Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறந்த மொழிபெயர்ப்புகள்!

Featured Replies

13081897_992888964_2825517f.jpg

தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், வாசகர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரைச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களைப் பரிந்துரைக்கும்படிக் கேட்டு, அவர்களுடைய பட்டியல்களிலிருந்து இறுதிசெய்யப்பட்ட பட்டியல்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

உலக இலக்கியம்

* அந்நியன்-ஆல்பெர் காம்யு;

(பிரெஞ்சிலிருந்து) வெ.ஸ்ரீராம், க்ரியா பதிப்பகம்.

* அன்னா கரீனினா- டால்ஸ்டாய்;

(ஆங்கிலம் வழி) நா. தர்மராஜன், பாரதி புத்தக நிலையம்.

* கடலும் கிழவனும் - எர்னஸ்ட் ஹெமிங்வே;

(தமிழில்) ச.து.சு. யோகியார், எஸ்.எஸ். பப்ளிகேஷன்.

* கரமசோவ் சகோதரர்கள் - பியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி;

(ரஷ்ய மொழியிலிருந்து), அரும்பு சுப்பிரமணியம், காலச்சுவடு பதிப்பகம்.

* நம் காலத்து நாயகன்- லெர்மன்தேவ்;

(தமிழில்) பூ. சோமசுந்தரம், சந்தியா பதிப்பகம்.

* பட்டாம்பூச்சி - ஹென்றி ஷாரியர்;

(தமிழில்) ரா.கி. ரங்கராஜன், நர்மதா பதிப்பகம்.

* பாரபாஸ் (அன்பு வழி) - பேர் லாகர் குவிஸ்ட்;

(தமிழில்) க.நா.சு, மருதா பதிப்பகம்.

* போரும் வாழ்வும்- லியோ டால்ஸ்டாய்;

(தமிழில்) டி.எஸ்.சொக்கலிங்கம், என்.சி.பி.எச்.

* விசாரணை - ஃபிரன்ஸ் காஃப்கா,

(ஜெர்மன் மொழியிலிருந்து) ஏ.வி. தனுஷ்கோடி, க்ரியா பதிப்பகம்.

* வேர்கள் அலெக்ஸ் ஹேலி,

(தமிழில்) பொன்.சின்னத்தம்பி முருகேசன், எதிர் வெளியீடு.

இந்திய இலக்கியம்

* அக்னி நதி- குர் அதுலின் ஹைதர்,

(தமிழில்) சௌரிராஜன், நேஷனல் புக் டிரஸ்ட்

* அழிந்த பிறகு சிவராம காரந்த்,

(கன்னடத்திலிருந்து) டி. பி. சித்தலிங்கய்யா, நேஷனல் புக் டிரஸ்ட்.

* ஆரோக்கிய நிகேதனம் - தாராசங்கர் பந்தோபாத்யாய

- (தமிழில்) த.நா. குமாரசாமி, வ.உ.சி. பதிப்பகம்.

* சம்ஸ்காரா - யு.ஆர். அனந்தமூர்த்தி,

(கன்னடத்திலிருந்து) தி.சு. சதாசிவம், அடையாளம் பதிப்பகம்.

* சிக்கவீர ராஜேந்திரன், மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்,

(கன்னடத்திலிருந்து) ஹேமா ஆனந்ததீர்த்தன், நேஷனல் புக் டிரஸ்ட்.

* தர்பாரி ராகம் - ஸ்ரீலால் சுக்லா,

(இந்தியிலிருந்து) சரஸ்வதி ராம்நாத், நேஷனல் புக் டிரஸ்ட்.

* நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்யோபாத்யாயா,

(வங்க மொழியிலிருந்து) எஸ். கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட்

* பாத்தும்மாவுடைய ஆடும் இளம் பருவத்துத்தோழியும் - வைக்கம் முகமது பஷீர்,

(மலையாளத்திலிருந்து) குமாரி கெ. விஜயம், நேஷனல் புக் டிரஸ்ட்

* மண்டோவின் படைப்புகள் சதத் ஹசன் மண்டோ,

(ஆங்கிலம் வழியாக) ராமானுஜம், நிழல் வெளியீடு

* வனவாசி - விபூதி பூஷண் பந்யோபாத்யாயா,

(தமிழில்) த.நா. சேனாபதி

தத்துவம், தன்வரலாறு, அரசியல், அறிவியல், சமூகம் (இந்தியா தொடர்பானவை)

* ஆளற்ற பாலம் - கொண்டபல்லி கோடேஸ்வரம்மா;

(தெலுங்கிலிருந்து) கௌரி கிருபானந்தன், காலச்சுவடு.

* இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்- தேவிபிரசாத் சட்டோபாத்யாயா;

(தமிழில்) கரிச்சான் குஞ்சு, விடியல் பதிப்பகம்.

* இந்திய வரலாறு ஓர் அறிமுகம் - டி.டி.கோசாம்பி;

(தமிழில்) சிங்கராயர், விடியல் பதிப்பகம்.

* உப்பு வேலி ராய் மாக்ஸம்;

(தமிழில்) சிறில் அலெக்ஸ், எழுத்து பதிப்பகம்.

* ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை - நளினி ஜமீலா;

(மலையாளத்திலிருந்து) குளச்சல் மு. யூசுப், காலச்சுவடு.

* காந்தி வாழ்க்கை - லூயி பிஷர்;

(தமிழில்) தி.ஜ.ர, பழனியப்பா பிரதர்ஸ்

* சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு;

(மலையாளத்திலிருந்து) கே.வி. ஷைலஜா, வம்சி பதிப்பகம்.

* சுயசரிதை - ஜவஹர்லால் நேரு;

(தமிழில்) வ.ரா, அலைகள் வெளியீட்டகம்.

* வால்காவிலிருந்து கங்கை வரை- ராகுல சாங்கிருத்யன்;

(தமிழில்) இ. முத்தையா, தமிழ் புத்தகாலயம்

* 12 உபநிடதங்கள்-

(தமிழில்) சுவாமி ஆசுதோஷானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம்.

தத்துவம், தன்வரலாறு, அரசியல், சமூகம் (உலகம்)

* உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்- ஜான் ரீட், என்.சி.பி.எச்.

* ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வி முறை - பாவ்லோ பிரைரெ;

(தமிழில்) இரா. நடராசன், பாரதி புத்தகாலயம்.

* ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா;

மொழிபெயர்ப்பு & வெளியீடு பூவுலகின் நண்பர்கள்.

* காதல் வரலாறு - டயன் அக்கர்மென்;

(தமிழில்) ச. சரவணன், சந்தியா பதிப்பகம்.

* சிறியதே அழகு - ஈ.எப்.ஷூமாஷர்;

(தமிழில்) யூசுப்ராஜா, எதிர் வெளியீடு.

* சேகுவேரா வாழ்வும் மரணமும் - ஜோர்ஜ் ஜி.காஸ்டநாடா; (தமிழில்) எஸ். பாலச்சந்திரன், விடியல் பதிப்பகம்.

* சோபியின் உலகம் - யொஸ்டைன் கார்டெர்;

(தமிழில்) ஆர்.சிவகுமார், காலச்சுவடு.

* ப்ளேட்டோவின் குடியரசு-

(தமிழில்) வெ. சாமிநாத சர்மா

* பீகிள் கடற் பயணம் - சார்லஸ் டார்வின்;

(தமிழில்) அப்துல் ரஹ்மான், அகல்.

* ஜராதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் நீட்ஷே;

(ஆங்கிலம் வழியாக) ரவி, காலச்சுவடு பதிப்பகம்.

கவிதைகள்

* ஆமுக்த மால்யதா - கிருஷ்ண தேவராயர்,

(தெலுங்கிலிருந்து) மு. கு. ஜகந்நாத ராஜா

* கீதாஞ்சலி- ரவீந்திரநாத் தாகூர்;

(தமிழில்) வீ.ஆர்.எம். செட்டியார், முல்லை பதிப்பகம்.

* சூரியன் தகித்த நிறம் (இந்திய, உலகக் கவிதைகள்)

(தமிழில்) பிரமிள், நற்றிணை பதிப்பகம்.

* சொற்கள்- ழாக் ப்ரெவர்;

(பிரெஞ்சிலிருந்து) வெ. ஸ்ரீராம், க்ரியா பதிப்பகம்.

* பவித்ரன் தீக்குன்னி கவிதைகள்,

(மலையாளத்திலிருந்து) என்.டி. ராஜ்குமார், புது எழுத்து வெளியீடு.

