Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அப்பால் ஒரு நிலம்" ...பல வீரர் கதையும்.

Featured Replies

"அப்பால் ஒரு  நிலம்"  நாவலை வாசிக்க  தொடங்கும்  போது வழமையான  போர்  பற்றிய  வலியை  பேசப்போகிறது என்னும்  முன் சிந்தனையுடன் தான் தொடங்கியது  வாசிப்பு ,ஏனெனில் குணா கவியழகன் அவர்களின் முதல்  நாவல்கள் தந்து  போன வலியை இது  கொஞ்சம் கூடுதால  கொடுக்கலாம்  என்னும்  எண்ணமும்  இருந்தது, காரணம் அந்த  போரோடு வாழ்த்த  ஒவ்வெரு ஜீவனும்  அறியும்  அதன்  உக்கிரம் அதிலும்  அதில்  தன்னை  செலுத்தி நீந்திய இளையவர்களுக்கு அது  இப்பொழுது  பெரு  வலி .

apaal

வீரன் பற்றி ஆசிரியர்  சொல்ல  தொடங்கும் போது, எம்  அருகில் இருந்த ஒரு  வீரன் நினைவில் வருகிறான் ,அவன் தான் இளங்கீரன் இவன் பூநகரி மண்ணில் பிறந்த ஒருவன் அழகிய வெண்மை நிறமான  அவனுது தேகம், ஒரு பெண்ணுக்குரிய அவனின்வசீகர முகம்  எவரையும் இவன் பெடியன என  கேள்வியை  கேட்க தோன்றும் ,அடிப்படை பயிற்சி முடிந்து ,வேவு பயிற்சிக்கு வந்து நிக்கிறான் மாங்குளம் அண்டிய பனிக்கம்குளத்தில், இரவு  பகலாக  தொடர்  பயிற்ச்சி ஜெயசுக்குறு படைகளுக்கு  எதிரா வேவு பார்பதற்கு மிக பெரும்  தயார்  படுத்தல், எவர்  எப்ப  உறங்குகிறார்கள்  என்று  கூட  தெரியாத பயிற்ச்சி ஆக  அது  நீண்டு  போகுறது ,அதன்  களைப்பு அவனை  அடிக்கடி ஓடும் போது  கூட  நித்திரைக்கு  கொண்டு  சென்றுவிடும் ,ஒரு  இடத்தில  இருந்து விட்டால் அப்படியே  உறங்கி  விடுவான் ஒரே  கேலியாக  அவனை போட்டு  கிண்டி  எடுப்பதுதான்  சக போராளிகள் வேலையாக இருக்கும் ,மச்சான்  இவனை  நம்பி கம்பியை  கடக்க   முடியாது இவன்  கம்பி  நீட்டிவிடுவான்  அப்புறம் ஆமி  எங்களுக்கு கம்பி செருகுவான் என அவனை நக்கல் பண்ணாத  போராளிகள் இல்லை  எனலாம் .

 

