Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரவிபாஞ்சான் மக்களும் இலவு காத்த கிளிகளா?

Featured Replies

பரவிபாஞ்சான் மக்களும் இலவு காத்த கிளிகளா?

 

பரவிபாஞ்சான்  மக்களும்  இலவு காத்த கிளிகளா? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்:-

 

 
 
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிளிநகர் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருபகுதிதான் பரவிபாஞ்சான் ஆகும்.
 
கிளிநகர் கிராம அலுவலர்  பிரிவில் கிளிநகர்,பரவிபாஞ்சான், கண்ணன்கோவிலடி, பழைய கச்சேரியடி ,கரடிபோக்கு என்பன உள்ளடங்குகிறது. இதில் பரவிபாஞ்சான் கிளிநொச்சி நகரின் மைய பகுதியில்அமைந்துள்ள அதிக பொருளாதார பெறுமதிமிக்க தனியார் காணிகளை பெருமளவு கொண்ட ஒரு பிரதேசமாக காணப்படுகிறது. பரவிபாஞ்சானுக்கு ஊடாக  இரனைமடுவிலிருந்து கிளிநொச்சி குளத்திற்கு வரும் நீர்ப்பாசனவாய்க்கால் ஏ9 வீதியை கடந்து உருத்திரபுரம் நோக்கிச் செல்கிறது. இது எப்போதும்  பசுமை நிறைந்த  நிலப்பரப்பாக அமைந்திருந்தது.
 
 
 கடந்த சமாதான காலத்தில்  அரசியல் ரீதியாக கொழும்புக்கு நிகராக இருந்த பிரதேசமாக  பரவிபாஞ்சான் காணப்பட்டது. இந்த பிரதேசத்தில்தான் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை தலைமை அலுவலகம்,சமாதானச் செயலகம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் என விடுதலைப்புலிகளின் மிக முக்கிய அலுவலகங்கள் செயற்பட்டன.
 
இந்த பிரதேசத்தில் காணிகள் அனைத்தும் தனியார் உறுதிக் காணிகள். கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலகபிரிவில் உள்ள சில தனியார் காணிகளை கொண்ட பிரதேசங்களில் பரவிபாஞ்சானும் முக்கியமானது.இக்கிராமானது 1900 ஆம் ஆண்டளவில் சோ்  பொன்  இராமநாதனால் இரனைமடு குள வேலைகளுக்காக தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மக்களுக்கு வழங்க்ப்பட்ட நிலங்களாகும். பிற்காலங்களில்  வட பிரதேசத்தைச் சோ்ந்த மக்களும் இக்காணிகளை கொள்வனவு செய்தனா்.
 
யுத்தம் முடிவுக்கு கொண்டவரப்பட்டு கிளிநொச்சியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதுபரவிபாஞ்சான் அதற்கு அனுமதிக்கப்படவில்லை, மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலத்தில் பரவிபாஞ்சான்முழுமையாக இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. பரவிபாஞ்சன் பக்கமாக ஏ9 வீதியின் கிழக்கு பக்கமாக உள்ள தனியார் கடைகளும்  இராணுவத்தினரே வைத்திருந்தனர். பின்னர் அந்தக்கடைத் தொகுதிகள் 2013 ஆம் ஆண்டில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
 
இருந்தும் பரவிபாஞ்சான் கிராமம் முழுமையாக 58 ஆவது படைப்பிரின் கட்டுப்பாட்டில் காணப்பட்டது. தங்களதுகாணிகளை விடுவிக்க கோரி அந்த மக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள,; உண்ணாவிரதம் எனபோராட்டங்களை நடத்தியிருந்தார்கள். பரவிபாஞ்சான் கிளிநொச்சியின் அரசியல் முதல் மனிதாபிமானம் வரைஒரு பேசு பொருளாக மாற்றம் பெற்றிருந்தது. இதனைதொடர்ந்து முன்னயை அரசின் காலத்தில்பரவிபாஞ்சானின் தெற்கு பக்கமாகவும், கிழக்கு பக்கமாகவும் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டது. இருந்தும் பெரும்பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிலியே இருந்து வந்தது.
 
