Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் சாதனைகள்

Featured Replies

டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் சாதனைகள் 

 

 

 FB_IMG_1469862304181டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் சாதனைகள்

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக விளையாடும் இலங்கை அணி, தனது 250 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

1981/82 பருவகாலங்களில் இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடத்  தொடங்கிய இலங்கை அணி, அண்ணளவாக 35 வருடங்களாக தனது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய வீரர்கள், மற்றும் இலங்கை அணி செய்த சாதனைகளை இந்த கட்டுரை இயம்பவுள்ளது.

இதுவரை இலங்கை அணி விளையாடிய போட்டிகளில் 76 வெற்றிகளையும், 81 சமநிலைகளையும், 92 தோல்விகளையும் கடந்துள்ளது.

இந்திய அணிக்கெதிராக பிரேமதாச மைதானத்தில் 97/98 பருவகாலத்தில், இனிங்சொன்றில் 952 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதே அதிக ஓட்ட எண்ணிக்கையாகும். இது தான் ஒரு அணி, ஒரு இன்னிங்சில் பெற்றுக் கொண்ட உச்சபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.  பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 94/95 பருவகாலத்தில்,  கண்டியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பெற்றுக் கொண்ட 71 ஓட்டங்களே மிகக் குறைவான இலங்கையின் ஓட்ட எண்ணிக்கையாகும்.

குமார்received_10206531992731081 சங்ககார 134 போட்டிகளில் விளையாடி  233 இனிங்சில் துடுப்பெடுத்தாடி 12400 ஓட்டங்களை கடந்துள்ளார். மேலும் 38 தடவைகள் சதத்தினைக் கடந்தும், 52 தடவைகள் அரைச்சதத்தினையும் பெற்றுள்ளார். ஆனால் 11 தடவைகள் பூச்சியத்திற்கு ஆட்டமிழந்தார். இவரின் சராசரி 57.40 ஆகவும், அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக 319 ஓட்டங்கள் காணப்படுகிறது.

மஹேல ஜெயவர்த்தன  149 போட்டிகளில் விளையாடி  252 இனிங்சில் துடுப்பெடுத்தாடி 11814 ஓட்டங்களை கடந்துள்ளார். மேலும் 34 தடவைகள் சதத்தினைக் கடந்தும், 50 தடவைகள் அரைச்சதத்தினையும் பெற்றுள்ளார். ஆனால் 15 தடவைகள் பூச்சியத்திற்கு ஆட்டமிழந்தார். இவரின் சராசரி 49.84 ஆகவும், அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக 374 ஓட்டங்கள் காணப்படுகிறது.

இவர்கள் இருவரும் தான் இலங்கை அணி சார்பாக 1௦௦௦௦ டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்த வீரர்களாவர்.

மேலும்received_10206531992571077 டெஸ்ட் என்றாலே நினைவுக்கு வரும் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர. தேவையான போட்டிகளில் நின்று நிலைத்து தனது விக்கெட்டினைப் பாதுகாப்பவர். இவரின் சராசரி 48.76 ஆக காணப்படுகிறது. தற்போது விளையாடும் வீரர்களில், மத்தியூஸ், சந்திமால் போன்றவர்களின்  சராசரிகள் முறையே 47.93 மற்றும்  43.10 ஆகக் காணப்படுகிறது.

32 தடவைகள் முரளிதரன் பூச்சியத்திற்கு அரங்கு திரும்பியுள்ளார்.

received_10206531992371072

97ம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சனத் ஜெயசூரியா பெற்றுக் கொண்ட 572 மொத்த ஓட்டங்களே, தொடரொன்றில் ஒரு வீரர் பெற்றுக் கொண்ட, அதிக மொத்த ஓட்டங்களாகும்.

சங்ககார மற்றும் மஹேல இருவரும் தென்னாபிரிக்காவிற்கு எதிராக கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இவர்கள் இருவரும் பெற்றுக் கொண்ட 624 ஓட்டங்களே இணைப்பாட்ட அதிக ஓட்டங்களாகும்.received_10206531992691080

அதற்கு முதல் ஜெயசூரியா மற்றும் மஹானாம இருவரும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 576 ஓட்டங்களை தம்மிடையே பகிர்ந்திருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சு என்றாலே உடனே நினைவுக்கு வருவது முத்தையா முரளிதரன் தான். எந்த பட்டியலிலும் இவரது சாதனைகள் தான். அர்ஜூணா ரணதுங்க என்னும் சிறந்த ஒரு தலைவரால் பட்டை தீட்டப்பட்டு வெளியுலகத்திற்கு வந்தவர். கிடைத்த வாய்ப்பினை மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருந்தவர்.

received_10206531992611078132 போட்டிகளில் விளையாடிய முரளிதரன், 230 இன்னிங்ஸில் பந்து வீசி மொத்தமாக 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இருந்தார். தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் ஹேரத் 313 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இருக்கிறார்.

முரளிதரன் மற்றும் ஹேரத் ஒரே இனிங்சில் 9 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளனர்.

98/99 பருவ காலத்தில், ஓவல் மைதானத்திலே இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு டெஸ்டில், 113.5 ஓவர்கள் பந்து வீசி, 41 ஓட்டமற்ற ஓவர்கள் உள்ளடங்கலாக, 220 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 16 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இருந்தார்.

மேலும் முரளிதரன் 67 தடவைகள் 5 விக்கெட்டுக்கள் அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை ஒரே இனிங்சில் கைப்பற்றி கொண்டார். 22 தடவைகள் பத்து  அல்லது பத்துக்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை ஒரே டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றியுள்ளார்.

பிரசன்னா ஜெயவர்தன 58 போட்டிகளில் 102 இனிங்சில் விளையாடி 156 பேர் ஆட்டமிழக்கச் செய்திருக்கார். அதனை தொடர்ந்து சங்ககார மற்றும் களுவிதாரண முறையே 151,119 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்திருக்கின்றனர். மேலும் பிரசன்னா ஜெயவர்தன 205 பிடிஎடுப்புக்களை எடுத்துள்ளார்.

இப்படியான பல சாதனைகளை இலங்கை அணியினர் புரிந்துள்ளனர்.

தொடர்ந்தும் இலங்கை அணி சாதனைகள் புரிய விளையாட்டு.கொம் சார்பில் வாழ்த்துக்கள்.!!!!

http://vilaiyattu.com/16822-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.