Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வு மேசையில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாக சம்பந்தன், ரவூப் ஹக்கீம் ஆகிய இருவருக்கு மட்டுமே இடம்!

Featured Replies

தீர்வு மேசையில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாக சம்பந்தன், ரவூப் ஹக்கீம் ஆகிய இருவருக்கு மட்டுமே இடம்!

 

இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாக சம்பந்தன் ஐயாவும், ரவூப் ஹக்கீமும் மாத்திரமே இருப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகத் தெளிவாக அறிவித்துள்ளார் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் “கிராமத்திற்கு தொழில்நுட்பம்’ எனும் தொனிப்பொருளின் கீழ்
சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட விதாதா வள நிலையத் திறப்பு விழா  கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. பிரதி அமைச்சர் ஹரீஸின் அழைப்பின் பேரில் விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ் விதாதா வள நிலையத்தைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சிறுகைத்தொழில் அமைச்சர் தயா கமகே, கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்;

கல்முனைப் பிரதேசத்தில் கைத்தொழில் துறையில் வளர்ச்சி ஏற்பட்டு வருவதை உணர முடிகிறது. எமது பிரதேச நெசவு உற்பத்தி பொருட்களான சாரம், கைத்தறி சேலைகள் என்பன அனைவராலும் விரும்பிக் கொள்வனவு செய்யப் படுகின்றன. இந்தியாவின் உற்பத்திப் பொருட்களுக்கு நிகராக எமது கல்முனை பிரதேச நெசவு உற்பத்திப் பொருட்கள் பிரபல்யம் அடைந்துள்ளதுடன் தலைநகரில் பல காட்சிறைகளும் உள்ளன.

இந்தியாவின் பெங்களூர், ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்கள் தொழில்நுட்பத் துறையில் பிரகாசிக்கின்றன. அங்குள்ள இளைஞர்கள் தொழில்நுட்ப கல்வியினை கற்று மாதாந்தம் கூடுதலான வருமானத்தை ஈடுகின்றனர். இந்த தொழில்நுட்ப வசதிகளை எமது நாட்டிலும் ஏற்படுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை எடுத்து வருகிறார்.

அதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. இதன் மூலம் பிரதமரின் தேர்தல் வாக்குறுதியான 10 லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகள்  உருவாகப்படவுள்ளன. இதில் எமது இளைஞர், யுவதிகளும் உள்வாங்கப்படவுள்ளனர். அதற்கான ஆயத்தங்களுடன் உரிய கற்கை நெறிகளை மேற்கொண்டு எமது இளைஞர்கள் தயாராக இருக்கவேண்டும்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாக சம்பந்தன் ஐயாவும், தலைவர் ரவூப் ஹக்கீமும் மாத்திரமே இருப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகத் தெளிவாக ஏறாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களின் தேசிய இயக்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பாலமுனையில் இடம்பெற்ற கட்சியின் 19வது தேசிய மாநாடு உணர்த்தியுள்ளது.

இன்று சிலர் தங்களை தாங்களே தேசிய தலைமைகளாக சித்தரித்து திரிகின்றனர். இவர்களின் அற்ப சொற்பங்களுக்காக சிலர் திரிகின்றனர். இதனை மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

நாட்டின் அரசியலமைப்பு மாற்றம் சம்பந்தமாக இன்று பேசப்படுகின்றது. இதனால் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படாதவாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் கட்சியின் செயற்பாட்டை இல்லாமல் செய்வதற்கு பல சதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை நாம் நன்கு புரிந்து வைத்துள்ளோம். இச்சதிகளுக்கு முகம் கொடுத்து முறியடிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். ஆனால் மக்கள் குழம்பிவிடாமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை பேசக்கூடிய சக்தியும் மக்கள் பலமும் மக்கள் ஆணையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.

http://www.whathits.com/varudal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.