Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்கள் பல்வேறு மொழிகளில்பாண்டித்தியம் பெற்றிருத்தல் அவசியம்-பிரதம நீதியரசர்ஸ்ரீபவன்

Featured Replies

மாணவர்கள் பல்வேறு மொழிகளில்பாண்டித்தியம் பெற்றிருத்தல் அவசியம்-பிரதம நீதியரசர்ஸ்ரீபவன்
 
 
மாணவர்கள் பல்வேறு  மொழிகளில்பாண்டித்தியம் பெற்றிருத்தல் அவசியம்-பிரதம நீதியரசர்ஸ்ரீபவன்
மாணவர்கள் பல்வேறு  மொழிகளிலே பாண்டித்தியம் பெற்றிருத்தல்  இன்றியமையாததாகும்.தாய்மொழி தமிழை போற்றிப்பாதுகாக்க வேன்டியது எமது கடமை. அதே சமயம் எமது சகோதர மொழியாகிய சிங்களத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.  இது   மக்களிடையே கருத்துக்களை வெளியிடவும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் உறுதுணையாக இருக்கும் என பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் தெரிவித்தார்
 
யாழ் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வழா இன்றையதினம் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் கல்லூரி அதிபர் தயானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர்  மேலும் தெரிவிக்கையில்  என் மாணவப் பருவத்தை நினைத்துப் பார்க்கையில் நான் அமைதியான சூழலிலே கல்விபயின்றது நினைவில் நிற்கின்றது. படிப்பில் முக்கியத்துவம் செலுத்துவதற்கு  அச் சூழல் மிகவும் ஏதுவாக அமைந்தது.  ஆனால் இன்றைய மாணவ சமுதாயம் பல சவால்களை  எதிர்நோக்க வேண்டி உள்ளது.
1474275733_14408822_765872273551857_1607407187_n.jpg
 பல இன்னல்களையும் இழப்புக்களையும் சந்தித்து மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்டு நிற்கும் மாணவ சமுதாயத்தின் முன், காலம் என்னை இந்நாட்டின் பிரதம நீதியரசராக நிற்கவைத்துள்ளது. 
 
உலகின் பல இன்னல்களுக்கு மத்தியில் மனித இனம் வாழ்கிறது, வளர்கிறது. உலகில் அழிவுகளை வராமல் தடுக்க உலகநாடுகள் போட்டிபோடுகின்றன. இதனாலேயே பல அழிவுகள் ஏற்படுகின்றன. 
 
எல்லோரையும் மன்னிக்கப் பழகுங்கள், இன்றைய மாணவத்தலைவர்களே நாளைய மக்கள் பிரநிதிகள். எனவே சிறுவயதிலிருந்தே ஒழுக்கத்தைப் பேணுங்கள். உடல் பலவீனத்தையோ மனப்பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகாதீர்கள். பயனுள்ள நூல்களை படியுங்கள். நூல்களை வாசிக்கும் பழக்கம் இளம் சமுதாயத்திடம் அருகிவருகிறது.மாணவர்கள் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

http://onlineuthayan.com/news/17802

  • தொடங்கியவர்
சிறப்பாக இடம்பெற்ற யாழ். இந்துவின் பரிசளிப்பு விழா
 
 
சிறப்பாக இடம்பெற்ற யாழ். இந்துவின் பரிசளிப்பு விழா
யாழ் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் கல்லூரியின் குமாரசுவாமி மன்டபத்தில் கல்லூரி அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
1474282814_14408822_765872273551857_1607407187_n.jpg
இந்நிகழ்வில் வரவேற்பு உரையினை சிரேஸ்ட மாணவன் தெ.ஆதவன் வழங்கினார். பின்னர்  அதிபர் அறிக்கையை கல்லூரி அதிபர் ஐ.தயானந்தராஜா  வாசித்தார்.அதனையடுத்து மாணவன் சி.விசாலகனின் ஆங்கிலமொழிப் பேச்சு இடம்பெற்றது.
 
பரிசுத்தின உரையை பிரதம நீதியரசர் க.சிறிபவன் நிகழ்த்தினார். பின்னர் திருமதி ஜெயந்தி ஸ்ரீபவன் பரிசில்களை வழங்கினார். செல்வன் க. மதியழகன் நன்றியுரையாற்றினார். பின்னர் கல்லூரிக் கீதத்துடன் விழா  இனிதே நிறைவுற்றது.இந்நிகழ்வில் கல்லூரியின் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 
1474283183_dd.jpg
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.