Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெங்காய உற்பத்தியில் யாழ்.மாவட்டம் முதலிடம்

Featured Replies

article_1463053239-bbbbbbbbbb.jpg

இலங்கையில் வெங்காய உற்பத்தியில் யாழ். மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஏறத்தாள 4,200 ஹெக்டேயர் நிலப்பரப்பில் ஆண்டுதோறும் 55,000 மெற்றிக்தொன் வெங்காயம் யாழ்ப்பாணத்தில் விளைவிக்கப்படுகிறது என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு வெங்காய விதைகள், வெங்காயக் குமிழ்கள் உட்பட நடுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை (12) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

'யாழ்.மாவட்டத்தின் விவசாய உற்பத்திகளில் வெங்காயம் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் விவசாய வருமானத்தில் புகையிலை பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தது. ஆனால், புகையிலை செய்யப்படும் பரப்பளவு தற்போது குறைந்து வருகின்றது. புகையிலை உற்பத்தியை முற்றாக நிறுத்துவதற்கும் காலஎல்லை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இந்நிலையில், வெங்காய உற்பத்தியை நாம் அதிகரித்தால், புகையிலைச் செய்கையை நிறுத்துவதனால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்யலாம். வெங்காயச் செய்கையில் வெங்காயக் குமிழ்களை நடுகை செய்வதைவிட, வெங்காய விதைகளைப் பயன்படுத்துவது பொருளாதார ரீதியாக நன்மைகளைத் தரக்கூடியது. உற்பத்திச் செலவு குறைவு என்பதோடு, விதைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் கூடுதலான நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொண்டுள்ளது. இதனால் பீடைக் கொல்லிகளுக்கு நாம் செலவு செய்யும் பணமும் மீதமாகிறது. இதனடிப்படையில், எமது விவசாய அமைச்சு இப்போது விதை வெங்காயத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகின்றது. விவசாயத் திணைக்களத்தின் ஊடாக வெங்காயச் செய்கையை மேற்கொள்வதற்கு வெங்காய விதைகளையும் வெங்காய விதைகளை உற்பத்தி செய்வதற்கு வெங்காயக் குமிழ்களையும் வழங்கி வருகிறோம்' என்றார்.

article_1463053251-ccccccccccccc.jpg

http://www.tamilmirror.lk/172075#sthash.96hZUlnF.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் பிடித்து வைத்துள்ள, தோட்டக் காணிகளையும் விடுவித்தால்.... 
மற்றைய உற்பத்திகளிலும் யாழ் மாவட்டமே... முன்னிலை வகிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தற்போது புதியவகை கிருமிநாசினியை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்,

கத்தரிக்காயில் புழுஅரித்துச் சூத்தை வருவது வழக்கம், சூத்தை ஏற்பட்டதற்கான தடம் கத்தரிக்காயில் இருக்கும்  புதிய கிருமிநாசினியைத் தெளித்தால் சூத்தை ஏற்படவைத்த பூச்சியும் இறந்துவிடும் அது ஏற்படுத்திய சூத்தை அடையாளமும் மறைந்து கத்தரிக்காய் வெளிப்புறம் மெழுகுபூசினாப்போல் காட்சிதரும்.

ஊரில் எனது வீட்டுக்கு நாலாவது வீட்டில் ஒரு குடும்பம் சந்ததி சந்ததியாகவே விவசாயக்குடும்பம் அக்குடும்பத்தில் உயர்படிப்புப்படித்து அரசாங்க உத்தியோகத்தில் பலர் இருந்தாலும் இதுவரை விவசாயத்தைக் கைவிடவில்லை. பொலிடோ தமறோன் அதைவிட தற்போது சந்தையில் காணப்படும் சக்திவாந்த பூச்சிகொல்லிகள் அடங்கிய போத்தல்களையெல்லாம் நல்லெண்ணைப்போத்தல் திறக்குமாப்போல் வெறும்கையால் திறப்பார்கள் அப்போது கை விரல்களில் சிறுதுளி பட்டாலும் அதை தங்கள் உடைகளால் துடைத்துவிடுவார்கள். ஆனால் பரிதாபம் இப்போது அப்புகழ்பெற்ற மிகப்பெரிய சந்ததியையும் நிலபுலன்களையும்கொண்ட குடும்பத்துக்கு வாரிசுகளே இல்லை, இப்போது இருப்பவர்களில் ஒருவர் இரண்டுவாரங்களுக்கு முன்பு புற்றுநோயல் இறந்துவிட்டார் இதற்குமுன்னர் இறந்த இக்குடும்பத்தின் அனைத்து உறவுகளும் புற்றுநோய்ப்பாதித்தே இறந்தார்கள்.

நிறைந்த விளைச்சல் நல்ல செய்தியே ஆனால் அவ்விளைச்சல் இலக்கு எவ்வகையில் எட்டிப்பிடிக்கப்பட்டது என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.