Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் எதிரொலி: 4 போலீசார் சுட்டுக் கொலை

Featured Replies

அமெரிக்கா வன்முறை ; துப்பாக்கிச்சூட்டில் போலிசார் காயம்

 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லஸ் நகரில் போலிஸ் வன்முறைக்க்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் குறைந்தது மூன்று போலிசார் சுடப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

160708031218_dallas_police_shooting_640x

 

பல டஜன் துப்பாக்கி வேட்டு சத்தங்களைக் கேட்கக்கூடியதாக இருந்தது.

போலிசார் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேக நபர்களைத் தேடி வருகின்றனர்.

மின்னெசோட்டா மற்றும் லூயிசியானா மாநிலங்களில் சமீப நாட்களில் போலிஸ் அலுவலர்களால் இரண்டு கறுப்பின இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிராக நாடெங்கிலும் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த மரணத்தை விளைவித்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அனைத்து அமெரிக்கர்களையும் கவலையுறச் செய்யவேண்டும் என்றார்.

அமெரிக்காவின் கிரிமினல் நீதியமைப்பில் உள்ள காழ்ப்புணர்வுகள் களையப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மின்னெசோட்டா மாநிலத்தின் ஆளுநர் மார்க் டேய்ட்டன், ஃபிலேண்டோ காஸ்டில் என்ற கறுப்பின கார் ஓட்டுநர் சுட்டுக்கொல்லப்பட்ட சமீபத்திய சம்பவம், ஓட்டுநர் வெள்ளையினத்தவராக இருந்திருந்தால் நடந்திருக்காது என்று குறிப்பிட்டார்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160708_americablack

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் எதிரொலி: 4 போலீசார் சுட்டுக் கொலை

மெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக்  கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக  டல்லாஸ் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.

ams.jpg

அமெரிக்காவில் மின்சோட்டாவில் நேற்று முன்தினம்  பிலாண்டோ கேஸில் என்ற கறுப்பினத்தவர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  பிலாண்டோ உடலில் இருந்து உயிர் பிரிந்த நேரத்தில் வீடியோ எடுத்து, அதை அவரின் தோழி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இது உலகம் முழுவதும் வைரலாகியது.

மறுதினமே லூசியானாவில் ஆன்டன் ஸ்டெர்லிங் என்ற கறுப்பினத்தவரை இரு வெள்ளை இன போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த வீடியோவும் செல்போனில் படம் பிடித்து வெளியிடப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக நடந்த இந்த சம்பவங்கள் அமெரிக்காவில்  கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கறுப்பினத்தவரை போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு  எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கறுப்பின மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  அதுபோல்  லூசியானா மாகாணத்தின் டல்லாஸ் நகரில் ஆயிரக்கணக்கான கறுப்பின மக்கள் பங்கேற்ற ஊர்வலம் நேற்று  நடந்தது. 

போலீசை கண்டித்து நடந்த இந்த ஊர்வலத்தில் கறுப்பின மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த இருவர், எதிர்பாராதவிதமாக போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 4 போலீசார் பலியாகினர். மேலும் 7 போலீசார்  பலத்த  காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அமெரிக்காவில் இந்த சம்பவத்தால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

http://www.vikatan.com/news/world/65943-officers-now-dead-in-sniper-attack-in-america.art

  • தொடங்கியவர்

அமெரிக்கா வன்முறை ; துப்பாக்கிச்சூட்டில் 5 போலிசார் பலி

 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லஸ் நகரில் போலிஸ் வன்முறைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் போலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து போலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

160708073108_us_police_shoot_512x288__no

 உஷார் நிலையில் டல்லஸ் காவல்துறை

இச் சம்பவம் தொடர்பாக, ஒருவர் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இன்னொருவர் சரணடைந்தார்.

சரமாரியாக துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், ஆர்ப்பாட்டத்தில் சென்றவர்கள் பல்வேறு திசைகளில் சிதறி ஓடினார்கள்.

160708053406_us_police_guard_640x360__no

 

 தீவிர பாதுகாப்புப் பணியில் போலிஸ் அதிகாரிகள்

திடீர் தாக்குதல் பாணியில் போலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் மூன்று போலிசார் உடனடியாக இறந்துவிட்டதாகவும் டல்லாஸ் தலைமை போலிஸ் அதிகாரி டேவிட் பிரவுன் தெரிவித்தார். மேலும் இரு போலிஸ் அதிகாரிகள் பின்னர் உயிரிழந்தனர்.

