Jump to content

3 ஸ்டார் ரெசிப்பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

துடிப்பான,  துறுதுப்பான, குறும்புக்கார  நடிகர் கார்த்தி.  “நாக்குக்கு ருசியா இருக்கணும்... நமக்கு ஹெல்த்தியாகவும் இருக்கணும்்” என்கிற கார்த்திக்குப் பிடித்த உணவுகளை செய்து காட்டியிருக்கிறார், சென்னை ‘ப்ரியதர்ஷினி பார்க் ஹோட்டல்’  செஃப் தினகரன். உணவுகளின் பலன்களைச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அனுராதா.

p28b.jpg

வஞ்சிரம் மீன் கிரேவி

தேவையானவை:  வஞ்சிரம் மீன் - 500 கிராம், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளி  - தலா 200 கிராம், பெரிய வெங்காயம், பூண்டு, புளி - தலா 100 கிராம்,  காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மி.லி,  வெந்தயம், மிளகாய்த் தூள் - தலா 50 கிராம், கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தலா 20 கிராம், தனியா - 60 கிராம், தேங்காய் - 1.

p28a.jpg

செய்முறை: பெரிய வெங்காயத்தை அரைத்து விழுதாக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தைப்போட்டுப் பொரிக்கவும். வெந்தயம் பொரிந்ததும், கடுகு, சோம்பு மற்றும் வெங்காய விழுதைச் சேர்க்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை கலந்து வதக்கவும். பிறகு, மிளகாய்த் தூள், தனியா, மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு கலந்து, அரை டம்ளர் தண்ணீர்விட்டு வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி, கலவை கிரேவியானதும், தேங்காயை அரைத்துச் சேர்க்கவும். பிறகு, கழுவிய மீன் துண்டுகளை போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பரிமாறுவதற்கு முன், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பறிமாறவும்.

பலன்கள்: மீன் சாப்பிட்டால் இதயம் சம்பந்தமான பிரச்னைகள் வராது. அதிலிருக்கும் ஒமேகா 3 இதய பிரச்னைகள் தாக்காமலும், மன அழுத்தம் வராமலும் பாதுகாக்கும்.  எண்ணெயில் பொரிக்காமல், மீன்களை வேகவைத்துச் சாப்பிடுபவர்களுக்கு, மூளை செல்களின் வளர்ச்சி அதிகரித்து, நினைவு ஆற்றல் திறன் மேம்படும். இதுதவிர, பூண்டு, வெங்காயம், தக்காளி, மஞ்சள் என இதில் உள்ள பல பொருட்களும் மருத்துவ குணம்கொண்டவை.


கேரட் - வெள்ளரி சாலட்

தேவையானவை: கேரட், தக்காளி, பெரிய வெங்காயம் - தலா இரண்டு, வெள்ளரிக்காய் - 1, பச்சை மிளகாய் - 1, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு.

செய்முறை: கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, பெரிய வெங்காயம் ஆகியவற்றை மெல்லியதாக வெட்டிக்கொள்ளவும். மிளகாயைச் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். இவற்றை ஒன்று சேர்த்து, அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.

p28d.jpg

பலன்கள்: தினமும் எடுத்துக்கொண்டால், புற்றுநோய்க்கான வாய்ப்பு பெருமளவு குறையும். உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருக்க நினைப்பவர்கள், உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமானக் குறைபாடுகளைப் போக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.

ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

தேவையானவை:  பால் - 300 மி.லி, ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - 5,  ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்,  சர்க்கரை - சிறிதளவு.

செய்முறை:  பாலை நன்றாகக் கொதிக்கவிட்டு, ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். நன்றாகக் குளிர்ந்ததும், ஸ்ட்ராபெர்ரி பழங்கள், ஐஸ்கிரீம், சர்க்கரை சேர்த்து, மிக்ஸிியில் போட்டு அரைத்துக் குடிக்கவும்.

p28e.jpg

பலன்கள்: கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. ஸ்ட்ராபெர்ரி பழத்திலும், பாலிலும் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்பு, பற்களை வலுவாக்கும். ரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும். நினைவு ஆற்றலை அதிகரிக்கும். வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை எடுத்துக்கொள்ளலாம்.

பைனாப்பிள் ஜூஸ்

தேவையானவை:  பைனாப்பிள் - 300 கிராம், தண்ணீர் - 150 மி.லி, ஐஸ் கட்டி, சர்க்கரை - தேவையான அளவு.
 
