Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜூலை கொடுமைகளும் ஆகஸ்ட் வேடிக்கைகளும்

Featured Replies

ஜூலை கொடு­மை­களும்
ஆகஸ்ட் வேடிக்­கை­களும்
 
showImageInStory?imageid=289627:mr
 
 
 

பாத­யாத்­தி­ரைகள் உலகம் பூரா­க­வுமே மதவாழ்­வி­னதும் கலா­சார வாழ்­வி­னதும் இன்­றி­ய­மை­யாத ஒரு அங்­க­மாக இருந்து வரு­கின்­றன. தொடர்பு முறைகள் வளர்ச்­சி­ய­டை­யாத முற்­கா­லத்தில் பாதயாத்­தி­ரைகள் சமூக விழிப்­பு­ணர்வை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கான முக்­கி­ய­மா­ன­தொரு சாத­ன­மாக விளங்­கி­யி­ருந்­தன.

அர­சியல் விஞ்­ஞான மேதை பெனடிக் அண்­டர்சின் பாதயாத்­தி­ரைகள் பற்­றிய மானி­ட­வியல் ஆய்­வு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தேசங்­களின் கருத்­து­ரு­வாக்­கத்­திலும் தேசிய உணர்­வு­களின் உரு­வாக்­கத்­திலும் பாத­யாத்­தி­ரையின் பாத்­திரம் குறித்து நுண்­ண­றிவுத் திருத்­த­துடன் விளக்­கங்­களைத் தந்­தி­ருக்­கிறார். தெற்­கா­சி­ய­ர்­க­ளி­னாலும் இலங்­கை­யர்­க­ளி­னாலும் இது குறித்து அனு­ப­வ­ரீ­தி­யாக மிக எளி­தா­கவே விப­ரித்துக் கூறமுடியும். அர­சியல் கருத்­துக்­க­ளையும் நோக்­கங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான கருவி என்ற வகையில் பாதயாத்­தி­ரை­களின் நவீன பயன்­பாட்­டுடன் இவர்கள் நன்கு பரிச்­ச­யப்­பட்­ட­வர்­க­ளா­கவும் இருக்­கி­றார்கள். மேன்மை வாய்ந்த உதா­ர­ணங்ளும் உண்டு. நகைப்­புக்­கி­ட­மான உதா­ர­ணங்­களும் உண்டு. பிரிட்­டி­ஷா­ரி­ட­மி­ருந்து இந்­தி­யா­வுக்கு விடு­தலை வேண்டி மகாத்மா காந்தி நடத்­திய பாத­யாத்­தி­ரைகள் தொடங்கி, இலங்­கையில் இரு வாரங்­க­ளுக்கு முன்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நடத்­திய பாத­யாத்­திரை வரை இந்த உதா­ர­ணங்­களை அடுக்கிக்கொண்ட போகலாம். இலங்­கையில் வேறு பாத­யாத்­தி­ரை­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. 1956 ஆகஸ்டில் தமி­ழ­ரசுக் கட்­சியின் திரு­மலை யாத்­திரை. இது 1957 ஜூலையில் பண்டா – செல்வா ஒப்­பந்­தத்­துக்கு வழி­வ­குத்­தது. அந்த ஒப்­பந்­தத்தை எதிர்த்து காலஞ்­சென்ற முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்­த்தன கண்டி நோக்கி மேற்­கொண்ட யாத்­திரை, இறு­தியில் ஒப்­பந்தம் 1958 ஏப்­ரலில் கிழித்­தெ­றி­யப்­படும் நிலைக்கு வழி­வ­குத்­தது.

