Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் நியூசீலாந்து டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

500வது டெஸ்ட்... 130வது வெற்றி... வாவ் இந்தியா! #MatchReport

252699.jpg

கான்பூரில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டியில், இந்திய அணி தரப்பில் யாரும் சதம் அடிக்கவில்லை என்றாலும், அணியின் கூட்டு முயற்சிக்கு வெற்றி பரிசாகக் கிடைத்துள்ளது. அஸ்வின் சுழலில் அசத்தி 200 விக்கெட்கள் என்ற புதிய மைல்கல்லை எட்ட, ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டராக ஜொலித்து தன் தேர்வை நியாயப்படுத்தி, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் முதல் டெஸ்ட் நடந்தது. இது இந்தியா பங்கேற்கும் 500வது டெஸ்ட் என்பதால், முதல் நாளில் முன்னாள் ஜாம்பவான்கள் பிசிசிஐ சார்பில் கவுரவிக்கப்பட்டனர். கடைசி நாளில் அசத்தல் வெற்றி பெற்று, 500வது டெஸ்ட் போட்டியை மறக்க முடியாத போட்டியாக மாற்றினர் விராட் கோஹ்லி படையினர். 

முதல் இன்னிங்சில் புஜாரா 62, முரளி விஜய் 65 ரன்கள் எடுத்து உதவ, இந்தியா 318 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கேன் வில்லியம்சன் 75 ரன்கள் அடிக்க, நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களில் ஆல் அவுட்டானது. சுழல் ஜாம்பவான்கள் அஸ்வின் 4, ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்திருந்தனர்.

இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் முரளி விஜய், புஜாரா அபாரமாக ஆடினர். முரளி விஜய் 76, புஜாரா 78 ரன்கள் விளாசி வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுக்க, மிடில் ஆர்டரில் ரஹானே 40, ரோகித் சர்மா 68, ரவீந்திர ஜடேஜா 50 ரன்கள் விளாச, இந்தியா 377/5 ரன்களில் டிக்ளேர் செய்தது. இதனால் நியூஸிலாந்தின் வெற்றி இலக்காக 434 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது

நான்காம் நாள் முடிவில் நியூஸிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. லூக் ரோஞ்சி 38, சான்ட்னர் 8 ரன்களுடன் கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். பொறுப்புடன் ஆடிய ரோஞ்சி அரைசதம் கடந்தார். முதல் ஒரு மணி நேரம் விக்கெட் விழவே இல்லை. 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 102 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஜடேஜா பந்தில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ரோஞ்சி 80 ரன்களில் வெளியேறினார். 


அடுத்து வந்த வாட்லிங் 18 ரன்களிலும், மார்க் கிரேக் 1 ரன்னிலும் ஆட்டமிந்தனர். நீண்ட நேரம் இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்த சான்ட்னர் 71 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்தில் சிக்கினார். டெயில் எண்டர்களான சோதி (17 ரன்), நீல் வக்னர் (டக் அவுட்) ஆகியோரை அஸ்வின் எவ்வித சிரமம் இன்றி பெவிலியன் அனுப்பி வைத்தார்.  நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் தனது 130வது வெற்றியை பெற்றது. 

CtQ9B5MUMAAzGp7.jpg

ஜட்டு அசத்தல்:

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி, இரண்டாவது இன்னிங்ஸில் அட்டகாசமாக 50 ரன்கள் விளாசிய ஜடேஜா, ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘‘500வது டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெறுவதில் மகிழ்ச்சி. துலீப் டிராபி ஃபைனலில் விளையாடிய அனுபவம் கை கொடுத்தது. இதுபோன்ற பிட்ச்சில் என்னால் விக்கெட் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அஸ்வின் சிறந்த பவுலர். 200 விக்கெட் வீழ்த்திய அவருக்கு வாழ்த்துகள். அவருடன் இணைந்து பவுலிங் செய்வது மகிழ்ச்சியான விஷயம். விக்கெட் விழாத நேரங்களில் நாங்கள் இருவரும், அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிப்போம்’’ என்றார் ஜடேஜா. 

அடடே அஸ்வின்: 

இரு இன்னிங்சிலும் சேர்த்து அஸ்வின் 10 விக்கெட்டுகளை சாய்த்தார். அதோடு, டெஸ்ட் அரங்கில் அதி வேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமை பெற்றார்.  இதுவரை 37 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் ஒரே டெஸ்டில் 5வது முறையாக 10 விக்கெட்டுகளையும், 19வது முறை 5 விக்கெட்டுகளையும்  வீழ்த்தியிருப்பது கூடுதல் போனஸ். 

http://www.vikatan.com/news/sports/68805-india-won-the-500th-test-by-197-runs-against-new-zealand.art

  • Replies 51
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அனைவரும் பங்களிப்பு செய்ய விரும்புகின்றனர்: விராட் கோலி மகிழ்ச்சி

 

 
 
படம்.| ஏ.எஃப்.பி.
படம்.| ஏ.எஃப்.பி.

