Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடைந்த நிலாக்கள் - பாகம் 3

Featured Replies

  • தொடங்கியவர்

தொடர்...- 23

திம்மென்றும் - கொஞ்சம்

பொம்மென்றும் உப்பிய

பொசுபொசு தோள்கள் !

எகிப்தில் காணப்படும்

பிரமிடுகளில் இரண்டை

கருக்கிவைத்து

பதுக்கி கொண்டதாய்

மார்பு பகுதிகள்!

ஒட்டி ஒட்டி உள்ளோடி

உணவு கட்டுபாட்டை

உலகிற்கு பறைசாற்றும்

ஒடுங்கிய இளம் வயிறு!

இடுக்கிக் கொண்டும் - ஆனால்

சிறப்பான வளைவு நெளிவோடும்

இறங்கிய இடைபகுதி!

இரண்டு நீண்ட கிரேக்கத்து

உடைவாட்களாய்த்

திரண்டு தொங்கும் கைகள்!

அதில்!

பவளப் புக்காம்புகளாய்

விரல்கள்! - அதில்

இளம்பிறைப் பிசுறுகளாய் நகங்கள்!

ஒரு ருமேனிய சிற்பத்தின்

பின்புறச் சாயலில் அமைந்த

மிக மிக அளவான பின்னழகு!

நன்கு பலம் பொருந்திய

ஒரு கனிமரத்தின் வேர்பகுதியாய்த்

திடமாய் நிற்கும் தொடைகள்!

தங்கக் கோபுரத்தைத் தாங்கும்

இரு வெள்ளித் தூண்களாய்

முழங்கால்!

தொடரும்...- 24

திரு.பா.விஜய் அவர்களின் தொகுப்பை தந்தமைக்கு நன்றி

  • தொடங்கியவர்

தெடர்...- 24

செஞ்சிவப்பு ரோஜாக்கள்

அடுக்கி வைத்து

செர்ரிப் புக்களை நுனிகளில்

கோத்தது போலப் பாதமும்

பாத விரல்களும்!

எகிப்திய பாரம்பரியத்தின்

நடனமாடும் சின்னமாய்

உயர்ந்து கொஞ்சம் உள்ளே

காற்று வாங்கி உப்பி நிற்கும்

உடை !

ஏதோ ஒரு மன்மதகரமான

மருந்தில் செய்யப்பட்ட

மாவில் இருந்து கிளம்பும்

ஒருவித கிறக்கமான மணம்!

ஜந்தரை அடி உயரத்திற்கு

ஓர் ஆளுயரப் போர்க்கப்பல்

சர்வ அலங்காரத்துடன் நிற்பது போன்ற

தோற்றம்....!

எதிரே நிற்பவனை

இருவிழிப் பார்வைகளாலே

ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்குத்

தூக்கி வீசி விடும் கர்வம் !

ஆணவத்தையும்- அதிகாரத்தையும்

மோனத்தையும்- பக்த்pயையும்

குழைத்துக் குவித்த - புன்னகை !

சீசர் தன்னை மெய்மறந்த நிலையில்

திக்குமுக்காடி

முக்கு திக்காடிப்போய் நின்றார் !

தொடரும்... - 25

நன்றி இலக்கியா...

  • தொடங்கியவர்

தொடரும்...- 25

உலகின் மூலை முடுக்குகளையெல்லாம்

வாட்களால் சிறை செய்த சீசர்

ஓர் இரண்டு கண்களுக்குள்

கைதாக எத்தனித்தார்!

ஆனால் சீசரின் அரசியல் மூளை

அபாய அறிவிப்பை இதயத்திற்கு

அனுப்பிச் சுதாரிக்கச் செய்தது!

ரசிப்பதற்கு நிறைய அம்சங்கள்

பூமியில் உண்டு!

நிலவினை இரவில்

பூக்களை காலையில்

வானவில்லை மழையில்

வெய்யிலை மாலையில்

நீர்வீழ்ச்சியை கோடையில்

பறவைகளை வைகறையில்...என

ரசிப்பதற்கு நிறைய அம்சங்களும்

நிறைய காலங்களும் உண்டு !

ஆனால் எந்தநேரமும்- எக்காலமும்

காலை-மாலை - மதியம்-இரவு

வைகறை-நடுநசி-எனக்

காலத்தைக் கடந்து கடந்து

ரசிக்க கூடிய ஒரே அழகு

பெண்ணழகு மட்டும்தான்!

கிளியோ பாட்ராவின்

அடிமை நிகலோஸ் என்ற

மாமிச மலைக் குன்று

சாத்திய கதவுகளைச்

சத்தமின்றி திறந்தது!