தாக்கம் ஏற்படுத்திய முத்திரைப் புத்தகங்கள்

* ஒரு யோகியின் சுயசரிதை - பரமஹம்ச யோகானந்தர்;

ஜெய்கோ பதிப்பகம்

* கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ்;

(தமிழில்) எஸ்.வி. ராஜதுரை, என்.சி.பி.எச்.

* சத்திய சோதனை - காந்தி,

நவஜீவன் வெளியீடு.

* மகாபாரதம் (சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில்)

ராமானுஜாசாரியார் தலைமையிலான மொழிபெயர்ப்புக் குழு; கும்பகோணம் பதிப்பு.

* ஜாதியை அழித்தொழிக்கும் வழி அம்பேத்கர்,

கருப்பு பிரதிகள்.

சிறார் உலகம்

* அப்பா சிறுவனாக இருந்தபோது - அலெக்சாந்தர் ரஸ்கின்;

(தமிழில்) நா. முகமது ஷெரீபு & ஈஸ்வர சந்தான மூர்த்தி, புக்ஸ் ஃபார் சில்ரன்.

* கலிவரின் பயணங்கள் - ஜோனதன் ஸ்விப்ட;

(தமிழில்) யூமா. வாசுகி, என்.சி.பி.ஹெச்.

* குட்டி இளவரசன் - அந்த்வான் து செந்த் எக்சுபெரி;

(பிரெஞ்சிலிருந்து) வெ. ஸ்ரீராம் & ச. மதனகல்யாணி, க்ரியா.

* டோட்டோ சான்: ஜன்னலில் ஒரு சிறுமி - டெட்சுகோ குரோயாநாகி;

(தமிழில்) சு. வள்ளிநாயகம் & சொ. பிரபாகரன், நேஷனல் புக் டிரஸ்ட்.

* சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி ரோல் தால்;

(தமிழில்) பாஸ்கர் சக்தி, விகடன் வெளியீடு.

 

உலக புத்தக தினத்தில் புத்தக சங்கமம்!

உலக புத்தக தினத்தன்று புத்தகக் காட்சி இல்லாமலா!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் பெரியார் திடலில் நேற்று ‘சென்னை புத்தகச் சங்கமம்’ தொடங்கப்பட்டிருக்கிறது. நாளை வரை நடக்கவிருக்கும் இந்த 3 நாள் நிகழ்வு உலக புத்தக தினத்தைக் கொண்டாடுவதற்கு ஓர் அருமையான வாய்ப்பு!

ஆயிரக்கணக்கான தலைப்புகளில் ஒரே இடத்தில் புத்தகங்கள் கிடைப்பது மட்டுமல்ல, முதல்முறையாக 50% கழிவும் வழங்கப்படுகிறது என்பது வாசகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நுழைவுக்கட்டணமும் கிடையாது!

இடம்: பெரியார் திடல், வேப்பேரி, நேரம்: காலை 11 மணி தொடங்கி இரவு 9 மணி வரை. 044- 2661 8161 / 2661 8162

 

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8

1 hour ago, Athavan CH said:

உலக புத்தக தினத்தன்று புத்தகக் காட்சி இல்லாமலா!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் பெரியார் திடலில் நேற்று ‘சென்னை புத்தகச் சங்கமம்’ தொடங்கப்பட்டிருக்கிறது. நாளை வரை நடக்கவிருக்கும் இந்த 3 நாள் நிகழ்வு உலக புத்தக தினத்தைக் கொண்டாடுவதற்கு ஓர் அருமையான வாய்ப்பு!

ஆயிரக்கணக்கான தலைப்புகளில் ஒரே இடத்தில் புத்தகங்கள் கிடைப்பது மட்டுமல்ல, முதல்முறையாக 50% கழிவும் வழங்கப்படுகிறது என்பது வாசகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நுழைவுக்கட்டணமும் கிடையாது!

இடம்: பெரியார் திடல், வேப்பேரி, நேரம்: காலை 11 மணி தொடங்கி இரவு 9 மணி வரை. 044- 2661 8161 / 2661 8162

ஆதவன் இதை ஒரு மாதத்திற்கு முன்னால் சொல்லியிருந்தால் முயற்சி செய்திருக்கலாம்.


இங்கு யாழில் நல்ல புத்தகங்கள் வாங்க இடமில்லை.  கொழும்பு - கம்பன் விழாவில் வாங்கிய சில புத்தகங்களும் வாசித்தாச்சு 

இழக்கப்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பம் - மன வேதனையுடன் பதிகின்றேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.