Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்குப்பல்கலைக்கழத்தில் தமிழின் நிலை....

Featured Replies

4242_1465116004_12522958_908661232583797

கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவன் சில சிங்கள இனவாத மாணவர்களால் தாக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் பல்கலைக்கழக நிர்வாகமோ அல்லது கண்டன அறிக்கை வெளியிட்ட அதிகாரிகளோ குற்றத்தை புரிந்த சிங்கள மாணவர்களுக்கு எதிராக எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.

தமிழ் மாணவன் சுமேச்காந்த் தாக்கப்பட்டு இரண்டாவது நாள் (26.05.2016) தமிழ் மாணவர்களின் நீதி கோரிய வன்முறையற்ற கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் இனவாத தாக்குதல் நடாத்திய அந்த  சிங்கள மாணவர்களுக்கு கால வரையறை இன்றிய வகுப்புத்தடையை வழங்கியது.

ஆனால் மறுநாள் (27.05.2016) சிங்கள மாணவர்கள் குறித்த தண்டனையை திரும்ப பெறுமாறும் அம்மாணவர்களை பரீட்சை எழுத அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்து பல்கலைக்கழக முன் வாயில் கதவினை மூடி வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டத்தினை வெளிப்படுத்தி பல்கலைக்கழக நிர்வங்கத்தினை  முற்றுகையிட்டனர்.இவ் அழுத்தத்திற்கு அடிபணிந்த பல்கலைக்கழக நிர்வாகம் பரீட்சை எழுதுவதற்கான அனுமதியினை வழங்குவதன் ஊடாக தண்டிக்கப்பட்ட சிங்கள மாணவர்களின் வகுப்புத்தடையை நீக்கியது.

27 ம் திகதி சிங்கள் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது மூடப்பட்ட பல்கலைக்கழக முன் வாயில் கதவினை திறக்க கோரிய கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவருக்கும் சில விரிவுரையாளர்களுக்கும் சிங்கள மாணவர்கள் பலர் "நாய்...." என்றும் மேலும்பல தகாத வார்த்தைகளால் திட்டி அவர்களை அவமானப்படுத்தி அவங்களின் வாகங்களுக்கு கால்களால் உதைத்துள்ளனர்.  கல்விமான்களையே சிங்கள மாணவர்கள் இவ்வாறு நடத்துகின்றனர் என்றால் அங்குள்ள சக தமிழ் மாணவர்களின் நிலை என்ன?  ஆசிரியர் சங்கத்தவரையும் விரிவுரையலர்களையும் நாயை விட கேவலமாக அவமானப்படுத்திய குறித்த சிங்கள மாணவர்களை ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் உடனடியாக தண்டிக்குமாறு கோரிக்கை விடுத்து ஆசிரியர் சங்கம் இன்றுவரை விரிவுரைகளை புறக்கணித்து வருகின்றது. ஆனால் பல்கலைக்கழக நிர்வாகமோ தமிழ் மாணவனைத்தாக்கிய, விரிவுரையாளர்களை உளவியல் ரீதியாக தாக்கி அவமானப்படுத்திய சிங்கள் மாணவர்களுக்கேதிராக எந்த ஒரு  நடவடிக்கை எடுக்காது அமைதி காத்துவருகின்றது.  

இது இவ்வாறு இருக்க குறித்த சிங்கள மாணவர்கள்,பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாகவும் விரிவுரையாளர்கள் தம்மை திட்டமிட்டு பழிவாங்க இவ்வாறு செயற்படுவதாகவும் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முடிந்தால் நிரூபிக்குமாறும் ஆசிரியர் சங்கத்தலைவரை விமர்சித்து வருகின்றனர்.

பல தமிழ் புலமையாளர்களையும் பற்றாளர்களையும் உருவாக்கிய கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனைத்தாக்கிய, விரிவுரையாளர்களை அவமானப்படுத்திய சிங்கள இனவாத மாணவர்களை தண்டிக்க பல்கலைக்கழக நிர்வாகம் பின்வாங்குவது அதன் நிர்வாகத்திறனை குறைத்து மதிப்பிட தூண்டுவதாக உள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இவ்வாறான  இனவாத  தாக்குதல்கள் இடம்பெறுவது இது முதல் தடவை அல்ல.

