Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

மூளையை பாதிக்கும் வாகனப்புகை: புதிய ஆய்வு எச்சரிக்கை


Recommended Posts

பதியப்பட்டது

மூளையை பாதிக்கும் வாகனப்புகை: புதிய ஆய்வு எச்சரிக்கை
----------------------------------------------------------------------------------------------------------

நகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள் செல்வதாகவும் மூளையில் ஏற்படும் அல்சைமர்ஸ் நோய்க்கான காரணிகளில் ஒன்றாக அது இருக்கலாம் என்றும் புதிய ஆய்வின் முடிவுகள் குறிப்புணர்த்துகின்றன.

ஐக்கிய ராஜ்ஜிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் நகரவாழ்வின் சுகாதார ஆபத்துக்கள் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

வாகனபுகையால் மூச்சுத்திணறல், இதயநோய், அகால மரணம் போன்றவை ஏற்படும் என்பது நன்கு தெரிந்த செய்தி.

தற்போதைய இந்த புதிய ஆய்வு, வாகனப்புகை மூளைக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கவலையளிக்கும் சாத்தியத்தை கண்டுபிடித்திருக்கிறது.

சாதாரண கண்களுக்கு புலப்படாத சின்னஞ்சிறு இரும்புத்துகள்கள் மூளையில் படிந்திருப்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒருகிராம் மனித மூளைத்திசுவில் மில்லியன் கணக்கில் இவை படிந்திருக்கின்றன. எனவே மூளைச்செல்களுக்கும் மூளைக்கும் சேதம் ஏற்படுவதற்கு மில்லியன் கணக்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

இந்த துகள்கள் மேக்னடைட் என்று அறியப்படுகின்றன.

வாகனப்புகையில் இருக்கும் மாசின் பெரிய துகள்கள் மூக்குவழியாக உள்வாங்கப்படும். அவற்றில் சிறியவை நுரையீரல் மூலம் ரத்தத்துக்குள் நுழையும். அதனிலும் சிறியவை, மூக்கை மூளையுடன் இணைக்கும் நரம்புகள் மூலம் மூளைக்குள் செல்வதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

மூளைச்செல்களுக்கு இடையிலான தொடர்பாடலை தடுக்கும் பாசி அல்லது மாசு மூளைக்குள் வளர இந்த மேக்னடைட் துகள்கள் தூண்டுகோலாக இருக்கலாம் என்றும் மூளையை பாதிக்கும் அல்சைமர்ஸ் போன்ற நோய்கள் உருவாக இவையும் ஒரு காரணியாக அமையலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆனால் இது ஆரம்பகட்ட ஆய்வு மட்டுமே. இந்த மேக்னடைட் துகள்களுக்கும் அல்சைமர்ஸ் நோய்க்கும் நேரடித்தொடர்பு இருக்கிறதா என்கிற கேள்விக்கான தெளிவான பதில் இந்த ஆய்வில் கிடைக்கவில்லை.

அதேசமயம், வாகன நெரிசலுக்கும் மனித மூளை மாசடைதலுக்கும் இடையிலான தொடர்பு குறித்து புத்தம்புது ஆய்வுகளத்திற்கான துவக்கமாக இந்த முடிவுகள் பார்க்கப்படுகிறது.

 

BBC

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கே பலர் 28 தமிழ் எம்பிக்கள் போகிறார்கள் என குதூகலிக்க்கிறார்கள். இன்னும் சிலர் வாய்ப்பளித்த என் பி பி, வாக்களித்த சிங்கள மக்கள் நெஞ்சை நக்காத குறை…. ஆனால் இதில் 14 எம் பி க்கள் தவிர மிச்சம் எல்லாம் ஒவ்வொரு கதிர்காமர், டமாரா குணநாயகம் என்பது போக போக விளங்கும். திட்டமிட்டே தெற்கில் கூட என் பி பி தமிழ் எம்பிக்களை இறக்கி வென்றுள்ளது. பிஸ்கோத்து திட்டத்தை திணிக்கும் போது -பார்தீர்களா எத்தனை மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ் எம்பிகள் இதை ஆதரிக்கிறனர் என பிரசாரம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். Sorry to say this, சிங்களவன் எப்பவும் உங்களை விட ஒரு அடி முன்னால் யோசிப்பவன். இப்போதும் இதுதான் நடக்கிறது.
    • மகத்தான தேர்தல் வெற்றியை தொடர்ந்து நீதிக்கும் நல்லிணக்கத்துக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும் அவரது அரசாங்கத்திடமும் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது.  இது தொடர்பாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :  பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியைப் பெற்றதை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் தேசிய சமாதானப் பேரவை அதன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. இந்த பிரமாண்டமான ஆணை பொருளாதார அபிவிருத்தி, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதில் ஜனாதிபதி மீதும் அவரது கட்சி மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகள் உட்பட  நாட்டின் சகல பிராந்தியங்களையும் தழுவியதாக அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் பரந்தளவிலான ஆதரவு தேசிய ஐக்கியத்தை நோக்கிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படியாக அமைகிறது.  ஜனாதிபதியின் தலைமைத்துவம் இன, மத பிளவுகளை இணைத்திருப்பதன்  ஒரு  அறிகுறியாக இதை தேசிய சமாதானப் பேரவை கருதுகிறது.  முன்னென்றும் இல்லாத வகையிலான இந்த நல்லெண்ணத்தின் பின்புலத்தில், நாட்டின் நீண்டகால இனநெருக்கடிக்கு தீர்வினை காண்பதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு தேசிய சமாதானப் பேரவை கேட்டுக்கொள்கிறது. தேசிய மக்கள் சக்தி உண்மையான ஒரு தேசிய நோக்கையும் அணுகுமுறையையும் அடைந்திருப்பதாக நாம் நம்புகிறோம். இந்த அம்சத்தை நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதன் மூலமாக வலுப்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். மக்களுக்கு சொந்தமான நிலங்களை திருப்பிக் கையளிப்பது,  அதிகாரங்களை பகிர்வது, பரவலாக்குவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவமய நீக்கத்தைச் செய்வது,  காணாமல்போனவர்களினதும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களினதும் விவகாரங்களை கையாள்வது என்று பல்வேறு பிரச்சினைகள் இதில் அடங்கியிருக்கின்றன. நாட்டின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தில் அரசாங்கம் பிரவேசிக்கும் நிலையில், பொருளாதாரச் சவால்களை கையாள்வதுடன் சகல குடிமக்களுக்குமான நீதியையும் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் அடைவதில் அரசாங்கம் வெற்றிபெற வேண்டும்  என்று தேசிய சமாதானப் பேரவை விரும்புகிறது. நிலைபேறான ஒரு அரசியல் தீர்வுக்கு சிவில் சமூகத்தின் பங்கேற்பும் சகல சமூகங்களினதும் இணக்கமும் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும். பரந்தளவு ஆதரவுடனான அத்தகைய ஒரு தீர்வு நிலைபேறான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வரவிருக்கும் சந்ததிகளுக்கு உறுதிசெய்யும். https://www.virakesari.lk/article/199004
    • மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில்   500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர். இதன் போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர்கள் மூளைக் காய்ச்சல் ஏற்பட்டமை கண்டறியப்பட்டது. இதனை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்  அஸாத் எம் ஹனீபா உறுதி படுத்தினார். இந்த நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்த வைத்திய தரப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில், அங்கு பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்த 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. https://globaltamilnews.net/2024/208356/
    • பார்ப்போம்.காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.