வெளியே

வெந்நீர் ஆற்றில் நீந்திய

வேதனையோடு

சீசரைத் தனிமையில் விட்ட

ஆன்டனியும்- தளபதிகளும் உள்ளே

வேகமாய் புகுந்தனர்!

தொடரும்...26

  • தொடங்கியவர்

தொடர்.... - 26

அறையின் ஆழத்தில்

சீசர் நிற்க....!

அதைவிட எதிரே ஒரு அலங்காரமிக்க

ஆசனத்தில்

கிளியோபாட்ரா அமந்திருக்க...

திரப்புமுனையில் தடக்கி விழுந்தனர்

தளபதிகள்!

முதிலில் பேசியது சீசர்தான்!

''ஆன்டானி''

இது கிளியோபாட்ரா!

ஆன்டானி பூமிக்கு வந்தன்!

மெடிகோலாஸ் வரவில்லை

கிளியோ பாட்ராவின் வருகையும்

சந்திப்பும் இனம் புரியாத

கலக்கத்தையும் - கிறக்கத்தையும்

அனைவருக்குள்ளும் விதைத்தது!

தளபதி டைனூல் ஒரு

தகவலோடு வந்தான்!

''உலகபேரரசர் சீசருக்கு வணக்கம்!

ரோமில் இருந்து

கப்பல் வந்துள்ளது!

''அதற்கு இப்போதென்ன அவசரம்?''

ஆன்டனி முகத்தில்

ஆத்திரம் காட்டினான்!

''இல்லை

கப்பல் வழியில் பாறையில் மோதியுள்ளது!

எடைதாளமல் மூழ்கிறது!''

பொருட்களை வேகமாய்

இறக்க வேண்டியது தானே''

பறந்தான் மினார்!

தொடரும்...- 27

  • தொடங்கியவர்

தொடரும்... - 27

கப்பிலில்

என்ன இருக்கிறது..?

சீசர் முதல் சிப்பாய் வரை

திரும்பினார்கள்!

ஒரு நீண்ட மௌனம் இருட்டாய்த்

திரை போட்டது!

தளபதி டைனூல் தயக்கம் வழிய

தகவல் சொன்னான்!

உணவும் ஆயுதங்களும்...''

கிளியோ பாட்ராவின் குரல்

கம்பீரமாய் வெளிவரத் துவங்கியது!

''உணவை தூக்கி கடலில் போடுங்கள்!

கப்பல் எடை குறைந்து

மூழ்குவது குறையும்!

ஆயுதங்களை உடனே கரை சேருங்கள்..!

''உணவை கடலில் போடுவதா?''

மெடிகோலஸ் முனகினான்!

கிளியோ பாட்ராவின் கண்கள்

ஓருமுறை மேற்கூரையை

அலசிவிட்டு மெத்தனமாய்க்

கீழிறங்கியது!

''ஒரு போர் வீரனுக்கு தேவை

இரண்டு கையிலும் ஆயுதம்!

இரண்டு தோளிலும் ஆயுதம்!

ஒரு வாயில் கொஞ்ச உணவு!

எகிப்தில் உணவு ஏராளமாய் உண்டு...''!

தொடரும்...28

  • தொடங்கியவர்

தொடர்.. - 28

இது தீர்ப்பா? திறனாய்வா?

சீசரின் சிந்தனை சிறகடித்தது!

''புதுசாய் திருமணமானவனிடம்

இரவில் போய் பேசக் கூடாது ''!

''புதுசாய் வெற்றி பெற்றவனிடம்

வாய்ப்பு கேட்டு போகக் கூடாது''! ( சரியாய் சொன்Pங்க சார்)

இரண்டுமெ ஒரே விதமான

போதை நிலை!

அவனுக்கு கண் தெரியாது!

காது கேட்க்காது! கால் நிற்காது!

முன்னால் நிற்பவன் ஒரு

முடி மாதிரி தெரிவான்! ( அப்படி போடு)

தான் செய்ததை நினைத்துத்

ததும்பிக் கொண்டிருப்பான்!

யாரையும் அலட்சியப் பார்வையுடன்

அலசுவான்! (அனுபவம் பேசுது)

அதனால்

புதுசாய்த் திருமணமானவனிடம்

இரவில் போய் பேசக்கூடாது!

புதுசாய் வெற்றி பெற்றவனிடம்

வாய்ப்பு கேட்டு போகக் கூடாது!

அலெச்சாண்டரியாவின்

அரண்மனையில் இருந்த

உலகப் பேரரசன் சீசர் ஒன்றும்

புதுசாய் ஜெயித்தவரில்லையே!