160708053538_us_police_check_512x288__no

 சோதனை நடடிக்கையில் போலிஸ் அதிகாரிகள்

தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள், திட்டமிட்டு, குறிபார்த்து தாக்குதல் நடத்த இரண்டு இடங்களில் காத்திருந்திருக்கலாம் என தாங்கள் நம்பவுதாகவும், அதிகபட்சம் அதிகாரிகளை கொன்று, காயப்படுத்த அவர்கள் திட்டமிட்டிருந்திருக்கலாம் எனவும் தலைமை போலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

தாக்குதல் நடந்த இடத்தில் கிடந்த மர்ம பார்சல் ஒன்றை வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பதினொரு போலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சில அதிகாரிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டேவிட் பிரவுன் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் சிவிலியன் ஒருவரும் உள்ளார்

160708052751_dullas-shootout_suspect_512

 டல்லஸ் போலிஸ் வெளியிட்ட சந்தேக நபரின் புகைப்படம்

மின்னெசோட்டா மற்றும் லூசியானா மாநிலங்களில் சமீப நாட்களில் போலிஸ் அலுவலர்களால் இரண்டு கறுப்பின இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிராக நாடெங்கிலும் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த மரணத்தை விளைவித்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அனைத்து அமெரிக்கர்களையும் கவலையுறச் செய்யவேண்டும் என்றார்.

 

160708052936_us_blacks_demo_512x288__noc

 காவல் துறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவின் கிரிமினல் நீதியமைப்பில் உள்ள காழ்ப்புணர்வுகள் களையப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மின்னெசோட்டா மாநிலத்தின் ஆளுநர் மார்க் டேய்ட்டன், ஃபிலேண்டோ காஸ்டில் என்ற கறுப்பின கார் ஓட்டுநர் சுட்டுக்கொல்லப்பட்ட சமீபத்திய சம்பவம், ஓட்டுநர் வெள்ளையினத்தவராக இருந்திருந்தால் நடந்திருக்காது என்று குறிப்பிட்டார்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160708_americablack

  • தொடங்கியவர்

முடிவுக்கு வந்தது டல்லஸ் துப்பாக்கிச்சூடு: அதிபர் ஒபாமா கண்டனம்

160708085704_dallas_police_shooting_640x

 

டல்லஸ் போலிசாருடன் நடந்த மோதலில், அதில் ஈடுபட்ட சந்தேக நபர் இறந்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. டல்லஸில் போலிஸார் மீது தொடுக்கப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்.

மேலும், இது சட்ட அமலாக்கம் மீது ஒரு தீய, திட்டமிடப்பட்ட, வெறுக்கத்தக்க தாக்குதல் என்றும், இதை நியாயப்படுத்த சாத்தியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

160708093007_obama_warsaw_624x351_reuter

 

அமைதியான முறையில் நடந்த பேரணியில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி கொண்டிருந்த போலிசாரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.

கறுப்பின நபர் ஒருவரை போலிஸ் சுட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியாக நடந்த பேரணியின் முடிவில் போலிசார் மீது துப்பாக்கித்தாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளதாகவும், 5 போலிசார் கொல்லப்பட்டிருப்பதாகவும் அமெரிக்காவில் உள்ள டல்லஸ் நகர போலிசார் தெரிவித்துள்ளனர்.

160708081200_dallas_shooting_promo_640x3 

இந்த தாக்குதலில் காயம் அடைந்த மேலும் 6 போலிசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் அபாய கட்டத்தில் உள்ளனர்.

பொதுமக்களில் ஒருவரும் காயம் அடைந்துள்ளார்.

160708080157_dallas_gunman_640x360_ap_noபோலிஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் துப்பாக்கித்தாரி

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட போது, தெருக்களில் நடந்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புத் தேடி பல்வேறு திசைகளில் சிதறி ஓடினார்கள்.

தாக்குதல்காரர்கள் போலிஸ் அதிகாரிகளை காயப்படுத்தியும் முடிந்தவரை அதிகமானோரை கொல்லவும் திட்டமிட்டிருந்ததாக டல்லஸ் போலிஸ் தலைவர் டேவிட் பிரவுன் கூறியுள்ளார்.

கார் நிறுத்துமிடத்தில் இருந்து அந்த துப்பாக்கிதாரி அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160708_dallas_shootout_ends

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.