Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் மரணம்

Featured Replies

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் மரணம்
 
 

article_1474176330-de.jpgபா.திருஞானம்

பிடியாணை பிறப்பிக்கபட்ட நிலையில் புஸ்ஸல்லாவை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன், தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக புஸ்ஸல்லாவை பொலிஸார் கூறினார்.

புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிச்சந்திரன் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு ஊயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலையின் யன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த இவரை, பொலிஸார் மீட்டு வைத்தியசாலைக் கொண்டுச் செல்லும்போது, அவர் வழியில் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் கூறினர்.

- See more at: http://www.tamilmirror.lk/182093/ப-ல-ஸ-க-வல-ல-வ-க-கப-பட-ட-ர-ந-த-இள-ஞன-மரணம-#sthash.sXvOj9EI.dpuf

 

 

 

புஸ்ஸல்லாவையில் பதற்றம்
 
 

article_1474195442-2.jpgபா.திருஞானம்

பிடியாணை பிறப்பிக்கபட்ட நிலையில் புஸ்ஸல்லாவை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன், தூக்கில் தொங்கிய உயிரிழந்ததைத் தொடர்ந்து புஸ்ஸல்லாவை பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

புஸ்ஸல்லாவை பிரதான வீதியில் ஒன்றுதிரண்ட பிரதேச மக்கள், இளைஞனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை தோன்றியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, புஸ்ஸல்லாவை பிரதான வீதி வழியான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், அமைச்சர் பா.திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உருப்பினர் வேலுகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரடி விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த நடராஜா ரவிச்சந்திரன் (வயது 28) என்ற இளைஞனே தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலையின் யன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த இவரை, பொலிஸார் மீட்டு வைத்தியசாலைக் கொண்டுச் செல்லும்போது, அவர் வழியில் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் கூறினர்.

- See more at: http://www.tamilmirror.lk/182119/ப-ஸ-ஸல-ல-வ-ய-ல-பதற-றம-#sthash.VjArcXir.dpuf

 

புஸ்ஸல்லாவையில் பதற்றம்
 

article_1474195071-IMG_0147.JPG

பா.திருஞானம்

பிடியாணை பிறப்பிக்கபட்ட நிலையில் புஸ்ஸல்லாவை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன், தூக்கில் தொங்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து புஸ்ஸல்லாவை பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

article_1474195082-IMG_0097.JPG

article_1474195092-IMG_0087.JPG

article_1474195100-IMG_0151.JPG

article_1474195111-IMG_0152.JPG

article_1474195121-IMG_0193.JPG

article_1474195131-IMG_0194.JPG

article_1474195142-IMG_0206.JPG

article_1474195153-IMG_0207.JPG

article_1474195162-IMG_0216.JPG

article_1474195191-IMG_0221.JPG

article_1474195204-IMG_0222.JPG

article_1474195214-IMG_0226.JPG

article_1474195225-IMG_0231.JPG

 

- See more at: http://www.tamilmirror.lk/182120/ப-ஸ-ஸல-ல-வ-ய-ல-பதற-றம-#sthash.OlovfluZ.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்களின் அஞ்சலியுடன் புஸ்ஸல்லாவ இளைஞனின் சடலம் நல்லடக்கம்

 

(க.கிஷாந்தன்)

புஸ்ஸல்லாவ பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படும் கைதியின் இறுதிச் சடங்கு இன்று மாலை சுமூகமான முறையில் புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்ட பொது மயானத்தில் இடம்பெற்றது.

புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் (வயது 28) என்ற இளைஞன் குற்றச் செயல் ஒன்றின் காரணமாக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

பின்னர் நீதிமன்றத்தினால், குறித்த நபர் சமூக சேவைக்கு உள்வாங்கப் பட்டிருந்த நிலையில் அதற்கு சமூகமளிக்காத நிலையில் ஹெல்பொட நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கபட்டிருந்தது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபர் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்ததை தொடர்ந்து நேற்று புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் பாரிய பதற்ற நிலை தோன்றியது.

இந்நிலையில் ஸ்தலத்திற்கு விஜயம் செய்த கம்பளை பதில் நீதவான் சம்பவம் இடம்பெற்ற பொலிஸ் நிலையத்திற்கும் வைத்தியசாலை பிரேத அறைக்கும் சென்று பிரேதத்தை பேராதெனிய சட்ட வைத்திய நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்புமாறு பணித்திருந்தார்.

இறந்தவரின் உடற்பாகங்கள் கொழும்பிற்கு அனுப்பியதன் பின்னர் பிரேதம் உறவினர்களிடம் நேற்றிரவு கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இடையில் நேற்று பகல் 12 மணிமுதல் 3.00 மணிவரை சுமார் 1000 தோட்ட தொழிலாளர்கள், கண்டி- நுவரெலியா பிரதான பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும், பிரச்சினைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறும், நடைபெற்றது தற்கொலை அல்ல கொலை அதற்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்றும் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காததினால் போராட்டம் 03.00 மணிவரை நீடித்தது.

பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அமைச்சர் பழனி திகாம்பரம், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஸ்தலத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு மக்களின் கோரிக்கையை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

தற்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும் இருவர் தற்காலிக பணி இடை நிறுத்தத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரேதம் நல்லடக்கம் செய்யும் முன்னரோ, அதற்கு பின்னரோ போராட்டங்கள் நடாத்த முடியாது என அதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

unnamed__5_.jpg

unnamed__9_.jpg

unnamed__2_.jpg

unnamed__4_.jpg

unnamed__8_.jpg

unnamed__7_.jpg

unnamed__6_.jpg

http://www.virakesari.lk/article/11516

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.