Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு. 

 

e2பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு.

பாகிஸ்தானுக்கு எதிராக லோட்ஸில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 12பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு ரோபி ரெனால்ட் ஜோன்ஸ் என்ற வீரர் முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளார். இவ்வணியில் இவருக்கும் இலங்கைக்கு எதிராக அழைக்கப்பட்ட ஜக் போல்லுக்கும் இடையே யார் உபாதையடைந்துள்ள ஜேம்ஸ் அண்டர்சனுக்கு பதிலாக அறிமுகம் பெறுவது என்ற போட்டி உள்ளது.

இதில் காயம் காரணமாக இங்கிலாந்தின் முன்னணி பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் இடம்பெறவில்லை.
ஹரி பலன்ஸ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் 3ம் இலக்கத்தில் இங்கிலாந்தின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஜோய் ரூட் களமிறங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்தின் முன்னணி சகலதுறை வீராக இருக்கும் ,காயமடைந்த சகலதுறை வீரர் பென் ஸ்ரோக்ஸ் உள்ளூர் போட்டிகளில் பங்கெடுத்தாலும் அவருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

சிம்பாவேயில் பிறந்து இங்கிலாந்துக்காக ஆடும் ஹரி பலன்ஸ் நீண்ட இடைவெளியின் பின்னர் அணிக்கு திரும்பியுள்ளார்.

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்டுள்ள அணி வருமாறு:
அலேஸ்டயார் குக் (தலைவர்), மொயின் அலி, ஜொனி பயர்ஸ்ரோ (wk), ஹரி பலன்ஸ், ஜக் போல், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீபன் பின், அலெக்ஸ் கேல்ஸ், ஜோய் றூட், ரோபி ரெனால்ட் ஜோன்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ்

http://vilaiyattu.com/பாகிஸ்தானுக்கு-எதிரான-மு/

  • தொடங்கியவர்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பம்

 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பம்

 


இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
 
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் பங்கேற்க மாட்டார் என்பதனை  அணித் தலைவர் அலஸ்டயார் குக் உறுதி செய்துள்ளார்.
 
அவர் காயத்தில் இருந்து தற்போது குணமடைந்துள்ள போதும், மருத்துவர்களின் ஆலோசனை அடிப்படையில் இன்றைய போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் இரண்டாவது டெஸ்ட போட்டியில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134031/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

லார்ட்ஸ் டெஸ்ட்: டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங்

 
 
இன்வெஸ்டெக் டிராபியுடன் மிஸ்பா, குக். | கெட்டி இமேஜஸ்.
இன்வெஸ்டெக் டிராபியுடன் மிஸ்பா, குக். | கெட்டி இமேஜஸ்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் தொடங்கியது, டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளது.

தடைக்குப் பிறகு மொகமது ஆமிர் மீண்டும் அணிக்குள் நுழைந்து இங்கிலாந்தில் ஆடுகிறார். இங்கிலாந்தில் இவர் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், சராசரி 20 ரன்களுக்கும் குறைவு.

அணி விவரம்:

பாகிஸ்தான்: மொகமது ஹபீஸ், ஷான் மசூத், அசார் அலி, யூனிஸ் கான், மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), ஆசாத் ஷபீக், சர்பராஸ் அகமட் (வி.கீ), வஹாப் ரியாஸ், மொகமது ஆமிர், ரஹத் அலி, யாசிர் ஷா.

இங்கிலாந்து: அலிஸ்டர் குக், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜேம்ஸ் வின்ஸ், கேரி பேலன்ஸ், ஜானி பேர்ஸ்டோ (வி.கீ), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேக் பால், ஸ்டீவன் ஃபின்.

ஷான் மசூத், மொகமது ஹபீஸ் களமிறங்கியுள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/லார்ட்ஸ்-டெஸ்ட்-டாஸ்-வென்று-பாகிஸ்தான்-பேட்டிங்/article8849257.ece?homepage=true

  • தொடங்கியவர்

லார்ட்ஸ் டெஸ்ட்: ஓரளவுக்கு நல்ல தொடக்கம் கண்ட பாகிஸ்தான்

 

 
பாக். தொடக்க வீரர் ஷான் மசூதை வீழ்த்திய கிறிஸ் வோக்ஸ்.| படம்: ஏ.எஃப்.பி.
பாக். தொடக்க வீரர் ஷான் மசூதை வீழ்த்திய கிறிஸ் வோக்ஸ்.| படம்: ஏ.எஃப்.பி.

லார்ட்ஸ் டெஸ்ட் முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 76 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல முறையில் தொடங்கியுள்ளது.

நல்ல சூரிய வெளிச்சத்தில் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும் என்று கூறிய மிஸ்பா தயங்காமல் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், அதன் படி மொகமது ஹபீஸ், ஷான் மசூத் களமிறங்கினர்.

ஸ்டூவர்ட் பிராட் வழக்கம் போல் நல்ல அளவு மற்றும் திசையில் வீச அவரை நிதானமாக ஆடியது பாகிஸ்தான் தொடக்க ஜோடி. அறிமுக வேகப்பந்து வீச்சாளர் 25 வயது ஜேகப் பால் அவ்வப்போது மணிக்கு 89 மைல்கள் வேகத்தைத் தொட்டு தொடக்க வீரர்களுக்கு சிரமத்தைக் கொடுத்தார்.

முதல் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 38 ரன்களை 12 ஓவர்களில் சேர்த்தது, மொமகது ஹபீஸ் 11 ரன்களில் இருந்த போது பிராடை டிரைவ் ஆடும் போது மட்டையின் விளிம்பில் பட்டு 3-வது ஸ்லிப்பில் இருந்த ஜேம்ஸ் வின்சிடம் சென்றது, ஒரு கையில் பிடிக்க முயன்றார் முடியவில்லை.

ஷான் மசூத் 29 பந்துகள் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தை விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் செய்து வெளியேறினார், கிறிஸ் வோக்ஸ் அருமையாக வீசினார், அவ்வப்போது எல்.பி. அப்பீல்களும் நிகழ்ந்தன. ஆனால் நடுவர் தீர்ப்பு துல்லியமாக அமைந்தது.

