Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாணசபை முறை தீர்வாகாது நீரூபித்துள்ளது வடக்கு

Featured Replies

மாகாணசபை முறை தீர்வாகாது நீரூபித்துள்ளது வடக்கு

 

நேர்காணல் : ரொபட் அன்டனி

கேள்வி : மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்குள் தலை­மைத்­துவ பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ள­தாக  பர­ப­ரப்­பாக செய்­திகள் வரு­கின்­ற­னவே? 

பதில் : அப்­ப­டி­யெல்லாம் ஒன்றும் இல்லை. எமது கட்சி மிகவும் ஒற்­று­மை­யாக செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. கடந்த காலத்தில் சர்­வா­தி­கார ஆட்­சியை அனு­ர­கு­மார திசா­நா­யக்க தலை­மை­யி­லான மக்கள் விடு­தலை முன்­ன­ணியே வீட்­டுக்கு அனுப்­பி­யது. எனவே அதனை சகித்துக்­கொள்ள முடி­யாத  தோல்­வி­யுற்­ற­வர்கள் தற்­போது எமது கட்­சியை விமர்­சித்­து­வ­ரு­கின்­றனர். வீண் குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி வரு­கின்­றனர். 

கேள்வி : தோல்­வி­ய­டைந்த சக்­திகள் இவ்­வாறு செய்­வ­தாக நீங்கள் கூறி­னாலும் ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ள­னவே?

பதில் : அந்த ஊடகம் பற்றியும் எமக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்­டு­க­ளையும் சேறு பூசும் நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­கின்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் பற்­றியும் எமக்கு நன்­றா­கவே தெரியும். 

கேள்வி : ஜே.வி.பி. அர­சாங்­கத்தை பாது­காப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றதே?

பதில் : அர­சாங்­கத்தை பாது­காக்க வேண்­டிய அவ­சியம் எமக்­கில்லை. நாங்கள் எந்­த­வொரு கட்­சி­யையும் பாது­காக்க மாட்டோம். மக்­க­ளுக்கு சேவை­யாற்­று­வதே எமது நோக்­க­மாகும். அத­னையே செய்து வரு­கிறோம். 

கேள்வி : ஜே.வி.பி. தலை­வ­ருக்கு அல­ரி­மா­ளி­கையில் ஒரு அறை இருப்­ப­தாகவும் இர­க­சிய டீல் உள்­ள­தா­கவும் குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றதே?

பதில் : இவ்­வாறு அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றனர். அதா­வது பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி என்ற அடிப்­ப­டையில் நாங்கள் முன்­னெ­டுக்­கின்ற வேலைத்­திட்­டங்­களை பார்த்து தாங்கிக் கொள்ள முடி­யா­ம­லேயே இவ்­வாறு குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றனர். ஆனால் நாங்கள் யாரென்று மக்­க­ளுக்கு தெரியும். மக்கள் எம்­முடன் இருக்­கின்­றனர். நாங்கள் மிகவும் ஒற்­று­மை­யாக எமது பய­ணத்தை முன்­னெ­டுக்­கிறோம். 

கேள்வி : ஒரு குறிப்­பிட்ட அர­சியல் கட்சி உங்­க­ளுக்கு எதி­ராக சேறு பூசும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளது என்று கூறு­கி­றீர்­களா?

பதில் : ஆம், நிச்­ச­ய­மாக அவ்­வாறு கூறு­கிறோம். தோல்­வி­ய­டைந்த ஒரு அர­சியல் அணியே எமக்கு எதி­ராக சேறு பூசும் நட­வ­டிக்­கை­யை மேற்­கொண்டு வரு­கி­றது. இவ்­வாறு சேறு பூசும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு எமது பய­ணத்தை யாரும் தடுக்க முடி­யாது. 

கேள்வி : கடந்த காலங்­க­ளிலும் இவ்­வாறு கட்­சிக்குள் சிக்­கல்கள் ஏற்­பட்­ட­போது ஒன்றும் இல்லை என்று கூறி­னீர்கள்? 

பதில் : அந்த நிலைமை வேறு. தற்­போது மேற்­கொள்­ளப்­படும் சேறு­பூசும் செயற்­பா­டுகள் வேறா­ன­தாகும். இதற்கு முன்னர் எமது கட்­சி­யி­லி­ருந்த பலர் முரண்­பட்டு வெளி­யே­றி­யுள்­ளனர். சிலர் வெளி­யேற்­றப்­பட்­டு­முள்­ளனர். ஆனால்  தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலைமை வித்­தி­யா­ச­மா­ன­தாகும். 