தொடரும்... - 29

  • தொடங்கியவர்

தொடர்...- 29

அதனால்

அவரோடு பேசினாள்

அழகரசி கிளியோபாட்ரா!

நிலா நிர்வாணமாகி

இரவின் நீச்சல் குளத்தில்

இறங்கிக் கொண்டிருந்தது.

அதே அறை

அதே காற்று

இரண்டே சுவாசம்!

சீசர்- கிளியோபாட்ரா!

கழுத்து நீண்ட கிளியோபாட்ரா

காலாற நடந்துவிட்டு

சீசரின் எதிரிலிருந்த

சிம்மாசனத்தில் அமர்ந்தாள்!

சீசரின் உதடுகள்

ரோம் மதுவில் இறங்கி

சோமனாபுரிக்குப்

போய் கொண்டிருந்தன !

காற்றின் கைகள்

கிளியோபாட்ராவின்

மெல்லிய ஆடைகளை புரட்டி

மேடு பள்ளங்களை படம்பிடித்தன !

''பேரரசர் சீசரே'!

கிளியோபாட்ராவின்

அபின் சொற்கள்

அவிழத் துவங்கின!

''எனக்காக நீங்கள் ஒன்று

செய்ய வேண்டுமே'!

என்றாள்!

சிசரின் முகம் கல்லாய் இருந்தது!

தொடரும்... - 30

  • தொடங்கியவர்

தொடரும்...- 30

மனம் அவள் கேள்வியின்

இறுதி வார்தையில் இருந்த

அர்த்தத்தை அலசிப் பார்த்தது!

''என்ன செய்ய வேண்டும்''

மிதமான போதையில்

மிதந்தார் சீசர்!

''நான் அரசியாக வேண்டும்!

மீண்டும்....''

சீசரைக் கண்களால்

சுற்றி வளர்த்தாலும்

சுற்றி

வளைக்காமல் கேட்டாள்

கிளியோபாட்ரா!

''பிடோலமியை...என்ன செய்வது?''

ஒரு கோப்பையை இறுதியாக

கவிழ்த்துக் கொண்டபடி

கசிந்தார் சீசர்!

''கல கல கல...'' என

ஜந்தாறு வகை உலோகங்கள்

மோதிக் கொண்ட ஓசையில்

அறை அதிர சிரித்தாள்!

''அரசியல் என்பதே!

ஒருவரின் சமாதிமேல் கட்டப்படும்

ஆலயம் தானே!

இது சீசருக்குத் தெரியாத?

'கிளியோபாட்ராவின் மனத்தில்

கிண்டல் கூடியிருந்தது!

சீசர் இதை எதிர்பார்க்கவில்லை!

ஒரு புறாவிடம் இருந்து

இப்படி ஓர் இரும்பு குண்டு வந்து

விழும் என்று!

தெடரும்...31

  • தொடங்கியவர்

தொடர்..- 31

சீசரின் ஆண்மை உசாரானது!

கடுமையானார்!

சட்டென எழுந்தார்!

''சரி நாளை சந்திப்போம்''

என்று விரைவாய்ப் பேசினார்''!

கிளியோ பாட்ரா உடலை

வளைத்து நெளித்துக் கொண்டு

இன்னும் நன்றாகச் சாய்ந்தபடி

சொன்னாள்!

;;நான் பணியாளோ?

நீங்கள் என் எஜமானரோ அல்ல

என்னை இங்கிருந்து உங்களால்

போகச் சொல்ல முடியாது''

கர்வம் கசியக் கசிய

கிளியோபாட்ரா வழிந்தாள்!

கிளியோபாட்ராவின் துணிச்சல்

கவர்ந்தது சீசரை.....

'சரி! இரண்டு நாட்களில்

உன் கோhரிக்கைக்கொரு

முடிவு சொல்கிறேன் என்றார்!

;;உடனடியாக என்னால்

உனக்குச் சொல்ல முடியாது'என்றார்!

''இரவு உறங்கிக்

காலையில் சொல்லுங்களென்'' என்றபடி

கதவை நோக்கி நடந்தாள்!

தொடரும்...

  • தொடங்கியவர்

தொடர்... - 32

உத்தரவுகளை உதட்டிலிருந்து

உதிர்த்துப் பழகிய

உலக பேரரசர் சீசருக்கு

கிளியோபாட்ராவின் பேச்சு

கோபத்தை மூட்டினாலும்

எதோ ஒரு பிரமிப்பு

கோபத்தைக் குளுமைப்படுத்தியது!

''இவள் தாசியல்ல!

துய்த்து விட்டுத் தூக்கி வீச...

