Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனச்சிக்கலிற்கான அரசியல் தீர்வு கணக்கெடுக்கப்படாமல் போய்விடுமோ என்ற வலுவான சந்தேகம் உள்ளது

Featured Replies

கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உடனான நடராஜா குருபரனின் நேரடிச் செவ்வியின் தமிழாக்கம்-

 

 

மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் (CPA) நிறைவேற்றுப் பணிப்பாளரும் அரசியல் விமர்சகரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, GTBC வானொலியின் விழுதுகள் அரசியல் நிகழ்ச்சிக்காக ஆங்கிலத்தில் வழங்கிய செவ்வியின் தமிழ் மொழிபெயர்ப்பு...நேர்கண்டவர் நடராஜா குருபரன்.


குருபரன்: மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளராக மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணியின் செயலாளருமாக, போரின் பிந்தைய சூழலில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை நீங்கள் எப்படி விபரிக்கின்றீர்கள்?


பாக்கிய சோதி சரவணமுத்து:  போர் முடிவுக்கு வந்தது. துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டன. அவர்கள் விளங்கிக்கொள்ள மறுத்தது யாதெனில், போரின் பிந்தைய காலம் என்பதிலிருந்து முரண்பாடிற்கு பிந்தைய காலம் என்பதை நோக்கி நகர வேண்டும் என்பதாகும். முரண்பாட்டிற்கு பிந்தைய காலம் என நான் கூறுவது, முரண்பாட்டிற்கான மூல காரணங்கள் தொடராமல் அல்லது மீளெழாமல் இருப்பதான சூழலாகும்.


ராஜபக்ச ஆட்சியில் முரண்பாட்டிற்கான மூல காரணம் தொடர்ந்தது மட்டுமல்லாது, வேறு புதிய முரண்பாட்டிற்கான காரணங்களும் கொண்டுவரப்பட்டது. அதாவது முஸ்லிம் சமூகம் மீதான தாக்குதல்கள் போன்றவையாகும்.


மகிந்தவின் ஆட்சி பேரினமனப்பான்மையிலான, சர்வாதிகாரமான சனரஞ்சகமற்றதானதாக இருந்தது. நல்லிணக்கம் பற்றிய எந்த எண்ணமும் இருக்கவில்லை. அரசியல் தீர்வு தொடர்பில் உண்மையான எந்த எண்ணமும் இருக்கவில்லை. மகிந்த நினைத்தார் யுத்தம் எல்லாத்திற்கும் தீர்வு கண்டு விட்டதாக.


தண்டனையில் இருந்து தப்புவதற்காக எல்லாவற்றையும் செய்வதாக அவரது பாங்கு குறிப்பாக இருந்தது.


வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய ஒற்றுமை என்பன தொடர்பில் எந்தவொரு கருத்துள்ள முயற்சியும் ராஜபக்சவின் ஆட்சியில் இருக்கவில்லை. ஒவ்வொருவரும் மத்திய அரசில் முன்வைக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு மத்திய அரசினாலேயே அமுல்படுத்தப்படும் பொருண்மிய அபிவிருத்தி திட்டங்களில் இணைய வேண்டும் என்பதே அவரின் கருதுகோளாக இருந்தது. ஆனால் ஒருமைப்பாடு, தேசிய ஒற்றுமை என்பன சீமெந்தினால் கட்டப்பட முடியாதது.

குருபரன்: ராஜபக்ச அரசாங்கம் ஆனது எதிர்பாராத விதமாக கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ச அரசாங்கத்திற்கு பிந்தைய சூழலை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகின்றீர்கள்?


பாக்கிய சோதி சரவணமுத்து: ராஜபக்சவிற்கு பிந்தைய சூழலில் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உண்மையில் இருக்கின்றது. சாத்தியமற்றது என கருதப்பட்ட ஒன்றை நாம் கடந்த சனவரி, 2015 இல் பெற்று இருக்கின்றோம். இதற்கு ஒவ்வொருவரும் தமது பங்கை சரியாக செய்திருந்தனர். சாதரண குடிமக்கள் தொடக்கம் செயற்பாட்டாளார்கள் வரை தமது பங்களிப்பைச் செய்திருந்தனர். ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல்கள் பெரிதும் வெளிக்கொணரப்பட்டது.


