Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏவுகணைத் தாக்குதலில் நான்கு விமானப்படையினரக் கொன்ற வழக்கு: எதிரியிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு அழைப்பாணை

Featured Replies

ஏவுகணைத் தாக்குதலில் நான்கு விமானப்படையினரக் கொன்ற வழக்கு: எதிரியிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு அழைப்பாணை

விமான எதிர்ப்பு ஏவுகணையைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி விங் கொமாண்டர் ஒருவர் உட்பட 4 விமானப்படையினருடைய மரணத்துக்குக் காரணமாக இருந்த எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கில் எதிரியிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த 1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொம்படி என்ற இடத்தில் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்ற எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் முதற் தடவையாக விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த ஏவுகணை தாக்குதலில் விங் கமாண்டர் டிரோன் டெஸ்மன் சுசந்த சிப்புள்ளே, விமானப்படை விமானியாகிய ஹந்துநெத்தி சிந்தக்க பிரசன்ன டி சொய்சா, விமானப்படை கோப்பரல் வெத்தகலகே டொன் அஜித் துஷார அத்துடன் விமாப்படை சார்ஜன்ட் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த நான்கு பேரின் மரணம் ஒவ்வொன்றிற்கும், எதிரிக்கு எதிராகத் தனித்தனியே குற்றம் சுமத்தி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, விளக்கமறியல் பாதுகாப்பில் இருந்து எதிரி சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் எதிரிக்கு எதிரான குற்றப்பகிர்வுப் பத்திரம் கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் பகிரப்பட்டது. உதவிப் பொலிஸ் அத்தியட்சகராகிய ஜகத் ஹேமந்த பொன்சேகா என்பவரால் பதிவு செய்யப்பட்ட எதிரியினால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இந்த வழக்கில் சான்றுப் பொருள் பட்டியலில் நீதிமன்றத்தில் இலக்கமிடப்பட்டது. நீதிமன்றத்தில் எதிரிக்கு குற்றப்பத்திரம் வாசித்தளிக்கப்பட்டபோது, எதிரியாகிய சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் தான் சுற்றவாளி என தெரிவித்தார். இதனையடுத்து, எதிரியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ஹேமந்த பொன்சேகாவை மன்றில் சாட்சியமளிப்பதற்கு மே மாதம் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டு, விசாரணைக்காக வழக்கை ஒத்தி வைத்தார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிரி சிவசுப்பிரமணியம் தில்லைராஜை மே மாதம் 24 ஆம் திகதி வரை தடுத்து வைத்து அன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

http://malarum.com/article/tam/2016/05/02/14434/%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.