Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈபிடிபியில் இருந்து விலகியது ஏன்? பிற கட்சியில் சேர முடிவா? சந்திரகுமார் விளக்கம்

Featured Replies

ஈபிடிபியில் இருந்து விலகியது ஏன்? பிற கட்சியில் சேர முடிவா? சந்திரகுமார் விளக்கம்

ஈபிடிபியில் இருந்து விலகியது ஏன்? பிற கட்சியில் சேர முடிவா? சந்திரகுமார் விளக்கம்

 

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து விலகிவிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

யாழில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 17ம் திகதிக்குப் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து விலகி விட்டதாக இதன்போது சந்திரகுமார் அறிவித்தார்.

இதுவரையில் கட்சியின் தலைமைத்துவத்திற்கு அறிவிப்பினை விடுக்கவில்லை என்றும், ஊடகத்தின் வாயிலாக கட்சியில் இருந்து விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

தமிழ் அரசியல் நிலைமைகளில் மாற்றம் வரும், அந்த மாற்றம் வந்தே ஆக வேண்டுமென்று நம்புகின்றேன். அந்த சூழ்நிலை தற்போது இருக்கின்றது.

இன விடுதலைக்காக மட்டுமே சிந்திப்பதாக எமது தமிழ் அரசியல் காணப்படுகின்றது.

எமக்குள் சமூக ரீதியான பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. தமிழ் தரப்பிற்குள் ஜனநாயக கட்டமைப்பு இல்லை. அதனை உருவாக்குவதற்கான பங்களிப்பினை வழங்குவதற்காகவே, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து வெளியில் வந்துள்ளேன்.

வன்னி மாவட்டத்தில் உள்ள மக்களின் அரசியல் அபிலாஷைகள் வேறு விதமாக இருக்கின்றது. அதனை தேர்தல் முடிவில் புரிந்துகொண்டேன்.

அந்த வகையில், மக்களின் அபிலாஷைகள், உணர்வுகளை புரிந்துகொண்டுள்ளேன். முன்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து விலகி மீண்டும் உள்ளே வந்தது, சொந்த காரணத்திற்காக, தற்போது, விலகுவது அரசியல் காரணங்களுக்காக, அதிலும் மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளித்து.

மக்கள் விரும்பும் அரசியல் அமைப்பு வரும் போது, அதில் இணைந்து கொள்வது பற்றி யோசிக்க முடியும் என்றார்.

ஈபிடிபியில் இருக்கும் போது, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாதா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த சந்திரகுமார், என்னை நம்பியுள்ள மக்கள் ஈபிபிடியில் இருந்தால், தமது அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் என நம்பவில்லை. ஈபிடிபிக்கு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாது என சொல்ல முடியாது. ஆனால், இது தன்னுடைய சுயாதீனமான முடிவு என்றார்.

ஈபிடிபியில் இருந்தால், மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாது என மக்கள் என்னைத் தூண்டியதால் வெளியில் வந்துள்ளேன். ஆனால், அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான தன்மை இருக்கின்றதா என ஈபிடிபியின் தலைமைத்துவத்திடம் கேட்க வேண்டும் என்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கேட்டபோது, அவ்வாறு இணையப் போவதில்லை. அதில் உண்மை இல்லை என அவர் கூறினார்.

ஈபிடிபியில் இருந்து விலகுவதாக இன்னும் ஓரிரு தினங்களில் தெரியப்படுத்தவுள்ளதாகவும், ஊடகங்கள் மூலம் கட்சியில் விலகுவதற்கான தகவல்களை கட்சி தலைமையகம் அறிந்திருக்கலாம் என அவர் கூறினார்.

அந்தவகையில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா என மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது.

நட்புறவு ரீதியில் பல கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றேன். ஆனால், கட்சியில் இணைவது குறித்து கலந்துரையாடவில்லை என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.