Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை கடற்படை முகாமிலிருந்து கடத்தப்பட்ட இளைஞர்களின் வீடுகளுக்கு அழைப்பு

Featured Replies

திருமலை கடற்படை முகாமிலிருந்து கடத்தப்பட்ட இளைஞர்களின் வீடுகளுக்கு அழைப்பு

திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பு அதிகாரியாக சேவைபுரிந்த கடற்படை சிப்பாயின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து கடத்தப்பட்ட இளைஞர்களின் வீட்டு தொலைபேசிகளுக்கு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை நீதிமன்றத்தில் வைத்து ஏற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளில் கடத்திச்செல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விடயத்தை ஸ்ரீலங்கா கடற்படை நீதிமன்றத்தில் வைத்து மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேவேளை திருகோணமலை சித்திரவதை முகாமில் ஐ.நா சிறப்பு அதிகாரிகளின் விஜயத்தின்போது கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் மனிதர்களுடையதா? என்பது தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக அவற்றை கொழும்பு மரண வைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்கு அனுப்பியிருப்பதாக ஸ்ரீலங்கா கடற்படை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொழும்பிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் கடந்த 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

அத்துடன் லெப்தினன் கொமான்டர் சம்பத் முனசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட சிலரது கடவுச் சீட்டுகள், தேசிய அடையாள அட்டைகள், துப்பாக்கி ரவைகள் தொடர்பான வழக்கும் இதன்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையில் பாரியளவான கொள்ளைகள் தொடர்பான விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வாவினால் நீதிமன்றத்தில் விசாரணை தொடர்பான விளக்கமளிப்பு வழங்கப்பட்டது.

இதன்போதே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

இதன்போது விளக்கமளித்த அவர், திருகோணமலை கடற்படை முகாமிற்கு அருகிலுள்ள சமுத்திரவியல் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வத்தளை – எலகந்த பகுதியில் காணாமல்போன ஜோன் ரீட் என்பவருக்கு சொந்தமானது எனக்கருதப்படும் வான் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கடந்படையினரால் முன்னர் மீட்கப்பட்டிருந்த இந்த வானின் இலக்கத்தகடு அகற்றப்பட்டு, கடற்படையினரின் இலக்கத்தகடு பொருத்தப்பட்டு, பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும் அவர் மன்றில் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நாளை வியாழக்கிழமை இந்த வானை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை அண்மையில் திருகோணமலைக்கு விஜயம் செய்த ஐ.நா உயரதிகாரிகள் குழாமினால் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பிலான விளக்கத்தையும் அவர் நீதிமன்றில் இன்று வழங்கினார்.

இதற்கமைய அந்த எலும்புக்கூடுகள் மனிதர்களுடையதா? அல்லது விலங்குகளுடையதா? என்பது தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கொழும்பிலுள்ள மரண பரிசோதனை வைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்கு அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேபோன்று, கொழும்பில் வைத்து 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்ட ரஜீவ் நாகநாதன் மற்றும் அலி அன்வர் ஆகியோரின் வீட்டிற்கு திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பு அதிகாரியாக சேவை புரிந்த சிப்பாய் பந்துகுமார என்பவரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நிஷாந்த சில்வா தெரிவித்தார்.

இந்த தொலைபேசி கலந்துரையாடலை விசாரணைக்கு உட்படுத்தியபோது குறித்த இளைஞர்கள் இருவரும் திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை உறுதியானதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

இந்த நிலையில் கடற்படை முகாமில் இருந்த வதைக்கூடம் மற்றும் கடத்தல் என்பன தொடர்பில் அப்போதிருந்த கடற்படைத் தளபதி மற்றும் கிழக்கு கட்டளைத் தளபதி, மேலதிகாரிகள் ஆகியோருக்கு தொடர்புள்ளதா? என்பது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டன.

http://www.whathits.com/nerudal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.