Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈஜிப்ட் ஏர் விமானம் தீவிரவாதத் தாக்குதலால் மாயமா? - எகிப்து அமைச்சர்

Featured Replies

ஈஜிப்ட் ஏர் விமானம் தீவிரவாதத் தாக்குதலால் மாயமா? - எகிப்து அமைச்சர்

 

பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானம் மத்தியதரைக்கடலின் மேற்பரப்பில் வைத்து ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயிருப்பது தொழில்நுட்ப கோளாறு என்பதை விட தீவிரவாத தாக்குதலால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்று எகிப்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் செரிஃப் ஃபாத்தி தெரிவித்துள்ளார்.

160519162605_missing_plane_512x288_epa_n
 ஈஜிப்ட் ஏர் விமானம் தீவிரவாத தாக்குதலால் காணாமல் போயிருக்கலாம் என எகிப்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

எம்எஸ்804 என்ற இந்த விமானத்தில் பயணிகளும், விமான பணியாளர்களுமாக 66 பேர் பயணம் செய்துள்ளனர்.

ராடார் திரைகளிலிருந்து மறைந்து போவதற்கு முன்னர் திடீரென திசைமாறிச் சென்றதாக கிரேக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

160519162904_map_512x288_map_nocredit.jp  வரைபடம்

தற்போதைய நிலைமையில் இதற்கான காரணத்தை கண்டறிவதில் எந்த ஒரு கருத்தையும் நிராகரிப்பதற்கில்லை என்று தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் ஒலாந்த் எகிப்தின் தலைவர் அப்துல் ஃபத்தாக் எல்-சிசியிடம் இது பற்றி பேசியுள்ளதாகவும், புலனாய்வில் இருதரப்பும் நெருக்கமாக ஒத்துழைக்க இசைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

160519163032_frannce_512x288_bbc_nocredi  

பயணம் செய்த உறவினர்கள் பற்றிய தகவல்கள் பெற பாரிஸிலுள்ள சார்ல்ஸ் த கோல் மற்றும் கைய்ரோவிலுள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் அவர்களது உறவினர்கள் கூடியுள்ளனர்.

160519163900_relatives_512x288_reuters.j  கைய்ரோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளியே உறவினர்கள்

விமானத்தின் உடைந்த பாகங்களை கண்டறிய பெரிய அளவிலான தேடுதல் நடைபெற்று வருகிறது. கராற்றெ தீவுகளுக்கு அருகில் உடைந்த பாகங்கள் தோன்றுவதாக தெரியவந்து அப்பகுதிக்கு கப்பல் ஒன்று சென்றுள்ளது.

மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதியில் 37,000 அடி (11,300 மீட்டர்) உயரத்தில், இந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. கெய்ரோ நேரப்படி அதிகாலை 2.45 மணிக்கு (00:45 ஜிஎம்டி நேரம்) இந்த விமானம் ராடரின் தொடர்பை இழந்த்தாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்த மேலும் தகவல்கள் கிடைத்தவுடன், அது குறித்த அறிக்கையை வெளியிடுவோம் என்று ஈஜிப்ட் ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/global/2016/05/160519_egyptair

  • தொடங்கியவர்

மாயமான எகிப்திய விமானத்தின் பாகங்கள் மத்தியதரைக் கடலில் கண்டுபிடிப்பு: எகிப்து ராணுவம்

 
மத்தியதரைக்கடலில் விமான பாகங்களைத் தேடும் எகிப்து ராணுவம். | படம்: ஏ.எஃப்.பி.
மத்தியதரைக்கடலில் விமான பாகங்களைத் தேடும் எகிப்து ராணுவம். | படம்: ஏ.எஃப்.பி.

பாரிசில் இருந்து கெய்ரோ நோக்கி 66 பயணிகளுடன் சென்ற எகிப்து விமானம் மத்திய தரைக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதன் பாகங்கள் மத்தியதரைக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து எகிப்து தலைநகர் கெய்ரோ நோக்கி எகிப்து ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபடி, எகிப்து நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்தபோது திடீரென ரேடார் கண்களில் இருந்து மறைந்தது.

இதனால் பதட்டம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள், விமானத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், எகிப்தின் துறைமுக நகரமான அலெக்ஸாண்டிரியா அருகே மத்திய தரைக்கடலில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது, இதில் பயணித்த 66 பேரும் பலியாகினர்.

இந்நிலையில் இந்த விமானத்தின் பாகங்களும், பயணிகளின் உடமைகளில் ஒருசிலவும் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது.

எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவுக்கு 290 கிமீ தூரத்தில் இவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்து ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/article8625335.ece?homepage=true

  • தொடங்கியவர்

எகிப்து விமானத்தின் பாகங்கள் (புகைப்பட தொகுப்பு)

160521112204_egypt_air_photos_640x360_bb

 ஈஜிப்ட்ஏர் 804 விமானத்தின் திட்டமிட்ட பாதை

160521112642_egypt_air_640x360_bbc_nocre

 விமானம் காணாமல் போன இடம்

 160520142933_egyptair_search_512x288_bbc  

தொடரும் மீட்பு நடவடிக்கைகள்

 

160520175433_sp_egypt_searh_team_air_640  160519145444_egypt_air_safe_jacket_fb_ph  160521113020_egypt_flight_parts_640x360_ 

 

          மத்திய தரைக்கடலில்   கண்டெடுக்கப்பட்ட விமான சிதிலங்கள் 160521113418_egypt_flight_640x360_egypti

 

 அவசர காலத்தில் கடலில் மிதக்க உதவும் ஜாக் கெட்

 

160521113948_egypt_flight_640x360_egyptiசி

எம்எஸ் 804 விமானத்தின் இருக்கை

 160521114741_egypt_flight_640x360_theavi

விமான காணாமல் போன போது பதிவான இறுதி தகவல்கள்

160521092911_egypt_air_640x360_ap_nocred

  கண்ணீர் மல்க பிரார்த்திக்கும் விமான பயணிகளின் உறவினர்கள்

http://www.bbc.com/tamil/global/2016/05/160521_egyptair_flight_wrekage_photos

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.