Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு

Featured Replies

கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு
 
 
கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு
1472098018_sulaiman-720x480.pngபம்பலப்பிட்டி பிரதேசத்தில் கடத்தப்பட்டிருந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சகீம் சுலை மான் (வயது-29), சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
மாவனெல்ல, ஹெம்மாதுகம பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) மீட்கப்பட்ட குறித்த சடலத்தை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நடைபெற வுள்ளது.
sulaiman-720x480.png
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்டிருந்த குறித்த வர்த்தகரை விடுவிப்பதற்கு கட த்தல்காரர்கள் இரண்டு கோடி ரூபா நட்டஈடு கோரியதாக, அவர்களது உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இதனையடுதது கடத்தல்காரர்களை பற்றிய விபரத்தை அறியத்தருவோருக்கு 50 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என குறித்த வர்த்தகரின் தந்தை அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

http://onlineuthayan.com/news/16662

  • தொடங்கியவர்

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை : மர்ம உறுப்பு பகுதியில் கடுமையான தாக்குதல் : கப்பம் கோருவதற்கு முன்னரே கொலை செய்யப்பட்டு எரிப்பு : ஐந்து பேருக்கு வெளிநாடு செல்லத் தடை ((காணொளி இணைப்பு)

 



பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து கடத்தப்பட்டு மாவனல்ல பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல வர்த்தகரின் சடலத்தில், மர்ம உறுப்பு பகுதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த வர்த்தகர் கப்பம் கோருவதற்கு முன்னரே கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.businessman_-Mohamed-Sakeem-Sulaiman.jpg
மாவனல்ல பகுதியில் மீட்கப்பட்ட வர்த்தகரின் சடலத்தில் முகத்தில் அடையாளம் தெரியாதளவிற்கு வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன. மேலும் சடலம் எரிக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுவதோடு சடலம் அழுகிய நிலையிலும் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வர்த்தகரின் மர்ம உறுப்பு பகுதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு குறித்த சேதம் சந்தேக நபர்களால் ஏற்படுத்தப்பட்டதா அல்லது  சடலம்  மிருகங்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து நபர்களுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் தடை விதித்துள்ளார். குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த உத்தரவை நீதிமற்றம் பிறப்பித்துள்ளது.வர்த்தகரின் சடலம் நேற்று இரவு,  கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொரிஸார் தெரிவித்துள்ளனர். மாவனல்ல பகுதியில் அடையாளம் காணமுடியாத இளைஞர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் வர்த்தகரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டதுடன், குற்றப் புலனாய்வு பொலிஸார் குடும்பத்தாருடன் மாவனல்ல பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.இதையடுத்து இரவு 10 மணியளவில் அங்கு காணப்பட்ட சடலம் கடத்தப்பட்ட வர்த்தகருடையது என அவருடைய குடும்பத்தார் அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவனல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கடத்தல் தொடர்பில் 7 விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

http://www.virakesari.lk/article/10625

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.