Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ்குமார் தொடர்பில் பொலிஸாரிடம் கேள்வி

Featured Replies

சுவிஸ்குமார் தொடர்பில் பொலிஸாரிடம் கேள்வி
 
 

article_1462788871-gavel300.jpg-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சுவிஸ் குமார் என்று அறியப்படும் மகாலிங்கம் சதீஸ்குமார் என்ற சந்தேகநபர், எவ்வாறு பொலிஸாரிடம் பிடிபட்டார். பின்னர், எவ்வாறு அவர் கொழும்புக்குச் சென்றார். தொடர்ந்து, கொழும்பில் வைத்து எவ்வாறு கைது செய்யப்பட்டார். ஆகிய விவரங்களை தனித்தனி கேள்விகளுக்கான பதில்களாக வழங்குமாறு குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று திங்கட்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் 10 சந்தேகநபர்கள் மீதான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 'பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட சுவிஸ்குமார் தப்பித்துச் சென்றமை மூடுமந்திரமாக இருக்கின்றது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மன்றில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என மாணவி சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி சுகாஸ், கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

'சுவிஸ் குமார் எவ்வாறு கைது செய்யப்பட்டார்?, சரணடைந்தாரா? அல்லது வேறு நபர்களால் பொலிஸில் பாரப்படுத்தப்பட்டாரா?, அவர்களின் பெயர் விவரங்கள், அவர்களுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு, வேறு நபர்களுக்கு இந்த வழக்கின் சம்பந்தம் என்ன?, இந்த வழக்குடன் கடமைப்பட்டவர்களா?, சுவிஸ்குமார் கொழும்பில் எவ்வாறு கைது செய்யப்பட்டார்?, கொழும்பு செல்வதற்கு உதவியவர்களின் பெயர் விவரங்கள், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தாரா? அப்படியாயின் சட்டரீதியான ஆவணங்கள் பேணப்பட்டனவா?, அவர் விடுவிக்கப்பட்டு கொழும்பு சென்றிருந்தால் ஆஜர்ப்படுத்திய நீதிமன்றம்?, கொழும்பு சென்றது பொலிஸாரின் பாதுகாப்பிலா? அல்லது சாதாரண பொதுமகனாகவா?, சாதாரண பொதுமகனாக இருந்திருந்தால் பொலிஸாரால் விடுதலை செய்யப்பட்டாரா?, யாரால் எந்தச் சட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்? போன்ற கேள்விகள் எடுப்பப்பட்டன.

அத்துடன், சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் சுவிஸ்குமார் எத்தனை அலைபேசிகளை பாவித்தார்?, யாருடன் தொடர்புகளைப் பேணினார்? கொழும்பு செல்வதற்கு உதவியர்களுடன் தொடர்புகளைப் பேணினாரா?, இது தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வார்கள் விசாரணைகள் மேற்கொண்டுள்ளரான?, அது தொடர்பான நடவடிக்கை என்ன?' உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களையும் தனித் தனியான அல்லது அறிக்கையாக சமர்;ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்;டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/171787/%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%B5-#sthash.lsfBlnVA.dpuf
  • தொடங்கியவர்

புலனாய்வாளர்களே சுவிஸ் குமாரை அழைத்து சென்றனர் : தாய்

தனது மகனை  புலனாய்வாளர்கள் என அறிமுகம் செய்து கொண்டவர்கள் சிலரே காரில் ஏற்றிச் சென்றதாக சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரின் தாயார்  தெரிவித்தார்.vithya_swisskumar-768x432.jpg

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவடைந்ததன் பின்னர் நீதிமன்றுக்கு வெளியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தனது மகனுக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கடந்த ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி எமது வீட்டுக்கு காரில் வந்தவர்கள் தம்மை புலனாய்வாளர்கள் என அறிமுகம் செய்து கொண்டு எனது மகனை (சுவிஸ் குமார்) காரில் அழைத்துச் சென்றனர். 

பின்னர் யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் ஊருக்கு திரும்பி வந்தால் தாக்குதல் மேற்கொள்வார்கள் என்ற பயத்தினாலையே எனது மகன் கொழுப்புக்கு சென்றார். 

 

எனது மகன் தப்பி செல்ல வில்லை அவருக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

http://www.virakesari.lk/article/6186

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.