Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

மனைவியுடன் சமரசம் - பிரஷாந்த் பெருந்தன்மை


Recommended Posts

பதியப்பட்டது

பிறந்து நான்கு மாதங்களாகிறது. இன்னும் சரியாக தனது குழந்தையை பார்க்கவில்லையாம் நடிகர் பிரஷாந்த். குழந்தையை பார்ப்பது ஒரு தந்தையின் உரிமை. அதனை நிலைநாட்ட நேற்று குடும்பநல நீதிமன்றத்துக்கு தனது வக்கீலுடன் வந்தார் பிரஷாந்த்.

பிரஷாந்தின் மனைவி கிரகலட்சுமி கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்கிறார். என் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என கடந்த மாதம் 24-ந் தேதி கோர்ட்டுக்கு போனார் பிரஷாந்த். அவரையும் அவர் மனைவியையும் ஒன்றாக பேச வைத்தார் நீதிபதி. ஆனால், பலன் பூஜ்யம்!

இந்நிலையில் நேற்று மீண்டும் நீதிமன்றம் வந்தார் பிரஷாந்த். வாரத்திற்கு இருமுறை பொது இடத்தில் வைத்தாவது என் மகனை பார்க்க அனுமதிக்க வேண்டும் என மனு கொடுக்க வந்தவர் திடீரென தனது மனதை மாற்றிக் கொண்டார். காரணம், ஒரு போன்கால்.

பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வோம் என கிரகலட்சுமி தரப்பிலிருந்து பிரஷாந்துக்கு போன் மூலம் தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மனு தாக்கல் செய்யாமல் திரும்பிச் சென்றார் பிரஷாந்த்.

பிரஷாந்த் - கிரகலட்சுமி வழக்கு ஜனவரி 3-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதற்குள் பிரிந்தவர்கள் சேர்ந்தால் நல்லது! :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.