Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு உண்மை மனிதன் பற்றிய நினைவுப் பகிர்வு.

Featured Replies

ஒரு உண்மை மனிதன் பற்றிய நினைவுப் பகிர்வு.

உலகத் தமிழர்களைச் சோகத்திற்கும் பேரதிர்ச்சிக்கும் உள்ளாக்கிய நிகழ்வு டிசம்பர் 14ம் திகதி லண்டனில் நிகழ்ந்தேறியது. கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இயற்கையெய்திய செய்தியே அந்நிகழ்வாகும். இச்செய்தியின்பின் உலகத் தமிழினமே ஒன்றுதிரண்டு அவருக்கு தமது இதய அஞ்சலியை தெரிவித்தது. அவரை வாழ்நாளில் கண்டிருக்காதவர்கள்கூட அவரது இழப்பால் உறைந்து போனர்கள் அந்தளவிற்கு உலகத்தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பாலாண்ணா தனது ஆளுமையாலும் முன்னுதாரண வாழ்க்கையாலும் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்.

இந்தப் பெருந்தகையோடு நேரிலே பேசிப் பழகி வாழக்கிடைத்த அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலே ஆறுதல் அடைய முற்படுகின்றேன்.

பாலாண்ணா துறவு நிலையில் வாழ்ந்த ஒரு ஞானி. எதற்கும் ஆசைப்படாமல் எதையும் கோராமல் தன்னிடம் இருந்தவற்றை தனது பாணியில் அனைவரது நலனுக்காகவும் அர்பணித்தவர் 1985ம் ஆண்டு பிற்பகுதியில் சென்னைப் பெசன்ற் நகரில் அவரை முதன்முதலாகச் சந்திக்க எனக்குக் கிடைத்தது. அப்போதுதான் பயற்சியை நிறைவு செய்து அரசியல்வேலை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய போராளியாகிய நான் அரசியல் பணிமனையாகவும் தலைமைச் செயலகமாகவும் செயற்பட்ட அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன் அங்கு என்னைக் கண்ட பாலாண்ணா கூப்பிட்டுக் கதைத்தார். நான் அரசியல் வேலைக்காக வந்திருக்கின்ற போராளி என்பதைக் கேட்டறிந்து கொண்ட அவர் நிறையப் படிக்கவேண்டும் விடயங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார் இதற்காக தான் வகுப்புக்களை நடத்தவுள்ளதாகவும் அதில் சேர்ந்து கொள்ளும் படியும் பணித்தார். இதற்கிடையே பாலாண்ணா குடியிருந்த சென்னை பெசன்ற் நகர் கடற்கரையோர வீடு சிறிலங்கா அரசின் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியது அதில் பாலாண்ணையும் அன்ரியும் மயிரிழையில் உயிர்தப்பியிருந்தார்கள்.

இத் தாக்குதலையடுத்து அடையாறு இந்திராநகர் 12ம் குறுக்குத்தெருவிலுள்ள 14ம் இலக்க மாடிவீட்டுக்கு பாலாண்ணா இடம்மாறினார். மேல்தளத்தில் பாலாண்ணாவும் கீழே அவருக்கு பாதுகாப்பாக நாங்களும் இருந்தோம். இக்காலப் பகுதியில் அவரை அடிக்கடி சந்தித்ததோடு அவரின் வகுப்புக்களிலும் கலந்து கொண்டோம் ஆரம்பத்தில் தமிழிலும் இறுதியில் ; சில வகுப்புக்கள் ஆங்கிலத்திலும் இடம்பெற்றன புராதன ; பொதுவுடமைச் சமூகம் என்பதில் தொடங்கி உலகப் போராட்ட வரலாறு, தத்துவங்கள் என அவரது வகுப்புக்கள் நீண்டன

போராளிகளிற்கு அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதில் பாலாண்ணா மிகவும் அக்கறையாக இருந்தார். போராட்டம் என்பது அரசியல் இலட்சியத்திற்கானது ஆயுதம் தாங்கும் போராளிகள் அனைவரும் அரசியல் விழிப்புணர்வு பெற்றிருக்கவேண்டும் அதற்காக இவ்வகையான கல்வியினூடாக போராளிகள் மத்தியில் தீர்க்கமான அரசியல்பார்வை நிலவவேண்டும் என்பதில் பாலாண்ணா உறுதியாக இருந்தார் அவரது வகுப்புக்கள் மிகவும் எளிமையான மொழியில் தெளிவாக சுவாரசியமாக ஆழமாக இருக்கும் அப்போது நாங்கள் அவரிடம் கற்ற இந்த விடயங்கள் காலகதியில் நாங்கள் பல்வேறு பொறுப்புக்களை ஏற்று செயற்படுத்தவேண்டிய தேவை வந்தபோது எங்களுக்கு மிகுந்த உதவியாக இருந்தன.