செய்முறை: பைனாப்பிளில் இருக்கும் முட்களை சுத்தமாக நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதில் ஐஸ் கட்டி, தண்ணீர் கலந்து, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் குடிக்கலாம்.

p28f.jpg

பலன்கள்: வைட்டமின் சி அதிகம் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். சிறிதளவு வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் இருப்பதால், பார்வைத் திறனை அதிகரிக்கும். செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். ரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும். சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படாது. உடலில் நச்சுக்களை வெளியேற்றும். சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும்.

- குரு அஸ்வின், 
படங்கள்: எம்.உசேன்.

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=104122&sid=3136&mid=17

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : இன்னாடா சொல்லிக்கின்னே கிறேன் தாளமா போடுற ஆண் : சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன் பெண் : ஹான் காது வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு ஆண் : இன்னும் கூட கிழியும் காது தடுக்கும் பெண் : புரியாம பேசாத பல்ல தட்டுவேன் ஆண் : பேசுறதே புரியாது மொக்கை ஆய்டுவ  பெண் : யாரை பார்த்து பேசுறேன்னு நினைப்பிருக்குதா ஆண் : பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா பெண் : வம்பு பண்ணுனா கொன்னுபுடுவேன் ஆண் : ஆ ஆ ஆ நீ வளத்தது அப்படி நான் என்ன பண்ணுவேன் பெண் : ராங்கு பண்ணாத அப்றோம் எல்லாம் ராங்கா போய்டும் ஆண் : அது எப்படி போகும் ராஜா கைய வச்சா ஏன்டா டேய் அது ராங்கா புடுமாடா புடும் றிங்களா இல்ல போவாது றிங்களா குழு : போவாது போவாது ஆண் : அப்படி சொல்லு ஹான் ஹோ ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை குழு : ஹாஹாஹாஹா ஆண் : ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்லை ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான் குழு : தர ரம்பம் பம் ஆண் : கட்டவண்டி என்கிட்ட காரா மாறுன்டா ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடுன்டா ஆண் : என்னைப் பத்தி யாருன்னு ஊர கேளுப்பா இல்லையினா உன் வீட்டுக் காரை கேளப்பா ஆண் : சரக்கிருக்கு ஆண் : முறுக்கிருக்கு ஆண் : தலைகிறுக்கு அது எனக்கெதுக்கு   ஆண் : வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு வாசல்கள் தான் தொறந்தாச்சு பாடுங்கடா இசைப்பாட்டு ஆடுங்கடா நடைப்போட்டு ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்   ஆண் : கன்னிப்பொண்ணா நெனச்சி கார தொடனும் கட்டினவன் விரல்தான் மேலப்படனும் ஆண் : கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும் அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும் ஆண் : தெரிஞ்சவன் தான் ஆண் : ஓட்டிடனும் ஆண் : திறமை எல்லாம் ஆண் : அவன் காட்டிடனும்   ஆண் : ஓரிடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும் கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும் ஆண் : வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே தர ரம்பம் பம் .........! --- இந்த ராஜா கைய வச்சா ---
    • படைய மருத்துவர் லெப் கேணல் தமிழ்நேசன்        
    • காதல் என்னும் ஆற்றினிலே ........ ஜெமினி & சரோஜாதேவி .......!  😍
    • நண்பன்  1  : ஹை  மச்சான் என்னடா பண்ணுற ? நண்பன்2   :   நுளம்பு அடிக்கிறேண்டா  நண்பன் 1 :   எத்தனைடா   அடிச்சாய் ? நண்பன் 2  :  3   பெண் நுளம்பு   2 ஆண் நுளம்பு  நண்பன் 1  :    எப்புடிடா  கரெக்ட்டா சொல்கிறாய் ?   நண்பன்  2  :  3 கண்ணடி அருகே இருந்துச்சு                               2  பீர் பாட்டில் அருகே இருந்துச்சு  நண்பன் 1 : 😄😄😄 ....
    • கிளிநொச்சி   2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது. காயமடைந்த சிங்களப் படைவீரன் புஸ்பகுமாராவும் பண்டுவம் அளித்த தமிழரும்   2009ஆம் ஆண்டு தை மாதம் நடைபெற்ற மிக உக்கிரமான சமரின்போது காயமடைந்து வீழ்ந்துகிடந்த நிலையில் சமர்க்களத்தில் இருந்து புலிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் வைத்து தமிழீழ படைய மருத்துவர்களால் பண்டுவம் அளிக்கப்பட்டு மேற்பண்டுவத்திற்காக சிறீலங்காவிற்கு கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டார்.    சிங்களப் படைவீரனுக்கு பண்டுவமளிக்கும் தமிழீழத் தாதியர்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.