கான்பூரில் நடைபெற்ற 500-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து வீரர்களுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

போட்டி முடிந்தவுடன் பரிசளிப்பு விழாவில் அவர் கூறியதாவது:

வீரர்கள் தங்களை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டனர். சில தருணங்களில் கவலை ஏற்பட்டது உண்மைதான். முதலில் 100 ரன்கள் கூட்டணி, பிறகு 2 தேவையில்லாத எதிர்பாராத ஆட்டமிழப்புகள். பிறகு ஜடேஜா, அஸ்வின் உமேஷ் 30-40 கூடுதல் ரன்களைப் பெற்றுத் தந்தனர். இது மனோவியல் ரீதியாக வித்தியாசத்தை ஏற்படுத்தியது. கேப்டன்சியில் இன்னமும் அனுபவம் பெற்றவனில்லை என்பதால் என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறேன்.

கடந்த காலத்தில் ஆக்ரோஷமான களவியூகத்துடன் பந்து வீசியதால் ரன்களைக் கசியவிட்டோம். ஆனால் விக்கெட்டுகள் விழாத தருணத்தில் பொறுமை மிகவும் அவசியம். ரன்களை கட்டுப்படுத்த வேண்டும், கள வியூகத்தை நெருக்கமாகவும் அதே வேளையில் ரன்களை கட்டுப்படுத்தும் விதமாகவும் அமைத்தோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக முக்கியமான ஒரு விஷயம் பின்கள வீரர்களின் பங்களிப்பு.

அனைத்து நல்ல அணிகளிடத்திலும் இது பெரிய பலம். இந்தப் புலத்தில் நாங்களும் கடினமாக உழைத்து வருகிறோம். அஸ்வின்க் சஹா, மிஸ்ரா ஆகியோரையும் குறிப்பிட வேண்டும். அனைவரும் பங்களிப்பு செய்ய விரும்புகின்றனர். பின்கள வீரர்கள் ரன்கள் அடிப்பது எதிரணியினரை நிலைகுலையச் செய்வதாகும். 300 ரன்களுக்குள் எங்களை மட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்தனர். ஆனால் 330 ரன்கள் எடுத்தோம்.

இது மறக்க முடியாத டெஸ்ட், இது ஒரு நல்ல டெஸ்ட் போட்டி. ஏனெனில் நியூஸிலாந்து அணி 2-ம் நாளில் அற்புதமாக பேட் செய்தனர். நானும், அஸ்வினும் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தினோம். ஆட்டம் கடைசி நாள் வரை வந்ததற்கு நியூஸிலாந்து அணியின் உறுதியே காரணம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

கேன் வில்லியம்சன் கூறும்போது, “நிறைய உடன்பாடான விஷயங்களைப் பெற்றோம், சில பாடங்களையும் கற்றோம். இந்தியா எங்களை அனைத்து விதங்களிலும் முறியடித்தது. 2 செஷன்களில் ஆட்டம் எங்கள் பிடியிலிருந்து நழுவியது. முதல் இன்னிங்ஸில் நல்ல பேட்டிங் சூழ்நிலையில் இந்திய அணியை 300 ரன்கள் பக்கம் மட்டுப்படுத்தியதும், பிறகு அந்த ரன்களுக்கு சற்று அருகில் வந்ததும் குறிப்பிடத்தகுந்தவை. ரோங்கி, சாண்ட்னர் அற்புதமாக ஆடினர், குறிப்பாக பந்துகள் கடுமையாக திரும்பும் இன்றைய தினத்தில் அபாரமாக பேட் செய்தனர். சாண்ட்னர் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சோபித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ரோங்கி மீண்டும் அணிக்கு வந்து அருமையாக ஆடுவது மகிழ்ச்சியளிக்கிறது, எனினும் தோல்வியிலிருந்து மீள வேண்டியுள்ளது” என்றார்.

http://tamil.thehindu.com/sports/அனைவரும்-பங்களிப்பு-செய்ய-விரும்புகின்றனர்-விராட்-கோலி-மகிழ்ச்சி/article9149849.ece

  • தொடங்கியவர்

கொல்கத்தா போட்டியை வென்றால் இந்தியா மீண்டும் முதலிடம் பிடிக்கும்

 

