Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்து எதிர் இலங்கை ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவு

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவு:-

 

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்பாராத விதமாக சமனிலையில் முடிவடைந்துள்ளது.


இரண்டு அணிகளுமே நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் தலா 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இங்கிலாந்து அணி வீரர் ப்லான்கெட் இறுதிப் பந்தில் ஆறு ஓட்டம் பெற்று போட்டியை சமநிலை செய்தார்.


நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி இலங்கையைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.


இதன்படி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.


இதில் அணித் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் 73 ஓட்டங்களையும் சீக்குகே பிரசன்ன 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.


பந்து வீச்சில் வோகஸ், வில்லி மற்றும் ப்லான்கெட் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.


இதில் கிறிஸ் வோகஸ் ஆட்டமிழக்காது 95 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 93 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.


பந்து வீச்சில் சுரங்க லக்மால், அன்ஜலோ மெத்யூஸ் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.


போட்டியின் ஆட்ட நாயகனாக கிறிஸ் வோகஸ் தெரிவு செய்யப்பட்டார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133350/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

பரபரப்பான போட்டி சமநிலையில் முடிவடைந்தது (காணொளி இணைப்பு)

 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

Sr_vs_En.jpg

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

அணிக்காக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் மெத்தியுஸ் 73 ஓட்டங்களை பெற்றதோடு, அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சீக்குகே பிரசன்ன 28 பந்துகளில் 59 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

 

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சினை பொருத்தவரையில், வில்லி, வோர்க்ஸ் மற்றும் பிளங்கட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறியது. 82 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.

இதன்பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வோர்க்ஸ் ஆட்டமிழக்காமல் 95 ஓட்டங்களை பெற்றதோடு, பட்லர் 93 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இறுதியில் 1 பந்துக்கு 7 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் பிளங்கட் 6 ஓட்டத்தை விளாசி போட்டியை சமநிலை படுத்தினார்.

இங்கிலாந்து அணி 8 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மெத்தியுஸ், லக்மால் மற்றும் பிரதீப் தலா 2 விக்கட்டுக்களை கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் கிரிஸ் வோர்க்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/article/7921

  • தொடங்கியவர்

பிளன்கெட் அடித்த கடைசி பந்து சிக்ஸ்: 'டை' ஆன இலங்கை - இங்கிலாந்து போட்டி

 
 
படம்: கெட்டி இமேஜஸ்
படம்: கெட்டி இமேஜஸ்

டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் 286 ரன்கள் ஸ்கோரை விரட்டிய இங்கிலாந்து அணி பிளன்கெட் அடித்த பரபரப்பான கடைசி பந்து சிக்ஸரினால் 286 ரன்கள் எடுக்க போட்டி அரிதான முறையில் ‘டை’ ஆகி வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இங்கிலாந்தின் கடைசி வீரர் பிளன்கெட் இறங்கும்போது இங்கிலாந்து வெற்றி பெற 26 பந்துகளில் 52 ரன்கள் தேவைப்பட்டது. இலங்கை வெற்றி பெற்றிருக்க வேண்டும் இப்போதே, ஆனால் கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் என்பதாக நிலைமை மாறியது.

கிரீசில் பிளங்கெட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் நின்று கொண்டிருந்தனர், இருவரும் 49-வது ஓவரில் பவுண்டரிகள் அடித்து 16 ரன்களைச் சேர்த்தனர். கடைசி ஓவரின் முதல் 5 பந்துகளில் 7 ரன்களை இருவரும் எடுத்தனர், கடைசி பந்தில் டை செய்ய 6 ரன்கள் தேவை. நுவான் பிரதீப் கடைசி பந்தை சற்றே ஷார்ட்டாக வீச லியாம் பிளன்கெட் நேராக பவுலர் தலைக்கு மேல் சக்தி வாய்ந்த சிக்சை அடிக்க ஆட்டம் டை ஆனது.

இங்கிலாந்தை ஒரு விதத்தில் இலங்கை ஆடவிட்டது என்றே கூற வேண்டும், காரணம் ஜேசன் ராய், ஹேல்ஸ், ஜோ ரூட், மோர்கன் (43), மொயின் அலி ஆகியோர் பெவிலியன் திரும்ப 18-வது ஓவர் முடிவில் இங்கிலாந்து 82/6 என்று தோல்வி முகம் காட்டியது.

