Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 444 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்தது இங்கிலாந்து

Featured Replies

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 444 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்தது இங்கிலாந்து
2016-08-30 23:01:49

பாகிஸ்தானுடனான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 444 ஓட்டங்களைக்குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.


இங்கிலாந்தின் நோட்டிங்ஹாம் நகரில் இன்று நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 444 ஓட்டங்களைக் குவித்தது.

 

18907england-world-record-444.jpg

அலெக்ஸ் ஹேல்ஸ்


 

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இது புதிய சாதனையாகும்.


2006 ஆம் ஆண்டு நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 443 ஓட்டங்களைக் குவித்தமையே இதுவரை சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் அலெக்ஸ் ஹேல்ஸ் 122 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 22 பவுண்டறிகள் உட்பட 171 ஓட்டங்களைக் குவித்தார்.

 


ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 90 ஓட்டங்ளையும் ஜோ ரூட்  86 பந்துகளில் 85 ஓட்டங்களையும் ஒய்ன் மோர்கன் 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் குவித்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18907#sthash.YdfAbcRO.dpuf

14183908_1088128937900965_76503699558752

14095750_1116320011750025_82605383616950

  • தொடங்கியவர்

14115599_1320272591325167_76178128639290

14212644_1320181848000908_50556583585020

14188197_1320244644661295_84426449375140

14124927_1320244687994624_19494960441563

14102929_1320244711327955_52432379353012

  • தொடங்கியவர்

10 ஆண்டுகால இலங்கையின் உலக சாதனையை முறியடித்தது இங்கிலாந்து. ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய 444 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தது. 

 

alex10 ஆண்டுகால இலங்கையின் உலக சாதனையை முறியடித்தது இங்கிலாந்து.
ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய 444 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வது சர்வதேச ஒருநாள் போட்டி இங்கிலாந்தின் நோட்டிங்காம் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்தப் போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆரம்பித்து வைத்த வான வேடிக்கையை அழகாக முடித்து வைத்தார் இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர்.
இதன் மூலமாக ஒருநாள் சர்வதேச அரங்கில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனையை தனதாக்கி வரலாறு படைத்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஒயின் மோர்கன் முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார், அதன்படி இங்கிலாந்து அணியினர் தங்களது துடுப்பாட்டத்தை ஆரம்பித்தார்கள்.

ஆரம்பம் முதலே அடித்தாடுவதில் ஆர்வம் காட்டிய ஆரம்ப வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 122 பந்துகளில் 171 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்து செல்ல, அதன் பின்னர் வந்த அணித்தலைவர் மோர்கன் மற்றும் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் ஆகியோர் 72 பந்துகளில் 161 ஓட்ட்ங்கள் பெற்றுக்கொடுக்க இங்கிலாந்து புதிய உலக சாதனையை தனதாக்கியது.

உலக சாதனையை படைப்பதற்கு இறுதி ஓவரில் 6 ஓட்ட்ங்கள் தேவையான பொது,இறுதி ஓவர் வீசிய 22 வயதான ஹசன் அலி முதல் 5 பந்துகளில் வெறுமனே 2 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்,இதன் காரணத்தால் இலங்கையின் உலக சாதனை காக்கப்படும் என்ற நம்பிக்கையில் இலங்கை ரசிகர்கள் இருக்கையில் இறுதி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜோஸ் பட்லர் இங்கிலாந்தின் உலக சாதனைக்கு காரணமானார்.

பாகிஸ்தான் அணியினவேகப்பந்து வீச்சாளர் வஹாபி ரியாஸ் மொத்தமாக இன்றைய நாளில் 110 ஓட்ட்ங்கள் விட்டுக் கொடுத்தார், ஒருநாள் அரங்கில் மோசமான பந்து விசிச்சுப் பெருத்த எனும் சாதனை ஆஸ்திரேலியாவின் மிக் லூயிஸிடம் இருக்கிறது, அவர் 2006 இல் தென் ஆபிரிக்க அணியுடனான போட்டியில் 113 ஓட்ட்ங்கள் விட்டுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது,

2006 ம் ஆண்டு இலங்கை அணி, நெதர்லாந்து அணிக்கெதிராக 9 விக்கெட்டுக்களை இழந்து 443 ஓட்டங்கள் பெற்றதே இதுவரையான ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு அணி பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.10 ஆண்டுகால உலக சாதனை ஒருநாள் அரங்கில் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

