Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேதின பிரகடனம் TNAயின் பிரகடனம் அல்ல, அது ITKயின் பிரகடனம்: சிவசக்தி ஆனந்தன்:-

Featured Replies

எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – சித்தார்த்தன் – TNAஐ பிளவுபடுத்த தமிழரசுக் கட்சி முயற்சி – சிவாஜிலிங்கம்: TNAஐ பிளவு படுத்துவது யார்? சுரேஸ் கேள்வி:-

மேதின பிரகடனம் TNAயின் பிரகடனம் அல்ல, அது ITKயின் பிரகடனம்:  சிவசக்தி ஆனந்தன்:-


தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவு படுத்த தமிழரசு கட்சி எடுக்கும் முயற்சிகளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கண்டும் காணாமலும் இருப்பதன் ஊடாக தமிழரசு கட்சியின் செயலுக்கு அவரும் துணை போகின்றாரா ? என வடமாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பினை சேர்ந்தவருமான எம்.கே.சிவாஜிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார். 

யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதினம் என அறிவிக்கப்பட்ட மேதின நிகழ்வுகளில் தமிழரசு கட்சி தவிர்ந்து கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளி கட்சிகள் எவையும் பங்கு கொள்ளவில்லை. 

அது தொடர்பில், இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் பங்காளி கட்சியை சார்ந்தவர்களிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த  ரெலோ அமைப்பின் எம்.கே.சிவாஜிங்கம்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தினம் என சில அறிவித்தல்கள் செய்திகள் வெளியே வந்து இருந்தாலும் அது தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சியான தமிழரசு கட்சியின் மே தின நிகழ்வுகள். அவை, அதற்கு கூட்டமைப்பில் உள்ள ஏனைய பங்காளி கட்சிகளான புளொட், ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் தன்னிச்சையாக தமிழரசு கட்சியினால் இந்த மேதின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு  இருந்தன.  அந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் உரையாற்றுகையில் , தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படாத வண்ணம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனக் கூறி இருந்தார். நாங்களும் அதை தான் விடும்புகின்றோம்.  ஒன்று பட்டுதான் சிங்கள ஆட்சியாளர்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் நீதி கோர முடியும். அதனை சொல்லிலே சொல்லி கொண்டு இருக்காமல் அதனை செயலிலும் காட்ட வேண்டும்.  கூட்டமைப்பை பிளவு படுத்த தமிழரசு கட்சி எடுத்த முயற்சிகளை சம்பந்தன் ஐயா கண்டும் காணாமலும் இருக்கின்றாரா ?  என சிவாஜிலிங்கம்  கேள்வியெழுப்பினாா் 

அது தொடர்பில் புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தனிடம் கேட்ட போது, 

“எங்களுக்கு  அழைப்பு  கிடைக்கவில்லை அதனால் நாங்கள் கலந்து கொள்ள வில்லை. அவ்வளவே  அது  தொடர்பில் மேலதிக கருத்துக்கள்  இல்லை “ என தெரிவித்தார். 

இது தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எப். செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் கேட்ட போது , 

“மேதினத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயராலே தமிழரசு கட்சி தான் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்தி இருந்தது கூட்டமைப்பின் மேதினம் என்றால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்துரையாடி நிகழ்வுகளை ஒழுங்கு செய்து என்ன பிரகடனம் செய்ய போறோம் என்பது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடன் பேசி இருக்க வேண்டும்.  ஆனால் அது எவை பற்றியும் பங்காளி கட்சிகள் எவையுடனும் பேசாது கூட்டமைப்பின் பெயரால் மேதின பிரகடனத்தை தமிழரசு கட்சி வெளியிட்டு உள்ளது. மேதின பிரகடனம் கூட்டமைப்பின் பிரகடனம் அல்ல அது தமிழரசு க்கட்சியின் பிரகடனம்” என தெரிவித்தார். 

இதேவேளை மேதின முரண்பாடு குறித்து தமிழரசுக் கட்சியின் கருத்தை அறிவதற்கு, குளோபல் தமிழ்ச் செய்திகள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இது குறித்து தமிழரசுக் கட்சி தமது பக்க விளக்கத்தை வெளியிட்டால் முழுமையாக வெளியிடப்படும்.