அதன் பிறகு 7-வது விக்கெட்டுக்காக சாதனைக் கூட்டணி அமைத்த கிறிஸ் வோக்ஸ் (95 நாட் அவுட்), ஜோஸ் பட்லர் (93) ஆகியோர் 7-வது விக்கெட்டுக்காக 138 ரன்களைச் சேர்த்தனர். 149 பந்துகளில் 138 ரன்கள் சேர்க்கப்பட்டது, 7-வது விக்கெட்டுக்காக இது 2-வது அதிக ரன் கூட்டணியாகும்.

ஜோஸ் பட்லர் 30/4 என்ற நிலையில் களமிறங்கினார், நிதானமாகத் தொடங்கி 99 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 93 ரன்கள் எடுத்து சீகூகே பிரசன்னாவிடம் ஆட்டமிழந்தார், ஷனகா பிடித்த கேட்ச் அருமையானது. கிறிஸ் வோக்ஸ் 92 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்தார். லியாம் பிளன்கெட் 11 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 22 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்ததோடு, டை-யிற்கான சிக்ஸரையும் அடித்தார்.

ஆஞ்சேலோ மேத்யூஸ் பேட்டிங்கில் நிதானமான 73 ரன்களை எடுத்து அணியை கரை சேர்த்ததோடு, ஜேசன் ராய், ஜோ ரூட் ஆகிய அபாயகரமான விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

பேட்டிங்கில் இலங்கை அணி 56/3 என்று 8.4 ஓவர்களில் தடுமாறியது. சந்திமால் 37 ரன்கள் எடுத்தார். குசல் பெரேரா (24), மெண்டிஸ் (17) ஆகியோர் தொடங்கி பிறகு ஆட்டமிழந்தனர். சந்திமால் ஆட்டமிழந்த பிறகு நடுவில் ஒரு 8 ஓவர்கள் சீகூகே பிரசன்னாவின் அனாயசமான அதிரடியைக் காணமுடிந்தது, ஒரு புறம் ரன்களே வராமல் இருந்த நிலை போக இவர் இறங்கியவுடன் தாறுமாறு அடியாக மாறிப்போனது, அன்று ஜெயசூரியாவின் 48 பந்து சத சாதனையை நூலிழையில் தவறவிட்ட சீகுகே நேற்று முதல் 16 பந்துகளில் 15 ரன்களை எடுத்தார், ஆனால் அதன் பிறகு 12 பந்துகளில் 44 ரன்களை விளாசினார். அதிர்ச்சியூட்டும் அதிரடி.

அதாவது 28 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்தார், மொத்தம் 56 ரன்கள் ஓடவேண்டிய தேவையில்லாமல் பவுண்டரிகளாக்வே வந்தது. மொயின் அலி, பிளென்கெட் வீசிய ஒரு 5 பந்துகளில் 4 சிக்சர்கள். அந்தத் தருணத்தில் 3 ஓவர்களில் இலங்கை 49 ரன்கள் விளாசியது, எங்கிருந்தோ வந்தார் இதுதாண்டா நான் என்றார் சீகுகெ பிரசன்னா. ஒரு காலத்தில் அரவிந்த டிசில்வா இப்படித்தான் நம்பமுடியாத அதிரடி ஆட்டம் ஆடுவார்.

இலங்கை அணி ஷனகாவின் 20 ரன்களுடனும், மஹரூஃபின் 31 ரன்களுடனும் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.

ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி ‘டை’ ஆனது.

http://tamil.thehindu.com/sports/பிளன்கெட்-அடித்த-கடைசி-பந்து-சிக்ஸ்-டை-ஆன-இலங்கை-இங்கிலாந்து-போட்டி/article8759761.ece

  • தொடங்கியவர்
இலங்கை-இங்கிலாந்து ஒ. நா.ச.போ. தொடர்
 
21-06-2016 12:11 AM
Comments - 0       Views - 6

- ச.விமல்

Inkvacasrf.jpg

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், டெஸ்ட் போட்டிகளிலும் பார்க்க அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கும் என நம்பலாம்.

