Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலசிங்கம் மறைவு....சமாதானத்தின் மரணமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலசிங்கம் மறைவு....சமாதானத்தின் மரணமா?

p34aq8.jpg

ஆன்டன் ஸ்டானிஸ்லாஸ் பாலசிங்கம் இறந்து விட்டார். இது எதிர்பாராமல் நடந்ததல்ல. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவரது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும் அவரது இழப்பு, ஈழத்தமிழர் களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. எதற்கும் கலங்காத விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக்கூட கொஞ்சம் அசைத்திருக்கிறது பாலசிங்கத்தின் மரணம். ‘‘துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து நெஞ்சத்தை பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறுபோல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்ட முடியாது. மனித மொழியில் இதற்கு இடமும் இல்லை’’ என்று பிரபாகரன் துடித்துப் புலம்பியிருக்கிறார்.

ஒரு மூத்த போராளியாக, மதியுரைஞராக, தத்துவ ஆசிரியராக இருந்து ஈழப்போராட்டத்தை ராஜதந்திரத்தோடு முன்னெடுத்துச் சென்றவர் பாலசிங்கம். போராட்டத்தின் வலிமையை மட்டுமல்லாது, சமாதானத்தின் வலிமையையும் நன்கு உணர்ந்தவர். பேச்சுவார்த்தைகளின் மூலமாகவும் வெற்றிகளை ஈட்ட முடியும் என்று நம்பி, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர். 2002-ம் ஆண்டு இலங்கை அரசு-விடுதலைப்புலிகளிடையே போர் நிறுத்தம் ஏற்பட அவரே முக்கிய காரணமாக இருந்தார். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் சூழ்நிலையில், தற்போது பாலசிங்கத் தின் மரணம் நேர்ந்திருக்கிறது.

பாலசிங்கத்தின் மரணம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அமைதி முயற்சிகளின் மரணமாக மாறிவிடுமோ என்ற அச்சம் இப்போது எழுந்துள்ளது. ஏனென்றால், அப்படியான பேச்சு வார்த்தைகளை வலியுறுத்துவதற்கும், முன்னெடுத்துச் செல்வதற்கும் அவர் அளவுக்கு ஆற்றல் கொண்ட ஒருவர் ஈழத்தமிழர்களிடையே இப்போது இல்லை என்பதுதான் நிஜம். அங்கு நடக்கும் யுத்தம்தான் அதற்கும்கூட காரணம். எண்பத்து மூன்றாம் ஆண்டு இனக்கலவரத்துக்குப் பின்னர் அங்கே முறையான கல்வி பெறுவதும்கூட இயலாமல் போய்விட்டது. இன்று உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் களில் பெரும்பாலோர் ஹோட்டல்களில் வேலை பார்ப்ப வர்களாக இருப்பதற்கு, இதுவும் ஒரு காரணமாகும். அப்படியிருக்கும்போது பாலசிங்கத்தைப் போல விரிவான படிப்போடு ஓர் ஆளுமை அங்கே உருவாவது சாத்தியம் இல்லைதான்.

p34avq1.jpg

இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரும் சமமான பலம் கொண்டவர்கள் இல்லை. ஒருபுறம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு அரசாங்கம், மறுபுறமோ உலக நாடுகள் பலவற்றால் தடை செய்யப்பட்ட ஒரு போராளி இயக்கம். படை பலத்திலும் மிகப்பெரிய வேறுபாடு. இலங்கை ராணுவத்தில் இப்போது ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் உள்ளனர். புலிகளின் படையிலோ சுமார் பத்தாயிரம் பேர்கள்தான் இருக்கிறார்கள். ஆயுத பலத்திலும், சிங்கள ராணுவத்தின் கையே ஓங்கியிருக்கிறது. ஆனால், ஒரு வேறுபாடு இருக்கிறது, அரசாங்கத்தின் படை சம்பளத்துக்காக வேலை செய்யும் ஆட்களைக் கொண்டது. புலிகளின் படையோ விடுதலைக்காகப் போராடும் வீரம் மிக்க, உறுதிமிக்க போராளிகளைக் கொண்டது. இதுதான் அந்த வித்தியாசம். ஆனால், ஒரு யுத்தத்தில் வெற்றிபெற இது மட்டுமே போதுமானதல்ல.