 

நியூஸிலாந்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற உள்ள 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் ஐசிசி தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டி இந்திய அணிக்கு 500-வது போட்டியாகவும் அமைந்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி மேலும் ஒரு வெற்றியை பெறும் பட்சத்தில், தரவரிசை பட்டியலில் பாகிஸ் தானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கும். தற்போது இரு அணிகளுக்கும் ஒரே ஒரு புள்ளி வித்தியாசம் மட்டுமே உள்ளது. பாகிஸ்தான் 111 புள்ளிகளுடனும், இந்தியா 110 புள்ளிகளுடனும் முதல் இரு இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ள நியூஸி லாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தினால் தொடரை கைப்பற்றுவதுடன் மீண்டும் முதலிட அந்தஸ்தை பெறலாம்.

கான்பூர் டெஸ்டில் 10 விக்கெட்கள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் தற்போது 871 புள்ளிகளுடன் உள்ளார்.இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஸ்டெயினை விட 7 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் அஸ்வின் இருக்கிறார். நியூஸிலாந்துக்கு எதிராக 2-வது டெஸ்ட் போட்டி யிலும் அவர் அதிக விக்கெட்கள் கைப்பற்றும் பட்சத்தில் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

கடைசியாக அஸ்வின் கடந்த ஆண்டு 'பாக்ஸிங் டே' டெஸ்ட் போட்டியில் முதலிடத்தை பிடித்திருந்தார்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை கைப்பற்றியுள் ளார். அவர் 879 புள்ளிகளுடன் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 906 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 878 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளிலும் வில் லியம்சன் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே ஸ்மித்திடம் இருந்து முதலிடத்தை பறிக்க முடியும். ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் 450 புள்ளிகளுடன் அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

கான்பூர் டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்த முரளி விஜய், புஜாரா ஆகியோரும் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள் ளனர். இருவருமே 20-வது இடத்தில் இருந்து தலா 695 புள்ளிகளுடன் 16-வது இடத்தை பிடித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/கொல்கத்தா-போட்டியை-வென்றால்-இந்தியா-மீண்டும்-முதலிடம்-பிடிக்கும்/article9156985.ece

  • தொடங்கியவர்
இந்தியா – நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
 
21-09-2016 10:17 AM
Comments - 0       Views - 18

-ச.விமல்

InLEAD-1_21092016_GPI.jpg

இந்தியாவில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பித்தால், அனைத்து கிரிக்கெட் நாடுகளும் தங்கள் பார்வையை இந்தியா நோக்கி நகர்த்திவிடும். இலங்கையில் அதிகமாக அது இருக்கும். இலங்கையில் இந்தியாவிற்கு ஆதரவு வழங்கும் இரசிகர்கள் ஒரு புறம். அவர்கள் மீதும், இந்தியா அணி மீதும் கொலைவெறியில் இருக்கும் இலங்கை இரசிகர்கள் இன்னொரு புறம். எனவே இலங்கையிலும் இந்திய அணியினது தாக்கம் அதிகம் இருக்கின்றது. அண்மையில் இலங்கை, இந்தியா அணிகளின் மோதல்கள் இல்லாத காரணத்தினால் மற்றைய அணிகளுடனான போட்டிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்தியா அணியை பொறுத்தளவில் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை தமதாக்கிக் கொள்ளும் தொடராக இந்தியா அணி இதனை எடுத்துக்கொள்ளும். தொடரை இந்தியா கைப்பற்றினால் இந்திய அணிக்கு முதலிடம் கிடைக்கும். தொடர் சமநிலையில் நிறைவடைந்தால் மாத்திரமே முதலிடம் கிடைக்காமல் போகும். தொடர்ச்சியாக முதலிடத்தை கைப்பற்ற வேண்டுமானால் தொடரை இந்தியா அணி கைப்பற்ற வேண்டும்.  நியூஸிலாந்து அணி வெற்றி பெறக்கூடாது. இந்த நிலைமைகள் சுவாரசியத்தை தரும்.

 நியூஸிலாந்து அணி பலமான அணி அல்லது சவாலான அணி என்று பெரியளவில் இன்னமும் கூற முடியாது. இந்தியாவில் தொடர் நடைபெறுவதனால், நியூஸிலாந்து அணி இந்திய அணியுடன் மிகவும் போராட வேண்டும். இந்தத் தொடரை தொடர்ந்து இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு  நான்கு டெஸ்ட் போட்டிகளுக்காக வரவுள்ளது. எனவே இந்தத் தொடரை வெற்றியாக மாற்றுவது மாத்திரமன்றி அணியை  முழுமையாக தயார் செய்து பலமான அணியாக மாற்றவும் இந்திய அணி இந்தத் தொடரை பாவிக்கும்.