டெஸ்ட் போட்டிகளிலும் பார்க்க ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணி பலமானது. இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சவாலை வழங்கும் என எதிர்பார்க்க முடியும். ஆனால் இங்கேயும் துடுப்பாட்டம் இலங்கை அணி சார்பாக  கேள்விக்குறியாக உள்ளது. குஷால் பெரேரா மீண்டும் அணிக்குள் வந்துள்ளமை ஆரம்ப துடுப்பாட்டத்தில் பலம்.

டில்ஷான் இந்தத் தொடரில் விளையாடவில்லை. இது இலங்கை அணிக்கு பின்னடைவை உருவாக்கலாம். தனுஷ்க குணதிலக அடுத்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர். குஷால், குணதிலக ஜோடி எதிர்காலத்தில் சாதிக்கும் ஜோடியாக வலம் வரும் என நம்பலாம். அதிரடி மற்றும் நிதானம் கலந்த கலவை. குணதிலகவின் மித வேகப்பந்து வீச்சு மேலதிக பலம்.

அயர்லாந்து தொடரில் லஹிரு திரிமான்ன விளையாடவில்லை. குஷால் மென்டிஸ் மீது மத்தியூஸ் நம்பிக்கை வைத்துள்ளார். அயர்லாந்துடனான முதற் போட்டியில் அறிமுக அரைச்சதமடித்து  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இதே போன்று இங்கிலாந்து அணியுடன் தொடர முடியுமா? பார்க்கலாம். லஹிரு திரிமான்ன வெளியே இருக்கும் போது குஷால் மென்டிஸ், உபுல் தரங்க ஆகியோர் அணிக்குள் இருப்பது வேடிக்கையாக உள்ளது. அதிலும் தரங்க பின் மத்திய வரிசை வீரர். சீக்குகே பிரசன்ன சரியாக பந்து வீசாவிட்டாலும் அதிரடி மூலம் மீண்டும் அணிக்குள் இடம் பிடித்துள்ளார்.  தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் நம்பிக்கையானவர்கள்.

அடுத்த இடத்தில் இருந்த நம்பிக்கையான சகலதுறை வீரரான மிலிந்த சிரிவர்தன அணியால் நீக்கப்பட்டுள்ளார்.  நம்பிக்கையூட்டும் விதமாக அணியில் செயற்பட்டமை இவர் செய்த தவறா? முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டமிழந்த வேளைகளில் பின் வரிசை வீரர்களுடன் இணைந்து அணிக்கான ஓட்ட்ங்களை பெற்றுக் கொடுத்துள்ளார். பந்து வீச்சில் வாய்ப்புக்கு கிடைத்த வேளைகளில் விக்கெட்டுகளை கைப்பற்றியுளார். 13 போட்டிகளின் 10 இனிங்ஸில் 262 ஓட்டங்களை 29.11 என்ற சராசரியிலும், 40.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுளார். ஆறாம், ஏழாமிடங்களில் களமிறங்கும் வீரர் ஒருவருக்கு மோசமான பெறுதியா? முன் வரிசையில் விளையாடும் வீரர்களுக்கே இவ்வாறுதான் பெறுதிகள் இங்கே காணப்படுகின்றன. இவர் அணியால் நீக்கப்பட்டமைக்கான காரணம் சனத் ஜெயசூர்யாவுக்கே வெளிச்சம்.

தசுன் சானக அறிமுக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி நல்ல ஆரம்பத்தை பெற்றுள்ள போதும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இவரின் வேகம் போதாது என அணியால் நீக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை. சுழற் பந்து வீச்சாளர்கள் ஏற்கனவே இலங்கை அணிக்காக விளையாடியுள்ள போதும் இந்த அணியில் உள்ளவர்கள் மீண்டும் வாய்ப்பை பெற்றவர்கள். எனவே புதியவர்கள்தான். உள்ளூர் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடும் தனஞ்ய டி சில்வா ஒன்பதாவது இடத்தில் களமிறங்கினார். ஒரு ஓவர் மாத்திரம் பந்து வீசினார். அடுத்த போட்டியில் அணியில் இல்லை. அடடா இதுவல்லோ அறிமுகம்.