மொகமது ஹபீஸ் அவ்வப்போது ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தில் பீட் ஆனார், சில நல்லபந்துகளிலும் அவர் தடுமாறினார், ஆனால் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் வோக்ஸ் பந்தை தேவையில்லாமல் ஆடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேரினார். ஆனால் இது டாப் எட்ஜ் கேட்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு இடைவேளையின் போது யூனிஸ் கான் 18 ரன்களுடனும், அசார் அலி 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

http://tamil.thehindu.com/sports/லார்ட்ஸ்-டெஸ்ட்-ஓரளவுக்கு-நல்ல-தொடக்கம்-கண்ட-பாகிஸ்தான்/article8849843.ece?homepage=true

  • தொடங்கியவர்

மிஷ்பாவின் சதத்தின் துணையுடன் லோர்ட்ஸ் டெஸ்ட்டில் பாகிஸ்தான் வலுவான நிலையில். 

 

 

FB_IMG_1468516799338

மிஷ்பாவின் சதத்தின் துணையுடன் லோர்ட்ஸ் டெஸ்ட்டில் பாகிஸ்தான் வலுவான நிலையில்.

இங்கிலாந்துக்கான சுற்றுலாவை மேற்கொண்ட பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லோர்ட்ஸ மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்தப் போட்டியில் 42 வயதான பாகிஸ்தான் அணித்தலைவர் மிஷ்பா சதமடிக்க பாகிஸ்த்தான் முதல் நாள் முடிவில் வலுவான நிலையை எட்டியது.

FB_IMG_1468518221013 FB_IMG_1468516454980FB_IMG_1468516441547 FB_IMG_1468516300522 FB_IMG_1468516356537  

http://vilaiyattu.com/16310-2/

  • தொடங்கியவர்
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்டில் பலமான நிலையில் பாகிஸ்தான், 5 விக்கெட்களை வீழ்த்தினார் யாஸிர் ஷா
2016-07-15 23:02:30

இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பலமான நிலையில் உள்ளது.


லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில்  339 ஓட்டங்களைக் குவித்தது. அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 114 ஓட்டங்களைக் குவித்தார். அஸாட் ஷபீக் 73 ஓட்டங்களைப் பெற்றார்.

 

17989mishbah.jpg

மிஸ்பா உல் ஹக்



இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் 70 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஸ்டுவர்ட் புரோட் 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.



17989Yasir-shah-600a.jpg

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியில் அணித்தலைவர் அலஸ்டெயர் குக் 81 ஓட்டங்களைக் குவித்தார்.  ஜோ ரூட் 48 ஓட்டங்களைப் பெற்றார்.  ஏனைய வீரர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறினர்.

 

இரண்டாவது நாளான இன்றைய ஆட்டமுடிவின்போது இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 253 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

17989Yasir-shah.jpg

 

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் யாஸிர் ஷா 64 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை கைப்பற்றினார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் யாஸிர் ஷா 5 விக்கெட்களை வீழ்த்தியமை இது  5 ஆவது தடவையாகும்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=17989#sthash.xVBppNAJ.dpuf
  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 339 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: கிறிஸ் வோக்ஸ் 6 விக்கெட் வீழ்த்தினார்

 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 339 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் மிஸ்பா உல்-ஹக் 114 ரன்கள் குவித்தார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 87 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது.

மிஸ்பா உல் ஹக் 110 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

நேற்று 2-வதுநாள் ஆட்டம் நடைபெற்றது. மிஸ்பா உடன் விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது ஜோடி சேர்ந்தார். சர்ப்ராஸ் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வகாப் ரியாஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மேற்கொண்டு 4 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் மிஸ்பா போல்டானார்.

அவர் 199 பந்துகளில், 18 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் சேர்த்தார். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது அமீர் - யாசிர் ஷா ஜோடி 23 ரன்கள் சேர்க்க பாகிஸ்தான் அணி 99.2 ஓவர் களில் 339 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கடைசி விக்கெட்டாக முகமது அமீர் 12 ரன்னில் வெளியேறினார். யாஷிர் ஷா 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 12.2 ஓவர்களை சந்தித்து 51 ரன்கள் மட்டுமே எடுத்து எஞ்சிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் 70 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தினார். ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட் கைப்பற்றினார்.

மிஸ்பா இந்த டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் கடந்த 82 வருடங்களில் அதிக வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மிஸ்பாவுக்கு தற்போது 42 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 42 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்திருந்தது. ஹெல்ஸ் 6, ஜோ ரூட் 48, வின்ஸ் 16, பாலன்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். அலாஸ்டர் குக் 79, பேர்ஸ்டோவ் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

http://tamil.thehindu.com/sports/இங்கிலாந்துக்கு-எதிரான-முதல்-டெஸ்டில்-பாகிஸ்தான்-339-ரன்களுக்கு-ஆட்டமிழப்பு-கிறிஸ்-வோக்ஸ்-6-விக்கெட்-வீழ்த்தினார்/article8858561.ece

  • தொடங்கியவர்

லார்ட்ஸில் ஷேன் வார்ன் செய்ய முடியாததை செய்து காட்டிய யாசிர் ஷா

 

 
பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா. | படம்: ராய்ட்டர்ஸ்.
பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா. | படம்: ராய்ட்டர்ஸ்.

இங்கிலாந்து அணியின் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிரான பாரம்பரிய பலவீனத்தை யாசிர் ஷா நேற்று பயன்படுத்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்தை 253/7 என்று சரிவடையச் செய்தார்.

