Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிசிபஸ் (SISYPHUS) என்கிற மனிதனின் விதி - வ.ஐ.ச.ஜெயபாலன்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SISYPHUS OR FATE OF A MAN 
(re eddited)

சிசிபஸ் என்கிற மனிதனின் விதி

*

தங்கள் எதிர்கால சந்ததி சரி பிழைகளை உனர்ந்து வெற்றிகரமாக தொடர்ந்து செல்ல போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து எழுதிவைப்பது அவசியமானதாகும், உலகில் இறுதியில் வெற்றி பெற்ற எல்லா போராட்டத்திலும் எதிரிபற்றிய விமர்சனமும் அதைவிட அதிகமாக தங்கள் தரப்பு மூல உபாயம் தந்திரோபாயம் (Strategy and tactics) பற்றிய சுயவிமர்சனமுமே பின்னர் வந்த தலைமுறை போராட்டங்களுக்கு அதிக வழிகாட்டியாக உதவியாக இருந்தது,

*

இராணுவ உத்திகள் தொடர்பாக எனக்கும் வன்னிக்கும் நடந்த விவாதங்களையும் என் அணுகுமுறைகளோடு கஸ்றோ அணி அழித்துவிடும் முனைப்புடன் முரண்பட்டது பற்றியும் இருந்தும் வன்னியில் என் விமர்சனங்களுக்கான வெளியும் வழியும் பாதுகாக்கப்பட்டது பற்றியும் இதன்பின்னணியில் அரசியல் இரராணுவ உத்திகள் பற்றிய மாறுபட்ட சாத்தியக்கூறுகள் நிலவியது பற்றியும் எழுதி வைக்க வேணும். எனது நாட்க்கள் எண்ணபட்டு வருகையில் விமர்சனக்கள் பற்றியும் அடுத்த தலைமுறைக்கும் அவர்களது  போராளிகளுக்கும் அவர்களது போராட்ட வடிவம் எதுவாக இருந்தாலும் அவசியமானவற்றை . எழுதுவது தொடர்பாக சிந்தித்து வருகிறேன். இது தொடர்பாக முடிவு எடுக்க முடியாமை 2009 க்குப்பின்னர் என்னை ஒருவேலையும் செய்ய முடியாமல் உளவியல் ரீதியாக முடக்கிப்போட்டுள்ளது.

நாட்டில் போராளிகள் பலர் பட்டினிச் சாவை எதிர்நோக்கும் நிலையை பற்றிக் கவலைப்படாதவர்கள் இயக்க சொத்துக்களை கொண்டு ஏதிலிகளான பாதிக்கப்பட்ட முன்னைநாள் போராளிகளுக்கு உதவும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லாதவர்கள் மேற்குலகில் இராஜதந்திரமற்ற அதிதீவிர நிலைபாட்டை முன்வைப்பதன்மூலம் களத்திலும் புலத்திலும் போராட்டத்தை மேலும் பெலகீனப்படுத்தவும் முயல்கிறார்கள். அவர்கள் களத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்களை விமர்சன ரீதியாக ஆதரிக்கும் வரலாற்று பணிக்கு கொஞ்சமும் தயாராக இல்லை. மாறாக அத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஆக்கபூர்வமான விமர்சனம் சுயவிமர்சனங்களை கொச்சைப் படுத்தி துரோகி முத்திரை ஒட்டமட்டும் முன்னே நிற்கிறார்கள்.

*

இலங்கைக்குப்போய் தமிழ் முஸ்லிம் மக்கள் மலைய மக்களும் சிங்கள மக்களும் தொட்பான சமூக அரசியல் ஆய்வுகளை தொடரவும் மார்க்கமில்லை.2013 நவம்பரில்  "அவரை இனி விடுவதாய் இல்லை. சிறையுள்தான் அவரது வாழ்க்கை முடியும்" என சொல்லி கோத்தபாய என்னை கைது செய்தது. பின்னர் அவரை வைத்திருப்பது கஸ்ட்டமாக இருக்கு என விடுவித்தது இப்ப விசாமறுத்தது பின்னர் ஜெயபாலன் நாட்டுக்கு வரலாமென புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் அறிவித்தது ஆனால் தொடர்ந்தும் என் பெயரைக் கரும் பட்டியலில் வைதிருப்ப்பது . என தொடரும் நிலமைகள் நாட்டுக்கு சென்று ஈழத்து மண்ணும் மக்களும் என்ற தலைப்பில் நான் எழுத விரும்பிய சமூக பெருளாதார ஆய்வகளை மேற்கொள்ளுவதை கேழ்விக்குறியாக்கியுள்ளது. 
*

