Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான அச்சுறுத்தல் அரசாங்க அதிபரின்அடக்குமுறையா? -சிறிநேசன்

Featured Replies

3663_1461306518_PhototasticCollage-2016-

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பொலீசாரை கொண்டு ஊடகவியலாளர்நிலாந்தனை விசாரணை செய்தமையானது இந்த நாட்டில் மீண்டும் பத்திரிகையாளர்களைமிரட்டுகின்ற ஒடுக்குகின்ற பயமுறுத்துகின்ற அடக்குமுறை கலாசாரம் ஏற்படுத்தப்படுகின்றா? எனமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறினேசன்அவர்கள் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் சுயாதீன ஊடகவியலாளர்நிலாந்தன் அவர்களை பொலீஸ் நிலையத்தில் கொடுத்து விசாரணை செய்தமை தொடர்பாகஊடகங்களக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்                     

அண்மையில் ஊடகவியலாளர் நிலாந்தன் அவர்கள் மாவட்டத்தில் நடைபெற்றசில இடமாற்றங்கள் தொடர்பாக குறிப்பாக பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் தொடர்பாகதன்னுடைய பத்திரிகை ஆழுமையை பயன்படுத்தி விமர்சனங்களை ஊடகங்கள் வாயிலாகவெளிக்கொண்டுவந்திருந்தார்.

விமர்சனத்தை தெரிவித்ததற்காக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்உடனடியாக பொலீசாரிடம் புகார் செய்து அதனை முறைப்பாடக பதிவு செய்து ஊடகவியலாளர்நிலாந்தன் அவர்களை பொலீஸ் நிலையத்திற்கு அழைத்து ஒரு வித்தியாசமான பாணியில்விசாரணைகளை மேற்கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலமைகள்காணப்படுகின்றது.

இன்று ஊடகசுதந்திரம் தகவல் அறியும் சுதந்திரங்கள் பற்றியெல்லாம்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஊடகவியலாளர் நிலாந்தன் அவர்கள் ஒரு வகையில்அச்சுறுத்தப்பட்டுள்ளார் என்றே கருதவேண்டியுள்ளது.

இப்படியான விடயங்களை செய்கின்றபோது எமக்கு பயம் ஒன்று ஏற்படுகின்றதுஅதாவது கடந்த கால ஆட்சியின் ஆரவாரங்கள் அல்லது அடங்கி கிடந்த விடயங்கள் படிப்படியாகவெளிவரத்தொடங்குகின்றதா என்று சிந்திக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலஆட்சிக்கு இதுபொறுத்தமானது இன்றைய நல்லாட்சிக்கு இது பொறுந்ததது.

அரசாங்க அதிபரின் இந்த செயற்பாடானது எமக்கு அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது உண்மையில் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்திய விடயமாக இருந்திருந்தால் அல்லதுஅவருக்கு உண்மைக்கு புறம்பான விடயமாக இருந்திருந்தால் அவர் உடனடியாக இப்படியான விடயம் ஒன்றுஇடம்பெற்றுள்ளது என்பதை பத்திரிகையின் வாயிலாக மாற்று அறிக்கை ஒன்றின் ஊடாக அதனைவிமர்சித்திருக்கலாம் அல்லது மாற்றுக் கருத்தினை வெளியிட்டிருக்கலாம். அதனை விடுத்து இதனைஅடக்குகின்ற ஒரு நிலைப்பாட்டில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்து அவரை கொண்டுவந்துவிசாரணை செய்திருக்கின்ற தன்மையானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின்செயற்பாடுகளை ஒரு வித்தியாசமான பாணியில் இது நல்லாட்சிக்கு உகந்ததாக அமைந்திருக்கின்றதாஎன்று யோசிக்கவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

ஏனென்றால் அவருடைய செயற்பாடுகள் பற்றி இன்று மக்கள் மத்தியில்பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒரு உயர்அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள சகலபிரதேச செயலாளர்களையும் ஒன்றினைத்து ஒற்றுமைபடுத்தி அவர்களை கூட்டாக இணைத்துக்கொண்டுசெல்வதாக இருந்தால் சக ஊழியர்கள் மத்தியில் ஒற்றுமையும் நம்பிக்கையையும் எற்படுத்துவதாகஇருந்திருக்கும்.

