Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென் ஜோன்ஸ் கல்லூரி: பொறுப்பேற்ற இளைஞர் அமைப்பினதும் இளைஞர்களினதும் பொறுப்பற்ற நடவடிக்கையே இந்த சுகாதாரச் சீர்கேடு

Featured Replies

சடா கோபன்:-

பொறுப்பேற்ற இளைஞர் அமைப்பினதும் இளைஞர்களினதும் பொறுப்பற்ற நடவடிக்கையே இந்த சுகாதாரச் சீர்கேடு:-


193 வருட பாரம்பரியத்தையும் வரலாற்றையும் கொண்ட பரியோவான் கல்லூரியின் தனித்துவங்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். சமூகத்தினதும் அந்த மண்ணினதும் மக்களினதும் இந்த தேசத்தினதும் ஒருமைப்பாடுகள் செயற்பாடுகளில் மிகுந்த அக்கறை கொண்ட ஒரு பொறுப்புவாய்ந்த கல்லூரி என்ற வகையில் இளைஞர்கள் ஒன்றுகூடுகின்ற ஒரு நல்ல காரியத்திற்காக கல்லூரி வளாகத்தை எத்தகைய நம்பிக்கையோடும் பொறுப்போடும்தான் கல்லூரி அதிபர் வழங்கியிருப்பார் என்பது அந்த வளாகத்தில் தவழ்ந்து வளர்ந்து நிமிர்ந்தவன் என்ற வகையில் நான் நன்கு உணர்வேன்.


ஆயினும் அதை பொறுப்பேற்ற இளைஞர் அமைப்பினதும் இளைஞர்களினதும் பொறுப்பற்ற நடவடிக்கையே இந்த சுகாதாரச் சீர்கேடு ஆகும்.


அண்மையில் சாரணர் தொடர்பான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நாட்களிலும் பண்ணை பஸ் நிலையத்தின் பின்னால் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு முன் வெளிகளிலும் இத்தகைய சுகாதாரச் சீர்கேடுகளை நான் அவதானித்திருந்தேன். அவ்வாறே போர் ஓய்வின் பின்னர் யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுத்த சுற்றுலா பயணிகளாலும் இதே சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெற்றன, பெறுகின்றன. ஒரு பிரதேசத்தின் அடிப்படை வசதிகளின் கொள்ளளவுக்கு மேலதிகமாக மக்கள் கூடுவார்களாயின் இது நிகழ்வது தவிர்க்க முடியாதது. போர் ஓய்வின் பின்னரான காலம் யாழ்ப்பாண மண்ணைப் பொறுத்தவரையில் சவால் மிகுந்த காலமாகும். மண்ணை நோக்கிப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள் (வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுள்ள எம்மவர்கள் உட்பட) ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் வந்த செய்தி வியாபாரிகள், பண்பலை வானொலிகள், தொலைக்காட்சிகள், வர்த்தகக் கண்காட்சியாளர்கள், அரசியல்வாதிகள், மதவாதிகள் என பலபல வடிங்களோடு வந்தவர்களோடும் ஒட்டிக்கொண்டுவந்த பழக்கவழக்கங்கள், நடையுடை பாவனைகள், களியாட்டங்கள், கொண்டாட்டங்கள்,  விளம்பரங்கள், தொழில்நுட்ப சந்தைகள், விற்பனைத் தந்திரோபாயங்கள் மேலும் போதைப்பொருள் பாவனைகள் என்பன இந்த மண்ணின் அடிப்படைகளில் ஒரு ஆட்டத்தை ஏற்படுத்தின என்பதை யாரும் மறுக்கமுடியாது. இதைத்தான் ஒட்டுமொத்த தேசிய, சர்வதேச வியாபாரிகளும் எதிர்பார்த்து நிற்கிறார்கள். எங்கள் மண்ணின் மக்களின் கருத்தியல் சிந்தனையில் கலாசார விழுமியங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி எங்கள் அடையாளங்களை அழிப்பதன் ஊடாக தங்களையும் தங்கள் பொருட்களையும் தங்கள் கருத்தியலையும் கலாசார பழக்கவழக்கங்களையும் சந்தைப்படுத்துவதே அவர்களின் இலக்காகும்.