யாசிர் ஷா 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இங்கிலாந்து பேட்ஸ்மென்களை தன் வாழ்நாள் முழுதும் ஆட்டிப்படைத்த ஷேன் வார்ன் கூட லார்ட்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் ஷேன் வார்ன் 4 முறை இங்கு விளையாடியுள்ளார். ஆனால் முஷ்டாக் அகமது 5 விக்கெட்டுகளை லார்ட்ஸில் எடுத்துள்ளார். மேலும் ஆசியாவுக்கு வெளியே முதன் முதலாக யாசிர் ஷா இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ரூட், வின்ஸ், பேலன்ஸ், பேர்ஸ்டோ, மொயின் அலி ஆகியோர் அடங்கிய இங்கிலாந்து மிடில் ஆர்டரை உடைத்தார் யாசிர் ஷா. தொடருக்கு முன்பே கூட இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் இங்கிலாந்தின் வலுவற்ற மிடில் ஆர்டர் குறித்து பேசி இங்கிலாந்தை உசுப்பேற்றினார்.

அலிஸ்டர் குக், ஜோ ரூட் இணைந்து சதக்கூட்டணி அமைக்க ஜோ ரூட்டின் பொறுமையற்ற மோசமான ஷாட்டினால் அவர் 48 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அடுத்த 6 விக்கெட்டுகளை 114 ரன்களுக்கு இழந்தது. அதாவது 118/1 என்ற நிலையிலிருந்து 232/7 என்று இங்கிலாந்து சரிவு கண்டது.

யாசிர் ஷாவைக் கண்டு பதற்றமடைந்த ஜோ ரூட் அவரை மிரட்ட வேண்டும் என்பதற்காக ஸ்லாக் ஸ்வீப் செய்தார், ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வந்த பந்து கொஞ்சம் எழும்ப டாப் எட்ஜ் எடுத்து மொகமது ஹபீஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹபீஸ் இதனைச் சரியாகப் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அன்று அலிஸ்டர் குக்கிற்கு அமிர் பந்தில் கேட்ச் விட்டவர் இவர்.

அடுத்ததாக வின்ஸ் 16 ரன்களில் மோசமான தீர்ப்புக்கு ஆட்டமிழந்தார் என்றே கூற வேண்டும். லெக் ஸ்டம்புக்கு நேராக யாசிர் ஷா பந்தை கால்காப்பில் வாங்கினார், பந்து திரும்பவில்லை, அது நேர் பந்து. தர்மசேனா அவுட் கொடுத்தார், இவர் அவுட் கொடுக்காமல் இருந்திருந்தால் வின்ஸ் ரிவியூ செய்த போது நாட் அவுட் என்றே தீர்ப்பாகியிருக்கும், அதனை எல்.பி. என்று தீர்ப்பளிக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் கேரி பேலன்ஸுக்கு யாசிர் வீசிய பந்து அருமையானது. பந்து திரும்பி பேலன்ஸ் மட்டையைக் கடந்து கால்காப்பை தாக்கியது, அருமையான லெந்த். பேலன்ஸ் 6 ரன்களுக்கு எல்.பி. ஆனார்.

பேர்ஸ்டோ களமிறங்கி 5 அட்டகாசமான பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து யாசிர் ஷா-வின் ஏமாற்றுப்பந்துக்கு பவுல்டு ஆனார். பந்து திரும்பும் என்று நினைத்து கட் ஆட போனார் பேர்ஸ்டோ, ஆனால் பந்து ஸ்கிட் ஆகி ஸ்டம்பைத் தாக்கியது.

மொயின் அலி 23 ரன்களுக்கு நன்றாகவே ஆடினர், ஆனால் அவரும் ஒரு பாரம்பரிய ஸ்வீப் ஷாட் ஆடமுயன்று யாசிர் ஷாவிடம் எல்.பி.ஆனார். நடுவர் ஜோயெல் வில்சன் கையை உயர்த்தினார், நடுவர் கையை உயர்த்தியவுடன் மொயீன் அலி அனாவசியமாக ரிவியூ செய்தார், நடுவர் தீர்ப்பு அவுட் என்றால் அது எப்போதும் ரிவியூவில் மாறாது, குறிப்பாக எல்.பி.தீர்ப்புகளில், ஏனெனில் பந்து பேடைத் தாக்கும் போது ஸ்டம்புக்கு நேராக இருந்ததா என்பது நடுவருக்குரியதே, அதனால் ஒரு ரிவியூ வேஸ்ட் செய்யப்பட்டதானது. இடையில் அலிஸ்டர் குக் 81 ரன்களில் மொகமது அமிரின் ஃபுல் லெந்த் பந்தை வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டார்.

2-ம் நாள் ஆட்ட முடிவில் கிறிஸ் வோக்ஸ் 31 ரன்களுடனும், ஸ்டூவர்ட் பிராட் 11 ரன்களுடனும் உள்ளனர். விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னிலை பெற்று 2-வது இன்னிங்சில் சீப்பாக அவுட் ஆகாமல் 250-275 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்தை களமிறக்கினால், யாசிர் ஷா போட்டியை வெற்றிபெற்றுத் தர வாய்ப்பிருக்கிறது.

http://tamil.thehindu.com/sports/லார்ட்ஸில்-ஷேன்-வார்ன்-செய்ய-முடியாததை-செய்து-காட்டிய-யாசிர்-ஷா/article8859726.ece?homepage=true

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் 75 ரன்களால் வெற்றி..

பாகிஸ்தான்  339 & 215
இங்கிலாந்து  272 & 207 (75.5 ov)
 
 

247557.jpg

  • தொடங்கியவர்
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்டில் 75 ஓட்டங்களால் வென்றது பாகிஸ்தான்
2016-07-17 23:15:22

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 75 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

18004_Yasir-shah--600.jpg

 


லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில்  339 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 272  ஓட்டங்களையும் பெற்றன.


இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 215 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.


இங்கிலாந்து பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். இவர் முதல் இன்னிங்ஸிலும் 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 283 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


போட்டியின் 4 ஆவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி  207 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

 

18004Pakistan-vs-England.jpg


பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களில் யாஸிர் ஷா 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். இவர் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ரஹாத் அலி 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் ஆமீர் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

18004pakistan-vs-England-2.jpg

 

இப்போட்டியின் ஆட்டநாயகனாக யாஸிர் ஷா தெரிவானார். 4 போட்டிகள் கொண்ட இத் தொடரில் தற்போது பாகிஸ்தான் அணி 1:0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18004#sthash.zmSQRGR4.dpuf
  • தொடங்கியவர்

பாகிஸ்தான் திரில் வெற்றி : சொந்த மண்ணில் வீழ்ந்தது இங்கிலாந்து (படங்கள் இணைப்பு)

Published by Pradhap on 2016-07-18 11:32:48

 

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 75 ஓட்டங்களால்  திரில் வெற்றிபெற்றுள்ளது.