1994ம் ஆண்டு யாழப்பாணத்தில் கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரியை நாங்கள் ஆரம்பித்த போது அதனுடைய தொடக்க விழாவிற்கு தலைவர் அவர்கள் பாலாண்ணாவையும் அழைத்து வந்தார். அங்கு தலைவர் உரையாற்றுகையில் “இயக்கத்தில் உள்ள ஒரே ஒரு இராஜதந்திரி பாலாண்ணாதான் அதனால் தான் அவரை நான் இங்கு அழைத்துவந்திருக்கிறேன் அவர் இன்று உங்களுக்கு உரையாற்றுவது மட்டுமன்றி தொடர்ச்சியாக வகுப்புக்களையும் நடத்துவார்” என்று தெரிவித்தார்.

அதன்படி பாலாண்ணா யாழ்ப்பாணத்திலும் பின்னர்வன்னியிலுமாக 1994தொடக்கம் அவர் வன்னியைவிட்டு மருத்துவசிகிச்சைக்காக வெளியேறும் வரைக்கும் வகுப்புக்கள் நடத்தினார். தமிழர்களின் ஒடுக்குமுறை வரலாறு, இயக்க வரலாறு, அரசியல் சித்தாந்தங்கள், சமகால அரசியல் சூழல் என்பவைபற்றியதாக அவரது வகுப்புக்கள்அமைந்தன அன்ரி அங்கு சில வகுப்புகள் ஆங்கிலம் கற்பித்தார். பாலாண்ணையின் எளிமையும் நகைசசுவையும் ஆழமும் நிறைந்த இலகு மொழியில் அமைந்த விரிவுரைகளைக் கேட்கக் கிடைத்தது அந்தப் போராளிகளிற்கு கிடைத்த பெரிய பாக்கியமென்றே நான் நினைக்கிறேன் அவர்களோடு அக்காலத்தில் இருந்ததால் எனக்கும் அவ்வாய்ப்புக் கிடைத்தது.

இதைவிடத் தகவல்களை பெறுவதற்கு நாங்கள் பாலாண்ணாவை நாடுவோம் அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே அனைத்துவிடயங்களையும் சேகரித்து வைத்திருப்பார். ஆனால் நாங்கள் போகின்ற போது என்ன புதினம் என எங்களிடம் கேட்பார் நிறைவாக அந்தப் புதினங்கள் தகவல்களோடு சேர்த்து சமகால நிலமை, எதிர்காலச் சூழல், இவற்றை எதிர்கொள்ள நாங்கள் ஆற்ற வேண்டிய பணிகள், மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்திகள் என்பவற்றை பாலாண்ணா தெளிவாக விளக்குவார் அவரின் வீட்டிலிருந்து புறப்படுகின்றபோது விளக்கத்தோடும் தெளிவோடும் நாங்கள் இருப்போம்

அதே வேளை பாலாண்ணாவிற்கு கோபம் வந்தால் அதன் போது அவர் ஏசுகின்ற ஏச்சும் மிகப்பிரசித்தமானதும் மிகக் கடுமையானதும் ஆகும் ஆனால் தன்னால் கண்டிக்கப்பட்ட போராளியை மிகவிரைவாகவே அழைத்து தான் ஏன் அவரைக் கண்டித்தேன் என்பதைவிளக்கி அந்தவிவகாரத்தை எவ்வாறு திறம்படச் செய்து முடிப்பது என்பதற்கான வழிகளையும் சொல்லி அவ்வாறு செய்யாமல் விட்டால் ஏற்படப் போகின்ற பாதிப்புக்களையும் கூறி அணைத்து ஆறுதல்படுத்துவார். அவர் சொல்லுவார் 'பாலாண்ணா உனக்கொரு அண்ணாவைப் போன்றவர்'. பாலாண்ணாவின் ஏச்சு தெளிவையும் ஊக்கத்தையும் பெறவே உதவியது.