உண்­மையில் கண்­டியில் இருந்து கொழும்­புக்கு மேற்­கொள்­ளப்­பட்ட பாத­யாத்­தி­ரையை ராஜபக் ஷக்­களின் நலன்­களைப் பாது­காப்­பதைத் தவிர வேறு எந்­த­வி­த­மான நேர்­மை­யான அர­சியல் நோக்­கமும் இல்­லாத ஒரு அர­சியல் கோமா­ளித்­தனம் என்று அர­சாங்கம் வர்­ணித்­ததைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஆனால், அர­சாங்­கத்தின் சொந்த அர­சி­யலும் அது வெளிப்­படுத்­து­கின்ற செய்­தி­களும் கூட நோக்­கமும் உறு­திப்­பாடும் அற்­ற­வை­யா­கவே காணப்­ப­டு­கின்­றன. கொழும்பு துறை­முக நகரத் திட்டம் (Port City Project) சுற்­றாடல் பாது­காப்பு அக்­க­றை­களின் கார­ண­மாக அல்ல, இந்­தி­யாவின் நெருக்­கு­தலின் விளை­வா­கவே இடைநிறுத்­தப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்ட கருத்து அர­சாங்­கத்தின் இரண்­டகத்தன்­மையை மாத்­தி­ர­மல்ல, அதன் அபத்­தத்­தன்­மை­யையும் வெளிக்­காட்­டிய ஒரு உதா­ர­ண­மாகும்.

இந்­தி­யா­வுக்கு அடி­ப­ணி­கின்­ற­மைக்­காக அர­சாங்­கத்தை கூட்டு எதி­ரணி (Joint Opposition) கடு­மை­யாகக் கண்­டிக்கப் போகின்­றது என்­கின்ற அதே­வேளை இந்த பாரிய திட்­டத்தின் மூலம் சுற்­றா­ட­லுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய பாத­க­மான விளை­வுகள் குறித்து அது சுல­ப­மா­கவே அலட்­சியம் செய்யும். ஆளும் தரப்­பிலும் எதி­ர­ணி­யிலும் இருக்­கின்ற எமது அர­சியல் தலை­வர்கள் உகந்த முறையில் திட்­ட­மி­டப்­ப­டாத அபி­வி­ருத்தித் திட்­டங்­களின் விளை­வு­களில் இருந்து சுற்­றா­டலைப் பாது­காக்க வேண்­டிய ஆபத்தில் அக்­கறை காட்­டு­வதை விடவும் சீனா தொடர்­பா­கவும் இந்­தியா தொடர்­பா­கவும் சண்டைபிடிப்­பதில் கூடுதல் அக்­கறை கொண்­ட­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். சட்­டங்­களை இயற்­று­வதில் கடைப்­பி­டிக்க வேண்­டிய பாரா­ளு­மன்ற விதி­மு­றை­களைப் பற்­றியோ அல்­லது கேள்விப்பத்­தி­ரங்­களை வழங்­கு­வதில் கடைப்­பி­டிக்க வேண்­டிய நிர்வாக நடை­மு­றை­களைப் பற்­றியோ இவர்­க­ளுக்கு அக்­க­றை­யில்லை. பெறு­மதி சேர்­வரி (Vat) விவ­கா­ரத்­திலும் கேள்விப் பத்­தி­ரங்கள் வழங்கல் விவ­கா­ரத்­திலும் பாரிய முறையில் திட்­ட­மிட்ட செயற்­பா­டின்மை கார­ண­மாக உச்ச நீதி­மன்­றத்­தினால் அர­சாங்கம் தண்­டிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. முக்­கி­ய­மான விவ­கா­ரங்­களில் கவ­னத்தைச் செலுத்­தாமல் கூட்டு எதி­ரணி அர­சியல் வீதி ஆட்­டங்­களில் கூடுதல் கவ­னத்தைச் செலுத்­து­கி­றது. காணாமல் போனோர் விவ­கார அலு­வ­லகம் (Office of Missing Persons) தொடர்­பான சட்டமூலம் அர­சி­ய­ல­மைப்­புக்கு இசை­வா­னதா? இல்­லையா என்­பதை தீர்­மா­னித்துக் கூறு­மாறு உச்ச நீதி­மன்­றத்­துக்கு (விதந்­து­ரைக்­கப்­பட்ட 7 நாட்­க­ளுக்குள்) மனுச்செய்­வ­தற்கு கூட்டு எதி­ரணி மறந்து போய்­விட்­டது.