பர்வீஸ் மஹ்ரூப் அடுத்த போட்டியில் களமிறங்கினார். துடுப்பாட்டம் அதிரடியாக அமைந்தது. பந்து வீச்சு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. ஷமின்ட ஏரங்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மஹ்ரூப் விளையாடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நுவான் பிரதீப், சுரங்க லக்மால் ஆகியோரே வேகப் பந்துவீச்சில்    நிச்சயம் விளையாடவுள்ள வீரர்கள். சீக்குகே பிரசன்ன முழு நேர சுழற் பந்து வீச்சாளராக களமிறங்குவார் என நம்பலாம். சகலதுறை வீரர்கள் அணியில் அதிகம் உள்ளமையினால் 50 ஓவர்கள் பந்து வீசுவது என்பது சமாளிக்க கூடியளவில் இருக்கும்.

அணியாக பார்த்தால் புதிய அணி. பலமான இங்கிலாந்து அணியை இந்த அணியால் எதிர்கொள்ள முடியுமா?

இங்கிலாந்து அணி இந்த வருடத்தில் விளையாடும் இரண்டாவது தொடர் இது. தென்னாபிரிக்கா தொடரில் 2-3 என்ற தொடரில் தோல்வியடைந்துள்ளது. அதற்கு முதலில் பாகிஸ்தான் அணியை 4-1 என வென்றுளள்து. பலமான சமபலம் கொண்ட புதிய அணி. ஒய்ன் மோர்கனின் தலைமையில் சிறப்பாக வெற்றிகளைப் பெற்று வருகின்றது.

ஆரம்ப ஜோடி மிகப் பலமானது என கூற முடியாது என்றாலும் அலெக்ஸ் ஹேல்ஸ் அண்மைக்காலமாக ஓட்டங்களை அபாரமாக பெற்று வருகின்றார். ஜோ ரூட் மூன்றாமிலக்க வீரர். சமகால சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கன போட்டியில் உள்ளவர்களில் இவரும் ஒருவர். தலைவர் மோர்கன். அண்மைக்காலமாக  நல்ல போர்மில் இல்லை. ஆனால் இவர் மத்திய வரிசையில் சிறந்த வீரர். அடுத்தவர் ஜோஸ் பட்லர். ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஜோடி இணைந்தால் இங்கிலாந்து அணிக்கு ஓட்ட மழை பொழியும். பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக அணியால் நீக்கப்பட்டுள்ளமையினால் ஜொனி பெயர்ஸ்டோ அணியில் இடம் பிடிப்பார் என நம்பலாம். டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக அடித்தாடிய விதம் போர்ம் என்பன இவருக்கான வாய்ப்புகளை வழங்கும்.

மொயின் அலி அடுத்த இடத்தை பிடிப்பார். இவரின் அதிரடி   துடுப்பாட்டம், சுழற் பந்து வீச்சு என்பன நிச்சயம் கை கொடுக்கும். கிறிஸ் வோக்ஸ் சகலதுறை வீரர். டேவிட் வில்லியும் சகலதுறை வீரர். இவர்களுக்கான போட்டி ஒன்று நிச்சயம் இருக்கும். ஸ்டீபன் பின், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் முழு நேர வேக்கப்பந்து வீச்சாளராக களமிறங்குவார். ஜோர்டானின் துடுப்பாட்டம் மேலதிக பலம்.

இங்கிலாந்து அணி மிக நீண்ட துடுப்பாட்ட வரிசையை கொண்டுள்ளது. இதை தகர்க்கும் பலமான பந்து வீச்சு இலங்கை அணியிடம் உண்டா? சிறப்பான இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு இங்கிலாந்து அணியை வெற்றி பெறும் அளவுக்கு இலங்கை அணியின் துடுப்பாட்டம் நிலைத்து நின்று அதிரடியாக துடுப்பாட்ட கைவரிசையை காட்டுமா? இந்த ஒப்பீடுகளில் இலங்கை அணி பலவீனமாகவே உள்ளது. புதிய வீரர்கள். யார் விளையாடப் போகின்றார்கள் என்பதை இங்கிலாந்து அணி கணிக்க இயலாத நிலை உண்டு. இந்த பலவீனத்தை பலமாக மாற்றினால் தொடரைக் கைப்பற்றாவிடடாலும் போட்டிகளில் வெற்றி பெற முடியும்.

ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை அணியே இங்கிலாந்து அணியிலும் பார்க்க பலமானது. 64 போட்டிகளில் இலங்கை அணி 34 வெற்றிகளையும்  இங்கிலாந்து அணி 30 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

 

இங்கிலாந்தில் சம பலம்.  26 போட்டிகளில் இரு அணிகளும் தலா 13 வெற்றிகளை பெற்றுள்ளன. 2014ஆம் ஆண்டு இலங்கை அணி இங்கிலாந்தில் வைத்து 3-2 என்ற வெற்றியைப் பெற்றுக் கொண்டது. பின்னர் இலங்கையில் வைத்து 5-2 என்ற தொடர் வெற்றியைப் பெற்றது. வெற்றிகள் தொடருமா? இங்கிலாந்து அணி பழி தீர்க்குமா?

குழு விபரம்

இலங்கை

அஞ்சலோ மத்தியூஸ் (தலைவர் ), லஹிரு திரிமான்ன, தினேஷ் சந்திமால், குஷால் பெரேரா, தனுஷ்க குணதிலக, உபுல் தரங்க, தனஞ்சய டி சில்வா, நுவான் பிரதீப், சுரங்க லக்மால், குஷால் மென்டிஸ், தசுன் சானக, பர்வீஸ் மஹ்ரூப், சுராஜ் ரந்தீவ், சீக்குகே பிரசன்ன

 

இங்கிலாந்து

ஒய்ன் மோர்கன், (தலைவர்), மொயின் அலி, ஜொனி பெயர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், கிறிஸ் ஜோர்டான், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கட், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேஸன் ரோய், ஜேம்ஸ் வின்சென்ட், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்

முதற் போட்டி

ஜுன் 21, செவாய்க்கிழமை  மாலை 6.30 - ரென்ட் பிரிட்ஜ், நொட்டிங்ஹாம்

இரண்டாவது போட்டி

ஜுன் 24,  வெள்ளிக்கிழமை  மாலை 6.30 - எட்ஜ்பஸ்டன், பேர்மிங்ஹாம்

மூன்றாவது போட்டி

 ஜுன் 26,  ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டல்

நான்காவது போட்டி

ஜுன் 29, புதன் கிழமை மாலை 5.30 - கென்னிங்டன் ஓவல், லண்டன்

ஐந்தாவது போட்டி

ஜூலை 02, சனிக்கிழமை   மாலை 3.00  - சோபியா கார்டின்ஸ், கார்டிப்

- See more at: http://www.tamilmirror.lk/175241/இலங-க-இங-க-ல-ந-த-ஒ-ந-ச-ப-த-டர-#sthash.7OHRwah0.dpuf
  • தொடங்கியவர்

2ஆவது போட்டி நாளை: சந்தேகத்தில் மத்தியூஸ்
 

article_1466683718-Tamidouwhj2ndhMathewsஇங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டி, நாளை இடம்பெறவுள்ளது. இப்போட்டியில், இலங்கையின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் கலந்து கொள்வாரா என்பது குறித்துச் சந்தேகம் நிலவுகிறது. எட்ஜ்பஸ்டனில் இடம்பெறும் இப்போட்டி, இலங்கை நேரப்படி மாலை 6.30க்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி, சமநிலையில் முடிவடைந்திருந்தது. இலங்கை அணி தடுமாறிய போது 73 ஓட்டங்களைப் பெற்ற மத்தியூஸ், பந்துவீச்சில் 6 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். ஆனால், அதன் பின்னர் காயம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார். அதுவரை வெற்றியைத் தம்வசம் வைத்திருந்த இலங்கை, பின்னர் களத்தடுப்பிலும் உத்திகளிலும் மோசமாகச் செயற்பட்டுத் தோற்றிருந்தது.

மத்தியூஸூக்கு ஏற்பட்ட பின்தொடைத் தசைநார் உபாதை இன்றும் சரியாகாவிட்டால், இன்றைய போட்டியில் அவர் பங்குபற்ற மாட்டார் என்பதோடு, இலங்கை அணி துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் தலைமைத்துவத்திலும் பாரிய இழப்பைச் சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பந்தை எறிவதாக நிரூபிக்கப்பட்டு, பந்துவீசத் தடை விதிக்கப்பட்டுள்ள ஷமின்ட எரங்கவுக்குப் பதிலாக, மாற்று வீரரொருவரை இங்கிலாந்துக்கு வந்துள்ள இலங்கை ‘ஏ” அணியிலிருந்து பெற்றுக்கொள்ளவுள்ளதாக, இலங்கை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/175416/-ஆவத-ப-ட-ட-ந-ள-சந-த-கத-த-ல-மத-த-ய-ஸ-#sthash.FC0rOr5m.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இங்கிலாந்துடனான 2 ஆவது ஒருநாள் போட்டி: நாணயச் சுழற்சியில் இலங்கை வெற்றி: மெத்யூஸ் களமிறங்குகிறார்
2016-06-24 18:20:25

17563angelow.jpgபேர்மிங்ஹாம் நகரில் நடைபெறும் இங்கிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நாணயச் சுழற்சியில் இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் வெற்றிபெற்றார்.  அதையடுத்து இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.