ஆனால் ராஜபக்ச அரசாங்கத்திற்கு பிந்தைய காலத்தில் சில சவால்கள் இருக்கின்றன. அதில் முதலாவது, ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கமானது ஒரு கூட்டணி அரசாங்கமாக இருக்கின்றது. இதில் தசாப்தங்களாக அரசியல் போட்டியாளர்களாக இருக்கும் இரண்டு மாபெரும் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஆகவே, அவர்களிற்கு இடையிலான தொடர்பாடல்களில் சிக்கல்கள் இருக்கின்றது. அவர்களின் கொள்கை தொடர்பாக பல வேறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளன. அதே சமயம் அவர்கள் இருவரும் ஒருமித்த கருத்து வைத்திருக்கும் விடயங்களும் உண்டு. அதாவது, நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி முறைமையை ஒழித்தல் என்பன.


இப்போதுள்ள விடையம் என்னவெனில், இந்த இருபெரும் கட்சிகளும் பகிரங்கமாக வெளியே வந்து தேசிய உரையாடலில் ஈடுபட வேண்டும். அதாவது அரசியலமைப்பு சீர்திருத்தம் என் தேவை? அரசாங்கம் அரசியலமைப்பு சீர்திருத்தமாக எதனை முன்வைக்கின்றது? அரசியல் மற்றும் அரசியலமைப்பு தீர்வு என்பன இனச்சிக்கலை தீர்க்க  ஏன் தேவையாக இருக்கின்றது? இடைக்கால நீதி ஏன் தேவையாகின்றது? இது குறித்த விடையங்கள் எல்லாம் இந்த அரசாங்கத்தால் பகிரங்கமாக்கப்பட வேண்டும்.


சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மற்றும் பொது விழிப்புணர்வு பிரச்சாரம் என்பன தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

குருபரன்: இந்த ஆட்சியின் இனச்சிக்கல் தொடர்பான அணுகுமுறையில், ஏதாவது மாற்றத்தை நீங்கள் காண்கின்றீர்களா?


பாக்கிய சோதி சரவணமுத்து: சனவரி 2015 இல் ஆட்சி மாற்றத்தை நோக்கி தேர்தலை முகம் கொடுக்கையில், இனச் சிக்கல் தொடர்பான விடையங்களை தற்காலிகமாக கிடப்பில் போட வேண்டும் என அனைவரும் ஒப்புக்கொண்டனர். இல்லை எனில் பரந்தளவில் ஆட்சிமாற்றம் குறித்த ஒற்றுமையை ஏற்படுத்த அது தடையாக இருக்கும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூட தனது எல்லா எதிர்ச் சக்திகளுக்கும் ஆதரவு கொடுத்தது. ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே அந்த ஒற்றுமையின் எதிர்பார்ப்பாக இருந்தது. இப்போது ராஜபக்ச அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. இப்போதுள்ள சவால் என்னவென்றால், அரசியல் தீர்வு நோக்கிய சகலரினதும் அர்ப்பணிப்பு என்பதே.

குருபரன்: நீங்கள் எந்தவொரு அரசாங்கத்தினதும் ஆட்சி பற்றி அச்சமின்றி விமர்சனங்களை முன்வைப்பவர். இந்த அரசாங்கம் இன நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சி அரசு போன்றன குறித்து ஏமாற்றுவதாக பொதுவாக சொல்லப்படுகின்றது. இது பற்றிய உங்கள் கருத்து ஆம் அல்லது இல்லை என்பதை காரணத்துடன் விளக்குக?


பாக்கிய சோதி சரவணமுத்து: அரசாங்கம் இரண்டு கொள்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. ஒன்று அரசியலமைப்பு சீர்திருத்தம். மற்றையது இடைக்கால நீதி. தற்போது இந்த விடையங்கள் துரித கதியில் நடைபெறவில்லை என்ற விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் மக்கள் ஒன்றை கண்டுகொள்ள வேண்டும். அது என்னவெனில், போரிற்கு ஆறு வருடங்களின் பின்பு, விடையங்கள் போதுமானளவில் நடைபெறவில்லை. ஆனால், சில விடையங்கள் நடந்து தான் இருக்கின்றது. அதனால், இந்த அரசாங்கத்தின் முன்னேற்ற அறிக்கை படுமோசமாகவும் இல்லை. அதே நேரத்தில், மிகத் திறமையாகவும் இல்லை. ஆனால், இந்த அரசாங்கம் சரியான திசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் பிரதிநிதித்துவ குழுக்கள் உள்ளன. அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் அவர்கள் பேசுகின்றனர். புதிய தேர்தல் முறைமை தொடர்பில் அவர்கள் பேசுகின்றனர். ஆகவே, சில நல்ல விடையங்கள் நடந்தேறுகின்றன. ஆனால், விடையங்கள் துரித கதியில் நடைபெற வேண்டுமென்றே நானும் விரும்புகின்றேன்.

