Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் கனவு மாளிகை! தரைமட்டமாக்கும் வர்த்தகர்! தப்பியோடும் பூதங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

அண்மைய காலங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியிருந்த பீகொக் மாளிகையை முழுமையாக இடித்து விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பில் குடியேறுவதற்காக இந்த மாளிகையை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அதன்பின்னர் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து மாளிகையை விற்க அதன் உரிமையாளரான வர்த்தகர் ஏ.எஸ்.பீ.லியனகே மறுத்திருந்தார். இந்நிலையில் பீகொக் மாளிகை இடித்து தரை மட்டமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த மாளிகையை கடந்த காலங்களில் 45 கோடிக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் முன்னாள் ஜனாதிபதி இந்த மாளிகையை குடியேற தெரிவு செய்திருந்தார். எனினும் புதிய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் அழுத்தங்களினால் ஏ.எஸ்.பி.லியனகே அந்த மாளிகையை மஹிந்தவுக்கு வழங்கவில்லை.

எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்ச அந்த மாளிகையில் குடியேறுவதற்கு முன்னர் வாஸ்த்து சாஸ்திரங்களுக்கமைய மந்திர கட்டுகளை பலவற்றை கட்டியிருந்தார் என செய்தி வெளியாகியிருந்தன.

அந்த மாளிகையின் நீச்சல் தடாகத்தில் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக போலி தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததன் பின்னர் பொலிஸார் அதனை சோதனையிட்டனர்.

இந்த மாளிகையை விரைவில் விற்பனை செய்து கொள்வதற்காக விசேட சக்திகள் உள்ளதாகவும், இதன் மூலம் வருமானங்களை ஈட்டிக்கொடுக்கும் எனவும், அங்கு குடியேறும் நபர்களுக்கு ராஜ யோகம் கிடைக்கும் எனவும் லியனகே ஊடாக ஊடகங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டன.

எப்படியிருப்பினும் அவரது எதிர்பார்ப்பிற்கமைய அதனை விற்பனை செய்துகொள்ள முடியவில்லை.

தற்போது வரையில் வேறு வர்த்தகர்களுடன் இணைந்து இந்த இடத்தில் 18 மாடி குடியிருப்பு தொகுதி ஒன்றை கட்டுவதற்காக லியனக ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய விரைவில் இந்த பீகொக் மாளிகை முழுமையாக இடித்து தரை மட்டமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/110096

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.