பாலாண்ணா குறித்து இன்னுமொரு விவகாரத்தை சொல்லுதல் வேண்டும் பாலாண்ணா போராளிகளிற்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை இடர்களை கேட்டு அவற்றிற்கு தீர்வுகாண்பதற்கான ஆலோசனைகளை வழங்கிவந்தார். குழம்பிப் போயிருக்கக் கூடிய ஒரு போராளியை அழைத்து நீ ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் தலைவர் இருக்கிறார் அனைத்துப் பிரச்சனைகளிற்கும் தீர்வு காணமுடியும் அவருக்கு எழுது நானும் அவரிடம் கதைக்கிறேன் எனக்கூறி அவனை ஆற்றுப்படுத்தி அவனது குழப்பங்களை தீர்த்து வைப்பார். அந்தவகையில் பாலாண்ணா ஒரு ஆலோசகராக மட்டுமன்றி ஒரு ஆறுதல் அளிப்பவராகவும் இருந்தார்.

பாலாண்ணாவின் இன்னுமொரு பக்கம் மிகவும் ஆழமானது. எங்களுக்கு அது விளங்காதது. அவர் ஐpட்டு கிருஸ்ணமூர்த்தியிருந்து கார்ல்மாக்ஸ், ரொட்க்சி வரைக்கும், சிக்மன் பிராய்டிலிருந்து அமில்கார் கப்ரால் வரைக்கும் சேயின் போராட்ட வரலாற்றிலிருந்;து சைவசித்தாந்தம் வரைக்குமான தத்துவங்களை ஆழமாக அறிந்திருந்தார். இந்த தத்துவங்கள் குறித்து அவர்விரிவாக பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவர் தத்துவங்களோடு நிறைந்த ஊடாட்டத்தைக் கொண்டவர் தத்துவவியலில் மிகுந்த தேடல் கொண்டவர் நான்யார்? என்ற அந்தத் தேடலை 'மனிதனைத் தேடும் மனிதன்' என்ற ஆன்ம விசாரமாக அவர் தீவிரமாக மேற்கொண்டார்.

அத்தோடு எளிமையான மனிதனாகவும் வாழ்ந்தார். ஒரு நான்குமுழ வேட்டியோடுதான் அவர் எங்களிடம் வருவார் அவருக்கு மிகப் பிடித்தமான உடையாகவும் அதுவே இருந்தது. எந்தப் பதவிகளுக்கும் ஆசைப்படாமல் உண்மையாக வாழ்ந்தவர் அவர் ஒரு தத்துவஞானியாக இருந்தபோதும் சாதாரண மக்களிற்கும் போராளிகளிற்கும் விளங்கக் கூடியவகையில் எவ்வளவு ஆழமான விடயத்தினையும் இலகுவான முறையில் விளக்கவல்லவர் அவர் ஒருபுறம் தந்துவஞானியாகவும் மறுபுறம் எளிமையாக, நகைச்சுவையா பேசி வாழ்ந்து வந்தது எனக்கு எப்பவும் ஆச்சரியத்தை தந்தது. அவர் உணவு விடயத்தில் மட்டும் அலாதியான பற்று வைத்திருந்தார். எமது ஊர்ச்சாப்பாடுகளில் அவருக்கு அதீத பிரியம் கொண்டிருந்தார். தலைவர் அவர்களுக்கும் பாலாண்ணாவின் சாப்பாட்டு இரசனை நன்கு தெரியும் பாலாண்ணா இங்கு இருக்கும் போதும் சரி, வெளிநாட்டிலிருக்கும் போதும் சரி உணவிலிருந்து பாதுகாப்பு, வரைக்கும் பாலாண்ணைவின் அனைத்து தேவைகளையும் தலைவர் அதீத கவனமெடுத்து பார்த்துக் கொண்டார். இதனால்த்தான் கடுமையான யுத்தநெருக்கடிக்குள்ளும் பாலாண்ணாவிற்குரிய இன்சுலினை எடுத்து தருவதிலிருந்து, பாலாண்ணாவை உயிர் தப்பவைப்பதற்காக வெளிநாட்டிற்கு கடலால் அனுப்பும் வரைக்கும் தலைவர் அவர்கள் கடும் முயற்சியெடுத்தார். இயக்க குடும்பத்தின் மூத்த அண்ணனாகவே அவரை நாங்கள் பார்க்க வேண்டும் என்று தலைவர் அவர்கள் எங்களுக்கு கூறுவார். அடிக்கடி பாலாண்ணையிடம் போய் அவருக்குரிய தேவைகள், பிரச்சனைகளை பார்க்க வேண்டுமென்று தலைவர் அவர்கள் எங்களுக்கு வலியுறுத்துவார்.