கூட்டமைப்பின் ஐக்கியத்தை சீர்குலைப்பது யார்? சுரேஸ். க. பிரேமச்சந்திரன்:-

யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் தமிழரசுக்கட்சி நடாத்திய மேதினக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்கள் பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்டார். அவருடைய உரையில் அவர் வலியுறுத்திய ஓரிரு விடயங்களில் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒற்றுமையாகச் செயற்படுமாக இருந்தால் 2017ஆம் ஆண்டு புதியதோர் சூழலில் மேதினத்தைக் கொண்டாட முடியும் என்று கூறியுள்ளார்.


மேதினத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் மூன்று நாட்கள் பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார். அப்பொழுது அவர் கூட்டமைப்பின் கூட்டத்தைக் கூட்டுவதற்கோ அல்லது கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திப்பதற்கோ முயற்சிக்கவில்லை. மாறாக, தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களைச் சந்தித்ததுடன், பொது நிகழ்வுகளிலும் பங்குபற்றி திரும்பியுள்ளார். அப்பொழுதும்கூட அவர், 'குழம்பிய குட்டையில் யாரும் மீன்பிடிக்கக்கூடாது எல்லோரும் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்' என்ற கருத்தையும் கூறியிருந்தார். எந்த குட்டை குழம்பியிருக்கிறது என்பதையும் எவ்வாறு குழம்பியிருக்கிறது என்பதையும் அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.


இப்பொழுது இரண்டாவது முறையாக மேதின நிகழ்விற்கு வந்தபோதும்கூட, கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப்பேசுவதற்கான எந்த நிகழ்ச்சி நிரலும் அவரிடம் இல்லை. அதன் காரணமாகவே கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த பலர் கிளிநொச்சியில் கூட்டுறவு சங்கத்தினர் நடாத்திய மேதின நிகழச்சி;களில் பங்குபற்றியிருந்தனர். யாழ்ப்பாண மாவட்ட தமிழரசுக் கட்சி கிளை மார்ட்டின் வீதியிலிருக்கும் தமது கட்சி காரியாலயத்தில் கூடி, தமிழரசுக் கட்சி மருதனார்மடத்தில் மேதினத்தைக் கொண்டாடுவது என்ற முடிவை எடுத்திருந்தது. அவ்வாறான கூட்டத்திற்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களோ அல்லது கட்சிகளின் பிரதிநிதிகளோ அழைக்கப்படவில்லை. எனவே, கூட்டமைப்பாக மேதினத்தை அனுட்டிக்கக்கூடாது என்பதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியே உறுதியாகச் செயற்பட்டது.

தனிவழிபோகின்ற முடிவை தமிழரசுக் கட்சி எடுத்துவிட்டு கூட்டமைப்பு ஐக்கியப்பட்டிருக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகப் புலம்புவது அநாகரிகமாகத் தென்படுகிறது. இவ்வாறாகப் புலம்புவதனூடாக மக்களை ஏமாற்றி தாம் ஐக்கியத்திற்காகச் செயற்படுகிறோம் என்ற ஒரு பொய்யான முகபாவத்தைக் காட்ட முயற்சிப்பதாகவே தோன்றுகின்றது.
அதுமட்டுமன்றி, எல்லாமே கூடிவருவது போன்றும், யாரும் அதனைச் சிதைத்துவிடக்கூடாது என்றும் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றார். ஒருபுறத்தில் அவ்வாறு கூறும் அவர், இவையெல்லாம் எனது கணிப்பீடு மாத்திரமே என்றும் கூறுகின்றார். திரு. சம்பந்தன் அவர்களிடம் ஒரேயொரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றோம். முந்தைய அரசாங்கம் பல்pவேறு தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. காணிகளைக் கபளீகரம் செய்தது. சிங்களக் குடியேற்றங்களைக் கொண்டுவந்தது. இராணுவத்தினூடாக பௌத்த விகாரைகளை அமைத்தது. மக்களை மீளக் குடியேறவிடாமல் தடுத்தது. இவ்வாறு பல நடவடிக்கைகளை மேற்கொண்டதை நாமனைவரும் அறிவோம். இப்பொழுது திரு.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய தமிழ் மக்களின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியும், புதிய அரசாங்கமும் முன்னைய ஆட்சிமுறையிலிருந்து எவ்வாறு மாறுபட்டிருக்கின்றது? தொடர்ந்தும் தமிழ் மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்றன. தமிழர் பிரதேசங்களில் புதிய பௌத்த ஆலயங்கள் கட்டப்படுகின்றன. புதிய இராணுவக் குடியிருப்புக்களும் சிங்களக் குடியிருப்புக்களும் உருவாக்கப்படுகின்றன. இவற்றிற்கெதிராக காணி உரிமையாளர்களும் தமிழ் மக்களுமே தொடர்ந்தும் போராட வேண்டியுள்ளது. ஒரு எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் இருக்கக்கூடிய ஒருவர், ஒரு நிரந்தரத் தீர்வை எட்டும்வரை இவற்றை தற்காலிகமாகவேனும் ஏன் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது?


பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மூலம் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. மாறாக, அரசாங்கத்துடன் தமிழர் தரப்பாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தையில் வெளிப்படைத் தன்மையுடன் ஈடுபட வேண்டும். குறைந்தபட்சம் நிரந்தரத் தீர்வு எட்டும்வரை இவை தற்காலிகமாகவேனும் நிறுத்தப்படவேண்டும். இவை எதுவுமே இல்லாமல் காலம் கனிந்திருக்கிறது என்பதும், எல்லாமே கைகூடி வருகிறது என்பதும் எவ்வளவு தூரம் நம்பிக்கை தரக்கூடிய கருத்துக்கள்? ஒருபுறத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகக் கருத்துக்களைக் கூறும் திரு. சம்பந்தன் அவர்கள் மறுபுறத்தில் அரசாங்கத்தின் தமிழர் விரோத நடவடிக்கைகள் தொடர்பாக அதனை நிறுத்துவதற்கு எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்? என்பதை தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.


கடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்திருந்தபொழுது, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவர் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வந்தவேளை, அவர்களை அவமத்pத்து அவர்களது முறைப்பாடுகளைச் சரியாகச் செவிமடுக்காமல், 'சிறைச்சாலை திறப்பு எனது இடுப்பில் இல்லை' என்றும் 'நான் பார்க்கின்றேன் நீங்கள் போய்வாருங்கள்' என்றும் அவர் கூறிய கூற்றானது சிறையில் வாடும் அவ்வளவு உறவுகளையும் அவர்களது உறவினர்களையும் அவமதிப்பதற்குச் சமமாகும். இது சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கு தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற வெப்பியாரத்தையும் கையாலாகாத்தனத்தையுமே காட்டுகின்றது.


இவ்வாறுதான் கைதுகள் நடைபெறமாட்டாது என்று யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கூறிய இரண்டு தினங்களுக்குள் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று மட்டக்களப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே கடந்த ஆட்சியின் அத்தனை நிகழ்ச்சிநிரலும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.


தமிழ் மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒற்றுமைக்காகத்தான் வாக்களித்தார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் கூட்டுத்தீர்மானங்கள் ஆகியவற்றை எடுப்பதென்பதைத் தவிர்த்து, தமிழரசுக் கட்சி தனிவழி செல்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தைச் சீர்குலைக்கிறது. அதன் வெளிப்பாடே மருதனார் மடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக் கட்சி மட்டும் தனியான மேதினத்தை நடத்தியது.


ஐக்கியத்தை குழப்புவதன் காரணமாகவே ஐக்கியத்தைப் பற்றி தமிழரசுக் கட்சி அதிகம் புலம்புகிறது. ஐக்கியத்தைப் பற்றிப் பேசுபவர்களே ஐக்கியத்தைக் குழப்புகின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131739/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.