247557.jpg

285 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 214 ஓட்டங்களுக்கு சுருண்டது.

247559.jpg

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 339 ஓட்டங்களை பெற்றது.

247555.jpg

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் மிஸ்பா ஹுல் ஹக் 114 ஓட்டங்களை பெற்று டெஸ்ட் போட்டியில் அவரது 10 சதத்தை லோர்ட்ஸ் மண்ணில் பதிவு செய்தார்.

247553.jpg

பந்துவீச்சில் கிரிஸ் வோர்க்ஸ் 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி குக் மற்றும் ரூட் மாத்திரம் நிலைத்து ஆட ஏனைய வீரர்கள் சிறப்பாக செயற்பட தவறிவிட்டனர்.

247551.jpg

குக் 81 ஓட்டங்களையும், ரூட் 48 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 272 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

247549.jpg

பந்துவீச்சில் யசீர் ஷா 6 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன் 5 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் அணியில் இணைந்த பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமீர் 1 விக்கட்டினை மாத்திரம் கைப்பற்றிகார்.

247547.jpg

68 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 215 ஓட்டங்களுக்கு சுருண்டது.

247545.jpg

இதில் அஷாட் சபீக் 49 ஓட்டங்களையும், சப்ராஷ் அஹமட் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

247543.jpg

பந்துவீச்சில் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட கிரிஸ் வோர்க்ஸ் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

283 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தின் ஆரம்பம் நேர்த்தியாக அமையவில்லை குக் 8, ஹெல்ஸ் 16 மற்றும் ரூட் 9 ஓட்டங்களை பெற்று அணிக்கு ஏமாற்றம் அளித்தனர்.

247539.jpg

எனினும் நடுவரிசை துடுப்பாட்ட வீரர்களான வின்ஸ் 42,பெல்லன்ஸ் 43 மற்றும் பெயார்ஸ்டோவ் 48 என ஓட்டங்களை குவித்தாலும் ஏனைய வீரர்கள் சோபிக்காத நிலையில் 207 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து அணி சுருண்டது.

247539.jpg

இதில் யசீர் ஷா 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

247537.jpg

இதன் மூலமாக 74 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் யசீர் ஷா தெரிவுசெய்யப்பட்டார். 

247535.jpg247533.jpg247531.jpg247529.jpg247527.jpg247525.jpg247523.jpg247517.jpg247523.jpg247515.jpg

http://www.virakesari.lk/article/9107

  • தொடங்கியவர்

லார்ட்ஸ் வெற்றியை பாகிஸ்தான் வீரர்கள் கொண்டாடிய விதம்: அலைஸ்டர் குக் எரிச்சல்

 

 
பாகிஸ்தான் வீரர்கள் புஷ்-அப் கொண்டாட்டம். குக் எரிச்சல். | படம்: ஏ.பி.
பாகிஸ்தான் வீரர்கள் புஷ்-அப் கொண்டாட்டம். குக் எரிச்சல். | படம்: ஏ.பி.

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்தை வென்ற பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ‘சல்யூட்’ அடித்தும் பிறகு தரையில் ‘புஷ்-அப்’ பயிற்சி செய்தும் வெற்றியைக் கொண்டாடிய விதம் இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக்கிடம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து குக் கூறும்போது, “லார்ட்ஸில் தோற்பது நல்ல விஷயமல்ல, அதுவும் எதிரணியினர் அதனைக் கொண்டாடும் விதம் பார்ப்பதற்கு நன்றாக இல்லை. எனினும் அதனை நாங்கள் எங்களுக்கான உத்வேகமாக எடுத்துக் கொள்வோம்.

இதனை காயப்படுத்தும் செயலாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் போட்டியத் தோற்றது முதலான அந்த முதல் 20 நிமிட நேர வெறுப்பில் அவர்கள் கொண்டாடிய விதம் பார்ப்பதற்கு மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை.

அந்தக் கொண்டாட்ட முறை உண்மையில் காண நன்றாக இல்லை, ஆனால் அவர்கள் விரும்புவதைச் செய்வதற்கு உரிமை உண்டு. அதுதான் அவர்களை ஒன்றிணைத்துள்ளது, மேலும் எங்களுக்கு எந்தமாதிரியான சவால் காத்திருக்கிறது என்பதையும் அது அறிவுறுத்தியது” என்றார்.

2010-11-ல் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் தொடரை வென்ற போது இங்கிலாந்து இதை விட மரியாதை குறைவான முறையில் அந்த வெற்றியை கொண்டாடியதை இங்கிலாந்து மறந்து விட்டனர் என்று ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று குக்கின் எதிர்வினைக்கு மறுவினையாற்றி பதிவிட்டுள்ளதையும் நாம் இங்கு குறிப்பிடுவது நலம்.

அதாவது இங்கிலாந்து மரியாதை குறைவான முறையில் அந்த வெற்றியைக் கொண்டாடியது பிற்பாடு 2013-14 தொடரில் 5-0 என்ற ஆஸ்திரேலிய வெற்றிக்கு வித்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு தொடர்களிலும் இங்கிலாந்து அணியில் விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரெஸ்னன் தற்போதைய பாகிஸ்தான் கொண்டாட்டத்தைப் பற்றி தனது ட்விட்டர் பதிவில், “இது உங்களை திருப்பி அடிக்கும் நண்பர்களே” என்று எங்களுக்கு ஏற்பட்டது உங்களுக்கு ஏற்படும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறும்போது, “நாங்கள் காகுலில் ராணுவ முகாமில் இருந்தோம், எனவே எங்களது இந்த சல்யூட், புஷ் அப் பயிற்சி எங்கள் நாட்டு ராணுவத்திற்கான மரியாதை செலுத்தலே. ராணுவ வீரர்களுக்கு இது ஒரு சிறிய அர்ப்பணம் அவ்வளவே, மேலும் பாகிஸ்தான் கொடிக்கும் நாட்டுக்கும் நாங்கள் செய்த மரியாதையே சல்யூட்டும் புஷ்-அப் பயிற்சியும்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/லார்ட்ஸ்-வெற்றியை-பாகிஸ்தான்-வீரர்கள்-கொண்டாடிய-விதம்-அலைஸ்டர்-குக்-எரிச்சல்/article8871428.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

லார்ட்ஸ் தோல்விக்குப் பிறகு வலுவாக அணி திரளும் இங்கிலாந்து

 
ஆண்டர்சன். | படம்: ராய்ட்டர்ஸ்.
ஆண்டர்சன். | படம்: ராய்ட்டர்ஸ்.