இவற்றின் ஒரு வடிவம்தான் இந்த திருவிழாக்களும். பொறுப்புவாய்ந்த கல்லூரியொன்றின் வளாகத்தை தமது தேவைக்குப் பொறுப்பெடுத்த இளைஞர் அமைப்பும் இளைஞர்களும் எத்தகைய பொறுப்பற்றவிதத்தில் நடந்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்திய பொறுப்புள்ள இளைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.


அன்பார்ந்த சகோதரர்களே! உங்களை ஒன்றிணைக்கவென ஒரு அமைப்பு முன்வருகிறது என்றால்... அதன் பின்னணி என்ன? வெளியிலே தெரியாத அதன் இலக்கு என்ன? யார் அதை இயக்குகிறார்கள்? எங்கிருந்து பணம் கிடைக்கின்றது போன்ற எல்லா விடயங்களையும் சிந்தியுங்கள். உங்களை எது எதற்கெல்லாம் தூண்டுகிறார்கள், எந்த விடயங்களில் நீங்கள் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து எதுவாக மாறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் சிந்தியுங்கள். உங்கள் தெளிவில்தான் இந்த மண்ணின் நாளைய நாட்கள் இருக்கின்றன. போரை விட சமாதானம் பயங்கரமானது.


மேலும் ஒரு பொறுப்புள்ள ஊடகமாக நாங்கள் கருதுகின்ற குளோபல் தமிழ் செய்திகள் (GTN) அண்மைக்காலங்களில் மூன்றாம்தர பத்திரிகைகள் இணையத்தளங்கள் போல் சில செய்தித் தலைப்புகளை இட்டு வருகிதா? ஏன்ற சந்தேகத்தை தோற்றுவிப்பதாக எனது தம்பி ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த செய்தியும் அத்தகைய ஒரு தலையங்கத்துடன் பிரசுரிக்கப்பட்டு பின்னர் திரு. குருபரன் அவர்களால் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு எனது நன்றிகள். அவ்வாறு முன்னர் தலைப்பிட்ட உங்கள் சகாக்களிடம் சொல்லுங்கள் ஊடகம் என்பது செய்தியை உருவாக்குவதல்ல, செய்தியைப் பரிமாற்றுவது என்பதையும் செய்தி பரிமாற்றுபவனே 'குருபரன்' என்பதையும் அத்தகைய பொறுப்பான ஊடகத்திற்கு தலைப்பை விளம்பரமாக்கிச் செய்தியை விற்பனை செய்யவேண்டிய தேவை இல்லையென்பதையும் பரியோவான் கல்லூரி எதற்கும் விலைபோவதில்லை என்பதையும் தெரியப்படுத்துங்கள். நாம் இப்போதும் நம்புகின்றோம் 'குருபரன் ஒரு பொறுப்பான ஊடகவியலாளர்'. இனிமேல் செய்தி தலைப்புகள் இடப்படும்போது உங்கள் தலையீடு அவசியம்.


இந்த சுகாதார சீர்கேட்டுச் சம்பவம் எங்கள் மண்ணின் எல்லா சகோதர பாடசாலைகளிற்கும் ஒரு பாடமாகவும், தீர்மானம் எடுப்பதில் வழிகாட்டியாகவும் அமையும். இவ்வாறு சமூக அக்கறையோடு செயற்பட்டு புகைப்படங்களோடு செய்தியை அனுப்பிய பொறுப்புமிக்கவர்களேஇ எங்கள் சமூக அக்கறையை, செய்தி ஊடகங்கள் பொறுப்பாக வெளியிடுகின்றனவா என்பதனை பாதுகாப்பதும் எங்கள் கடமையே.