கடந்த நான்கு ஆண்டுகளாக நிலவிய சமாதானச் சூழ்நிலையை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டதுபோல, புலிகள் உபயோகித்துக்கொள்ளவில்லை. இலங்கை ராணுவம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைவிட, இப்போது வலுவான நிலையில் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்து விட்டார்கள். இதில் பாகிஸ்தானின் உதவி முக்கியமானதாகும். உக்ரைன் நாட்டிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் கூலிப் படையாக வந்துள்ளவர்கள் இப்போது இலங்கையின் விமானப்படையில் பணிபுரிகின்றனர். கருணாவின் ஆட்கள் கிழக்குப் பகுதியில் புலிகளை பலவீனப்படுத்துவதில் சிங்கள ராணுவத்துக்கு உதவுகின்றனர். பிரதேசவாதத்தைத் தூண்டி விட்டு கிழக்குப் பகுதியில் புலிகளுக்கான ஆதரவைக் குறைப்பதிலும், அங்கு வாழும் தமிழ் முஸ்லிம்களை புலிகளுக்கு எதிராகத் திருப்புவதிலும் ராஜபக்சே கணிசமாக வெற்றி பெற்றிருக்கிறார்.

p35afj9.jpg

புலிகளோ சர்வதேச நெருக்கடிகளின் காரணமாக புதிய ஆயுதங்களைப் பெற வழியின்றித் தவிக்கின்றனர். கருணா குழுவினர் கணிசமான ஆயுதங்களைக் கடத்திச் சென்று விட்டார்கள். 2004-ல் ஏற்பட்ட சுனாமியும் புலிகளது தளவாடங்களைப் பெருமளவு நாசம் செய்து விட்டது. அண்மையில் அமெரிக்காவில் இருந்து ஆயுதங்களை தருவிக்க புலிகள் மேற்கொண்ட முயற்சிகளை அமெரிக்க உளவுத்துறை முறியடித்து விட்டதாக செய்திகள் வந்தன. தற்போது மேம்படுத்தப்பட்டிருக்கும் சிங்கள ராணுவத்தின் விமானத் தாக்குதல்களை எதிர்க்கொள்ளக்கூடிய விமான எதிர்ப்பு பீரங்கிகள் புலிகளிடம் இல்லை என்பது சிங்கள விமானப்படை விமானங்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி தமிழர் பகுதிகளில் குண்டு வீச்சில் ஈடுபடுவதில் இருந்து தெரியவருகிறது.

சிங்கள ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்கு தல்களால் தமிழர்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். சுமார் இரண்டு லட்சம் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்குக் கடந்த சில மாதங்களில் மட்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் தஞ்சம் தேடி வந்திருக்கிறார்கள். இந்த மனித அவலத்தை சர்வதேச கவனத்துக்கு எடுத்துச்செல்லும் பிரசார வலிமை, புலிகளிடம் இல்லாமல் போனதுதான் அவர்களது இழப்புகளில் முக்கியமானது. இங்குதான் பாலசிங்கத்தின் முக்கியத்துவம் இருக்கிறது.

போரை நடத்துவதைக் காட்டிலும் பேச்சுவார்த்தையை நடத்துவதுதான் கஷ்டமானது. போர் என்பது ஆயுதங்களின் பலத்தைச் சார்ந்திருக்கிறது. பேச்சுவார்த்தையோ தார்மீக நியாயத்தை சார்ந்திருக்கிறது. இலங்கையில் நடைபெறும் யுத்தத்தில் தமக்கு சாதகமாக இருக்கும் தார்மீக நியாயங்களின் பலத்தைப் புலிகள் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால்& ஆழ்ந்த அறிவும், ராஜதந்திரமும் கொண்ட ஒரு மதியுரைஞர் அவசியம். அந்தப் பாத்திரத்தைதான் பாலசிங்கம் வகித்து வந்தார். அவரது மரணம் அதில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான், இனிமேல் அங்கே அமைதி ஏற்பட வழியில்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

p36apa3.jpg

இலங்கையில் சமாதானப் பேச்சு வார்த்தை முறிந்து, தீவிர சண்டை ஆரம்பிக்குமானால் தமிழர் பகுதிகளின் மீது விமானத் தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கக்கூடும். ‘‘அப்பாவித் தமிழ் மக்கள்மீது நடத்தப்படும் ராணுவத் தாக்குதல்களுக்கு ஈடாக சிங்கள மக்களைப் புலிகள் தாக்குவதில்லை. ஆனால் யுத்தம் முழு அளவில் வெடித் தால் சிங்கள மக்கள் மீதும், சிங்களப் பொருளாதார மையங்களின் மீதும் புலிகள் தாக்குதல் தொடுக்கக்கூடும்’’ என மத்திய அரசில் உயரதிகாரியாகப் பணிபுரிந்த பி.ராமன் கூறியிருப்பது கவனத்துக்குரியதாகும். தமிழர் பகுதிகளில் குவிந்துள்ள சிங்கள ராணுவத்தின் கவனத்தைத் திசை திருப்ப புலிகள், சிங்களப் பகுதி களில் தமது நடவடிக்கைகளை விஸ்தரிக்கக் கூடும். தமிழர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் சமீப காலமாக சிங்களர்களையும் அழைத்து வந்து குடியமர்த்தி இருக்கிறது இலங்கை அரசு. இதனால், இந்தப் பகுதிகளில் சிங்கள ராணுவத்தின் விமானப் படை, குண்டுவீசி தாக்குதல் நடத்தாமல் இருக்கிறது. இந்தப் பாதுகாப்பான சூழ்நிலையைப் பயன்படுத்தி, புலிகள் அந்த ஏரியாக்களுக்குச் சென்று, அங்கிருந்து சிங்கள ராணுவத்தை தாக்க ஆரம்பிப்பார்கள். அப்படியரு சூழ்நிலை ஏற்படும் போது, சிங்கள மக்களைப் பற்றி கவலைப்படாமல் அந்த ஏரியாக்களில் சிங்கள ராணுவம் தனது விமானப் படை மூலமாக குண்டுபோட ஆரம்பிக்கும். இதனால் சிங்கள மற்றும் தமிழ் இனத்தைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும்.