DSC_0149.JPG

கேள்வி : உங்கள் மன­ச்சாட்­சிக்கு அமை­வாக உங்கள் கட்­சிக்குள் ஒரு பிரச்­சி­னையும் இல்லை என்று கூறு­கி­றீர்­களா? 

பதில் : மன­ச்சாட்­சிக்கு அமை­வா­கவே எமது கட்­சிக்குள் தலை­மைத்­துவம் தொடர்பில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்­லை­யென்று கூறு­கின்றேன். 

கேள்வி : இருந்­தாலும் முன்­னைய ஆட்­சியின் போது நீங்கள் செயற்­பட்ட விதத்­திலும் தற்­போ­தைய ஆட்­சியில் ஜே.வி.பி. செயற்­படும் விதத்­திலும் மாற்­றத்தை நாங்கள் காண்­கிறோம்?

பதில் : அர­சியல் சூழலில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ள­மையே அதற்கு கார­ண­மாகும். அப்­போ­தைய அர­சியல் சூழ­லிலும் தற்­போ­தைய நிலை­யிலும் பாரிய மாற்றம் உள்­ள­தாக அனை­வரும் ஏற்றுக் கொள்­கின்­றனர். 

கேள்வி : முன்னர் மக்­களின் வாழ்க்கை சுமை அதி­க­ரித்தால் மக்கள் விடு­தலை முன்­னணி முத­லா­வ­தாக வீதியில் இறங்கும். இம்­முறை வற்­வரி அதி­க­ரிக்­கப்­பட்டும் கட்சி இன்னும் வீதியில் இறங்­க­வில்லையே?

பதில் : இந்த விட­யத்தை முதன் முதலில் நாட்­டுக்கு கூறி­யதே நாங்கள் தான். எதிர்­வரும் 26 ஆம் திகதி இந்த வற்­வரி அதி­க­ரிப்­புக்கு எதி­ராக பாரிய ஆர்ப்­பாட்டம் ஒன்றை கொழும்பில் நடத்­துவோம். 

கேள்வி : கடந்த காலங்­களில் நீங்கள் செயற்­பட்ட விதத்தை பார்க்­கும்­போது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அதிக ஆச­னங்கள் கிடைக்­கு­மென எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் எதிர்­பார்த்த வாக்­குகள் கிடைக்­க­வில்­லையே?

பதில் : நிச்­ச­ய­மாக நாங்கள் எதிர்­பார்த்த வாக்­குகள் எங்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. நாட்டு மக்கள் எதிர்­பார்த்த முடி­வு­களும் கிடைக்­க­வில்லை. காரணம் கடந்த தேர்­தலில் இறுதித் தரு­ணத்தில் மஹிந்த ராஜ­ப­க் ஷவை தோற்­க­டிக்க வேண்­டு­மென மக்கள் கரு­தி­யதால் அதி­க­மாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாக்­களித்து விட்­டனர். இதனால் எமக்கு எதிர்­பார்த்த வாக்­குகள் கிடைக்­க­வில்லை. 

கேள்வி : அது தொடர்பில் கவ­லை­ய­டை­கின்­றீர்­களா? 

பதில் : அந்த நிலைமை குறித்து மக்கள் இன்று கவ­லை­ய­டை­கின்­றார்கள். சிலர் அழு­கின்­றனர். இப்­படி நடக்கும் என்று தெரிந்­தி­ருந்தால் எங்கள் முடிவு மாறி­யி­ருக்கும் என மக்கள் கூறு­கின்­றனர். 

கேள்வி : கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜே.வி.பி. எடுத்­தி­ருந்த முடிவு எவ்­வா­றா­னது? அதா­வது மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்­காமல் எதிர்ப்பும் தெரி­விக்­காமல் குழப்­பி­விட்­டீர்­களே?

பதில் : இல்லை நாங்கள் அன்று எடுத்த முடிவு சரி­யா­னது என்­பது இப்­போது நிரூ­ப­ண­மா­னது. மஹிந்­தைவை தோற்­க­டிப்போம். ஜன­நா­ய­கத்தை கட்­டி­யெ­ழுப்­புவோம் என்­றுதான் நாங்கள் கூறினோம்.ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் ஜன­நா­யகம் பலப்­படும் என்று நாம் கூற­வில்லை. அதா­வது மஹிந்­தவின் கடையில் பொருட்­களை வாங்க வேண்டாம் என்று கூறிய நாங்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கடையில் உள்ள பொருட்கள் நிச்­சயம் இல்­லா­தவை என்று நாங்கள் கூறினோம். அது இன்று சரி­யா­கி­யுள்­ளது.இது தான் எமது விளக்கம். 

ேகள்வி : நாட்­டிற்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவையா?

