Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்போனோர் பணியகத்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல்! - பீரிஸ் புலம்பல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனைக்கு அமைய அரசாங்கத்தினால் அமைக்க உத்தேசித்துள்ள காணாமல்போனோர் பணியகத்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனைக்கு அமைய அரசாங்கத்தினால் அமைக்க உத்தேசித்துள்ள காணாமல்போனோர் பணியகத்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

   

நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது குறித்து தெளிவுபடுத்திய ஜி.எல்.பிரீஸ்- “காணாமல்போனோருக்கான பணியகத்திற்கு நேரடியாக பெறுந்தொகையான நிதியை வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையிலேயே உத்தேச சட்டமூலம் அமைந்துள்ளது. இவை நன்கொடையல்ல. ஏதோவொரு பலனை எதிர்பார்த்தே இந்த நிதிகள் வழங்கப்படுகின்றன. அதமாத்திரமன்றி அந்த அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொலிஸாருக்கு தாம் சோதனை செய்ய விரும்பும் எந்தவொரு இடத்திற்கும் செல்வதற்கு அனுமதியும் இந்த சட்டமூலத்தினால் கிடைக்கின்றது. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் படைமுகாம்கள், தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய இடங்களை இவர்கள் சோதனை என்ற பெயரில் பார்வையிட முற்பட்டால் அது நாட்டின் பாதுகாப்பிற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும்.

அதுமாத்திரமன்றி இந்த பணியகத்தை மேற்பார்வை செய்வதற்காக விசேட நிபுணர் குழுவொன்றையும் அமைக்க தீர்மானித்துள்ளனர். காணாமல்போனோரின் உறவினர்களை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது. அப்படியாயின் இவர்கள் அனைவரும் முகாம்களையும், பாதுகாப்பிற்கு முக்கிய இடங்களையும் சோதனையிட முற்பட்டால் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை கேள்விக்குறியாகிவிடும். அதனாலேயே நாம் இதனை எதிர்க்கின்றோம்.

“நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சம்பவமொன்று இருக்கின்றது. அதுதான காணாமல் போனோர் பணியகமொன்றை அமைப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்பிக்கும் விவகாரம். இது மிகவும் ஆபத்தான சட்டமாகும். இதன் உள்ளடக்கங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தாது அவசர அவசரமாக நாடாளுமன்றில் நிறைவேற்றிக்கொள்ளும் சூழ்ச்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதில் காணாமல்போனோர் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைப் பிரயோகத்தை பார்த்தால், வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் காணாமல்போனோர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன் இவ்வாறு வகைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரியவில்லை.

ஒருவர் காணாமல்போனால் பொதுவான சட்டத்தின் கீழ் அவர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து வடக்கு, கிழக்கு ஒரு தனிச் சட்டத்தையும், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு மற்றுமொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது. ஆனால் இந்த அரசாங்கம் நாட்டு மக்களை பிரித்து, பிரிவினையை ஏற்படுத்தி நாட்டை கூறு போட முனைகின்றது. அதனால் தான் இதனை மிகவும் ஆபத்தான சட்டமாக நாம் குறிப்பிடுகின்றோம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=160997&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.