இப்போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸ் விளையாடுவாரா என்பதே சந்தேகத்திற்கிடமாக இருந்தது. எனினும் அவர் இப்போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17563#sthash.AcdTInFK.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தந்திரோபாயத்தில் கிடைத்த ஒரு வெற்றியின் அடிப்படையில் மீண்டும் மீண்டும் அதே தந்திரோபாயத்தை கண்மூடித்தனமாக உபயோகிக்க கூடாது நிலைமைகளுக்கேற்ப தந்திரோபாயத்தை மற்ற வேண்டும் . -சன் சு 

  • தொடங்கியவர்
இலங்கையுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட்களால் வென்றது
2016-06-25 00:59:18

இலங்கையுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்களால் வென்றது.

 

பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்களைக் குவித்தது.

 

17565dinesh-chandimal-2nd-ODI.jpg


உபுல் தரங்க 49 பந்துகளில்ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 86  பந்துகளில் 52 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 54 பந்துகளில்  44 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஆதில் ரஷீட் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்  லியம் பிளன்கெட் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டேவிட் வில்லே 65 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

175662nd-odi-alex-hales.jpg

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.1  ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

 

அலெக்ஸ் ஹேல் 110 . பந்துகளில் ஆட்டமிழக்காமல்  133  ஓட்டங்களையும் ஜேஸன் ரோய் 95 பந்துகளில் ஆட்டமிழக்கமல்112 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

இத்தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிவுற்றது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது இங்கிலாந்து 1:0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17566#sthash.XoWwfkL6.dpuf
  • தொடங்கியவர்

மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதம்

 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை நிர்ணயித்துள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை சார்பில் சந்திமால் 62 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 56 ஓட்டங்களையும் விளாசினர்.

இதன்படி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி, 248 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில், 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இங்கிலாந்து ஆரம்பித்த வேளை, மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமடைந்துள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=81054

  • தொடங்கியவர்
இலங்கை - இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது
2016-06-26 22:23:58

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

 

17582dinesh-chandimal-3rd-ODI.jpg

 

பிரிஸ்டல் நகரில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ஓட்டங்களைப் பெற்றது. தினேஷ் சந்திமால் 65 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 56 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 53 ஓட்டங்களையும் உபுல் தரங்க 40 ஓட்டங்களையும் பெற்றனர்.


இங்கிலாந்து அணி 4 ஓவர்களில்  ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் மழை பெய்ய ஆரம்பித்தது. மீண்டும் போட்டியை ஆரம்பிக்க முடியாத நிலையில் இப்போட்டி கைவிடப்பட்டது.

 

5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிவுற்றது. 2 ஆவது போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட்களால் வென்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17582#sthash.L7EgBPpb.dpuf
  • தொடங்கியவர்

நாடு திரும்பினார் திரிமன்னே :  அணிக்குள் டிக்வெல்ல

 

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லகிரு திரிமன்னே காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

lahiru-thirimanne.jpg

இலங்கிலாந்து அணிக்கெதிராக 5 போட்டிகளைக் கொண்ட  சர்வதேச ஒரு நாள்தொடர் இடம்பெற்று வருகின்றது.

இதில் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைய, 2 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் 3 ஆவது போட்டி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.

 

இதையடுத்து ஏனைய போட்டிகளில் திரிமன்னே காயம் காரணமாக விளையாட முடியாது நாடு திரும்பியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக நிரோஷன் டிக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

 

விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் டிக்வெல்ல, இங்கிலாந்துக்கு பயணமாகியுள்ள இலங்கை ஏ அணியில் இடம்பிடித்துள்ளதுடன் இலங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடிய இலங்கை டெஸ்ட் குழாமில் இடம்பெற்றிருந்தார்.