இலங்­கையின் தற்­போ­தைய அர­சியல் நிகழ்வுப்போக்­கு­களில் நேர்­ம­றை­யான சென்­மு­றை­யாக அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­களை வரை­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் அமை­தி­யான முறையில் அதே­வேளை நிலை­யு­று­தி­யுடன் ஏற்­பட்டுவரும் முன்­னேற்­றத்தை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கி­றது. அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­களை நிறை­வேற்றிக்கொள்­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் தேவை­யான மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வையும் அடுத்து தேசிய சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் வெற்­றி­க­ர­மான முறையில் மக்­களின் அங்­கீ­கா­ரத்­தையும் பெற்றுக்கொள்­வதே தற்­போ­தைய தேசிய அர­சாங்­கத்தின் முழு நோக்­க­மாக இருக்­கி­றது. கூட்டு எதி­ர­ணியைப் பொறுத்­த­வரை அர­சி­ய­ல­மைப்பு வரைவுச் செயன்­மு­றை­களின் போது கொண்­டு­வ­ரப்­ப­டக்­கூடிய மாற்­றங்­களில் எதை அர­சாங்­கத்­துக்கு எதி­ராக மக்­களை அணி­தி­ரட்­டு­வ­தற்கு பயன்­ப­டுத்த முடி­மென்ற அறி­வ­தற்­காகக் காத்துக் கொண்­டி­ருக்­கி­றது. இவ்­வா­றான அணிதிரட்டல் தனது சொந்த அர­சியல் பொருத்­தப்­பாட்டை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு அவ­சியம் என்று கூட்டு எதி­ரணி நம்­பு­கி­றது.

யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கடந்த மாதம் மாணவர் குழுக்­க­ளுக்கு இடையில் மூண்ட மோதல் சம்­ப­வத்தை கூட்டு எதி­ரணி அதன் பாத­யாத்­தி­ரையின் போது ஒரு பிரச்­சி­னை­யாக முன்­வைத்து கோஷ­மெ­ழுப்­பா­தமை குறிப்­பி­டத்­தக்க ஒன்­றாகும். அது தற்­செ­ய­லா­னதா அல்­லது மன­மார்ந்து செய்­யப்­பட்ட ஒன்றா என்­பது வேறு விடயம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஏற்­பாட்டில் யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக தமிழ் மாண­வர்­க­ளி­னதும் சிங்­கள மாண­வர்­க­ளி­ன­தும் பிர­தி­நி­தி­க­ளையும் சிங்­கள மாண­வர்­களின் பெற்­றோ­ரையும் ஒன்­றாக அமரவைத்து பிரச்­சி­னைக்கு இணக்­க­பூர்­வ­மான தீர்வு காண்­ப­தற்கு பேச்­சு­வார்த்­தையை நடத்­தி­யது குறித்து அர­சாங்கம் நிம்­ம­தி­ய­டைய முடியும். பல்­க­லைக்­க­ழ­கங்­களில் புதிய மாண­வர்­களை வர­வேற்கும் நிகழ்­வு­களின் போது போலி­யான கலா­சார முரண்­பா­டு­களின் விளை­வாக தக­ரா­றுகள் ஏற்­பட்டு அவற்­றுக்குத் தீர்வுகாண்­ப­தற்கு நாட்டின் அரச தலை­வரின் தலை­யீட்டை நாடு­வ­தென்­பது நாட்டின் முதிர்ச்­சி­யி­னதோ பக்­கு­வத்­தி­னதோ ஒரு அறி­கு­றி­யல்ல. இது உண்­மையில் கவ­லைப்­பட வேண்­டிய விடயம். நாம் எந்­த­ள­வுக்கு முதிர்ச்­சி­யற்ற நிலையில் இருக்­கிறோம் என்­ப­தையே இது வெளிக்­காட்­டு­கி­றது. யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக தக­ராறு பாரி­ய­தொரு தொல்­லை­யாக மாறு­வதைத் தடுப்­ப­தற்கு தலை­யீடு செய்த ஜனா­தி­பதி பாராட்­டப்­பட வேண்­டி­யவர். முன்­னைய ஜனா­தி­ப­திகள் சிலரைப் போலன்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ண­ ­பல்­க­லைக்­க­ழகத் தக­ராறு தனது தலை­யீடு அவ­சி­யப்­ப­டு­கின்ற அள­வுக்கு முக்­கி­ய­மா­ன­தல்ல என்று நினைக்­காமல் பொறுப்­பு­ணர்­வுடன் செயற்­பட்­டி­ருக்­கிறார். அத்­துடன் வேறு சில ஜனா­தி­ப­தி­களைப் போன்று பல்­க­லைக்­க­ழக வளா­க­மொன்­றுக்குள் ஒழுங்கை நிலைநிறுத்­து­வ­தற்கு பொலி­ஸா­ரையோ இரா­ணு­வத்­தி­ன­ரையோ ஜனா­தி­பதி சிறி­சேன அழைக்­க­வில்லை. மிகுந்த நிதா­னத்­துடன் விவே­க­மான முறையில் கலந்­தா­லோ­ச­னையை நடத்தி புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்தும் மார்க்­கத்தை அவர் கடைப்­பி­டித்தார்.