முதலிரு ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் அணிக்கு 445 எனும் இமாலய இலக்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

re re 2

re 3re 4

http://vilaiyattu.com/17625-2/

  • தொடங்கியவர்

பவுலிங்கில் செஞ்சுரி போட்ட பாகிஸ்தான் பவுலர்! #PakVsEng

unnamed.jpg

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளை 2-2 என  சமன் செய்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான  ஐந்து போட்டிகள் கொண்ட ஒருதின தொடர் நடந்து வருகிறது. சவுதாம்டனில்  நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. லண்டனில் நடந்த இரண்டாவது ஒருதின போட்டியிலும் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. இந்நிலையில் மூன்றாவது  ஒருதின போட்டியை வென்றே  ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது பாகிஸ்தான்

 

 டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் ஆறு ஓவர்களில் 39 ரன்கள் தான் எடுத்த இங்கிலாந்து அதிரடி வீரர் ஜேஸன் ராய் விக்கெட்டையும் இழந்திருந்தது. ஆனால் அதன் பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸும், ரூட்டும் மெல்ல மெல்ல டாப் கியர் எடுக்க இங்கிலாந்து அணியின் வேகம் சரசரவென உயர்ந்தது. 36.5 ஓவரில் 281 ரன்கள் குவித்திருந்தது  இங்கிலாந்து. அப்போது அலெக்ஸ் ஹேல்ஸ் ஆடிய விதத்தை பார்க்கும் ரோஹித் ஷர்மா அடித்த 264 ரன்கள் என்ற உலக சாதனையை நிச்சயம் முறியடித்து விடும் வாய்ப்பு இருப்பதாகவே தோன்றியது. ஆனால்  பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹசன் அலி வீசிய பந்தொன்றில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார் அலெக்ஸ். 122 பந்துகளில் 22 பவுண்டரி, நான்கு சிக்ஸர் உதவியுடன் 171 ரன்கள் எடுத்து பெவிலியன்  திரும்பினார். தொடர்ந்து ஐந்தாவது முறையாக அரைசதம் அடித்து விளையாடிக்கொண்டிருந்த ரூட்டும் அடுத்த ஓவரிலேயே 84 ரன்னில் நடையை காட்டினார். 

அப்பாடா என பாகிஸ்தான் பவுலர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக நினைத்த வேளையில் தான்  இங்கிலாந்து கேப்டன் மோர்கனும், விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரும் இணைந்தனர்.  முகமது நவாஸ் வீசிய நாற்பதாவது ஓவரில் 20  ரன்னும், ஷோயப் மாலிக் வீசிய 42வது ஓவரில் நான்கு சிக்ஸர் உட்பட 26 ரன்களையும் குவித்தனர். வகாப் ரியாஸ்  தன் பங்குக்கு 48வது ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 444 ரன்களை குவித்திருந்தது.  51 பந்தில் 90 ரன்னுடன் ஜாஸ் பட்லரும், 27  பந்தில் 57 ரன்கள் குவித்து இயான் மோர்கனும் நாட் அவுட்டாக இருந்தனர். 

234.jpg

 

ஒரு நாள் போட்டிகளை பொறுத்தவரை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி 443 ரன்களை எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. இங்கிலாந்து அந்த சாதனையை முறியடித்து ஒரு ரன்கள் கூடுதலாக எடுத்தது. 50 ஓவரில்  445 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான். தொடக்க வீரர் சமி அஸ்லாம் 13 பந்தில் 8 ரன்கள் எடுத்தது அவுட் ஆனார். அதன் பின்னர் ஷர்ஜீல் கான் இங்கிலாந்து வீரர்களுக்கு மரண பயத்தை காண்பித்தார். 30 பந்தில் 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் 58  ரன்கள் குவித்து அவுட் ஆனார் ஷர்ஜீல். அவர் குவித்த 58 ரன்களில் 54 ரன்களை பவுண்டரி, சிக்ஸர்கள் மூலமாகவே குவித்தது குறிப்பிடத்தக்கது. 