சற்றும் எதிர்பாராத விதத்தில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை பாகிஸ்தான் அபாரமான முறையில் வீழ்த்தியதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டிக்கு வலுவாக அணியை திரட்டுகிறது இங்கிலாந்து.

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத தற்போதைய உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், அதிரடி இரட்டைச் சத சாதனையாளர் பென் ஸ்டோக்ஸ், லெக் ஸ்பின்னர் அடில் ரஷீத் என்று இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 42 வயது மிஸ்பா உல் ஹக்கை சதம் அடிக்கவிட்டு இங்கிலாந்து தவறிழைத்ததும் தோல்விக்கு ஒரு காரணம். மேலும் ஆதிகாலத்திலிருந்தே லெக் ஸ்பின் எனும் பூதம் இங்கிலாந்தை தொடர்ந்து அச்சுறுத்தியே வந்துள்ளது. யாசிர் ஷா அதனை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.

ஷேன் வார்ன் இந்த ஸ்பின் பூதத்தை இங்கிலாந்துக்காக பூதங்களாக பல்கிப் பெருகச் செய்தார். உண்மையான பிரச்சினை இந்த லெக் ஸ்பின்னை எப்படி எதிர்கொள்வது என்பதே. இதற்குப் பயந்து பசுந்தரை வேகப்பந்து சாதக ஆட்டக்களத்தை அமைத்தால் வஹாப் ரியாஸ், ரஹாத் அலி, மொகமது ஆமிரிடம் சிக்க வேண்டிய நிலை ஏற்படும். இப்போதைக்கு இருதலைக் கொள்ளி எறும்பாக இங்கிலாந்து தத்தளித்து வருகிறது.

எனவே இங்கிலாந்து பேட்டிங்குக்குச் சாதகமான ஆட்டக்களத்தை அமைத்து பெரிய ஸ்கோரை எடுத்து அதன் பிறகு பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளித்தால்தான் உண்டு.

இந்நிலையில் ஓல்ட் டிராபர்டில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷீத்தை அழைத்து வலு கூட்ட முயற்சிக்கிறது இங்கிலாந்து.

மொயின் அலியின் பலவீனங்களை பாகிஸ்தான் சுத்தமாக அம்பலப்படுத்தியது. இந்த ஆண்டில் மொயின் அலியின் 7 டெஸ்ட் பவுலிங் சராசரி 92 ரன்கள் ஆகும். மாறாக அடில் ரஷித் 7 கவுண்டி போட்டிகளில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 337 ரன்களையும் இந்த 7 போட்டிகளில் எடுத்துள்ளார். எனவே மொயின் அலிக்குப் பதிலாக அடில் ரஷித் வர வாய்ப்பிருக்கிறது.

4 டெஸ்ட் போட்டிகளில் 18.66 என்ற சராசரியுடன் சொதப்பி வரும் ஜேம்ஸ் வின்ஸுக்கு நிச்சயம் மாற்று வீரர் தேவை.

2-வது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணி வருமாறு:

அலஸ்டைர் குக், ஹேல்ஸ், ஜோ ரூட், ஜேம்ஸ் வின்ஸ், கேரி பேலன்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, அடில் ரஷீத், கிறிஸ் வோக்ஸ், பிராட், ஆண்டர்சன், ஸ்டீவன் ஃபின், ஜேக் பால்.

http://tamil.thehindu.com/sports/லார்ட்ஸ்-தோல்விக்குப்-பிறகு-வலுவாக-அணி-திரளும்-இங்கிலாந்து/article8870610.ece

  • தொடங்கியவர்
இன்று ஆரம்பிக்கிறது இரண்டாவது டெஸ்ட்
 
22-07-2016 01:28 AM
Comments - 0       Views - 1

article_1469114066-TamiloodjhsjNEW-2.jpgஇங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, லோர்ட்ஸில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று வெள்ளிக்கிழமை (22) இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகிறது.

முதலாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ள உற்சாகத்துடன் இப்போட்டியில் களமிறங்குவதோடு, ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு தடையை எதிர்கொண்ட அதே மைதானத்திலேயே தனது மீள் வருகையை மேற்கொண்ட இளம் வேகப்பந்துவீச்சாளரான மொஹம்மட் ஆமிர், இப்போட்டியில் எந்தவித அழுத்தமும் இல்லாது பங்கேற்பது பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் பலம். எவ்வாறெனினும், தனது ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களிடமிருந்து மேலதிக ஓட்டங்களை எதிர்பார்ப்பதோடு, மத்திய வரிசையிடமிருந்தும் மேலதிக உறுதியான ஆட்டத்தை எதிர்பார்க்கின்றது.