இவள் மனைவியுமல்ல...

மரியாதையோடு நடத்த...

இவள் எஜமானியுமல்ல...

பகத்தியோடு உரையாட...

சீசர் சிந்தித்தார்!

'இவள் யார்? யாரிவள்!

இந்த மூன்றும் கலந்த

ஒருத்தியோ?''

சீசர் தனக்குள் சிரித்தார்!

கிளியோபாட்ரா போய்விட்டாள்

என்பதைக் கதவின் திரைச்சீலைகள்

கலசலத்து ஊர்ஜிதம் செய்தன!

சீசரின் மனம்

சிறகடித்துக் கொண்டிருந்த சமயம்

வெளியே சென்ற கிளியோபாட்ரா.

அடிமை நிகோலசுடன் ஒரு

அறைக்குள் சென்றாள்!

அங்கிருந்த எகிப்துபெண் உருவ

ஓவியத்தின் கண்களை

உற்றுப்பார்த்தாள்!

கண்களைக் கையால் தள்ளினாள்!

துவாரம் தெரிந்தது!தொடரும்...- 33

  • தொடங்கியவர்

தொடர்... - 33

அதிலிருந்து பார்த்தாள்!

சீசரின் அறை! அங்கே

சீசர்...

மறுநாள் பொழுது

உச்சி வெய்யில் உள்ளே விழ

கிளியோ பாட்ராவின் பிரத்யோக

மண்டபத்தில்

கவிஞன் டேவிட்ஸ் கவிதை பாடினான்!

இருபதிற்க்கும் மேற்பட்ட அழகிகள்

பலதரப்பட்ட எண்ணெய் வஸ்துகளைப்

பதப்படுத்தி எடுத்து வந்தனர்!

செவிக்கினிய பிடில் இசை

அந்த அறையெங்கும் இழைந்தது!

கவிஞன் டேவிட்சை

சில அழகிகள் வருடிவிட வருடிவிட

உச்சஸ்தாயில் கவிஞன்

உணர்ச்சி வசமானவனாகக்

கொட்டினான் வர்ணனைகளை.....

கிளியோ பாட்ரா மிகுந்த

கலாரசிகை!

அந்த மண்டபத்தை அலங்கரித்த

அறை நிர்வாண ஓவியங்களின்

பிரதிபலிப்பாய் அவளுமிருந்தாள்;!

ஒரு நவராகரீக போதை உலகம்

அங்கே புஜை செய்யப்பட்டுக் கொண்டு

இருந்தது!

கிளியோ பாட்ராவின் மேனி

தளர்வாய் ஒரு மஞ்சத்தில் சாயக்

கவிதையை ரசித்துக் கொண்டீருந்தாள்!

திடிரென கவிஞன் டேவிட்ஸ்

நிறுத்தினான் பாடுவதை...

கிளியோ பாட்ராவின்

கறுமையான காந்த விழிகள்

மெய்மறந்ததை மறந்தது திறந்தன....

''ஏன் டேவிட்ஸ்;?''

கதவருகே ஒரே கலசலப்பு!

காவலாளிகளின் சத்தம்!

கிளயோ பாட்ராவின் அடிமை

நிகலோசின் கர்ஜனை!

''சீசர்...சீசர் வருகிறார்

சீசர் வருகிறார்..''

பணிப்பெண்களில் பரபரப்பு!

கிளியோ பாட்ரா புன்னகைத்தாள்!

''டேவிட்ஸ் நீ பாடு!

நீங்கள் கருவிகளை மீட்டுங்கள்

இதோ! என் ஆடைகளைக்

களைந்து விட்டு

ஒரு மெல்லிய கண்ணாடி போன்ற

துணியை என் மீது போர்த்துங்கள்

இந்த வாசனை எண்ணெயை

என் மீது புசிவிடுங்கள்...

ம்...''

சில சிறப்பு கட்டளைகள் அந்தச்

கருப்பழகியிடம் இருந்து பறந்தன!

தொடரும்...34

  • தொடங்கியவர்

தொடர் .. - 35

ஒரு சாதரண அழகியால்

ஒரு சமுகத்தை

சாய்க்க முடியும்!

ஒரு பயங்கர அழகியால்

ஒரு சாம்ராஜ்யத்தையே

சாய்க்க முடியும்!

ஒரு பெண்

இரண்டு விழிகளை சற்று

இழுத்து காட்டினாலே

ஓர் ஆணின் நெஞ்சு

தூண்டப்படும்!

ஒரு பெண்

இடைப்பகுதியை சற்று

இறக்கி காட்டினாலே

ஓர் ஆணின் மனம்

தளர்ந்து விடும்!