ஷர்ஜீல் அவுட்  ஆன பிறகு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்  களத்துக்கு வருவதும், பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர். 199 ரன்னுக்கு ஒன்பது விக்கெட் விழுந்த நிலையில் அதிரடி டிவிஸ்ட் வைத்தார்  பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஆமிர்.  இங்கிலாந்து பவுலர்களை சாத்தியெடுத்து 28 பந்தில் ஐந்து பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் உதவியுடன் 58  ரன்கள் குவித்தார் அமீர். ஒரு வழியாக 42.4 ஓவரில் 275  ரன்களுக்கு அத்தனை விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்.  169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது இங்கிலாந்து. மூன்றாவது போட்டியை வென்றதோடு தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து. கடந்த 2015 உலகக்கோப்பைக்கு பிறகு புது எனர்ஜியுடன் ஒருதின போட்டிகள் மற்றும்  டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடி வருவது  குறிப்பிடத்தக்கது. 

 பத்து  சாதனை துளிகள் : -

1.  கடைசி ஏழு ஒருதின போட்டிகளில் மூன்று சதம் அடித்திருக்கிறார் அலெக்ஸ். ஒருதின போட்டியில் அவரின் அதிகபட்ச ஸ்கோர் நேற்று அடித்த 171 ரன்கள் தான்.

2. 111,222,333,444  ஆகிய ரன்களை ஒருதின போட்டியில் குவித்த ஒரே அணி இங்கிலாந்து மட்டும் தான். 

3. பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 12  ஒரு நாள் போட்டிகளையும் வென்றிருக்கிறது இங்கிலாந்து. இரு அணிகள் மோதிய ஒருதின தொடரையும் தொடர்ந்து நான்காவது முறையாக வென்றுள்ளது இங்கிலாந்து.

4. பதினோராவது ஆட்டக்காரராக இறங்கும் பேட்ஸ்மேன் ஒருவர் ஒருதின போட்டியில் இதுவரை அரை சதம் அடித்ததே கிடையாது. அந்த வகையில் உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார் முகமது ஆமீர்.  அவரின் கேரியரில் அதிகபட்ச ரன்னும் இது தான். 

5.ஒரு தின போட்டியை பொறுத்தவரையில் மிக மோசமான இரண்டாவது பந்துவீச்சு நேற்று வஹாப் வீசியது தான். 10 ஓவரில் 110 ரன்களை  விட்டுக்கொடுத்திருக்கிறார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய பவுலர் லெவிஸ் 2006ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 113  ரன்களை  விட்டுக்கொடுத்ததே இன்று வரை நம்பர் 1  மோசமான பந்துவீச்சாக இருக்கிறது. 

6. இங்கிலாந்து அணிக்கான அதிகவேக அரைசதத்தை அடித்தார் ஜோஸ் பட்லர் (22)

7. ஜோ ரூட் , தொடர்ந்து அரை சதங்கள் அடித்து அசத்தி வருகிறார்.தொடர்ச்சியாக அவர் அடிக்கும் ஐந்தாவது அரைசதம் இது

8. பாகிஸ்தானுக்கு எதிராக ரூட்டும் ஹேல்ஸும் இணைந்து 248 ரன்கள் குவித்தனர்.பாகிஸ்தானுக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச பார்டெனெர்ஷிப் ஸ்கோர் இது தான்.

9. இங்கிலாந்தின் இன்னிங்கிஸில் மொத்தம் 16 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது.இது தான் இங்கிலாந்து ஒரு போட்டியில் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள்

10. கடைசி பத்து ஓவர்களில் 135 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. இங்கிலாந்து அணிக்கு இது தான் அதிகமாம்.

http://www.vikatan.com/news/sports/67836-records-go-for-a-toss-after-england-hits-444-in-odi.art

  • தொடங்கியவர்

இங்கிலாந்து உலக சாதனை ரன்களும் முறியடிக்கப்பட்ட ஒருநாள் போட்டி சாதனைகளும்

 

 
தொடரை வென்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து. | கெட்டி இமேஜஸ்.
தொடரை வென்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து. | கெட்டி இமேஜஸ்.

444 ரன்கள் குவித்து 169 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து பாகிஸ்தானை வீழ்த்திய டிரெண்ட் பிரிட்ஜ் ஒருநாள் போட்டியில் சில சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

ஒருநாள் போட்டிகளில் இலங்கை எடுத்த அதிகபட்ச ரன்களான 443 என்ற சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது.

இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் தொடர்ச்சியாக 9 இருதரப்பு ஒருநாள் தொடர்களை விளையாடிய பாகிஸ்தான் ஒரு தொடரைக்கூட வெல்ல முடியவில்லை. அதாவது 1974-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒருநாள் தொடரை வென்றதோடு சரி அதன் பிறகு 8 ஒருநாள் தொடர்களை இங்கிலாந்தில் இழந்தது, ஒன்றில் டிரா செய்தது.

ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் எடுத்த அரைசதம் புதிய இங்கிலாந்து அரைசத சாதனையாகும். 2007-08-ல் நியூஸிலாந்துக்கு எதிராக பால் காலிங்வுட் எடுத்த அரைசதம் 24 பந்துகளில் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. தற்போது அதிவேக அரைசத சாதனைக்குரியவரானார் ஜோஸ் பட்லர். நேற்றைய போட்டியில் இயான் மோர்கனும் 24 பந்துகளில் அரைசதம் எட்டினார்.

46.2 ஓவர்களில் இங்கிலாந்து 400 ரன்களை எட்டியது. 2005-06 தொடரில் ஜொஹான்னஸ்பர்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவும் 46.2 ஓவர்களில் 400 ரன்களை எட்டியது.

பட்லர், மோர்கன் இணைந்து எடுத்த 161 ரன்கள் கூட்டணியில் ஓவருக்கு ரன் விகிதம் 13.41. சதக்கூட்டணியில் இங்கிலாந்துக்கான அதிகபட்ச ரன் விகிதமாகும் இது. 150 ரன்கள் கூட்டணியில் இது 3-வது அதிவேக 150 ரன் கூட்டணியாகும்.

ஜோ ரூட், அலெக்ஸ் ஹேல்ஸ் 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 248 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 2-வது விக்கெட்டுக்காக எந்த ஒரு அணியும் எடுக்காத ரன் கூட்டணியாகும். இது இங்கிலாந்துக்கு 3-வது அதிகபட்ச ரன் கூட்டணியாகும்.

ஒருநாள் போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக அரைசதம் அல்லது அதற்கு மேல் எடுத்த 6-வது இங்கிலாந்து வீரரானார் ஜோ ரூட். 65, 93, 61, 89, 85 இவரது கடைசி 5 இன்னிங்ஸ் ஸ்கோராகும். இதற்கு முன்னதாக ஜெஃப் பாய்காட், கிரகாம் கூச், அலெக் ஸ்டூவர்ட், ஜானதன் டிராட், மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் தொடர்ச்சியாக 5 அரைசதங்களை ஒருநாள் போட்டிகளில் எடுத்துள்ளனர்.

இந்த ஆண்டில் ஜோ ரூட், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர்களாக திகழ்கின்றனர்.

110 ரன்களை வாரி வழங்கிய வஹாப் ரியாஸ், ஒருநாள் போட்டிகளில் முதன் முதலில் 100 ரன்களை வழங்கிய பவுலரானார்.

இங்கிலாந்து அடித்த 59 பவுண்டரிகள் (43 நான்கு ரன்கள், 16 சிக்சர்கள்) ஒருநாள் போட்டிகளில் இலங்கையுடன் இணைந்த அதிகபட்ச பவுண்டரிகளாகும், இலங்கையும் ஹாலந்து அணிக்கு எதிராக 443 ரன்களைக் குவித்த போது 56 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்திருந்தது.

முதன் முதலாக ஒருநாள் போட்டிகளில் நம்பர் 11 வீரர் அரைசதம் கண்டார். அவர் மொகமது ஆமிர். நேற்று இவர் 58 ரன்களை அடித்தார். இதற்கு முன்பாக ஷோயப் அக்தர் இதே இங்கிலாந்துக்கு எதிராக 2003 உலகக்கோப்பையில் எடுத்த 43 ரன்களே அதிகபட்சம்.

அலெக்ஸ் ஹேல்ஸ் 171 ரன்கள் மூலம் ராபின் ஸ்மித் எடுத்த 167 ரன்கள் சாதனையை முறியடித்து இங்கிலாந்தின் அதிகபட்ச ஒருநாள் போட்டி ரன்களை எடுத்த வீரரானார்.

http://tamil.thehindu.com/sports/இங்கிலாந்து-உலக-சாதனை-ரன்களும்-முறியடிக்கப்பட்ட-ஒருநாள்-போட்டி-சாதனைகளும்/article9055090.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.