 33ஆவது நிமிடத்தில், சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் யூட் பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கை சமப்படுத்தப்பட்டது.

தொடர்ந்த இரண்டாவது பாதி ஆட்டத்தில், 76ஆவது நிமிடத்தில், சென் மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் மதி பெற்ற கோலுடன் அவ்வணி முன்னிலை பெற்றதுடன், 87ஆவது நிமிடத்தில் ஜான்சன் பெற்ற கோலுடன், தனது வெற்றியை உறுதிப்படுத்தி, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாயகனாக, சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் மதி தெரிவு செய்யப்பட்டதுடன், அவருக்கான பதக்கத்தினை, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.மீடின் அணுவித்ததுடன், வெற்றி பெற்ற சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கான பணப்பரிசினை, யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் சண்முகம் வழங்கினார்.

இதேவேளை, பாசையூர் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் மன்னார் சென்.லூசியஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே, கடந்த வியாழக்கிழமை (06) இடம்பெற்ற குழு “A” சுப்பர் 8 சுற்றுப் போட்டியொன்றில், சென்.அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றிருந்தது.

http://www.tamilmirror.lk/183579/வட-ம-க-ண-வல-லவன-த-டர-ந-வ-ந-த-ற-ச-ன-ம-ர-ஸ-வ-ற-ற-

  • தொடங்கியவர்
சம்பியனானது யாழ். பல்கலைக்கழகம்
 

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டுப் பிரிவு நடத்திய, அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையில் 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் பற்றீசியன், சென்றலைட்ஸ், மானிப்பாய் பரிஸ், யூனியன்ஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகிய அணிகள் பங்குபற்றின. ஒவ்வோர் அணியும், 3 போட்டிகள் வீதம் விளையாடின. இதில், 3 போட்டிகளில் வெற்றியீட்டிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியும், 2 போட்டிகளில் வெற்றியீட்டிய சென்றலைட்ஸ் அணியும், இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன.

கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து, 213 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜெயபாலசிங்கம் ஜனந்தன் 55, ரவிராசா ருக்ஸ்மன் 49, பற்றிக் டிக்ஸன் 26, தாரக்க சோமதிலக 25 ஓட்டங்களைப் பெற்றுகொடுத்தனர்.

 

பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக மகேந்திரன் மயூரன், சிவபாதசுந்தரம் அலன்ராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜெரிக் துசாந்த், என்.கிருபாகரன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

214 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்றலைட்ஸ் அணி, பல்கலைக்கழக அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 42.4 ஓவர்களில் 168 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், ஞானசீலன் ஜெரிக் துசாந்த் 39, துரைராசா ஜேம்ஸ் ஜான்ஸன் 32, எட்வேர்ட் எடின் 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பல்கலைக்கழக அணி சார்பாக, சானக குருகுலசூரிய 4 விக்கெட்டுகளையும், ரவீந்திரன் லோகதீஸ்வர், ஜெயராமன் ஸ்ரீகுமரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் தொடர்நாயகனாகவும், பல்கலைக்கழக அணியின் ஜெயபாலசிங்கம் ஜனந்தன், சிறந்த பந்துவீச்சாளராகவும் இறுதிப்போட்டியின் நாயகனாகவும் அதே அணியின் சானக குருகுலசூரியவும், சிறந்த களத்தடுப்பாளராக சென்றலைட்ஸ் அணியின் ஜ.ஜெரிக் துசாந்த்தும் தெரிவு செய்யப்பட்டனர்.

http://www.tamilmirror.lk/183899/சம-ப-யன-னத-ய-ழ-பல-கல-க-கழகம-

  • 1 month later...
  • தொடங்கியவர்

அரச உத்தியோகத்தர் வலைப்பந்தாட்டம் வடமாகாண கல்வித்திணைக்களம் சம்பியன்

November 28, 2016

இலங்கை அரச சேவைகள் சங்கம் நடத்திய அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் வடமாகாண கல்வித்திணைக்கள அணி கிண்ணத்தை சுவீகரித்தது.

நேற்று முன்தினம் இரண்டு பிரிவுகளாக கொழும்பு பல்கலைக் கழக மைதானத்திலும், கொழும்பு ரொரிண்டன் விளையாட்டு மைதானத்திலும்  இப்போட்டி  நடைபெற்றது.

குறித்த போட்டியின் இறுதியாட்டத்தில் வடமாகாண கல்வித்திணைக்கள அணியை எதிர்த்து அநுராதபுரம் தாதியர் அணி மோதிக்கொண்டது.

15218237_1211719062274950_418876112_n

போட்டியின் முதல்பாதியாட்டத்தில் வடமாகாணக் கல்வித்திணைக்கள அணி 11:7 என்ற புள்ளிகள்  அடிப்படையில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியாட்டத்திலும் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திய வடமாகாண கல்வித்திணைக்கள அணி போட்டி முடிவில் 30: 20 என்ற புள்ளிகள்
அடிப்படையில் வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

15218256_1211719048941618_501728542_n

மேலும் குறித்த போட்டியின் கலப்பு ஆட்டத்தில் யாழ் மாவட்டச் செயலக அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/sports/?p=1962

  • தொடங்கியவர்
சம்பியனானது சாவற்கட்டு கில்லரி வி.க
 
28-11-2016 09:14 AM
Comments - 0       Views - 7

- எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கினால், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையேயான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின்   இறுதிப் போட்டி, ஜோசப்வாஸ் நகர ஆயர் இராயப்பு ஜோசப் மைதானத்தில் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது.