குருபரன்: இது பற்றி மக்கள் கருத்துக் கணக்கெடுப்பு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. ஆனால், இனச்சிக்கலிற்கான அரசியல் தீர்வு கணக்கெடுக்கப்படாமல் போய்விடுமோ என்ற வலுவான சந்தேகம் உள்ளது. புதிய அரசியலமைப்பு, சிறுபான்மையினருக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய சொற்கள் கூட்டு எதிர்க்கட்சியின் அழுத்தம் காரணமாக உத்தேச புதிய அரசியலமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பாக்கிய சோதி சரவணமுத்து: உண்மை தான். புதிய அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு தீர்வு தொடர்பில் சில அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அவர்கள் இதனை இல்லாமல் செய்ய முனைவார்கள். அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் இடைக்கால நீதி என்பன மிக முக்கியமானது. அரசியலமைப்பு சீர்திருத்தத்தை உருவாக்க முனையும் எந்தவொரு அரசியல் கட்சியும் இனச்சிக்கலிற்கான அரசியலமைப்பு தீர்வு மற்றும் இடைக்கால நீதி என்பனவற்றை தவிர்ப்பதற்கு எந்த வழியும் இருக்காது. நான் நினைக்கின்றேன், இந்த விடையங்கள் மிகத்தீவிரமாக உள்ளன. இந்த விடையங்கள் நன்கு அறியப்பட்டனவாக உள்ளன. இவற்றை மறைக்கவோ அல்லது புறந்தள்ளவோ முடியாது. நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்பனவே இன்று மையக் கேள்விகளாக உள்ளன. இந்த அரசாங்கமானது ஈற்றில் இனச்சிக்கலிற்கான அரசியல் தீர்வு தொடர்பில் நேர்மையாக நடந்து கொள்ளும் என நான் நம்புகின்றேன். இதற்கான சரியான பொறிமுறைக்கான கொள்கை குறித்து ஏற்கனவே எழுந்துள்ளன. நல்லிணக்க பொறிமுறையையும் பார்க்கலாம். எல்லாம் சரியான திசையை நோக்கியே பயணிக்கின்றன.

குருபரன்: எனது அவதானிப்பின் படி, சமாதானத்தை ஊக்கிவிப்பவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச சமூகம் போன்றோர் உத்தேச அரசியலமைப்பின் சட்டவரைவின் முன்னுரையிலிருந்து மேற்குறித்த விடையங்கள் நீக்கப்பட்டது தொடர்பில் அறியாமலே உள்ளனர். ஏறத்தாழ, தாம் என்ன செய்கின்றோம் என்பதை விட தாம் என்ன சொல்கின்றோம் என்பதையே சருவதேச சமூகம் நம்பும் படியாக இந்த நல்லிணக்க அரசாங்கம் செய்துள்ளது. இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?


பாக்கிய சோதி சரவணமுத்து: நான் நினைக்கின்றேன், எப்படி விடையங்கள் நடந்தேறுகின்றன என்பதை சருவதேசம் பார்க்க வேண்டும் என்றே இந்த நல்லிணக்க அரசாங்கம் விரும்புகின்றது. அவர்கள் தாங்கள் போதுமானவற்றை செய்ததாகவே உணருகின்றார்கள். தாம் சொல்வதை கேட்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். இதில் முக்கியமான விடையம் என்னவெனில், சனவரி, 2015 இன் பின்னர் இலங்கை தொடர்பாக நல்லெண்ணமே நிலவுகின்றது. தாம் சில விடையங்கள் குறித்து உறுதியளித்ததாலேயே இந்த நல்லெண்ணம் எற்பட்டதாக இந்த அரசாங்கம் உணர்கின்றது. ஆட்சிமுறை, இனச்சிக்கலிற்கான தீர்வு மற்றும் இடைக்கால நீதி என்பனவே அவை. ஆகவே இந்த விடையங்கள் குறித்து இந்த அரசாங்கம் தன்னால் இயலுமானளவில் உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்றது என சருவதேச சமூகம் நம்பும் வரையில் இலங்கை குறித்த இந்த நல்லெண்ணம் இல்லாமல் போகாது. இது ஒரு வெற்றுக் காசோலை போல. அரசாங்கம் செய்யப் போகும் இந்த முயற்சிகளில் சருவதேச சமூகம் தனது ஆதரவுகளை வழங்கும். இந்த அரசாங்கம் என்ன செய்தாலும் சருவதேச சமூகம் ஆதரவு நல்கும் என்பதாக இருந்தால், அது எமக்கு ஆபத்தனது. உள்நாட்டு மற்றும் சருவதேச தூண்டல்களும் அழுத்தங்களும் இந்த அரசாங்கம் வேலைகளை செய்ய காரணங்களாக அமையும்.