என் நாவல்களை காவியத்தை இந்துசமுத்திரம் தொடர்பான ஆய்வுகளை எழுதி முடிப்போம் என்றால் பொருளாதார இயலாமை என் இயலாமையாகி என் நொந்த மனசை மேலும் சிக்கல் படுத்துது. கிரேக்க கதை ஒன்றிருக்கிறது சிசிபஸ் என்கிற பலசாலியின் சாபம் ஒரு உருண்டைக் கல்லை மலை உச்சியில் நிறுத்தும் முடியாதபணியாகும். அவன் தனது அசுர முயற்ச்சியில்  உச்சிக்கு எடுத்துப்போனதும் கல் உச்சியில் நிற்காமல் கீழே உருண்டுவந்துவிடும். மனிதனின் விதி இதுதான் போலும்.
என் இளமையில் இருந்தே சாதி ஒடுக்குதலுக்கு எதிரான போராட்ட ஈடுபாடு,  தமிழ் முஸ்லிம் மலையக தமிழர் உறவு தொடர்பான ஆய்வும் முயற்ச்சிகள், ஈழ போராட்டத்தின் உத்தி மற்றும் இராசதந்திரம் பற்றிய என் உழைப்பு என எல்லாமே சிசுபஸ் முயற்சியாகவே போயிற்று என்பதை உணர்வது சிரமமாக உள்ளது..
*
என்னுடைய சிசிபஸ் தலை எழுத்து என்னுடன் முடியட்டும். அறப்போராட்டம் பின்னர் தொடர்ந்த ஆயுதப் போராட்டம் இன்று தோல்வியின்பின் நொண்டி நொண்டி மீண்டெழும் எழும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் என எங்கள் வரலாற்றை புரிந்துகொள்ளாமல் அதனில் இருந்து கற்றுக்கொள்ளாமல் எங்கள் தேசிய சர்வதேசிய தவறுகளைத் திருத்தாமல் முன்செல்ல மார்க்கமில்லை. அறிவார்ந்த ஒரு புதிய தலைமுறை சாத்தியமான எங்கள் விடுதலைக்காக புதிய போராட்ட வடிவங்களோடு மேலெழுந்து வரட்டுக்கும்.

நம்மை சுற்றிய குறும்பார்வையல்ல தொலைவுவரை சூழ பரந்துபடுகிற பார்வையே நம்மை சூழ்கிற ஆபத்தில் இருந்து நம்மை காக்கும் வழியாகும். தன்னையே சுற்றிய குறும்பார்வையுள்ள உதை பந்தாட்ட வீரன் எதிரியின் பக்கமாக ஏன் எதிரியின் கோல்லுக்கே பந்தை அடித்துவிடுகிற வாய்ப்பு அதிகம். இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் சிதறிப்போன தோழர்களின் செயல்களும் செயல்பாட்டின்மையும் என்னை வேதனையுறச் செய்கிறது.

உலகிலும் இலங்கையிலும் அல்லல்பட்டு ஆற்றாது அழுது கண்ணீர் சிந்தும் மக்கள் எந்த மொழி பேசினாலும் அதன் தொனி தமிழ்தான்
 கடந்த ஒரு நூற்றாண்டாக எங்கள் போராட்டங்கல் எல்லாம் சிசிபஸின் கற்பாறைபோல ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிடுகிறத துர் அதிஸ்ட்டனம். கடந்த ஒரு  நூற்றாண்டாக எங்கள் போராட்டங்களின் தலமையின் விதியும் சிசிபஸ்ஸின் விதொயாகவே முடிந்திருக்கிறது. ஆனால் வடிவங்களை மாற்றினாலும்  சரணடையாமல் தொடர்ந்த போராட்டங்களால் எங்கள் நிலையில் தளமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே. சிசிபஸ்ஸின்கல் மீண்டும் கடல் மட்டத்துக்கு உருளாமல் மேம்பட்ட தளங்களில் தரித்தது என்பதும் உன்மையே. இப்படி தோல்விகளிடையே எங்கள் முன்னோடித் தலைவர்கள் எங்களுக்கு விட்டுச் சென்றிருப்பது தொடரவேண்டிய சரிகளும் தொடரக்கூடாத பிழைகளும் அடங்கிய அனுப்பவம் என்கிற கவீர காவியமேமாகும்ரவற்றை தணிக்கை செய்யாமல் எங்கள் எதிர்கால தலைமுறையிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முயல்கிறவர்களை ஆதரியுங்கள். ஆதரிக்காவிட்டால் அவர்களுக்கு துரோகி முத்திரையாவது குத்தாமல் இருங்கள். அதுவெனினும் எங்கள் வரலாற்றுக்கு நீங்க்லள் செய்கிற பெரும் பங்களிப்பாக அமையட்டும்..