பதில் : தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­பா­னது 38 வரு­டங்கள் பழ­மை­யா­கி­விட்­டது. உலகம் மாறி­விட்­டது. எனவே தற்­போ­தைய நிலை­மையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று தேவை­யாகும். தேசிய ஒற்­றுமை மத சக­வாழ்வு பலப்­படும் வகையில் புதிய ஏற்­பா­டுகள் அர­சி­ய­ல­மைப்­புக்கு வர­வேண்டும். 

கேள்வி : இந்த இடத்தில் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் உங்கள் நிலைப்­பாடு என்ன ?

பதில் : ஜன­நா­யகம் பல­ம­டைய வேண்டும், பொரு­ளா­தா­ரத்தில் சம­மான பங்­கீடு இருக்க வேண்டும், இன, மொழி பாகு­பாடு இருக்கக் கூடாது. பொரு­ளா­தார சமத்­து­வத்­தி­லேயே தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு காணப்­ப­டு­கி­றது. இதனை தவிர்த்து எவ்­வா­றான வெளிநாட்டு தீர்­வு­களை இங்கு கொண்டு வந்­தாலும் பொருத்­த­மா­காது. மாறாக தமிழ் மக்கள் தமிழ் மக்கள் என்­பதால் இன்று பல அநீ­தி­களை எதிர்­கொள்­கின்­றனர். அந்த நிலைமை மாற வேண்டும். 

எமது அர­சி­ய­ல­மைப்பில் இலங்­கையின் அரச மொழி­க­ளாக சிங்­களம், ஆங்­கிலம் காணப்­ப­டு­மென்றும் தமிழ் மொழியும் அரச மொழி­யாகும் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதில் தமிழ் மொழியும் அரச மொழி என்று ஏன் குறிப்­பிட வேண்டும். அதா­வது சிங்­களம், தமிழ், ஆங்­கிலம் ஆகிய மூன்று மொழி­களும் இலங்­கையின் அரச மொழி­க­ளாகும் என குறிப்­பிட வேண்டும். இவ்­வாறு பல மாற்­றங்­களை செய்ய வேண்டும். மாகாண சபை முறை­மையும் தீர்­வாக அமை­யாது. 

அத்­துடன் சிலர் கூச்­ச­லி­டு­கின்ற சமஷ்டி முறை­மையும் ஒரு­போதும் தீர்­வாக அமை­யாது. நாட்டை பல துண்­டு­க­ளாக பிரித்து நிர்­வ­கிக்க முடி­யாது. அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற உணர்வு வேண்டும். அந்த வகையில் எமது கட்­சியின் தீர்வு திட்­ட­மாக பூகோளம் மற்றும் குடி பரம்­பலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு கிராம சபை­களை அமைக்க வேண்­டு­மென நாம் கூறி­யி­ருக்­கின்றோம். இந்த கிராம சபைகள் அமைப்­பதன் மூலம் தேசிய பிரச்­சி­னைக்கு விடை காணலாம்.

கேள்வி : இந்த கிரா­மிய சபைகள் எவ்­வாறு இயங்கும்?

பதில் : பூகோளம் மற்றும் குடி பரம்­பலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு கிராம சபை­களை அமைத்து அத­னூ­டாக ஒரு பிர­தி­நிதி பாரா­ளு­மன்றம் செல்­வ­தற்கு வழி­வ­குக்க வேண்டும். இது முழு இலங்­கைக்கும் பொருத்­த­மாகும். இது தொடர்­பாக குழுக்கள் அமைக்­கப்­பட்டு ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு இந்த கிராம சபைகள் அமைக்­கப்­பட வேண்டும். 

கேள்வி : மாகாண சபை­க­ளு­டாக மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­யாதா?

பதில் : அது முடி­யா­தது என்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. மூன்று தசாப்­தங்­க­ளாக மாகாண சபை முறைமை நாட்டில் நடை­மு­றையில் உள்­ளது. ஆனால் அத­னூ­டாக மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடி­ய­வில்லை. மாகாண சபை­க­ளி­னூ­டாக மேலும் சில அமைச்­சர்கள் உரு­வா­கு­வது மட்­டுமே இடம்­பெற்று வரு­கி­றது. மத்­திய மாகாண சபையின் தமிழ் கல்வி அமைச்சர் இருந்தார். கண்டி, மாத்­தளை, நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் மாண­வர்­க­ளுக்கு என்ன நன்மை கிடைத்­தது? எனவே மாகாண சபை­யா­னது தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வல்ல.

கேள்வி : வட­மா­காண சபையின் இயங்கு நிலை தொடர்பில்?