மறுபக்கத்தில், ஜேம்ஸ் அன்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் காயத்திலிருந்து குணமடைந்து குழாமுக்குள் திரும்பிய நிலையில் பலமாகக் காட்சியளிக்கும் இங்கிலாந்து, அண்மைய காலங்களில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தாத மொயின் அலிக்கு பதிலாக அடில் ரஷீட் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அணி: அலிஸ்டியர் குக், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜேம்ஸ் வின்ஸ், கரி பலன்ஸ், ஜொனி பெயார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீட், ஸ்டூவர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன்

எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி: மொஹம்மட் ஹஃபீஸ், ஷன் மசூட், அஸார் அலி, யுனிஸ் கான், மிஸ்பா உல் ஹக், அசாட் ஷஃபிக், சஃப்ராஸ் அகமட், மொஹம்மட் ஆமிர், வஹாப் ரியாஸ், யசீர் ஷா, ரஹாட் அலி

- See more at: http://www.tamilmirror.lk/177618/இன-ற-ஆரம-ப-க-க-றத-இரண-ட-வத-ட-ஸ-ட-#sthash.p8D5TxnU.dpuf
  • தொடங்கியவர்

குக் 29-வது சதம்; மீண்டும் ரூட்: விக்கெட்டுகளை வீழ்த்த திணறும் பாகிஸ்தான்

 
சதமெடுத்த குக். | படம்: கெட்டி இமேஜஸ்.
சதமெடுத்த குக். | படம்: கெட்டி இமேஜஸ்.

ஓல்ட் டிராபர்டில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக் சதம் கண்டு விளையாடி வருகிறார்.

இவருடன் ஜோ ரூட் 80 ரன்கள் எடுத்து துணை சேர்க்க, இருவரும் இணைந்து சற்று முன்வரை 2-வது விக்கெட்டுக்காக 168 ரன்களைச் சேர்த்து ஆடி வருகின்றனர்.

அலைஸ்டர் குக் ஆட்டத்தின் 52-வது ஓவரில் மொகமது ஆமிரை லெக் திசையில் அடித்துவிட்டு 2 ரன்கள் ஓடி தனது 29-வது சதத்தை எட்டினார், இதன் மூலம் டான் பிராட்மேனின் சத எண்ணிக்கையை சமன் செய்த முதல் இங்கிலாந்து வீரரானார்.

164 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் குக் 105 ரன்களுடனும் ஜோ ரூட் 140 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். இங்கிலாந்து சற்று முன் வரை 1 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.

உணவு இடைவேளையின் போது 95/1 என்று இங்கிலாந்து இருந்த போது குக் 40 ரன்களில் இருந்தார், அதன் பிறகு அவர் தனது 29வது சதத்தை எட்டி வலுவாகச் சென்று கொண்டிருக்கிறார்.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங் எடுத்த இங்கிலாந்து அணி மொகமது ஆமிரின் அபாரமான பந்துக்கு ஹேல்ஸை (10) பவுல்டு முறையில் இழந்தது.

கடந்த டெஸ்ட் நாயகன் யாசிர் ஷா 18 ஓவர்களில் இதுவரை 69 ரன்கள் கொடுத்துள்ளார், ஆமிர் மட்டுமே 1 விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார். வஹாப் ரியாஸ், ரஹத் அலி பந்து வீச்சிலும் தாக்கம் இல்லை.

http://tamil.thehindu.com/sports/குக்-29வது-சதம்-மீண்டும்-ரூட்-விக்கெட்டுகளை-வீழ்த்த-திணறும்-பாகிஸ்தான்/article8887440.ece?homepage=true

  • தொடங்கியவர்

13680512_1209776919041547_16362309814599

முதல் நாள் ஆட்ட முடிவில்

  • தொடங்கியவர்

யாசிர் ஷா உட்பட பாக். பந்து வீச்சு புரட்டல்; ஜோ ரூட் 254: இங்கிலாந்து 589 ரன்கள் குவிப்பு

 

 
ஜோ ரூட்டிற்கு எப்படி வீசுவது என்று தெரியாது விழித்த பாக். பவுலர்கள். | படம்: கெட்டி இமேஜஸ்.
ஜோ ரூட்டிற்கு எப்படி வீசுவது என்று தெரியாது விழித்த பாக். பவுலர்கள். | படம்: கெட்டி இமேஜஸ்.

ஓல்ட் டிராபர்ட்டில் நடைபெறும் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் 254 ரன்கள் வெளுத்துக்கட்ட இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 589 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.

நேற்றைய நாயகன் ஜோ ரூட்தான். சுமார் 10 மணிநேர மாரத்தன் இன்னிங்ஸில் 406 பந்துகளில் 27 பவுண்டரிகளுடன் 254 ரன்கள் எடுத்து தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை எட்டினார் ஜோ ரூட்.

314/4 என்று தொடங்கிய இங்கிலாந்து அணியில் இரவுக்காவலன் கிறிஸ் வோக்ஸ் முதலில் சிறப்பாக ஆடினார். அருமையான டிரைவ்கள், கட் ஷாட்கள் மூலம் மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்தை தூண்டினார். ஜோ ரூட் 150 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் 5-வது முறையாகக் கடந்தார். பாகிஸ்தான் எப்படியாவது கேட்சை விட்டு யாருக்காவது வாழ்வளிப்பதில் ‘சிறந்த’ அணி. யாசிர் ஷா பந்தில் யூனிஸ் கான் ஸ்லிப்பில் ஜோ ரூட்டுக்கு கேட்ச் ஒன்றை விட்டார். யாசிர் ஷாவும் பந்து வீச்சில் இரட்டைச் சதம் அடித்து 213 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஏமாற்றமளித்த ஜோ ரூட், தற்போது தனது 10வது டெஸ்ட் சதம் இரட்டைச் சதமானதை நினைத்து பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ் வோக்ஸ் நல்ல பார்மில் உள்ளார், அவர் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து யாசிர் ஷா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மீண்டும் அணிக்கு வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் அனாயாசமான முறையில் 34 ரன்களை எடுத்தார். ஜோ ரூட், யாசிர் ஷாவின் பந்தை மிகத்துல்லியமான முறையில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி தனது இரட்டைச் சதத்தை எடுத்தார். ஸ்டோக்ஸ் லெக் திசை பந்தை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வஹாப் ரியாஸிடம் வீழ்ந்தார். மிக நீளமான ரிவியூவுக்குப் பிறகு ஸ்டோக்ஸ் அவுட் என்று தீர்மானிக்கப்பட்டார். ஜானி பேர்ஸ்டோ 81 பந்துகளில் 58 ரன்களை விளாசினார்.