அவர்களுக்கு மத்தியில் முரன்பாடுகளை உருவாக்குவதோ அல்லது பிரதேசசெயலாளர்கள் மத்தியில் முரண்பட்ட கருத்து கூறி பிரித்தாழும் தந்திரங்களை பயன்படுத்திஅவர்களை கையாழுகின்ற தன்மை ஏற்புடையதாக இல்லை. பிரதேச செயலாளர்கள் மத்தியில் தவறுகள்இருக்குமாக இருந்தால் அல்லது தவறான செயற்பாடுகள் இருக்குமாக இருந்தால் அதனை கையால்வதற்குசில உத்திகள் உபாயங்கள் நிர்வாகத்தில் உண்டு.

அதனைவிடுத்து அவர்களை ஒரு விதத்தில் சில அரசியல்வாதிகளின்தேவைகளுக்காக பந்தாடுகின்ற தன்மை காணப்படுமாக இருந்தால் அதனை மட்டக்களப்பு மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்ற மக்களின்பிரதிநிதி என்றவகையில்  இப்படியானசெயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. நல்லாட்சிக்கு முரணாக விரோதமாக அரசாங்க அதிகாரிகள்நடந்துகொண்டாலும் சரி அல்லது அரசியல் வாதிகள் நடந்துகொண்டாலும் சரி அல்லது பிரதேசசெயலாளர்கள் நடந்துகொண்டாலும் யாராகவிருந்தாலும் நாங்கள் எதிர்ப்போம்.

இன்று பல முற்போக்கு சிந்தனையாளர்கள் பல தமிழ் சிங்கள ஆங்கிலமுற்போக்கு சிந்தனை கொண்ட ஊடகவியலாளர்கள் இந்த விடயம் சம்பந்தமாக பல கேள்விகளைஎழுப்பிக்கொண்டிருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் ஏன்மௌனியாக இருக்கின்றீர்கள் என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அந்தவகையில் முளையில் இந்த விடயத்தை கிள்ளி எரியாவிட்டால் இதுவிஸ்வரூபம் எடுத்து மீண்டமொரு காட்டாட்சி நிர்வாகத்தை கொண்டுவந்துவிடும்.

எனவே எமது மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் ஊடகவியலாளர்களைமுறைப்பாடு செய்து விசாரணைசெய்து அவர்களை மிரட்டுகின்ற செயற்பாடுகளை விடுத்து அதற்கு எதிரானகருத்துக்களை பத்திரிகை வாயிலாக தெரிவித்திருக்கவேண்டும் கருத்தினை கருத்தினால்எதிர்கொள்கின்ற ஜனநாயக கலாச்சாரத்தை கடைப்பிடிக்கவேண்டுமெ தவிர கருத்தினை கருவியினால்எதிர்கொள்கின்ற கலாச்சாரத்திணை கைவிடவேண்டும் அந்த கலாச்சாரம் கடந்த ஆட்சியில்இருந்தது அதனை இந்த ஆட்சியில் அனுமதிக்க முடியாது.

ஜனாதிபதியை பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றது பிரதமரைப் பற்றியவிமர்சனங்கள் இருக்கின்றது அமைச்சர்களைப் பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றது ஆனால்அவர்கள் எந்தவோரு ஊடகவியலாளர்களையும் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவோ அல்லதுவிசாரணை செய்ததாகவோ நீதிமன்றத்தில் நிறுத்தியதாகவோ எனக்கு தகவல்கள் இல்லை.

ஆனால் மட்டக்களப்பில் ஒரு விசித்திரமான நிகழ்வு நடைபெற்றுள்ளதுஊடகவியலாளர் நிலாந்தன் அவர்களை அரசாங்க அதிபரினால் முறைப்பாடு செய்யப்பட்டுபொலீசாரினால் விசாரணை செய்யப்பட்ட செய்தியானது சற்று நிதானமாக சிந்திக்கவேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.

மீண்டும் இப்படியான ஊடக அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் மிரட்டல்கள்ஏற்படுத்தப்படுகின்ற சூழ்நிலைகள் கட்டமைக்கப்படுகின்றதா என்பதனை சிந்திக்கவேண்டியுள்ளது.

எனவே அரசியல் வாதிகள் ஒரு சிலரை தனது கைகளுக்குள் கையகப்படுத்திக்கொண்டுசெயற்படகின்ற தன்மையினை கூடியவரைக்கும் நிர்வாக இயந்திரத்தை இயக்குகின்ற தலைவர்கள்கைவிடவேண்டுமென்ற ஜனநாயக கருத்தினை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

http://battinaatham.com/description.php?art=3663

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.