அதிலும் உலகப்பேரழகி

கிளியோபாட்ரா!

தன் மொத்த பரப்பளவையும்

தாராளமயமாக்கும் கொள்;கையில்

ததும்ப விட....

என்னாகும் சீசரின் இதயம்?

ரோம் அரசன் சீசர்

கீளியோபாட்ராவின்

அந்தரங்க அறைவாசலில்

அடிமை நிகோலசால் தடுக்கப்பட்டார்!

''இல்லை!

இது எங்கள் அரசியின் அறை!

தொடரும்... -36

  • தொடங்கியவர்

தொடர் .. - 36

அனுமதி இல்லை என்றான்

நிகலோஸ்!

சீசரின் கண்கள் சிவப்பாகிச்

சில நொடியில்

சாதரணமானது!

ஒரு பத்து ரோம் வீரர்கள்

பறந்து போய்

நிகலோசைப் பிடித்து கொண்டனர்!

''பாராட்டுகிறேன்''!

உன் விஸ்வாசத்தை..''

என்ரொரு பத்திரத்தை உதிர்த்து

சீசரின் பாதங்கள்

சிறகடித்தன அந்த புரத்திற்க்குள்...

ஒரு நிமிசம்

வியந்து மிரண்டு

விக்கித்துதான் போனார் சீசர்...

ஓர் இயற்க்கை சாம்ராஜ்யமே

ஓர் அழகின் விஸ்வருபமே

அந்த இடத்தில்

அடர்ந்து கிடந்தது!

ஒரு பறம்

கவிஞன் டேவிட்ஸின்

காதலிஸப் பாட்டு

ஒரு புறம்

புளித்த மதுவின்

புது வாசம்!

ஒரு புறம்

அரை நிர்வாண அழகிகளின்

அசைவுகள்!

ஒரு புறம்

ரம்மியமான

ரசபாச ராகம்...!

தொடரும்..- 37

  • தொடங்கியவர்

தொடர்..- 38

ஒரு புறம்

எகிப்து ஓவியங்களின்

எழில் கூட்டம்!

இது அழகின் கூடாரமா?

அழகிகளின் கும்மாளமா?

ரோம் தோற்றது! இந்த

மோகாலயத்தின் முன்பு!

சீசரின் விழிகள்

விசாரித்து திரும்பின!

அங்கே!

ஒரு மேடையின் மீது

உலக அழகின் குவியலாய்

கிளியோ பாட்ரா கிடந்தாள்!

இவள்

திறந்தவெளி புங்காவா?

ஆடைகளை

மறந்த வெளி புங்காவா?

நாணங்களைத்

துறந்த வெளி புங்காவா?

மதுத்துளிகளை

கரந்தவெளி புங்காவா?

சீசரே தடுமாறினார்

சிறிதே தடம் மாறினார்.

அழகிகள் கூச்சலிட்டனர்!

ஆ...ஊ.....என அலறினர்!

ஓர் அன்னிய ஆண்

உள்ளே நுழைந்ததாய்

ஓடி ஒளிந்தனர்!

தொட்டால் சிணுங்காத இந்த

தொடை அழகிகள் கூட்டம்

தொட்டாச் சினுங்கிகளாகி விட்டதே!

சீசர் சிரித்து கொண்டார்!

இந்த நடனமாளிகை நடிப்பில்தானே

நாடுகளும்- நாடாண்டவர்களும்

நசுங்கி போயிருக்கிறார்கள்....!

சீசரின் மீது இத்தகைய

ஏவுகணைத் தாக்குதல்கள்

ஏராளமாய் நடந்திருக்கின்றன!

இது வெறும்

தீக்குச்சி திருவிழா தானே!

கிளியோபாட்ரா

ஒரு மெல்லிய போர்வையினுள்

வெள்ளை வெளரென்று

வெளிச்சமாய் மிதந்தாள்!

கிளியோ பாட்ராவின்

கணுக்கால் சதை கண்டே

காமப்பேய் பிடித்து பல

சாம்ராட்க்கள்

சக்கையாகியிருக்கிறார்கள்!

ஒரு துளி காட்டியதற்க்கே

ஊர் மூழ்கியிருக்கிறது!

இப்போதோ

ஒட்டு மொத்த நதியுமே

ஒருக்களித்து கிடக்கிறது!

சீசரின் சிற்றின்ப கப்பல்

சின்னா பின்னமாகுமோ?

''என்ன...சீசர்?

உலக பேரரசர் இங்கே?''

கிளியோ பாட்ரா

கிறக்கமாய் கேட்டாள்....!

தொடரும்.. - 39

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.