Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத் தீர்வுக்கு அரசு முயல்வதாக குற்றஞ்சாட்டுகிறார் ஐ.தே.க. செயலாளர்.

Featured Replies

இராணுவத் தீர்வுக்கு அரசு முயல்வதாக குற்றஞ்சாட்டுகிறார் ஐ.தே.க. செயலாளர்.

பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வைக் காணும் முயற்சிகளை மேற்கொள்வதில் அரசாங்கம் தீவிரம் காட்டாமல் இராணுவ நடவடிக்கைகளிலேயே முனைப்புக்காட்டி வருவதாகத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, வடக்கு - கிழக்கு மட்டுமன்றி தெற்கு உட்பட முழு நாடும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகச் சுட்டிக் காட்டியிருக்கின்றது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒரு வழியில் மட்டும் தேடப்பட வேண்டும். ஆனால், அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வென்று கூறிக்கொண்டு போரிலும் முனைப்புக் காட்டுகின்றது. இதன் காரணமாக சமாதான முயற்சிகள் மேலும் பின்தள்ளப்படக்கூடிய அபாயம் இருக்கின்றது எனவும் அக்கட்சி தெரிவித்திருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நித்தம்புவவிலும், ஹிக்கடுவையிலும் இடம்பெற்ற பேரூந்து குண்டு வெடிப்புச் சம்பவங்களினால் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர் இத்தகைய குண்டுத் தாக்குதல்களை நாம் கடுமையாகக் கண்டிக்கின்றோம். தெற்கில் பொதுமக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்துவதன் மூலமோ, வடக்கில் மக்கள் மீது குண்டுகளைப் பொழிவதன் மூலமோ நெருக்கடிக்குத் தீர்வைக்கண்டுவிட முடியாது. அத்துடன் கண்டனங்களும், ஆத்திரமூட்டும் செயற்பாடுகளும் நெருக்கடிக்குத் தீர்வாக முடியாது. பதிலுக்குப் பதில் கொடுப்பதும், பழிவாங்கும் செயற்பாடுகளும் நெருக்கடியை மேலும் மோசமடையச் செய்வதற்கே உதவும். இதன் காரணமாக வடக்கிலும் தெற்கிலும் வாழும் பொது மக்கள் மட்டுமன்றி முழு நாடும் ஆபத்தான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

எனவே நாம் தூர நோக்குடனும், பொறுமையுடனும் பிரச்சினைக்குத் தீர்வைத் தேட வேண்டும். கடந்தகால அனுபவங்கள், உலக நடைமுறைகள் போன்றவற்றை ஆழமாகக் கவனத்திற்கொண்டு ஆராய்ந்து தீர்வுத் திட்டம் ஒன்றை விரைவில் முன்வைக்க வேண்டும். எமது நாட்டுக்குப் பொருத்தமான தீர்வாக அது அமைய வேண்டும். அந்த அரசியல் தீர்வுத் திட்டமானது அதிகாரப் பரவலாக்கலை அடிப்படையாகக் கொண்டதாகவும், சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களால் உடன்படக்கூடியதாகவும் அமைவது மிகவும் முக்கியமானதாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கூறுவது பயங்கரவாத செயற்பாடுகளை ஒழித்துக்கட்டி, மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால், தற்போதைய நெருக்கடிக்கு பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பித்து சமாதான முயற்சிகளை முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதேயாகும். சமாதான முயற்சிகளை துரிதப்படுத்துவதற்காகவே புரிந்துணர்வு உடன்படிக்கையை ஆளும் கட்சியுடன் செய்துகொண்டிருக்கின்றோம். ஆனால், அந்த உடன்படிக்கையின் அம்சங்கள் எதுவும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இச்சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது அரசாங்கத்தின் கடமைப்பாடாகும் என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

-Puthinam-

Edited by YARLVINO

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.