Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது வாழ்க்கையே ஒரு நாடகம்

Featured Replies


நமது வாழ்க்கையே ஒரு நாடகம்
 
 

article_1463119522-bbbbbb.jpg

-நடராசா கிருஸ்ணகுமார்

“நமது வாழ்வே ஒரு நாடகம் தான். நாம் நாடகம் தான் ஆடிக்கொண்டிருக்கின்றோம். அதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அவை வெவ்வேறான நாடகங்கள்” என யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் தெரிவித்தார்.

செயல் திறன் அரங்க இயக்கத்தின் வெளியீடாக தேவநாயகம் தேவானந்த் எழுதிய 'நல்லூர் நாடகத் திருவிழா 2015' என்ற நூல் புதன்கிழமை (11) மாலை 4 மணிக்கு நல்லூர் நாவலர் கலாச்சார மண்டபத்தில் வெளியிடப்பட்டது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“ஒருவரை பிடிக்கிறதோ இல்லையோ சாலையில் பார்த்தால் மரியாதையுடன் ஐயா வணக்கம் அம்மா வணக்கம் என்று கூறி கொஞ்ச தூரம் சென்றவுடன் இவர்களுக்கு எல்லாம் வணக்கம் சொல்லவேண்டியிருக்கே என்று நினைக்கத் தோன்றும்.

இவை எல்லாம் நாடகங்கள் தான். எல்லா நேரங்களிலும் எல்லோரிடமும் நாடகங்களை ஆடிக்கொண்டிருக்கின்றோம். நான் பாடசாலையில் படிக்கும்போது இரசாயனவியல் பாடம் நன்றாக வராது. எனக்கு இரசாயனவியல் ஆசிரியரைப் பார்த்தாலே இவருக்கும் வணக்கம் சொல்ல வேண்டியிருக்கே என்ற நினைப்பு வரும்.

அவர் என்னைப் பார்க்கும்போதேல்லாம்  நல்ல மார்க் வாங்கவேண்டும் என்று வலியுறுத்துவார். இதனால் அவரைத் தூரத்தில் பார்த்தாலே அச்சம் மட்டுமல்ல வணக்கம் வேற சொல்லவேண்டுமே என்ற நிலை இருந்தது. அவருக்கும் எனக்கும் ஒத்துப்போகவில்லை. பின்பு வாத்தியாருக்கும் வணக்கம் சொல்லி இரசாயவியல் பாடத்தையும் படிப்படியாகப் படிக்கத்தொடங்கினேன். எல்லா வாத்தியாரையும் விட இரசாயவியல் ஆசிரியரை வீழ்ந்து வணங்கி வணக்கம் சொல்லி பாடத்தைப் படித்து இறுதியில் இரசாயவியல் பாடத்திலும் கூடிய புள்ளி பெற்றேன்.

இரசாயவியல் ஆசிரியருக்கு போலியாக வணக்கம் சொல்லி நாடகமாடி அவ் நாடகமே ஒருகட்டத்தில் என்னை உயர்நிலைக்கு கொண்டுவந்தது. இரசாயவியல் ஆசிரியரும் நான் நாடமாடுகிறேன் என்று தெரிந்துகொண்டும் என்னை உயர்நிலைக்கு கொண்டுவந்தார்.

இப்போது கூட எனக்குக் குழந்தைகள் இருக்கின்றார்கள். அக்குழந்தைகள் எனக்கு தொலைபேசியில் அப்பா எப்படி சுகமாக இருக்கின்றீர்களா? எனக் கேட்டால் கூட எனக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால் கூட நான் நன்றாக இருக்கின்றேன் என்று கூறுவேன்.

இதுகூட ஒருவகை நாடகம் தான். வாழ்க்கை பூராகவும் நாடகம் அடங்கியதாக அமைந்து விடுகின்றது. நாடகங்கள் அரங்கேற்றும் போது மாற்றுத்திறனாளிகளை வைத்து கேலிக் கூத்துகளை நிகழ்த்துவதுண்டு. அதுமாதிரியான கேலிச்சித்திரங்களையும் நாடகங்களையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/172149#sthash.3pymWWdh.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.