மூன்று பட்டு கொமாண்டோ கம்பிகளை  போட்டு ரைபிள் கோல்சாருடன் எழும்பி பாய்ய சொன்னால்  ஓடிவந்த  வேகத்தில் இடறி  அதன்  மேல் விழுந்து கம்பிகள் அவன் கைகளை உடலை கீறி இரத்தம் வடியும், ஆனாலும் மீண்டும்  பின்னாடி  வந்து  முயற்ச்சி  செய்வான் பார்வைக்கு  பாவமாக இருக்கும், ஆனால் தான்  கொள்கையில் சரியாக  இருப்பான் அதை  கடக்காமல்  ஒருநாளும்  வரவும் மாட்டான் ,பயிற்ச்சி மாஸ்டர்  சொல்லுவார் பருவாயில்லை நாளைக்கு முயற்ச்சி  செய்  என  இல்லை என்னால்  முடியும் என்பான்,அவனுக்கு  பிரச்சினை இந்த நித்திரை  தான், ஒரு நிமிடம் மேலாக  ஒரு  இடத்தில நின்றால் அப்படியே அயர்த்து போவான் அவனுக்கு கொடுக்காத தண்டனை இல்லை,ஒரு முறை வெள்ளி பற்றி படிப்புக்கும்  போது உறங்கி விட்டான் அதற்க்க மாஸ்டர் குண்டை  கழட்டி கையில் கொடுத்து விட்டு  சொன்னார் ,உன்கையில்  இருப்பது எட்டுபேர்  உயிர் கண்ணை  மூடினால்  கையை  விடுவ  விட்டால்  வெடிக்கும் நீ தான்  முடிவை  எடுக்கணும் என,தலையை  ஆட்டியவன் அப்படியே  உறங்கி போனான் வெள்ளி  பற்றி  படிப்பை  எவர் கவனித்தது இவனிடம்  குண்டு இருக்க, அது  மாஸ்டருக்கும் தெரியும் ,ஆனால்  அவர்  கொடுத்த குண்டு வெடிக்காது என  அவருக்கு மட்டும் தான் தெரியும் ,அவன் மெதுவாக உறங்கி போக குண்டு நழுவ போகுது என  ஆளையாள் பாய, மாஸ்டர் சிரித்த படி எழும்படா எழுப்பி  நில் நீ  திருந்த உன்னை  நம்பினால்  இப்ப  எல்லோரும்  வெள்ளி  பார்க்க வேண்டி  வந்திருக்கும் ,என  குண்டை கையில் எடுத்தார் அப்ப தான் தெரியும் அது  வெடிக்காது என .

 

இவ்வாறு இருந்த அந்த போராளி இளங்கீரன் ஜெயசுக்குறு ஆமியுடன்  கிளிக்கோடு விளையாடிய  வரலாறு இருக்கிறது ,அவனிடம் ஒரு  அசாத்திய துணிவு  இருக்கிறது சரியான கணிப்பு  கூடவே இருக்கும் எப்பொழுதும் ,ஒரு முறை மாங்குளம் சின்ன கிணத்தடி கடந்து உள்ள போய் வரும் போது நால்வர் இவனும்  அதில்  ஒருவன் கண்டி றோட்டை  கடந்து எங்கள் நிலைகளுக்கு வர நடக்க தொடங்க ஆமி  கண்டுட்டு  அடிக்க வெளிக்கிட ,ஓடுங்கடா  என  சுயாத் கட்டளை போட ,ஓடி  வழமையான இடத்துக்கு வாங்கோ,  பிரிச்சு போ, எல்லாம்  பிரிச்சு போ,  என  கத்தியபடி ஓவரு  திக்காக நால்வரும் பிரிந்து போக ஓடி மறைந்து பின்னேரம்  ஒரு  செக்கள் பொழுதில் கல்லிருப்பு  றோட்டில் ஒரு  இடத்தில  நின்றுதான்  போனது, ஆகவே அங்க  போகணும்.

எல்லோரும் வந்தாச்சு  இவனை காணவில்லை இப்ப இவன்  இல்லாமல்  போக முடியாது சண்டை நடந்த மாதிரி தெரியவும் இல்லை துப்பாக்கி சூட்டு   சத்தமும் இல்லை எங்க போனவன் ஆமி  பிடிந்து இருப்பன்,அல்லது குப்பி கடிச்சானா ,இடத்தை விட்டுடானா என பல யோசனை  அனைவருக்கும் ,சரி ஆளை ஒருக்கா பார்ப்பம் பொறுங்க கொஞ்சம் இருளட்டும் என காத்திருந்து தேடியும் ஆள் இல்லை ,இப்ப  போனால் பதில் சொல் வேணும் இன்னும் ஒருநாள் நிண்டு  தேடுவம் என சுயாத் சொல்ல சாப்படு பிரச்சினை வந்தால் போவம் பக்கத்தில  தானே நிக்கிறம் என சொல்லிபோட்டு இரவில் குருவி சத்தம் ,மெல்லிய விசில் சத்தமாக அவனிடம்  இருந்து  ஏதாவது சிக்னல் வருகிறாதா என தேடல் தொடங்குது .