 

எங்கள் பரந்துபட்ட மக்களின் அறம்சார்ந்த நலன்கள் தவிர அரசியலில் தத்துவரீதியாக  நிலையானதும் முடிவானதும் நிரந்தர நட்பானதும் நிரந்தர எதிரியானதும் என்று எதுவுமில்லை. 
*
- V.I.S.JAYAPALAN POET 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர்,

நீங்கள் எழுதுங்கோ, நிறையவிடையம் எழுதவேண்டும் சரியோ பிழையோ நடுநிலையாக நின்று எல்லாத்தையும் எழுதுங்கள்.

ஆனால் தமிழ் முஸ்லீம்கள் மலையகத் தமிழர்கள் இவர்கள் உள்ளடக்கிய அரசியலில் வேலைத்திட்டங்களை இனிமேல் முன்னெடுக்கமுடியாது.

இதில் மலையகத் தமிழருடன் நாம் என்றுமே உடன்பட்டுச் செல்லலாம், முஸ்லீம்களது தலைமைகளுடன் என்றென்றும் உடன்பாட்டுக்குவரமுடியாது.

முஸ்லீம்களுக்கு தனியான மாகாணம் தேவை என்பதை முஸ்லீம்தலைவர்கள் தற்போதும் கோரிக்கை விடுத்தாள்ளார்கள் தாராளமாகத் தமிழர் தரப்பும் அதை ஏற்றுக்கொள்கின்றது அதை நீங்களே போராடிப் பேரம்பேசிப் பெற்றுக்கொள்ளுங்கள்,  நாம் உங்களிலிருந்து விலத்தி மிகவும் தூரத்திலே இருக்கவே விரும்புகிறோம். தமிழாட்டில் சாதீயத்துக்காகக் கட்டப்படும் எல்லைச்சுவர்களைப்போல் குறுக்குச்சுவர் எழுப்பி வாழும் மனோநிலைக்கு, எங்களை , உங்களது கடந்தகால எமது இனப்பிரச்சனை தொடர்பான அரசியல் முன்னெடுப்புகளின்போது நீங்கள் எடுத்த முடிவுகளால், கொண்டுவந்துள்ளீர்கள் என்பதை உங்கள் நணபர்களிடம் தெரிவியுங்கள்.

கூட்டமைப்பு எப்போதுமே தமிழர்களது பிரச்சனை இருந்துகொண்டே இருக்கவேண்டும் எனும் தமிழர் விரோததேசமான இந்தியாவின் எண்ணத்துக்கு உடன்பாடாகவே இருக்கின்றது.

பிரபாகரன் பொட்டம்மான் மற்றும் உள்ளூர்ப்புலகளது உதிரி அமைப்புகள் புலம்பெயர் புலிஆதரவு அமைப்புகள் புலம்பெயர் புலிவாலகள் அமைப்புகள் எல்லவற்றையும் மிகவும் துல்லியமான உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டுமென்பதை உங்கள் ஆதரவுநாடான இந்தியா விரும்பியே உள்ளது.

இப்படி இருந்தால்தான் இந்தியாவினதும் கூட்டமைப்பினதும் அரசியல் சாணாக்கியத்தனம் வேலைசெய்யும்.

ஒன்றுபட்ட இந்தியா இருக்கும்வரைக்கும் ஈழத்தமிழர்களுக்கான நியாயமான உரிமைகள் எதுவும் கிடைக்கவே கிடையாது. நாம் கொக்குத் தலையில் வெண்ணையை வைத்து கொக்குப்பிடிப்போராக இருக்கவெண்டியவர்களே.

இப்படியான ஜதார்த்தங்களை புரிந்துகொண்டு ஏதாவது செய்யப்பாருங்கள்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய எழுஞாயிறு, உங்கள் ஆதங்கம் புரிகிறது. அரசியல் எங்கள் பரந்துபட்ட மக்களின் அறம்சார்ந்த நலன்கள் தவிர தத்துவத்தில்  நிலையானதும் முடிவானதும் நிரந்தர எதிரி என்று எதுவுமில்லை. ஐநாறு பதில்களைப் பார்த்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்.

எங்கள் பரந்துபட்ட மக்களின் அறம்சார்ந்த நலன்கள் தவிர அரசியலில் தத்துவரீதியாக  நிலையானதும் முடிவானதும் நிரந்தர நட்பானதும் நிரந்தர எதிரியானதும் என்று எதுவுமில்லை. 
*

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.