 

 

இதேவேளை, அஞ்சலோ மெத்தியுஸ் மற்றும் டினேஷ் சந்திமால் ஆகியோர்  ஏற்கனவே தொடைப்பிடிப்பினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/8210

  • தொடங்கியவர்

தொடர் தோல்விகளை தவிர்க்குமா இலங்கை? தொடரை தீர்மானிக்கும் தீர்க்கமான 4ஆவது போட்டி இன்று

 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4 ஆவது ஒருநாள் போட்டி இன்று (29) லண்டன், கெனிங்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

aaaaaa.jpg

இலங்கை நேரப்படி மாலை 6.30 மணியளவில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

ஒருநாள் தொடரின் 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 2 போட்டிகள் சமனிலையில் நிறைவுபெற்றதுடன், ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த 4 ஆவது போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும்.

ஒருநாள் தொடரை கைப்பற்றவதுற்கு இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றிபெறவேண்டும். 

அதேநேரம் தொடரை சமப்படுத்துவதற்கும், தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கும் இலங்கை அணி கட்டாயம் இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.

இலங்கை  அணி சார்பில் உபாதை காரணமாக லஹிரு திரிமான்னே நாடு திரும்பியுள்ள நிலையில், நிரோஷன் டிக்வெல்ல அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியை பொருத்தவரையில் அணி தலைவர் மெத்தியுஸ், இந்த போட்டியில் வெற்றிபெறும் உத்வேகத்தில் களமிறங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதேவேளை இங்கிலாந்து அணி தலைவர் இயர்ன் மோர்கன் இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கில் அணியை வழிநடத்துவார்.

http://www.virakesari.lk/article/8269

  • தொடங்கியவர்

ஜேசன் ரோய் அதிரடி : ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

 

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.

ASC.jpg

ஒருநாள் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று (29) லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயர்ன் மோர்கன் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

போட்டியின் இடையில் மழைக் குறுக்கிட்டதன் காரணமாக டக்வர்த் லுவிஸ் முறைப்படி அணிக்கு தலா 42 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தொடரை சமப்படுத்தும் நோக்கில் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப விக்கட் 8 ஓட்டங்களில் வீழ்த்தப்பட்டது.

குசல் பெரேரா ரன் அவுட் முறையில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 

இரண்டாம் விக்கட்டுக்காக இணைந்த மெண்டிஸ் மற்றும் குணதிலக்க ஜோடி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

மெண்டிஸ் 77 ஓட்டங்களையும், குணதிலக்க 62 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய சந்திமால் 63 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில், அணித்தலைவர் மெத்தியுஸ் ஆட்டமிழக்காமல் 67 ஒட்டங்களை பெற அணியின் ஓட்ட எண்ணிக்கை 305 ஆக உயர்ந்தது. 

இங்கிலாந்து அணி சார்பாக வில்லி மற்றும் ரஷீட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

டக்வர்த் லுவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 42 ஓவர்களில் 308 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.1 ஓவர்களில் 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய ஜேசன் ரோய் தனது முதலாவது 150 ஓட்டங்களை கடந்து 162 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஜோ ரூட் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இலங்கை அணி சார்பில் பிரதீப் 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இதனடிப்படையில் 2-0 என இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. 

இலங்கை இங்கிலாந்து மோதும் இறுதி ஒருநாள் போட்டி ஜுலை 2 ஆம் திகதி கர்டிப், சொபியா கார்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

http://www.virakesari.lk/article/8317

  • தொடங்கியவர்
இலங்கையுடனான 5 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 122 ஓட்டங்களால் வென்றது
2016-07-02 22:41:35

இலங்கை அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 122 ஓட்டங்களால் வென்றது.

 

17736england-vs-Sri-Lanka.jpg

 

வேல்ஸின் கர்டிவ் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 0 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 324 ஓட்டங்களைப் பெற்றது. ஜோ ரூட் 93 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் தனுஷ்க குணதிலக்க 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42.4  ஓவர்களில் 202 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. இத்தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிவுற்றது. 3 ஆவது போட்டி கைவிடப்பட்டது. இதனால் இத்தொடரின் வெற்றியை 3-0 விகிதத்தில் இங்கிலாந்து அணி சுவீகரித்தது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17736#sthash.lqQLyVjD.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.