Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி முறையிலான தீர்வை சுவீடன் அமைச்சர் ஏற்பு சந்திப்பின் பின் முதலமைச்சர் தெரிவிப்பு

Featured Replies

9896.jpg

நாட்டில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு மாற்றத்தில் சமஷ்டி முறையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என நாம் கோரி வருகின்ற விடயத்தை, சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்க் கொட் வால்ஸ்டொம் ஏற்றுக்கொண்டுள்ளார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்துக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட சுவீ டன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர்  திருமதி மார்க்கொட் வால்ஸ்டொம் தலைமையிலான குழுவினர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டனர். அக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இது தொடர்பாக முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், 

இலங்கையில் சுவீடன் நாட்டின் தூதரகம் இல்லை. டில்லியிலேயே உள்ளது. இருந்த போதும் அவர்கள் இங்குவந்தமை பெருமை யளிக்கிறது. 
இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் எமக்கு தெரியும். தற்போது பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இலங்கை நடுத்தர வருமானத்தை பெறும் நாடு என்ற வகையில் தங்களால் எந்த உதவிகளை யும் செய்ய முடியாது என அவர் எமக்கு கூறினார்.

இந்நிலையில் நாங்கள் அவர்களுக்கு கூறியிருந்தோம், இலங்கை நடுத்தர வருமானத்தை பெறும் நாடாக இருக்கலாம். ஆனால் வடமாகாணம் போரினால் பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் அதிக உதவிகள் தேவை என்பதை கூறியிருக்கிறோம். மேலும் ஆட்சிமாற்றத்தின் பின் இங்கே பல மாற்றங்கள் இடம்பெ ற்றுள்ளமையினை நாம் ஒத்துக் கொண்டோம்.

அவர்களுடைய கணிப்பு என்னவென்றால் யுத்தம் முடிவடைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நாட்களாகும் என்றும் அதற்கு உரிய காலத்தை தரவேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்தார். அதற் குரிய காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோமே தவிர அதற்கான நீதியை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என தெரிவித்தேன். 

வரும்காலத்தில் அரசியல் ரீதியாக எவ்வாறான ஒரு தீர்வு மாற்றம் வேண்டும் என கேட்ருந்தார்கள். அதற்கு நாம், சுவிட்ஸர்லா ந்தில் இருந்து நிபுணர்களை அழைத்து அவர்களுடன் சமஷ்டி தொடர்பாக கலந்தாலோசித்த பின்னர் தான் நாம் சமஷ்டி முறையிலான தீர்வு வேண்டும் என்பதை கேட்டுள்ளதாக கூறியுள்ளோம்.  அவர் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் சமஷ்டியை பெரும்பான்மையினத்தவர் விரும்பவில்லைபோல் தெரிகிறது என தெரிவித்தார். 

இதற்கு நாம் பதிலளிக்கையில், அது உண்மை. தென்பகுதி அரசியல்வாதிகள் சமஷ்டியை பிரிவினைவாதமாக கருதி வருகின்றனர். சமஷ்டி பிரிவினைவாதம் அல்ல. ஆனால் அதை பிரிவினைவாதம் என தென்னிலங்கை தலைவர்கள் கருத்து கொண்டுள்ளார்கள். அதனாலேயே இந்த முரண்பாடு என்பதை நாம் அவரிடம் கூறியுள்ளோம் என்றார்.

இந்நிலையில் வெளிநாட்டு பங்களிப்பு எவ்வாறு அமையவேண்டும்? எனகேட்டார்கள். அதற்கு வெளிநாட்டு பங்களிப்பு வடக்கிற்கு  தேவை அவர்களின் உதவிகள் எமக்கு நன்மைபயக்கும் என நாம் தெரிவித்துள்ள தாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=9896&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.