குருபரன்: என்ன நடக்கின்றது என்பது குறித்து நன்கு அறிந்திருந்தும், தனக்கு நடந்த சில விடையங்கள் தெரியாது இருப்பது போல சருவதேச சமூகம் பாசாங்கு செய்கின்றது என நான் சந்தேகிக்கின்றேன். இது குறித்து உங்களது பார்வை என்ன?


பாக்கிய சோதி சரவணமுத்து: நான் நினைக்கின்றேன், தனக்கு விடையங்கள் தெரியது என சருவதேச சமூகம் கூற முடியாது என. ஏனெனில், நடப்பவை எல்லாம் அவர்களது இராசதந்திர வட்டாரங்களிற்கு தெரியப்படுத்தப்படுகின்றது. அவர்கள் அரசாங்கத்துடனும் சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் நல்ல தொடர்பில் இருக்கின்றார்கள். எனவே, அறியாமை என்பது ஒரு சாட்டாகவோ அல்லது விளக்கமாகவோ இருக்க முடியாது.

குருபரன்: இன்று இரு பெரும் பிரதான கட்சிகளும் அரசாங்கத்தில் உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, எதிர்க்கட்சியாக இருந்தாலும் அரசியலில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி போலவே இருக்கின்றது. எனவே, இந்த முறை இனச்சிக்கலிற்கு அரசியல் தீர்வு எட்டப்படவில்லை எனின், எதிர்வரும் காலங்களில் அது சாத்தியம் என நீஙகள் நினைக்கின்றீர்களா?


பாக்கிய சோதி சரவணமுத்து: அரசியலமைப்பு சீர்திருத்த விடையத்தை எடுத்துக்கொண்டால், இந்த அரசாங்கமானது முதலில் தேர்தல் முறைமை மாற்றத்திலிருந்து தான் ஆரம்பிப்பதில் ஆர்வமாக உள்ளது. அவர்கள் தேர்தல் முறைமை மறுசீராக்கத்தில் இணக்கத்தை முதலில் பெற்றால், அரசியலமைப்பு மறுசீராக்கம் தொடர்பில் இணக்கத்தை பெறுவது இலகுவாக இருக்கலாம். அதிகாரப் பரவலாக்கம் குறித்த கலந்துரையாடல்களும் விவாதங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், அது அவ்வளவு இலகுவானதல்ல.


இது குறித்து சில முக்கிய கேள்விகள் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும். இரண்டாவது சரத்தின் மூன்றாம் பிரிவு மற்றும் வடக்கு-கிழக்கு இணைப்பு குறித்த விடையம் போன்றவையே அவை.


நாட்டின் கட்டமைப்பு மற்றும் தமிழ் பேசும் மக்களின் முழுமையான உரிமைகள் என்பனவற்றை கருத்தில் கொண்டு அதிகரப்பரவலாக்கம் குறித்த விவாதங்களை முன்வைக்க வேண்டும். அதே நேரம், பேச்சுவார்த்தையின் முடிவில் வருவது சமரசமாக இருக்கும் என்பதை கண்டுகொள்ள வேண்டும். ஏனெனில், இரண்டு தரப்புக்கள் உண்டு. இலங்கையை பொறுத்த மட்டில், அதிகாரப் பரவலாக்கம் குறித்துப் பேசும் போதும், ஏதாவது ஒரு விவரண வார்த்தையுடனே பேசப்படுகின்றது. ஒற்றையாட்சி, சமஸ்டி, இணைப்பு....இப்படி தான் பேசப்படுகின்றது. இந்த நாட்டில் மாகாண அரசாங்கங்களினது அனுபவத்தை நாம் பார்க்க வேண்டும். வடக்கு-கிழக்குக்கு வெளியேயும் இதனைப் பார்க்க வேண்டும். ஏனெனில் வட மாகாணசபை 2013 இல் தான் வடக்கிற்கு வருகின்றது. வயம்ப மற்றும் வட-மத்திய மாகாணங்களில் அவை 1988 இலிருந்தே இருக்கின்றது. மத்திய அரசின் தலையீடுகள் தொடர்பில், வட-மத்திய மாகாண முதலமைச்சர்கள் தெரிவிக்கும் புகார்களுக்கும் வட மாகாண முதலமைச்சர் தெரிவிக்கும் புகார்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால் இனம் குறித்த வேறுபாடுகள் உண்டு. அவை குறித்து கணக்கில் எடுக்கப்பட வேண்டும். எனவே அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில், மிகவும் நிதானமானதும் தீவிரமானதுமான விளக்கங்கள் சாத்தியமான வகையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
குருபரன்: அரசியலமைப்பில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த இந்த அரசாங்கம் தவறியுள்ளது. இலங்கையிலுள்ள சிறுபான்மைக் கட்சிகள் இது குறித்து என்ன செய்ய முடியும்? ஒரு அரசியல் விமர்சகராகவும் செயற்பாட்டாளராகவும், நீங்கள் இது குறித்து என்ன ஆலோசனை கூறுகின்றீர்கள்?