ஜோ ரூட் 254 ரன்களை எடுத்த பிறகு வஹாப் ரியாஸ் பந்தை மிட்விக்கெட்டில் தூக்கி அடிக்க பந்து சரியாகச் சிக்காமல் ஹபீஸ் கையில் கேட்ச் ஆனது. ஸ்கோர் 589 ரன்கள் வந்தவுடன் குக் டிக்ளேர் செய்தார்.

பாகிஸ்தான் தொடக்க வீர்ர்கள் ஷான் மசூத், மொகமது ஹபீஸ், ஆகியோர் பிராட், ஆண்டர்சன் ஓவர்களை எச்சரிக்கையுடன் ஆடினர். மீண்டும் கிறிஸ் வோக்ஸ் வந்தவுடன் ஹபீஸ் (18) விக்கெட்டைச் சாய்த்தார். ஸ்லிப்பில் ஜோ ரூட் தாழ்வாக வந்த கேட்சை பிடித்தார். அசார் அலி 1 ரன்னில் வோக்ஸ் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். யூனுஸ் கான் லெக் திசைப் பந்தில் ஸ்டோக்ஸிடம் விக்கெட் கீப்பர் கேட்சுக்கு அவுட் ஆனார். இரவுக்காவலனாக இறக்கப்பட்ட ரஹத் அலி, வோக்ஸின் ஷார்ட் பிட்ச் பந்தை ஷார்ட் லெக் பீல்டரிடம் கேட்ச் கொடுத்தார்.

ஷான் மசூத் 30 ரன்களுடன் கேப்ட்ன் மிஸ்பா (1) உல் ஹக்குடன் போராடி வருகிறார்.

http://tamil.thehindu.com/sports/யாசிர்-ஷா-உட்பட-பாக்-பந்து-வீச்சு-புரட்டல்-ஜோ-ரூட்-254-இங்கிலாந்து-589-ரன்கள்-குவிப்பு/article8893850.ece?homepage=true

  • தொடங்கியவர்
இங்கிலாந்து  589/8d & 29/0 (8.3 ov)
பாகிஸ்தான் 198

248071.jpg

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் அணிக்கு 565 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

 

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான்  அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து அணி 565 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிரணயித்துள்ளது.

248133.jpg

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி  598 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுகளை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதில் ரூட் இரட்டை சதத்தை கடந்து 254 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் வஹாப் ரியாஸ் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

248137.jpg

இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 198 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பாகிஸ்தான் அணி சார்பாக மிஸ்பா ஹுல் ஹக் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இங்கிலாந்து அணி சார்பில் கிரிஸ் வோர்க்ஸ் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 173 ஓட்டங்களுக்கு 1விக்கட்டினை மாத்திரம் இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டு வெற்றியிலக்காக 565 ஒட்டங்களை நிர்ணயித்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் குக் 76 ஒட்டங்களையும் ரூட் 71 ஓட்டங்களையும் ஆட்மிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தாக் அணி 47 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்துள்ளது.

http://www.virakesari.lk/article/9403

  • தொடங்கியவர்
பாகிஸ்தானுடனான 2 ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 330 ஓட்டங்களால் வெற்றி
2016-07-25 22:42:04

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி  330 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

 

18165pakistan-england.jpg


மன்செஸ்டர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 8 விக்கெட் இழப்புக்கு 589 ஓட்டங்களைக் குவித்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது.


பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 198 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

 

இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது துடுப்பாட்டத்தை நிறுத்தியது.


அதையடுத்து இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு 565 ஓட்டங்கள் தேவையான நிலையில் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை நேற்று ஆரம்பித்தது. எனினும் போட்டியின் 4 ஆவது நாளான இன்று 234 ஓட்டங்களுடன் அவ்வணியின் சகல விக்கெட்களும் வீழ்ந்தன.


இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஜேம்ஸ் அண்டர்சன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மோயின் அலி 88 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஜோ ரூட் தெரிவானார். 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது இரு அணிகளும் 1:1 விகிதத்தில் சமநிலையில் உள்ளன.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18165#sthash.y1qun3H3.dpuf
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
சுருண்டது இங்கிலாந்து
 
 

article_1470246103-248835.jpgஎட்ஜ்பாஸ்டனில் இன்று ஆரம்பமாகிய இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 297 ஓட்டங்களுடன் தமது முதலாவது இனிங்ஸில் சுருண்டது.

துடுப்பாட்டத்தில், கரி பலன்ஸ் 70, மொயின் அலி 63, அணித்தலைவர் அலிஸ்டியர் குக் 45, ஜேம்ஸ் வின்ஸ் 39 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், வகாப் ரியாஸுக்கு பதில் அணியில் இடம்பிடித்த சொஹைல் கான் ஐந்து விக்கெட்டுகளையும் ரஹாட் அலி, மொஹம்மட் ஆமிர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் யாசிர் ஷா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

- See more at: http://www.tamilmirror.lk/178601#sthash.dtGCmZmg.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் 400 ரன்கள் குவிப்பு

 

  • ENGLAND-PAKISTAN.jpg

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 136 ஓவர்களில் 400 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்தின் எட்பாஸ்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 86 ஓவர்களில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேரி பேலன்ஸ் 70, மொயீன் அலி 63 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் சோஹைல் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-ஆம் நாளான வியாழக்கிழமை 74 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது.