மேலும் கடந்த காலங்களில் மிகச்சிறந்த யாழ்ப்பாண பாடசாலை நிர்வாகங்களில், ஊடகங்கள்; பழைய மாணவர்கள் என்ற பெயரில் தலையிட்டு தமது செய்தி விற்பனைக்காக பாரம்பரியம் மிக்க கல்லூரிகளில் குழப்பங்களை ஏற்படுத்தியமை நீங்கள் அறிந்தவையே. பரியோவான் கல்லூhயில் கற்பதாலோ, கற்றதாலோ, கற்பிப்பதாலோ மட்டும் ஒருவர் பரியோவான் சமூகமாகிவிடவோ பரியோவானர்களாகவோ ஆகிவிட முடியாது. மனதளவில் அந்த எண்ணப்பாடும் மாற்றமும் வேண்டும். அவ்வாறான ஒரு பரியோவான் சமூகத்தவனோ பரியோவானரோ தமது கல்லூரி விடயத்தை ஊடகங்களுக்கு எடுத்துச்செல்லமாட்டான் என்பதோடு அவற்றை உரியமுறையில் அதிபருக்கோ அல்லது உப அதிபர்கள், நிர்வாகத்தினருக்கோ தெரியப்படுத்தி தீர்வுகண்டிருப்பான். அதுதான் கல்லூரியின் 193 வருட பாரம்பரியமாகும்.


உயர்நீதிமன்றங்கள், பல்கலைகழகங்கள், வைத்திய சாலைகள், பொதுநிர்வாக, தனிநிர்வாக அமைப்புகள் என தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் கல்லூரிக்கு அடையாளம் தருகின்ற வகையில் வியாபித்திருக்கின்ற மிகப் பலம்வாய்ந்த பழைய மாணவர் மத்தியில் தமக்கு அடையாளம்தேட முற்படுகின்ற ஒரு சிலரின் தனிப்பட்ட இலக்குச் செயற்பாடே கல்லூரி விடயத்தை ஊடகங்களுக்கு எடுத்துச்சென்றமை எனக் கருதுகிறோம்.


எல்லாவற்றையும்விட முக்கியமான விடயமென்னவெனில் இந்த கல்லூரி வளாகத்தை நாசப்படுத்திய இளைஞர் அமைப்பு எதுவென்றோ இவ்வளவு கேவலமான சுகாதாரச் சீர்கேடுகளைச் செய்தவர்கள் யாரென்று தெரியப்படுத்தாமல் செய்தியை வெளியிட்ட ஊடகங்களும் செய்தியை அனுப்பியவர்களும் அதிபரைநோக்கி கை காட்டியமையை சில ஊடகங்கள் சரியான முதலெழுத்துக்களுடன் அதிபரின் பெயரையும் குறிப்பிட்டமை இந்தச் செய்தியின் தனிப்பட்ட இலக்கைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. அத்துடன் இத்தகைய அமைப்புகளை அம்பலப்படுத்துவதன்மூலம் எங்கள் சகோதரக் கல்லூரிகளைப் பாதுகாப்போம்.


எது எப்படியாயினும் எங்கள் கல்லூரி வளவு நாசப்படுத்தப்பட்டிருக்கிறது. இதை எவ்வாறு சீர் செய்வது என்பதும் திருவிழா ஏற்பாட்டாளர்கள் இளைஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பதென்பதும் கல்லூரி விடுமுறையின் பின்னர் நாளை ஆரம்பமாக இருப்பதால் எடுக்கவேண்டிய உடனடி ஆக்கபூர்வ நடவடிக்கை என்னவென்;பதும் கல்லூரிக்குத் தெரியும். இதில் வெளியாரின் தலையீடோ வெளியார்களாய் உள்ளே இருப்பவர்களின் தலையீடோ எதிர்பார்க்கப்படவில்லை.


இழப்புகளில் இருந்து எழுந்து அனுபவங்களைப் பாடமாக்கி முன்நோக்கிச் செல்வதே பரியோவான் கல்லூரி. இப்போது எங்கள் பரியோவான் வளவில் புதிய மலை வேப்பமரக்கண்டுகள் துளிர்விடுகின்றன என்ற நல்ல செய்தியோடு முடிக்கிறேன்.
அன்புடன்
சடா கோபன்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131421/language/ta-IN/article.aspx

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

கல்லூரி வளாகத்தை வாடகைக்கு விட்ட சென் ஜோன்ஸ் கல்லூரி அதிபர் சுகாதாரம் பற்றி சிந்திப்பாரா?

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.