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை ஒன்றை ‘ஸ்ட்ரேடஜிக் ஃபோர்சைட் குரூப்’ (Strategic Foresight Group) என்ற சர்வதேச அமைப்பு தயாரித்துள்ளது. யுத்தம் வெடித்தால் இலங்கையில் என்ன மாதிரியான நிலைமை உண்டாகும் என்பதை அந்த அறிக்கையில் விவரித்திருக்கிறார்கள்.

யுத்தம் வெடித்தால் 2010-ம் ஆண்டில் இலங்கை ராணுவத்தில் துருப்புகளின் பலம் சுமார் இரண்டரை லட்சம் ஆகிவிடும். ஆறு லட்சம் பேர்வரை அகதிகளாக்கப் படுவார்கள். இலங்கை அரசின் வருமானத்தில் 384 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும். அந்த நாட்டுக்கு வரும் அந்நிய முதலீட்டில் ஆண்டு ஒன்றுக்கு முந்நூறு மில்லியன் டாலர் வரை குறையும். பெரிய பொருளாதார வீழ்ச்சியை இலங்கை சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எண்பத்து மூன்றாம் ஆண்டு இனக்கலவரத்துக்குப் பின்னர் அங்கே முறையான கல்வி பெறுவதும்கூட இயலாமல் போய்விட்டது. இன்று உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் களில் பெரும்பாலோர் ஹோட்டல்களில் வேலை பார்ப்ப வர்களாக இருப்பதற்கு, இதுவும் ஒரு காரணமாகும். அப்படியிருக்கும்போது பாலசிங்கத்தைப் போல விரிவான படிப்போடு ஓர் ஆளுமை அங்கே உருவாவது சாத்தியம் இல்லைதான்.

பாலசிங்கத்தின் இழப்பு ஈடு செய்ய முடியாது. அவருக்குப் பதிலாக இன்னொருவரைக் காணமுடியாது. ஆனால் ஈழத்தமிழர்கள் எல்லோரும் கொட்டலில் தான் வேலை செய்பவர்கள். படிப்பறிவு அற்றவர்கள் என்ற ரீதியில் எழுதப்பட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல

மிகத் துல்லியமாக கணித்து எழுதப்பட்டுள்ளது. பாலா அண்ணாவின் இடத்தை இட்டு நிரப்புவது அததனை சுலபமல்ல. எனினும் ஒரளவுக்காவது அவரிடத்தை நிரப்பக்கூடிய புத்தி ஜீவிகள் ஈழத்தமிழரிடையே இல்லாமல் போகாது. இன்னும் ஒருவர் அந்த இடத்தை ஓரளவாவது இட்டு நிரப்ப வருவர்கள் என்ற நம்பிக்கையை இழக்காமல் இருப்போம். தீர்க்க தரிசனத்துடன் கூடிய தலைவரின் ஆளுமை அப்படி ஒருவரை தேடிக் கண்டுபிடித்து அந்த இடத்தை ஒரளவாவது நிரப்பும் என்பது நிச்சயம்.

ஈழத்திலிருந்து

ஜானா

:P கந்தப்பு என்னை நிப்பாட்டினாலும்....சரியான போராட்ட அலசல்களுக்கு என்றும் என்றுமே நான் துனை நிற்பேன்....கறுப்பி வேணுமெண்டால் அப்படி வேலை செய்திருக்கலாம்....எனக்கு தெரிந்த தமிழர்தான்....டொயோட்டா..... இந்த வருட ?#8220;ரியன்ட் 2007 செப் கார் தாயாரிப்புக்கான சகல பொறியியற்துறை சார்ந்த நடவடிகைகளுக்கு பொறுப்பு....... சரியான சுட்டிக்காட்டுதல்...... இப்படியான தமிழர்களின் தரம் குறைக்கும் ஆக்களையும் கொஞ்சம் பாருமன்.... :P

லக்கி நீங்கல் சொல்லுவது எல்லாமே குழப்பமாக இருக்குது கொஞ்சம் தெளிவாக புரியக்கூடியதாக எழுதலாமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.