 

அடுத்தநாளும் ஆள் கிடைக்கவில்லை இப்ப தளபதிக்கு என்ன  பதில் சொல்வது என்ன  நடந்தது  என  சொல்வது, எத்தினை கேள்விகள் எழும் ,என்னும்  குழப்பம் லீடருக்கு, சரி எதுக்கு தொடர்பை  எடுத்து சொல்லுவம்  வேற வழியில்லையே, என்னும் நோக்கில் வேக்கியை ஒன் செய்தார் சுயாத் ஓவர் என முடிக்க முந்திக்கொண்டு டயஸ் சொன்னார்,  ஆள் வந்திட்டு நீங்க வாங்க  என அட கருமம் தப்பிச்சம்  சாமி என ஒரு  சந்தோஷம் ,இரவு நடந்து விடியகாலை அறிவிச்சு எங்க  ஆக்களின்  இடம்  வந்து முதல் வேலையா இவனை ஓடி  போய்  என்ன  நடந்தது  என கேட்க  போனால் அவன் மிக பெறுமதியான  தகவலுடன் வந்திருந்தான் .

செக்கள் பொழுதில் ஆமி கலைக்க இவன் கொஞ்ச தூரம்  ஓடியவன் விழுந்து படுத்து விட்டான் ஒரு பற்றையில், இவனை  கடந்து ஆமி போயிட்டு புலி ஓடிட்டு  என கிளியர்  பண்ணிபோட்டு  போக, பிறகு எழும்பி  இவன் நடக்க தொடங்கி  இருக்கிறான், அப்பொழுது கல்லிருப்பு ரோட்டால் ஆமி ஆட்லறிகளை கட்டியபடி  உழவு இயத்திரம் போவதை  கவனித்தவன் றோட்டை  கடக்காமல்  பக்கவாடாக  நடந்து எங்க போகுது  என  தொடர்த்து போய் மூன்று முறிப்பு சந்தியில் இருந்து கோண வாக்கில் ஒரு  ஆட்லறி நிலை புதிதாக  அமைக்கபட்டு  இருப்பதையும் ,அதற்கு செல் அடிப்பது என்றால் மட்டும் பின்னணியில் இருந்து கொண்டுவந்து அடித்து விட்டு மீண்டும் ஆட்லறி கல்லிருப்பு நோக்கி போவதாகவும் இருநாள் பக்கத்தில் இருந்து அவதானித்து   விட்டு தான்  வெள்ளி பார்த்து வந்து சேர்த்த கதை சொன்னான் .

ஆச்சரியம் வெள்ளி படிப்பிக்க தூங்கியவன் இவனை நம்பி உள்ள கொண்டுபோக முடியாது என சொன்னவர்களுக்கு தான் செயல் மூலம் ஒரு பாடம் கொடுத்தான், வீரனை போல அவனும் நிலைமையில் தன்னை தயார் செய்து சாகாசம் புரிந்து வந்தான் ,சுயாத் நக்கலாக சொல்லும் இவன் ஓடி இருப்பான் ஐந்து பட்டு கம்பி வேலி  குறுக்க வந்திருக்கும் பாயிற பஞ்சில அதிலையே படுத்திட்டான் போல என ,ஓம் அண்ணை  அதுவும் உண்மைதான் நான் புகுந்து தான் வந்தான்  என மறுத்தான் போட்டான் இளங்கீரன் அவன் பின்னாளில் தனித்து வேவு பார்த்து செம்பியன் வேவு அணிக்கு போகும் அளவு வளர்த்து இருந்தான் .