3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி 136 ஓவர்களில் 400 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் அசார் அலி அதிகபட்சமாக 139 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து, தேநீர் இடைவேளையின்போது 13.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்திருந்தது. அலாஸ்டர் குக் 35 ரன், அலெக்ஸ் ஹேல்ஸ் 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

http://www.dinamani.com/latest_news/2016/08/05/3-ஆவது-டெஸ்ட்-கிரிக்கெட்-போட்/article3564787.ece

  • தொடங்கியவர்

மந்தமான இங்கிலாந்து பேட்டிங்கை தூக்கி நிறுத்திய மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ: 311 ரன்கள் முன்னிலை

 

 
இங்கிலாந்தை தூக்கி நிறுத்திய மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ. | படம்: ராய்டர்ஸ்.
இங்கிலாந்தை தூக்கி நிறுத்திய மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ. | படம்: ராய்டர்ஸ்.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான நேற்று கடைசி 2 மணி நேர ஆட்டம் வரையிலும் மந்தமாக சென்று கொண்டிருந்த ரன் விகிதத்தை மொயின் அலி மற்றும் ஜானி பேர்ஸ்டோ அதிகரிக்க, இங்கிலாந்து 311 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பேர்ஸ்டோ (82 நாட் அவுட்), மொயின் அலி (60 நாட் அவுட்) இணைந்து 27.3 ஓவர்களில் 132 ரன்களை அடித்தனர். இதனால் இங்கிலாந்து 414/5 என்று 4-ம் நாள் ஆட்ட முடிவில் உள்ளது, இன்று வந்தவுடனேயே டிக்ளேர் செய்ய வாய்ப்பிருக்கிறது, ஆனால் பிட்ச் இன்னமும் பேட்டிங்குக்குச் சாதகமாக இருப்பதால் ஒருவேளை பேர்ஸ்டோ சதத்துடன் 350 ரன்கள் முன்னிலை பெற்று குக் டிக்ளேர் செய்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

முன்னதாக 282/5 அதாவது உண்மையில் பின் தங்கிய 103 ரன்களை கழித்தால் இங்கிலாந்து 179/5 என்று தடுமாறியது. ஜானி பேர்ஸ்டோ தனது முதல் 15 ரன்களை எடுக்க 52 பந்துகள் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு மெல்ல அடித்து ஆடத் தொடங்கி 7 பவுண்டரிகளை அதன் பிறகு விளாசினார். மொயின் அலியின் அரைசதம் 64 பந்துகளில் வந்தது.

நேற்று 120/0 என்று வலுவாகக் களமிறங்கிய இங்கிலாந்து குக் (66), ஹேல்ஸ் (54) ஆகியோரை சடுதியில் இழந்தது. அலிஸ்டர் குக், சொஹைல் கான் பந்துக்கு தனது உடல் எடை முழுதையும் முன்னால் கொண்டு வராமல் டிரைவ் ஆட பாயிண்டில் யாசிர் ஷா டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். ஹேல்ஸ், ஆமிர் பந்தை டிரைவ் ஆடியதும் சரியாக அமையாமல் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. உண்மையில் இங்கிலாந்து இந்த நிலையில் 23 ரன்களே முன்னிலை பெற்று 2 விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது. ஜோ ரூட் 25 ரன்களில் இருந்த போது எட்ஜ் செய்த கேட்ச் வாய்ப்பை மொகமது ஹபீஸ் தவறவிட்டார். ஆனால் இது கடினமான வாய்ப்பே.

அதன் பிறகு பாகிஸ்தான் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி ரூட், வின்ஸ் ஆகியோரின் பொறுமையைச் சோதித்தார், இருவரும் மசியவில்லை, ஆனால் பாகிஸ்தான் திட்டமிட்டபடி ரன் விகிதம் கடுமையாகச் சரிந்தது. ரஹத் அலி தனது 7 ஓவர் ஸ்பெல்லில் 5 தொடர் மெய்டன்களை வீசினார். உணவு இடைவேளைக்குப் பிறகு ரன் வறட்சி அதிகரித்தது. யாசிர் ஷா பந்தை மிட்விக்கெட்டில் புல் ஆடி ஜோ ரூட் தனது அரைசதத்தை எடுத்த போது இங்கிலாந்து 100 ரன்கள் முன்னிலையைக் கடந்தது. பிறகு யாசிர் ஷா-வின் ஒரு ஓவரில் ரூட் 2 பவுண்டரிகளையும் வின்ஸ் 1 பவுண்டரியும் அடிக்க சற்றே ரன் வரத் தொடங்கியது. ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய யாசிர் ஷாவின் பந்தை ரூட் ஸ்வீப் செய்ய டாப் எட்ஜ் எடுத்து ஹபீஸிடம் ஷார்ட் பைன் லெக்கில் கேட்ச் ஆனது, ரூட், 123 பந்துகளில் 62 ரன்களில் காலியானார். வின்ஸ் தனது டெஸ்ட் அதிகபட்ச ஸ்கோரான 42-ஐ எட்டி போதுமென்ற மனமே பொன் செய்யும் விருந்தாக புதியபந்தில் ஆமிர் வீசிய பந்துக்கு மட்டையை தொங்க விட்டார் வின்ஸ், யூனுஸ் கானுக்கு கேட்சிங் பிராக்டீஸ். 257/4.

கேரி பாலன்ஸ் எச்சரிக்கையாக ஆடி 28 ரன்கள் எடுத்து யாசிர் ஷா பந்தை பிளிக் செய்ய லெக் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது, இது போன்று இதே தொடரில் அவர் 3-வது முறையாக அவுட் ஆகிறார். அதன் பிறகுதான் ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி கூட்டணி 117 பந்துகளில் 100 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இன்று ஆட்டத்தின் 5-வது நாள்.

http://tamil.thehindu.com/sports/மந்தமான-இங்கிலாந்து-பேட்டிங்கை-தூக்கி-நிறுத்திய-மொயின்-அலி-ஜானி-பேர்ஸ்டோ-311-ரன்கள்-முன்னிலை/article8955635.ece?homepage=true

  • தொடங்கியவர்

3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

 

Daily_News_7694011926652.jpg

பாகிஸ்தான் எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்தது.

103 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 125 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 414 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் 82 ரன்னும், மொயீன் அலி 60 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.

பேர்ஸ்டோவ் மேலும் ஒரு ரன்கள் எடுத்த நிலையில் சோஹைல் கான் பந்தில் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணி 445 ரன்கள் எடுத்திருந்தபோது அந்த அணியின் கேப்டன் அலைஸ்டர் குக் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். மொயீன் அலி 86 ரன்களுடனும், வோக்ஸ் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதனால் பாகிஸ்தான் அணிக்கு 343 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=237018

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.