  •   தமிழில் தேசிய கீதம் இசைத்த போது செங்கலடி பிரதேச செயலக ஊழியர் பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே சிங்கள மாணவர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டார்.
  • தனியார் பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் பல்கலைக்கழக பேருந்து நிறுத்துமிடத்தில் வைத்து சிங்கள மாணவர்களால் தாக்கப்படதுடன் பேருந்தும் உடைக்கப்பட்டது.
  • அரச பேருந்து நடத்துனரும் பல்கலைக்கழ பேருந்து நிறுத்துமிடத்தில் வைத்து சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்டார்.
  • பல்கலைக்கழகத்தினுள் உள்ள சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்டார்.
  • பல்கலைக்கழக ஊழியர்கள் அவர்களின் பணி நேரங்களில் சிங்கள் மாணவர்களால் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவங்கள்.
  • பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் சிங்கள மாணவர்களால் அச்சுறுத்தப்பட்டும் தாக்கப்பட்ட சம்பவங்கள்.
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவ ஆலோசகர் பதவியில் இருந்த விரிவுரையாளர் சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள்.
  • விரிவுரை மண்டவங்களில் ஆபாசமாக நடக்க முற்படுகின்ற சிங்கள மாணவர்களை தட்டிக்கேக்க முயன்ற தமிழ் மாணவர்களை சிங்கள மாணவர்கள் தாக்கிய சம்பவங்கள்.
  • சுமேச்காந்தினை தாக்கியது போல பல தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள்.
  • 27ம் திகதி ஆசிரியர் சங்கத்தலைவரை அவமானப்படுத்தியது போன்று பல தமிழ் விரிவுரையாளர்களை அவமானப்படுத்திய சம்பவங்கள்.
  • பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் பொது நிகழ்வுகளின் போது தமிழில் வரவேற்பு பலகை வைப்பதை தடுக்கும் சிங்கள மாணவர்களின் நடவடிக்கைகளும் அதில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும்.

இவ்வாறு தொடர்ந்து செல்லும் சிங்கள இனவாத தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பல்கலைக்கழக நிர்வாகம்? பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன்வருமா?

இவற்றை ஒரு சிறிய ஆய்வுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நோக்குவோமாயின் கிழக்கு பல்கலைக்கழகழகத்தில் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் சிங்கள இனவாத நடவடிக்கைகள் மேலோங்கவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களினதும்,நிர்வாகத்தினறதும்,தமிழ் உணர்வற்ற தமிழர்களினதும்,பேரம் பேசும் நடைமுறை அரசியலில் இருந்து விலகிச்செல்லும் தமிழ் அரசியல் வாதிகளினதும் அசமந்த போக்கே காரணம் எனலாம்.

கிழக்குபல்கலைக்கழக ஆசிரியல் சங்கத்தின் அசமந்த போக்கிற்கு சிறந்த உதாரணமாக "சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்ட போது இவ் ஆசிரியர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை." என்பதை கூறலாம். எதிர்காலத்திலாவது இது பாராபட்சம் பார்க்காமல் செயற்படுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் அசமந்தப் போக்கிற்கு "இவ்வாறான இனவாத தாக்குதல்களை பல்கலைக்கழகத்திற்குள் இடம்பெராமர் இருக்க எந்த நிரந்தர் நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது" சிறந்த உதாரணமாகும்.

தமிழ் அரசியல் வாதிகளின் அசமந்த போக்கினை நோக்கினால் " முதல்தர பல்கைக்கழகமாக கிழக்கு பல்கைக்ககழகத்தினை  மாற்ற நடவடிக்கை எடுக்காது பல்கலைக்கழக பிரச்சனைகளை வாக்குகளுக்காக மாத்திரம் பயன்படுத்திக்கொள்ளும் வரலாற்று செயற்பாடுகளைக் குறிப்பிடலாம்."

தாக்கப்பட்ட தமிழ் மாணவனுக்கு ஆதரவளிக்கவும் நீதிக்காக குரல் கொடுக்கவும் தமிழர் சமுதாயத்தில் உள்ள தமிழ் மக்களும் சிவில் அமைப்புகளும் பின்வாங்கி நிப்பது  தமிழர் சமுதாயத்தின் அசமந்தப்போக்கினை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இவை எல்லாவற்றையும் தொகுத்து நோக்கினால் வீரம் படைத்த கிழக்கு மண்ணில்  தமிழ் மக்களின் தமிழ் உணர்வின்மையையும்,தமிழ் பற்றின்மையையும், ஒற்றுமையின்மையையும் வெளிப்படுத்தியே நிக்கின்றது எனலாம்.

 

http://battinaatham.com/description.php?art=4242

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.