பாக்கிய சோதி சரவணமுத்து: அரசியலமைப்பு குறித்து எனது ஆலோசனை என்னவெனில், மக்கள் பிரதிநிதித்துவ குழு நாடு முழுவதிலும் சென்று மக்களின் கருத்துக்களை அறிகின்றது. அரசியல் நிர்ணய சபை கூடுகின்றது. அங்கு விவாதங்கள் நடைபெறுகின்றது. இந்த அரசாங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நடந்துகொள்ளும் முறை பற்றியும் புதிய பொறிமுறையில் எவ்வாறான முக்கிய விடையங்கள் அவசியமானது என்பது பற்றியுமான தமது மதிப்பீடுகளை இந்த நாட்டின் குடிமக்கள் அனுப்பி வைக்க வேண்டும். வடக்கிலோ, கிழக்கிலோ, மேற்கிலோ அல்லது தெற்கிலோ என்பதல்ல சிக்கல், இந்த விடையங்கள் சரியாக நடைபெறுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பரிய பொறுப்பு சிவில் சமூகங்களிற்கு உண்டு. நிறைவேற்று அதிகார சனாதிபதி முறைமையை ஒழித்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கல் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பன தொடர்பில் நாம் இரண்டு தசாப்தங்களாக பேசி வருகின்றோம். நான் உறுதியாக சொல்ல வருவது என்னவெனில், தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தால் விடையங்கள் எமது நாட்டில் சாத்தியமாகும். கைவிடாது தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.

குருபரன்: ஆரம்பத்தில் தமிழர்கள் வன்முறையற்ற சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இது பின்னர் ஆயுதப்போராட்டமாக மாறியது. 2009 ஆம் ஆண்டில், ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தது. வன்முறையற்ற அரசியல் போராட்டங்கள் மூலமாக ஒரு குறைந்த பட்ச தீர்வையாவது பெற்றுக்கொள்வதில் இப்போது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். இதுவும் தோல்வியடைந்தால், ஆயுதப் போராட்டம் மேழெழுவது தவிர்க்க முடியாதது என நீங்கள் நினைக்கின்றீர்களா?

பாக்கிய சோதி சரவணமுத்து: தவிர்க்க முடியாதது என நான் நினைக்கவில்லை. ஆனால் அது சாத்தியமானது. மக்கள் மனம் முறிவடைந்து தாம் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தால், அதாவது இப்போதுள்ள இந்த ஒருமைப்பாடுகள் குறித்த செயன்முறையில் நம்பிக்கை இழந்தால், அவர்கள் மீண்டும் ஆயுதமேந்துவார்கள் என்பது சாத்தியமானதே. ஆனால், தற்போதைய சூழலில், என்னைப் பொறுத்தளவில், எந்த அரசியல் கட்சியும் தனிநாட்டு கோரிக்கையை நோக்கி போவதாக இல்லை. இதற்கான வெளியும் மக்களிடத்தில் உண்மையாக இருப்பதாக தெரியவில்லை. எனவே, அதிகாரப் பரவலாக்கம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதில் தான் விடையங்கள் தங்கியுள்ளன.

குருபரன்: அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடையங்களில் ஒரு மனித உரிமை செயற்பாட்டாளராக தற்போதய அரசாங்கத்திற்கு என்ன ஆலோசனை கூறவருகின்றீர்கள்?


பாக்கிய சோதி சரவணமுத்து: அரசியல் கைதிகள் விடையத்தில் என்ன சொல்ல வருகின்றேன் என்றால், அவர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யுங்கள் அல்லது அவர்களை விடுவியுங்கள். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து பத்து, பதினைந்து வருடங்களிற்கு மேலாக அவர்களை சிறையில் வாடவைப்பது குற்றச் செயலாகும். அவர்களது குடும்பங்களின் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும். இப்படி அவர்களை சிறைகளில் அடைத்து வைத்திருப்பது தொடர அனுமதிக்கக் கூடாது.


இது தொடருமானால், இந்த அரசாங்கம் வடக்கு கிழக்கிற்கு வெளியிலான அரசாங்கம் போல பார்க்கப்படும். ஆகவே இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133064/language/ta-IN/-----.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.