மன்னார் கால்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட 37 கழகங்கள் கடந்த இரண்டு மாதங்களாக விலகல் முறையிலான தொடரில் ஆடி, இறுதிப் போட்டிக்கு மன்னார் பனங்கட்டுக்கொட்டு சென் ஜோசப் விளையாட்டுக் கழகமும், சாவற்கட்டு கில்லரி  விளையாட்டுக் கழகமும் தெரிவாகின.

இவ்விறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் தமது பலப்பரீட்சையைக் காட்ட முயன்றும் போட்டி தொடங்கி 10ஆவது நிமிடத்தில் கில்லரி அணியின் முன்களவீரர் தாசன்  தலையால் முட்டி பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் சாவற்கட்டு கில்லறி  விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

இறுதிப் போட்டியின் நாயகனாக, வெற்றிக் கோலைப் பெற்ற கில்லரி  விளையாட்டுக் கழக வீரர் தாசன் தெரிவு செய்யப்பட்டார்.

முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டதோடு, இச்சுற்றுப்போட்டியில் சிறந்த கட்டுப்பாட்டுடன் வளர்ந்து வரும் சிறந்த அணியாக தெரிவு செய்யப்பட்ட காத்தாங்குளம் சென். ஜோசப் அணிக்கு பாராட்டுக் கிண்ணமும்  வழங்கப்பட்டது. 

இவ்விறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி குணசீலனும் சிறப்பு விருந்தினராக தோட்டவெளி பங்குத்தந்தை அருட்பணி யுட் குருஸும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மன்னார் கால்பந்தாட்ட லீக் தலைவர் டேவிட்சன் ஜெறாட் , செயலாளர் ஞானராஜ், பொருளாளர் கோல்டன் டெனி, உப தலைவர்களான பிறேம்குமார், சுகிர்தன், டிகோணி, உபசெயலாளர் சுவேந்திரன், உபபொருளாளர் றொணி மற்றும் ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக்கழக அமைப்பாளர் கிங்ஸ்லி, கழக செயலாளர் டெலிஸ்டன் மற்றும் ஆயிரக்கணக்கான கால்பந்தாட்ட இரசிகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/187135/சம-ப-யன-னத-ச-வற-கட-ட-க-ல-லர-வ-க-#sthash.RrGbiXlJ.dpuf
  • 5 weeks later...
  • தொடங்கியவர்
பெண்களில் காங்கேசன்துறை ஐக்கியம்; ஆண்களில் ஆவரங்கால் இந்து இளைஞர்
 

-கே.கண்ணன்

யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம், பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையே நடாத்திய தொடரில், பெண்களில் காங்கேசன்துறை ஐக்கிய அணியும் ஆண்களில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியனாகியுள்ளன. ஆண்களின் “பி” பிரிவு அணிகளுக்கிடையிலான தொடரில், உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி சம்பியனாகியிருந்தது.

ஈ.எஸ்.பி நாகரத்தினத்தின் அனுசரணையுடன், அரியாலை சரஸ்வதி சனமூக நிலைய மைதானத்தில், கடந்த வாரயிறுதியில் மேற்படி தொடரின் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில், காங்கேசன்துறை ஐக்கியம் அணியை எதிர்த்து கோப்பாய் கரீஸ் அணி மோதியது. இதில், காங்கேசன்துறை ஐக்கிய அணி 25-10, 25-12, 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் மூன்று செட்களிலேயே கோப்பாய் கரீஸ் அணியைத் தோற்கடித்து, 3-0 என்ற செட் கணக்கில் சம்பியனாகிக் கொண்டது.

ஆண்களுக்கான “ஏ” பிரிவு அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில், ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து இளவாலை மத்திய அணி மோதியது. இதில், நான்காவது செட் வரை சென்ற போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 25-19, 22-25, 25-15, 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் இளவாலை மத்திய அணியைத் தோற்கடித்து, 3-1 என்ற செட் கணக்கில் சம்பியனாகிக் கொண்டது.

ஆண்களுக்கான “பி”  பிரிவு அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில், உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியை எதிர்த்து புத்தூர் வளர்மதி அணி மோதியது. இதில், உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி 25-23, 25-18, 25-19 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் மூன்று செட்களிலேயே புத்தூர் வளர்மதி அணியைத் தோற்கடித்து, 3-0 என்ற செட் கணக்கில் சம்பியனாகிக் கொண்டது.

இவ்விறுதிப் போட்டிகளுக்கு பிரதம விருந்தினராக, ஈ.எஸ்.பி நிறுவன உரிமையாளர் நாகரத்தினமும் சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு அதிகாரி க.விஜிதரனும் கௌரவ விருந்தினராக அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத் தலைவர் நா.குகதாஸும் கலந்து சிறப்பித்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/188949/ப-ண-கள-ல-க-ங-க-சன-த-ற-ஐக-க-யம-ஆண-கள-ல-ஆவரங-க-ல-இந-த-இள-ஞர-#sthash.ZsxDLcQu.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.