Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்காலத்தில் தமிழினம் ஒன்றுபடுவது தமிழ் மொழியாலேயே! கிழக்கில், வடக்கு முதல்வர் தெரிவிப்பு

Featured Replies

எதிர்காலத்தில் தமிழினம் ஒன்றுபடுவது தமிழ் மொழியாலேயே! கிழக்கில், வடக்கு முதல்வர் தெரிவிப்பு
 
 
எதிர்காலத்தில் தமிழினம் ஒன்றுபடுவது தமிழ் மொழியாலேயே! கிழக்கில், வடக்கு முதல்வர் தெரிவிப்பு
தமிழினத்தை எதிர்காலத்தில்  ஒன்றுபடச் செய்யப் போவது அரசியல் இல்லை தமிழ் மொழியே என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் இலக்கியம், தமிழ்க் கலைகள், தமிழ்ப் பாரம்பரியங்கள் தமிழ் வாழ்க்கை முறை, சமூக ஒருமைப்பாடு ஆகியன வடகிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் வழிவகுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ் மக்கள் பேரவையின் கலை கலாசார உப குழுவின் ஏற்பாட்டில் வடக்கு-கிழக்கு மற்றும் மலையக தமிழ் கலைஞர்கள் ஒன்றாக இணைந்து சிறப்பிக்கும் மிகப்பிரமாண்டமான முத்தமிழ் விழா மட்டக்களப்பில் நேற்றைய தினம் மாலை ஆரம்பமானது.
 
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
1473999373_a.jpg
அத்துடன் எமது அரசியல் விவகாரங்களில் அரசியல் தலைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், அரசியல் திருத்த சட்ட மூலங்களில் தமிழர்களின் வருங்கால நிரந்தர இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் பரிந்துரைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களில் தமிழ் மக்களுக்கு பக்கபலமாக நின்று உதவுவதற்கும் ஏற்றதொரு அமைப்பை உருவாக்க வேண்டும் என பல அறிஞர்களும், கல்விமான்களும், வைத்தியகலாநிதிகளும்,அரசியல் தலைமைகளும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொண்டதால்தான் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பு உருவாகியதாக அவர் குறிப்பிட்டார்.
 
அவர்களின் இந்த புதிய முயற்சி தமிழ் மக்களின் விடிவுப் பாதைக்கான ஒரு உந்துசக்தியாக அமையும் என்ற காரணத்தினால் தானும் அந்த அமைப்புக்கு நிபந்தனையுடன் கூடிய அனுசரணை வழங்க முன்வந்ததாக குறிப்பிட்டார்.
 
தமிழ் மக்கள் பேரவை எக்காலத்திலும் ஒரு அரசியல் கட்சியாக மாற்றம் பெறக்கூடாது என்ற நிபந்தனையுடனேயே இணைந்து கொண்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
தொடர்ந்தும் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் இதுவரை காலமும், பல விதங்களில் எமது முரண்பாடுகளையே முன்னிறுத்தி வந்துள்ளோம். 
 
நான் வேறு குடி நீ வேறு குடி, நான் வடக்கு நீ கிழக்கு, நான் விவசாயி நீ மீன்பிடிப்பவன், நான் தமிழன் நீ முஸ்லீம் என்று பிரிவினையுடன் வாழ்ந்தோம். எதிர்காலத்திலாவது வடக்கு மற்றும் கிழக்கு மக்களை தமிழ் மொழி ஒன்றுபட வைக்கட்டும்! 
 
தமிழ் மொழியின், அதன் இலக்கியத்தின், அதன் பாரம்பரியத்தின், அதன் இலட்சியத்தின் அழகில் இனி ஒன்றுபட முன்வருவோமாக!
 
எங்களுள் வேற்றுமைகள் பல உண்டு. கட்சி வேற்றுமையுண்டு, காட்சி வேற்றுமையுண்டு, ஆனால் நாம் அன்பால் ஒன்றுபட முடியும். தமிழ் அழகால் ஒன்றுபட முடியும். இலக்கிய அறிவால் ஒன்று பட முடியும். அந்த ஒற்றுமையை வட கிழக்கு மாகாண மக்களாகிய நாம் யாவரும் வரவேற்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

http://onlineuthayan.com/news/17637

  • தொடங்கியவர்

அரசியல் காரணங்களுக்காக மதம் சார்ந்த வடிவமாக காட்டிக்கொள்ளும் இலங்கை முஸ்லிம்கள் : சி.வி.விக்னேஸ்வரன் கருத்து

 

இலங்கையில் முஸ்லிம்களின் வடிவம் தமிழ் மொழி சார்புள்ளதாக இருந்தாலும் அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் வடிவம் மதம் சார்ந்தது என கூறிக் கொள்வதாக வட மாகாண முதலமைச்சர் சி. வி .விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விக்கினேஸ்வரன்
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் (வலது)

மட்டக்களப்பு நகரில் தற்போது நடைபெறுகின்ற தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவில் முக்கிய விருந்திராக கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் ''எந்தவொரு இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் கலை, கலாசாரம், இலக்கியம் அனைத்திற்கும் அடி நாதமாக விளங்குவது அவர்களின் தாய் மொழி தான். தமிழர் என்றாலும் சரி, சிங்களவர்கள் என்றாலும் சரி, மொழிதான் அந்த இனங்களின் பாரம்பரிய வடிவமாக அமைகிறது.

முத்தமிழ் விழா  முத்தழிழ் விழா கலைநிகழ்ச்சிகள்

முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக தமது வடிவம் மதம் சார்ந்தது, மொழி சார்ந்தது அல்ல என்று கூறி வருகின்றனர். கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழி பேசும் போதும், தமிழ் மொழியில் கவிதைகள் எழுதி பாடும் போதும் அவர்களின் கலை வடிவமும் மொழி சார்ந்தது என்று சொல்லத் தோன்றுகின்றது.

மொழி பேச கற்றுக் கொண்ட பின்னர் தான் மதத்தை அறிந்து கொண்டோம். இந்நிலையில் முஸ்லிம் சகோதரர்களும் அடிப்படையில் தமிழ் மொழி சார்புள்ளவர்கள்தான்.

தமிழ் இனத்தை இனிமேல் ஒன்றினைக்கப் போவது அரசியல் அல்ல மொழிதான்'' என்றார்.

  விக்கினேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவராக தான் செயல்படுவது தொடர்பாகவும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.

''தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் தமிழர்களின் வருங்கால நிரந்தர இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலான பரிந்துரைகளை முன் வைப்பதையும் நோக்கமாக கொண்டுதான் பல்வேறு தரப்பின் வேண்டுகோளின் பேரில் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.

    கலைநிகழ்ச்சிகள்

இந்த உருவாக்கத்திற்கு காரணமாக செயல்பட்டவர்களிடம் தெளிவுத்தன்மை காணப்படுகிறது . அதன் காரணமாகவே தமிழ் மக்கள் பேரவையின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன்.

தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சியாக எக்காலத்திலும் மாற்றம் பெறக் கூடாது என்ற நிபந்தனையை ஏற்கெனவே முன் வைத்துத் தான் இந்த ஒத்துழைப்பை வழங்கி வருகின்றேன்" எனக் குறிப்பிட்டார் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன்.

http://www.bbc.com/tamil/sri-lanka-37382294

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.