Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச புகழ்பெற்ற பாடகராக விளங்கும் இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் புதல்வர் அர்ஜூன் குமாரசுவாமி

Featured Replies

சர்வதேச புகழ்பெற்ற பாடகராக விளங்கும் இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் புதல்வர் அர்ஜூன் குமாரசுவாமி
2016-07-13 14:43:44

179445.jpgஇலங்கை மத்திய வங்கி தொடர்பான சர்ச்சைகள் தீவிரமடைந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் நியமித்தார்.


பொருளாதார நிபுணரான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை பற்றி அறிந்தவர்கள் இப் பதவிக்கு நியமிக்கப்பட்டதை வெகுவாக வரவேற்றுள்ளனர்.

 

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கலாநிதி இந்திரஜித் குமாரசாமி, இலங்கை மத்திய வங்கியில் தனது தொழில்சார் வாழ்க்கையை ஆரம்பித்து பொதுநலவாய செயலகத்திலும் பணியாற்றியவர்.

 

பல்வேறு பெரும் நிறுவனங்களின் பணிப்பாளராகவும் விளங்கியவர். அதே வேளை, கலாநிதி இந்திரஜித் குமாரசுாமியைவிட (66) மிகவும் புகழ்பெற்ற வராக அவரின் புதல்வர்களில் ஒருவர் விளங்குகிறார்.

 

பிரிட்டனை தளமாகக் கொண்ட பாடகர் அர்ஜூன் குமாரசுவாமி தான் அப் புதல்வர்.

 

25 வயதான அர்ஜூன் குமாரசுவாமி பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களைக் கொண்ட கலைஞர்.

 

17944_6.jpgஉலகின் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய அர்ஜூன் குமாரசுவாமி, வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார்.


கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தாரா டி பொன்சேகாவை திருமணம் செய்தவர். இத் தம்பதியின் மூத்த புதல்வர் இம்ரான்.

 

இரண்டாவது புதல்வர் அர்ஜூன். 1990 செப்டெம்பர் 23 ஆம் திகதி இலங்கை யில் பிறந்த அர்ஜூன், தனது 4 ஆவது வயதில் பெற்றோருடன் பிரிட்டனில் குடியேறினார்.


சிறுவயதிலேயே பல இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்ட அர்ஜுன், பதின்மர் பருவத்திலேயே பாடவும் பாடல்களை எழுதவும் ஆரம்பித்தாராம்.

 

பல்தேசிய நிறுவனமான யுனி லீவரில் உயர் பதவி வகித்தவர் அர்ஜூன் குமாரசுவாமி. ஆனால், அவரின் மனம் இசைத்துறையிலேயே லயித்திரு ந்தது.


திடீரென ஒருநாள் யுனி லீவர் நிறுவனத்தில் மேற்கொண்டு வந்த தொழிலை கைவிட்டு இனிமேல் முற்றுமுழுதாக  இசைத் துறையிலேயே ஈடுபடப் போவதாக பெற்றோரிடம் கூறினார் அர்ஜூன்.

 

தந்தை இந்திரஜித் குமாரசுவாமிக்கு அத் தீர்மானம் அவ்வளவு மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கவில்லை.


179442.jpg

 

ஆனால், தனது திறமையில் நம்பிக்கை கொண்ட அர்ஜூன் குமாரசுவாமி தனது இலட்சியத்தில் உறுதியாக நின்றார்.


'3' படத்துக்காக அனிருத் ரவிசந்தரின் இசையில் தனுஷ் எழுதி பாடிய 'வை திஸ் கொலவெறி' பாடல் 2011 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியாகி உலகப் புகழ் பெற்றது.

 

அப் பாடலை ஆங்கிலத்தில் எழுதி ரீமிக்ஸ் செய்து பாடினார் அர்ஜூன். 2011 டிசம்பரில் வெளியான அர்ஜூனின் ஆங்கில ரீமிக்ஸ் 'வை திஸ் கொலவெறி' பாடல் 2013 ஜனவரி மாதத்துக்குள் 8 கோடி தடவை பார்வையிடப்பட்டி ருந்தது. 

 

179444.jpg

 

இப் பாடல் அர்ஜூன் குமாரசுவாமிக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது. இந்த ரீமிக்ஸ் பாடலுக்கு முன்னராகவே "Remember Tonight" (9 August 2010), "Just Friends", "Stargazer" (24 January 2011), "Vampire" (4 July 2011) முதலான அர்ஜூனின் ஆங்கில பாடல்கள் வெளியாகியிருந்தன.

 

2012 ஐக்கிய இராச்சிய ஆசிய இசை விருது வழங்கல் விழாவில் 'Best Urban Act'  விருதை அர்ஜூன் வென்றார்.

 

பின்னர் அசல் வை திஸ் கொலவெறி பாடலின் இசையமைப்பாள ரான அனிருத் ரவிச்சந்தரும் அர்ஜூனின் திறமைகளை வியந்து, 2013 ஆம் ஆண்டு தனது இசையமைப்பில் வெளியான வணக்கம் சென்னை படத்தில் பணியாற்ற அர்ஜூனை அழைத்தார்.

 

179441.jpg

இலங்கை மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக கலா­நிதி இந்­தி­ரஜித் குமா­ர­சு­­வாமி நிய­மிக்­கப்­பட்­ட­­போ­து...


 

 

அப் படத்தில் வெளியான நா முத்துகுமார் எழுதிய 'ஓ பெண்ணே பாடலை அனிருத், அர்ஜூன், விஷால் தத்லானி ஆகியோர் பாடியிருந்தனர்.

 

ஓ பெண்ணே சர்வதேச பதிப்புப் பாடலை அர்ஜூன் எழுதினார். அப் பாடலை  அனிருத், அர்ஜூன், சார்ள்ஸ் பொஸ்கோ, நயீம் ஆகியோர் பாடியிருந்தனர்.

 

கடந்த பெப்ரவரி மாதம் வெளியான 'Drifter' பாடலில் இந்திய நடிகையும் பாடகியுமான அன்ட்ரியா ஜெரேமியாவுடன் இணைந்து அர்ஜூன் குமாரசுவாமி பணியாற்றியிருந்தார்.

 

 

அர்ஜூனின் வைஸ் திஸ் கொலவெறி டீ   ஆங்கில ரீ மிக்ஸ் பாடல் வீடியோ"
 

 

 

 

 

 

 

Drifter - Official Music Video | Andrea Jeremiah feat. Arjun :

 

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=17944#sthash.c9LsD35c.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.