கடந்த கால கொடு­மை­களும்

தற்­போ­தைய அர­சி­யலும்

முன்­னைய எனது கட்­டு­ரை­யொன்றில் நான் குறிப்­பிட்­டி­ருந்­ததைப் போன்று தற்­போ­தைய ஐக்­கிய தேசியக் கட்சி – ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி அர­சாங்­கமும் எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் கடந்த காலத்தில் இருந்த அர­சாங்­கங்­க­ளையும் எதிர்க்­கட்­சி­க­ளையும் போலன்றி மிகவும் நடை­முறைச்சாத்­தி­ய­மான முறை­யிலும் ஆக்­க­பூர்­வ­மான முறை­யிலும் செயற்­ப­டு­வதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கி­றது. அதே­போன்றே பாரா­ளு­மன்­றத்தில் உள்ள முஸ்லிம் பிர­தி­நி­தி­களும் இந்­திய வம்­சா­வளித் தமி­ழர்­களின் பிர­தி­நி­தி­களும் ஜனதா விமுக்திப் பெர­முனவும் (ஜே.வி.பி.) நடந்துகொள்­கின்­றனர். கடந்த காலத்தைப் போலன்றி பாரா­ளு­மன்­றத்தில் இனத்­துவ சமூ­கங்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற உறுப்­பி­னர்­க­ளி­டையே சிறப்­பான ஒருங்­கி­ணைப்பும் நல்­லெண்­ணமும் நில­வு­வ­துடன், நல்­லு­றவைக் கட்­டி­யெ­ழுப்பி இனத்­துவ அமைதி பேணப்­ப­டு­கி­றது. கூட்டு எதி­ர­ணி­யினர் கூட, தமி­ழர்­க­ளுக்கு விரோ­த­மா­ன­வர்­க­ளா­கவோ முஸ்­லிம்­க­ளுக்கு விரோ­த­மா­ன­வர்­க­ளா­கவோ தாங்கள் நோக்­கப்­ப­டா­தி­ருப்­பதில் கவனம் செலுத்­து­கின்­றார்கள் என்ற போதிலும் அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­களை மேற்­கு­லக ஏகா­தி­பத்­திய சக்­தி­க­ளிடம் சர­ண­டையும் போக்கு என்று கிர­ம­மாக கண்­டனம் செய்யத் தவ­று­வ­தில்லை. இன்­னொரு வகையில் சொல்லப்போனால் தற்­போ­தைய பாரா­ளு­மன்றம் பல கோணங்­களில் அடிப்­ப­டையில் தகு­தி­யற்­ற­தாக இருக்­கின்ற போதிலும் இனத்­துவ உற­வுகள் அடிப்­ப­டையில் சேதம் விளை­விக்­காத ஒன்­றாக விளங்­கு­கி­றது.

தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் அங்­கத்­துவம் வகிக்கும் பல்­வேறு அர­சியல் கட்­சிகள் மற்றும் அவற்றின் எம்.பி. க்களுக்கு இடை­யி­லான இனத்­துவ உற­வு­களின் நிலை 1977 பாரா­ளு­மன்­றத்தில் இருந்த நிலை­யையும் விட வேறு­பட்­ட­தாகும். அந்தப் பார­ளு­மன்­றத்தில் பிர­மாண்­ட­மான பெரும்­பான்மைப் பலத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்சி அதி­கா­ரத்தில் இருந்த அதே­வேளை, எதிர்க்­கட்­சி­யான தமிழர் விடு­தலைக் கூட்­டணி சொற்ப எண்­ணிக்­கை­யான எம்.பி.க்களைக் கொண்­டி­ருந்­தது. அது நாட்டுப் பிரி­வி­னையை வலி­யு­றுத்­திய போதிலும் சாத்­தி­ய­மான மாற்றுத்தீர்வு நோக்­கியும் சிந்­தித்துக் கொண்­டி­ருந்­தது. 1977 ஆம் ஆண்­டிலும் அதைத் தொடர்ந்த வந்த ஆண்­டு­க­ளிலும் பாரா­ளு­மன்­றத்­துக்கு உள்­ளேயும் வெளி­யேயும் நில­விய அர­சியல் சூழ்­நிலை மனித உரி­மைகள் துறையில் குடி­யியல் உரி­மைகள் இயக்கம் (Civil) Rights Movements) போன்ற அமைப்­பு­க்களும் இனங்­க­ளுக்கு இடை­யி­லான உற­வுகள் சம்­பந்­தப்­பட்ட துறையில் இனங்­க­ளுக்கு இடையில் நீதிக்கும் சமத்­து­வத்­துக்­கு­மான இயக்கம் (Movement for Inter–Racial Justice and Equality – MERJE) போன்ற அமைப்­பு­க்களும் தோன்­று­வ­தற்கு வழி­வ­குத்­தது. மனித உரி­மை­களைப் பாது­காப்­ப­திலும் இனங்­க­ளுக்கு இடை­யி­லான இணக்க நிலையை மேம்­ப­டுத்­து­வ­திலும் பல வரு­டங்­க­ளாக அந்த அமைப்புக்கள் மிகவும் வீர தீரமான பாத்திரத்தை வகித்தன.

அன்­றைய சூழ்­நி­லைக்கு முற்­றிலும் வேறு­பட்ட முறையில் இன்­றைய பாரா­ளு­மன்­றத்தில் காணப்­ப­டக்­கூ­டி­ய­தாக இருக்­கின்ற சூழ்­நிலை முற்­றிலும் வேறு­பட்ட சிவில் சமூகக் குரல்கள் வெளிக்­கி­ளம்­பு­வ­தற்கு இடங்­கொடுக்கின்­றது போலத் தோன்­று­கி­றது. இந்தப் புதிய குரல்கள் அப்­பட்­ட­மான மனித உரிமை மீறல்கள் மற்றும் இனங்­க­ளுக்கு இடை­யி­லான முரண் நிலை­க­ளுடன் தங்­களை நீண்ட கால­மாக அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்ட நிறு­வ­னங்கள், தனி நபர்­க­ளுக்­காக மனித உரி­மை­க­ளி­னதும் சட்டம் ஒழுங்­கி­னதும் மொழி நடைப்­பா­ணியைப் பயன்­ப­டுத்­து­கின்­றன. இது துர­திஷ்­ட­வ­ச­மான ஒரு நிகழ்வுப் போக்­காகும். இது புதி­ய­தொரு தோற்­றப்­பாட்­டுக்கு வழி­வ­குக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. எதிர்­கா­லத்தில் பாத­யாத்­தி­ரை­களைத் தூண்டி விடு­வ­தற்­கான ஆற்­றலை இத்­தோற்­றப்­பாடு கொண்­டி­ருக்­கி­றது என்­பதே இதில் உள்ள ஆபத்­தாகும். இப்­போது பாத­யாத்­திரை சுய­நல நோக்­கங்­க­ளு­டை­ய­தாகும். முன்­னைய ஆட்­சிக்கு எதி­ரான பெரு­வாரி யான குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரணை செய்­வோ­ருக்கு ராஜபக் ஷக்கள் மீண்டும் ஆட்­சி­ய­தி­கா­ரத்­துக்கு வரக்­கூ­டிய சாத்­தி­யப்­பாடு இருக்­கி­ற­தென்று எச்­ச­ரிக்கை செய்­வதே இதன் நோக்­க­மாகும். எதிர்­கா­லத்தில் இது இது மேலும் பேரிடரைக் கொண்டுவரக் கூடிய சக்தியாக வளரக் கூடும். ஆனால் அரசாங்கம் இதை அலட்சியம் செய்தால் ஆபத்தை விலைக்கு வாங்குவதாகவே இருக்கும்.

 

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=10/08/2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.