பாலாண்ணா தான் வாழ்ந்த வசதியான வாழ்க்கையை, வகித்த உயர்பதவியையும் துறந்து அன்ரியையும் அழைத்துக் கொண்டு இந்தப் போராட்டத்துடன் தன்னை இரண்டறக்கலந்து போராட்ட வாழ்விற்கே உரிய அனைத்துவிதமான ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் துன்பதுயரங்களையும் விரும்பி ஏற்றுக்கொண்ட மனிதர். இவற்றில் இருந்து விலகிநின்று அவர் ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருக்கவில்லை விமானக்குண்டுவீச்சுக்களை, எறிகணை வீச்சுக்களை, மலேரியா நுளம்பை மருந்துத் தடையை, பொருளாதாரத்தடையை தமிழ் மக்களுள் ஒருவராக நின்று அவரும் அனுபவித்தார். அவரது இந்தப் பண்பைத்தான் தலைவர் மிகவும் மதிக்கிறார் போற்றுகிறார் அவர் மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்களை தலைவர் இந்தக் கண்ணோட்டத்திற்கு ஊடாகத்தான் பார்க்கிறார்.

வெளியுலகிற்கு பாலாண்ணா இயக்கத்தின் அரசில் ஆலோசகராகவும், தத்துவாசிரியராவும் இருந்தார். ஆனால் தலைவர் அவர்களுடைய மதிநுட்பமான இராஐதந்திர காய்நகர்த்தல்களையும், இராணுவ நடவடிக்கைகளையும் சரியாக புரிந்து கொண்டு அதற்கான அரசியல் சித்தாந்த விளக்கத்தை கொடுக்கக்கூடியவராவே பாலாண்ணாவை நாம் இயக்கத்திற்குள் இருந்து பார்த்தோம். தலைவர் அவர்களின் மனக்குகைக்குள் புகுந்து அவர்சிந்திக்கிறதை அறிந்து வரக்கூடிய வல்லமை தனக்கு மட்டும் தான் உள்ளது என்று பாலாண்ணா என்னிடம் ஒரு முறை கூறியிருந்தார். பாலாண்ணாவின் பலம் என்பது தலைவர் தான். தலைவர் அவர்களுடைய ஆளுமையும், செயற்திறனும், நகர்த்தல்களுமே பாலாண்ணாவின் அரசியற்சித்தாந்தமானது.

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உச்சக்கட்டத்திலும் நிறைவுக்கட்டத்திலும் நிற்கின்ற முக்கியமான இக்காலத்தில், மிகக் கொடுமையான சிங்கள பேரினவாத அடக்குமுறையை தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற நேரத்தில் நாங்கள் பாலாண்ணாவை இழந்திருக்கிறோம். பாலாண்ணா எதை நேசித்தாரோ எதற்காக உழைத்தாரோ எதற்காக தன்னை அர்பணித்தாரோ அந்த இலட்சியத்தை வென்றெடுக்கவும்: அவர் யாரோடு தோளோடு தோள்நின்று இறுதிவரை பாடுபட்டாரோ அந்தத் தலைவரின், கரத்தை பலப்படுத்தவும் நாங்கள் ஒவ்வொருவரும் பாடுபடுவதே அர்பணிப்போடு உழைப்பதே பாலாண்ணாவிற்கு செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும். எந்தவிதமான எதிர்பார்ப்புக்களுமின்றி தன்னை தமிழ் மக்களின் நலனுக்காகவும் விடிவிற்காகவும் முழுமையாக அர்ப்பணித்துநின்ற ஒரு உண்மை மனிதனுக்கு நாங்கள் செய்ய வேண்டிய உண்மையான அஞ்சலி அதுவாகத்தான் இருக்கும்.

வீ.மணிவண்ணன்.

www.sankathi.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.