Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார மத்திய நிலையத்துக்கு ஈரப்பெரியகுளம் அல்லது தாண்டிக்குளத்தை தாருங்கள்

Featured Replies


வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கான காணியாக தாண்டிக்குளத்தில் அல்லது ஈரப்பெரியகுளத்தில் அடையாளப்படுத்தப்பட்ட காணியை தாங்கள் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார மாவட்ட அபிவிரத்திகுழுவின் இணைத்தலைவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்துக்கான காணி அடையாளப்படுத்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டு வரும் நிலையிலேயே வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இக் கடிதததினை வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழுவின் இணைத்தலைவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஓமந்தை, மாணிக்கவளவு காணி நகரில் இருந்து 1 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதுடன் 13 ஏக்கர் விஸ்தீரணம் உள்ள காணியாகும். இக் காணி 1966 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியான வில்லியம் கோபல்லாவினால் தனியார் ஒருவருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இக் காணியை மீள் சுவீகரிப்பதற்கு காலஅவகாசம் குறுகியதொன்றல்ல. அத்துடுன் நஸ்டஈட்டையும் காணி உரிமையாளருக்கு வழங்க வேண்டும்.

சாளம்பைக்குளம் அரச காணி வனவளத்திணைக்களததினால் வீடமைப்புதிட்டத்திற்கென விடுவிக்கப்பட்ட 200 ஏக்கர் காணியில் 3 ஏக்கர் காணியை மேற்படி விசெட பொருளாதார மையம் அமைப்பதற்கு விடுவிக்கமுடியும் என அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் தெரிவித்திருந்தார்.

இக் காணியானது நகரத்தில் இருந்து 10 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இக்காணியில் 2 ஏக்கர் காணியானது ஏற்கனவே 4 பயனாளிகளுக்கு அரை ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

பம்பைமடு அரசகாணி வவுனியா நகரத்தில் இருந்து மன்னார் வீதி வழியாக 8 கிலோமீற்றர் தூரத்தில் பம்பைமடுவில் இருந்து செக்கடிப்புலவு செல்லும் வீதிக்கு அடுத்ததாக பிரதான வீதிப்பக்கமாக 5 ஏக்கர் அரச காணி அமைந்துள்ளது. இக் காணி வனவளத்திணைக்களத்துக்கு சொந்தமானது. இக்காணியை விடுவிப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈரப்பெரியகுளம் அரச காணியானது நகரத்தில் இருந்து 5 கிலோமீற்றர் தூரத்தில் ஏ9 வீதியில் முன்பு பொதிகள் சோதனை செய்யும் சாவடிக்கு அண்மித்ததாக சுமார் 15 ஏக்கர் காணி அமைந்துள்ளது.

இக்காணியில் விசேட பொருளாதார அமையம் ஒன்றினை அமைப்பதற்கு 5 ஏக்கர் காணியை விடுவிக்கலாம் என வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, மேற்குறிப்பிட்ட காணிகளில் தாண்டிக்குளம் பண்ணைக்காணியும் ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள 5 ஏக்கர் காணியுமே உடனடியாக விடுவிக்க கூடிய நிலையில் உள்ளது. இந் நிலையில் மிக குறுகிய காலத்தில் சாதகமான காணி பற்றிய பதிலொன்றை கிராமிய பொருளாதார அமைச்சுக்கு அனுப்பாத பட்சத்தில் இவ் விசேட பொருளாதார மையம் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/170823/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%A8-

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.