மணியின் காதலும் ,வீரனின் பாசமும் ,அருளினியின் காதலும் ,றோமியோவின் வேட்கையும் இறுதியில் வென்று இருக்க வேணும் எப்படி கனவாக போனது என்பதுதான் ரண வலி .

"அப்பால் ஒரு  நிலம்" இப்படியான ஒரு சாகாச வீரனை பேசி போகிறது ,தாங்கள் கொண்ட இலட்சியத்தின் பற்றை இறுதிவரை ஏந்தி, உறவுகள் பிரிந்து ,வசந்த காலங்களை தொலைத்து ,சக பெண் போராளிகளை காணும் போது எழும் காதல் பார்வைகள் புறம் தள்ளி, போர் என்னும் அரக்கனை வெல்லும் ஒரு நோக்கு மட்டும் கொண்டு ஒரு  போராளியாக பயணிப்பது  என்பது  ஒருவித தவநிலை தான் ,ஒவ்வெரு பெரு வெற்றியின் பின்னும் ஒரு சாதாரண வீரன் பெரு வீரனாக பேழையில் உறங்கி போன காலங்களை இப்பொழுது மனத்திரையில் கொண்டு வருகையில், இதயத்தின் ஒரு மூலையில் நெருச்சி முள்ளாக குற்றி போகுறது குற்ற உணர்வும் அவர்களால் வாழ்கிறோம் என்னும் இந்த பிச்சை வாழ்க்கையும் .

ஆனால் என்ன இந்த வீரர்கள் வாழ்வு எங்களில் இருந்து "அப்பால் ஒரு நிலமாக" வாழ்த்துகொண்டே இருக்கும் அது அவர்களுக்கான நிலம் .

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி அஞ்சரன்...இது[அப்பால் ஒரு நிலம்] புலனாய்வுப் பொறுப்பாளார் வீரமணியின் கதையா?

  • தொடங்கியவர்
10 minutes ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி அஞ்சரன்...இது[அப்பால் ஒரு நிலம்] புலனாய்வுப் பொறுப்பாளார் வீரமணியின் கதையா?

சாள்ஸ் அன்ரனி  சிறப்பு  தளபதி  வீரமணியாக  இருக்கலாம் ரோமியோ பாத்திரம் பிரிகேடியர் பால்ராஜ் ஆக  இருக்காலம்  ஆசிரியருக்கு  வெளிச்சம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் சாள்ஸ் அன்ரனியில் இருந்த வீரமணியைத் தான் குறிப்பிட்டேன்...ரோமியோ நிட்சயம் பால்ராஜ் அண்ணா தான்

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அப்பால் ஒரு நிலம் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். குணா கவியழகனின் மூன்று நாவல்களிலும் மிகவும் பிடித்தது இதுதான். புலிகளின் தியாகங்களையும், போட்டிகளையும், பொறாமைகளையும், காதல்களையும், மக்களின் போர் நிலத்து வாழ்வையும் அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளார்.

ஒரு சிறு இராணுவ நடவடிக்கையையே மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு நடாத்திய தளபதிகளையும், ட்ரோன் இல்லாததால் மிகவும் தியாக உணர்வும், சாகசங்களும் புரியக்கூடிய வேவுப்புலிகளை இழந்ததும், துயிலுமில்லத்தில் மழைத்துமி படாமல் தன் மகனின் வித்துடலுக்கு சேலைத் தலைப்பைப் பிடித்த தாயையும் கண்முன் கொண்டுவந்து கண்களைப் பனிக்கச் செய்துள்ளார்.

இவ்வளவு திறமையானவர்களை கொண்டிருந்த புலிகள் எப்படி அழிந்தார்கள் என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது.

தமிழர்களின் வீரவரலாற்றின் ஒரு துளியையாவது அறிந்துகொள்ள இப்புத்தகம் உதவும்.