2015 ஜனவரி எட்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் பரவிபாஞ்சானின் முன்பகுதியிலும் சில பகுதிகள்விடுவிக்கப்பட்டது. மொத்தமாக 43 ஏக்கர் நிலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இராணுவம் அதில் 20எக்கரை அண்மையில் விடுவித்தது. மிகுதி 23 ஏக்கா் நிலம் இன்னும் இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின்கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்தப்  பகுதிகளில் மீள்குடியேறுவதற்காக கரைச்சி பிரதேச செயலகத்தில் 62குடும்பங்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஆனால்  இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள  மிகுதி23 ஏக்கரில் மீள்குடியேற தயார் நிலையில் தற்போதும் மாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்துவாழ்துவருகின்றவர்கள் 36 குடும்பங்கள் ஆகும்
 
 இவர்களே பரவிபாஞ்சான் தொடர்பில் அனைத்து தரப்புக்கும் நெருக்கடிக்களை ஏற்படுத்தி வருகின்றனர்.தாங்கள் தங்களின் சொந்த இடத்திற்கு மீளவும் செல்ல வேண்டும் என்ற இந்த மக்களின் நியாயமான கோரிக்கையுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் கடக்கின்ற நிலையிலும் இன்னமும்நிறைவேறவில்லை.மாறாக இராணுவம் மிகுதி 23 ஏக்கர் நிலத்தையும் சுவீகரிக்க  அனைத்து முயற்சிகளையும்எடுத்து வருகிறது. அதில் முதற்கட்டமாக தனியார் உறுதி காணியொன்றில்  ஏழு ஏக்கர் காணியை  இராணுவத்தேவைக்காக சுவீகரிக்கும் வர்த்தமாணி அறிவித்தல் 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிவெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு மிகுதி காணிகளையும் இராணுவம் தங்களுடைய தேவைக்காக சுவீகரிக்கவேஎல்லா மட்டங்களிலும்  அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
 
இவ்வாறு விடுவிக்கப்படாது உள்ள 23 ஏக்கர் காணிகள் தொடர்பில் அந்த மக்கள் முறையிட்டமையினை  தொடர்ந்தே எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்மந்தன்  அவா்கள் நேரடியாக அப்பிரதேசத்திற்கு    சென்று  மக்களின்  காணிகளை பார்வையிட்டார். அதுவே  சர்ச்சையாக மாறியது.  இது ஒரு புறமிருக்க,
 
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் முப்படையினரின் கட்டுப்பாட்டில் 3705.5 எக்கர் பரப்பளவு   காணிகள் காணப்படுகிறது என  புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் தனியார் காணிகள் 229.5 ஏக்கர் பரப்பளவுகாணி அடங்குகிறது. இதில் கரைச்சி பிரசேத்தல் 231 ஏக்கர் பரப்பளவு காணிகள்  இராணுவத்தின் கட்டுப்பாட்டில்உள்ளது.
 
பரவிபாஞ்சான் பிரதேசத்தில் மீள்குடியேற அனுமதிக்காத மக்களில் பெரும்பாலனவர்கள்மாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்து உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்கள் படிப்படியாக தங்களுடைய வாழ்க்கையை கட்டியெழுப்பி வரும்நிலையில் பரவிபாஞ்சானுக்கு அனுமதிக்கப்படாத மக்களின் வாழ்க்கை அதே நிலையிலேயே உள்ளது.
 
பரவிபாஞ்சானில் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கின்றவர்களில் சன்னாசி இராமையா வயது 75 என்பவர்தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் போது சொன்னார் தான் இறப்பதற்கு முன் எனது வீட்டிற்கு சென்றுவிடவேண்டும், எனது மனைவி  அமிர்தவள்ளி வயது 63 பரவிபாஞ்சானில்  இராணுவத்தினரால்அனுமதிக்கப்படாத  பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் பிறந்தவர் என்றும் ஆனால் இன்று  காணியும், வீடும் இருந்தும் அகதியாய் வாழ்கின்றோம். என்ற அவர் எங்களுக்கு எந்தவித நட்டஈடோ, அல்லது மாற்று காணியோதேவையில்லை எங்களது சொந்த காணியை தாருங்கள் என உறுதிப்பட தெரிவித்தார்.
 
இவரது இந்த நிலைப்பாட்டில்தான் ஏனைய 36 குடும்பங்களும் காணப்படுகின்றன. பரவிபாஞ்சான்பிரதேசத்திற்குரிய சில குடும்பங்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் அவர்களிடம் வலுமிக்க  காணி உறுதி உண்டு.அது தனியார் காணிகள். மக்களின் காணிகள் மக்களுக்கே என்று அரசு கூறுகின்ற போதும் கிளிநொச்சியில்பரவிபாஞ்சானில் இன்னும் விடுவிக்கப்படாத  மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பதிலாக  இராணுவத்தேவைக்காக சுவீகரிக்கவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
 இந்த நிலையில் பரவிபாஞ்சான் காணிகளுக்காக காத்திருக்கும்  மக்களின் நிலைமை என்பது என்னவோ இலவுகாத்த கிளியாக மாறிவிடுமா என்ற  அச்சம் தற்போது எல்லோரிடமும் காணப்படுகிறது.
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132138/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.