பதில் : வட­மா­காண சபையின் நிலை­மையை எடுத்துப் பாருங்கள். மத்­திய அர­சாங்கம் அனுப்­பிய நிதியைக் கூட செல­வு செய்யா­மல் உள்­ளனர். மாகாண சபை முறைமை தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு அல்ல என்­பதை வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் நிரூபித்­தி­ருக்­கிறார். வடக்கில் இன்று மீனவர் பிரச்­சினை தலை­வி­ரித்­தா­டு­கி­றது. இது தொடர்பில் வடக்கு முதல்வர் மத்­திய அர­சாங்­கத்­திற்கு கடிதம் எழு­தி­யி­ருப்­பாரா? மாறாக தமது பலத்தை தக்­க­வைக்க மாகாண சபையை பயன்­ப­டுத்தும் நிலை­மையே காணப்­ப­டு­கி­றது.

கேள்வி : ஒரு­வேளை மாகாண சபைக்கு அதி­காரம் போது­மற்­ற­தாக இருக்­கலாம் அல்­லவா? அதி­காரம் இல்­லா­ததால் முத­ல­மைச்சர் இவ்­வாறு செயற்­ப­டலாம் அல்­லவா?

பதில் : இல்லை இல்லை அதி­கா­ரங்கள் போது­மான அளவு உள்­ளன. எந்தக் குறையும் இல்லை. உட­ன­டி­யாக பொலிஸ் அதி­காரம் இல்­லை­யென கூறு­வார்கள். ஆனால் பொலிஸ் அதி­கா­ரத்தை குறைத்தால் பயங்­க­ர­வாத நிலைமை தோன்­றி­விடும். இவை எதிலும் கீழ் மட்­டத்தில் உள்ள மக்­களின் தேவை­களை நிறை­வேற்ற முடி­யாது. 

கேள்வி : அப்­ப­டி­யாயின் நீங்கள் கூறும் கிரா­மிய சபை­களின் ஊடாக மீனவர் பிரச்­சி­னையை தீர்க்க முடி­யுமா?

பதில் : தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வை நோக்­க­மாகக் கொண்டே கிரா­மிய சபை­களை நாம் முன்­வைக்­கின்றோம். மீனவர் பிரச்­சினை என்­பது அதுவும் தேசிய பிரச்­சி­னை­யாகும். 

கேள்வி : அப்­ப­டி­யானால் அதை தீர்க்க வேண்­டி­யது மத்­திய அரசின் கடமை அல்­லவா? 

பதில் : நிச்­ச­ய­மாக அது மத்­திய அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். ஆனால் மத்­திய அர­சாங்­கத்­திற்கு மாகாண சபை அழுத்தம் கொடுத்தி­ருக்க வேண்டும். அதனை செய்­ய­வில்லை. ஆனால் அந்த பொறுப்பை கூட மாகாண சபை செய்­ய­வில்லை என்­பதே எமது குற்றச்சாட்டாகும். 

கேள்வி : தேசிய அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிடைக்கும் என நம்புகிறீர்களா?

பதில் : இந்த அரசாங்கத்தினூடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென நாம் நம்பவில்லை. இது தான் செயற்பாட்டு ரீதியாக எமக்கு தெரிந்த உண்மை.

கேள்வி : காணாமல் போனோர் பிரச்சினை, காணிகளை மீள் வழங்காமை, இராணுவப் பிரசன்னம் என பல பிரச்சினைகள் இன்னும் காணப்படுகின்றன. அவற்றை தீர்க்க என்ன யோசனை முன்வைத்தீர்கள்?

பதில் : நீங்கள் கூறு­கின்ற இந்த அனைத்து பிரச்­சி­னைக்கும் தீர்வை வலி­யு­றுத்தி 2009 ஆம் ஆண்டு நாங்கள் பரிந்­து­ரை­களை முன்­வைத்தோம். வடக்கு, கிழக்கில் சாதா­ரண மக்கள் சமஷ்­டியை கோர­வில்லை. மாறாக அந்த மக்கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வையே கோரு­கின்­றனர். சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்கும் பேசு­வ­தற்­கு­மான சூழலை சாதா­ரண மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர். தற்­போ­தைய அர­சாங்கம் அதனை இன்னும் செய்­ய­வில்லை. உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வினை நிய­மிப்­ப­தாக கூறி­னார்கள். இன்னும் செய்­ய­வில்லை. காணா­மல்­போனோர் தொடர்பில் அலு­வ­லகம் அமைக்­கப்­படும் என்று கூறி­னார்கள். இன்னும் அமைக்­கப்­ப­ட­வில்லை. மக்களை ஏமாற்றுவதையே செய்து கொண்டிருக்கின்றனர்.

http://www.virakesari.lk/article/6375

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.