 

  • தொடங்கியவர்
On 24/08/2016 at 9:54 PM, Athavan CH said:

 

இது  ஈழத்தின்  தலைசிறந்த கவிஞர்  நெற்கொலுதாசன்  அவர்களின்  பேஸ்புக்  பதிவு  ...தமிழ்நதியின்  எழுத்தே  எழுத்தா  என  கேட்கும்  அளவுக்கு  வளர்த்து  உள்ளார்  என்பது  மகிழ்ச்சி .

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
அப்பால் ஒரு நிலம்
குணா கவியழகன்
 
இரு தலைமுறைகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தினால் ஈழத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை வெறும், வெற்றி தோல்வி கணக்காக மட்டுமே பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்க்க முனைவதைக் காட்டிலும் பெரிய அபத்தம் எதுவுமில்லை. புலிகள் பிற இயக்கத்தினர், ராணுவம், அரசு, தமிழர்கள், சிங்களவர், முஸ்லீம்கள் என எல்லாத் தரப்பினருக்கும் அது சேர்த்திருப்பது வெவ்வேறு வகையிலான இழப்புகளையே. போர்நிலம் என்பது மரபார்ந்த திணைவகைகள் எதனுள்ளும் பொருந்தக் கூடிய ஒன்றல்ல. அதன் வாழ்முறையும், நிச்சயமற்ற தன்மையும், கொந்தளிப்பும், வெறுமையும், கைப்பும் பிறரால் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாதவை. அவ்வாறான போர்நிலத்து நிகழ்வுகளை புறவயமாக விவரிப்பதோடு மட்டுமல்லாது, அதனூடாக வாழ விதிக்கப்பட்ட மனிதர்களின் அகவயமான நெருக்குதல்களை, உணர்வுகளின் தெறிப்புகளை அவற்றின் நுட்பத்துடன் சித்தரிக்க முனைவதாலேயே ‘அப்பால் ஒரு நிலம்’ முக்கியமான நாவலாகிறது. ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் தவிர்க்க இயலாமையை , விடுதலையை , இயக்கத்தின் பங்களிப்பை, அவற்றின் நடைமுறை செயல்பாடுகளை ஒருவித இலட்சியவாத நோக்குடன், நேர்மறையாக அணுகும் தன்மையே இந்நாவலில் வெளிப்படுகிறது. இறுதிச் சமருக்கு முந்தையவொரு காலகட்டத்தில், கிளிநொச்சியில் ஏ-9 வீதியை ஒட்டி இலங்கை ராணுவத் தளமொன்று அமைக்கப்பட்டிருந்தது. வலுவான அரண்களோடு இருந்த அதை தாக்கி அழிக்கத் திட்டமிடுவதற்கு ஏதுவாக , அதற்குள்ளாக ஊடுருவிச் சென்று வேவு பார்த்துத் திரும்ப கட்டளையிடப்பட்ட இயக்கத்தை சார்ந்த இரு வீரர்களின் சாகசப் பயணமே இந்நாவலின் களம். அதை மாத்திரமே விவரித்திருந்தால் இந்நூல் போர்த்தந்திரம் குறித்த ஒரு ஆவணப் பதிவாகவோ சாகச வகையின்பாற்பட்ட விறுவிறுப்பானதொரு புதினமாகவோ அறியப்பட்டிருக்கும். ஆனால் இந்நாவல் போர்க்களத்து நிலவரங்களை விரித்து எழுதுவதுடன் மட்டும் நின்று விடாமல் அவற்றை பின்புலமாகக் கொண்டு மனித மனதின் இருத்தல் சிக்கல்களை , வாழ்தலுக்கான அதன் ஆழமான தவிப்புகளை உணர்ச்சிகரமான ஒரு நாடகமாக கட்டமைத்து காட்டிய விதத்தில்தான் அசலானதொரு இலக்கியப்பிரதியாகவும் வெற்றியடைந்திருக்கிறது.
 
-  கணியன் பூங்குன்றன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.