Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை வழங்க பிரான்ஸ் ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை வழங்க பிரான்ஸ் ஆதரவு

[ Tuesday,7 June 2016, 03:38:19 ]   
France%20backs%20Sri%20Lanka.jpg

ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக பிரான்ஸ் உறுதி அளித்துள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா மீது விதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய மீன்பிடித் தடையை நீக்குவதற்கு பிரான்ஸ் ஆதரவு வழங்கியதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரான்ஸ்சிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பியுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் ஊடாக பிரான்ஸ்சுடனான இருதரப்பு கூட்டை மிகவும் உயர்ந்த மட்டத்திற்கு இட்டுச் செல்வதாக கூறியுள்ளார்.

பிரான்ஸ்சிற்கான விஜயத்தின் போது அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மங்கள சமரவீர மேற்கொண்டுள்ளார்.

பொதுவான பெறுமதிகள் மற்றும் அபிலாஷைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நீண்டகால உறவுகள் காணப்படுவதை இரண்டு நாடுகளின் அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த சந்திப்பில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா எட்டியுள்ள முற்போக்கான அரசியல் முன்னேற்றங்கள் குறித்து மங்கள சமரவீர விளக்கமளித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் முக்கியமான மூன்று அணுகுமுறைகளான ஜனநாயகத்தை வலுப்படுத்தல்,அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தல் போன்றவை குறித்து பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சருக்கு மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

http://ibctamil.com/news/index/24845

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.