Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்குக்கு வெளியே பொருளாதார மையத்தை நகர்த்த இடமளியோம்!

Featured Replies

வடக்குக்கு வெளியே பொருளாதார மையத்தை நகர்த்த இடமளியோம்!

 

800811e93093827ada84d556b3616456dc3.jpg

வடமாகாணத்திற்கு வெளியே பொருளாதார மையத்தை நகர்த்த நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்று வடக்கு முதலமைச்சர் அமைச்சர் மனோகணேசனிடம் வலியுறுத்தினார்.

 

யாழ்.குடாநாட்டுக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

 

குறித்த சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

மனோகணேசன் என்னுடைய மிக நெருங்கிய நண்பர், அவருடைய தந்தையாரையும் எனக்கு நன்றாக தெரியும். மனோகணேசன் என்னை அரசியல் வாழ்க்கைக்கு இழுத்து வந்தவர். அதனாலேயே நான் இவ்வளவு கஸ்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அந்தவகையில் அவர் என்னை சந்திக்க வந்தமை மிக மகிழ்ச்சியான விடயம். 

 

எங்களுடைய சந்திப்பின்போது பொருளாதார மையம் தொடர்பாக பேசியிருக்கிறோம். அது தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். எந்தவொரு கட்டத்திலும் வடமாகாணத்திற்கு வெளியே அதனைக் கொண்டு செல்வதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்று அமைச்சர் மனோவிடம் எடுத்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

 

இது குறித்து அமைச்சர் மனோகணேசன் தெரிவிக்கும்போது,

முதலமைச்சரும் தாமும் மிக நெருங்கிய நண்பர்கள் எனவும், அந்தவகையில் சினேகிதபூர்வமாகவும், சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாகவும் பொருளாதார மையம் வவுனியாவில் அமைவது தொடர்பாகவும் பேசியிருக்கிறோம். எனவே அந்த விடயத்தில் வடமாகாண சபை உரிய நடவடிக்கை எடுத்து வவுனியா நகருக்கு அண்மையில் பொருத்தமான காணியை தெரிந்து கொடுக்கும் எனக் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

                                                          ea6d4e7839f29ddc1e34102f3283e17f.jpg

http://onlineuthayan.com/news/jaffna/NW5pdDJaekJQVEk9

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.