இந்த இரு அணிகளுக்குமான கடந்த கால தொடர்களில், இந்தியாவில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. 10 தொடர்களில், இந்தியா எட்டுத் தொடர்களை கைபபற்றியுள்ளது. இரண்டு தொடர்கள் சமநிலை முடிவடைந்துள்ளன. இரு அணிகளுக்குமான 20ஆவது தொடர் இதுவாகும். 10 தொடர்களில் இந்திய அணியும் ஐந்து தொடர்களில் நியூஸிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஆக இந்தியாவே பலமான அணியாக இருந்து வருகின்றது.

2012ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி, இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை தனதாக்கியது. இரு அணிகளும் இதுவரை 54 போட்டிகளில் விளையாடியுள்ளன.  இந்தியா 18 வெற்றிகளையும், நியூஸிலாந்து 10 வெற்றிகளையும் பெற்றுள்ள அதேவேளை, 26 போட்டிகள் சமநிலை முடிவை தந்துள்ளன. இந்தியாவில் வைத்து 31 போட்டிகளில் இந்திய அணி 13 வெற்றிகளையும், நியூஸிலாந்து அணி இரண்டு வெற்றிகளையும் பெற்றுள்ள அதேவேளை, 16 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

ஆக சமநிலை முடிவுகள் அதிகம் பெறப்பட்டிருப்பது, நியூஸிலாந்து இலகுவாக இந்திய அணிக்கு வெற்றிகளை வழங்காது என்ற முடிவுக்கு வரலாம். ஆனால் தற்போதுள்ள இந்திய அணியின் பலம், நியூஸிலாந்து அணியின் பலம் என பார்க்கும் போது இம்முறை கடந்த காலங்களை காட்டிலும் மிகுந்த போட்டியுள்ள தொடராக அமையும் என எதிர்பார்க்க முடியும்.

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சு, கடந்த காலங்களிலும் பார்க்க பலமாக உள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் புதியவர்கள் என்றாலும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவது அவர்களுக்கு மேலதிக பலம். டிம் சௌதி உபாதையடைந்து இருப்பது நியூஸிலாந்து அணிக்கு பின்னடைவே. இருப்பினும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களே இந்திய ஆடுகளங்களில் களமிறங்குவர் என்ற நிலையில், ட்ரெண்ட் போல்ட், நீல் வக்னர், டௌ பிரேஸ்வெல் ஆகியோர் அவர்களது நம்பிக்கையான பந்து வீச்சாளர்கள். 23 போட்டிகளில் 94 விக்கெட்டுகளை கைப்பற்றி மிகச்சிறந்த இடதுகை  வேகப்பந்து வீச்சாளராக அணியில் வக்னர் உள்ளார்.   இவர் நிச்சயம் அணியில் இடம் பிடிப்பார். அடுத்த ஒருவர் அல்லது இருவர் எனில் ட்ரெண்ட் போல்ட், டௌ பிரேஸ்வெல் ஆகியோர் அணியில் இடம் பிடிப்பார்கள்.

சுழற்பந்து வீச்சாளர்களில் சகலதுறை வீரராக மிச்சல் சந்தர் சிறப்பான நிலையில் உள்ளார். ஆசிய ஆடுகளங்களில் இவரின் கைவரிசை எவ்வாறு அமையும் என்பது இந்தத் தொடரில் வெளிப்படும். இடதுகை சுழற்பந்து வீச்சாளர். இந்தியாவுக்கு இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் என்றாலே நடுக்கம் தொடங்கி விடும். இவரின் சுழற்பந்து வீச்சு மிக அபாரமானது. 14 போட்டிகளில் 48 விக்கெட்டுகளை கைப்பற்றியுளார். ஐக்கிய அரபு அமீரக மூன்று போட்டிகளை விட மிகுதி போட்டிகள் யாவுமே, அவுஸ்திரேலியா , தென்னாபிரிக்கா, இங்கிலாந்து ஆடுகளங்களிலேயே அவர் ஆடியுள்ளார். இந்திய ஆடுகளங்களில், இவரின் சுழற்பந்து வீச்சு மிகவும் சிறப்பாக அமையும் என நம்பலாம். துடுப்பாடத்திலும் 41.85 என்ற சிறந்த சராசரியை கொண்டுள்ளார். ஆக நியூஸிலாந்து அணியின் நம்பிக்கை நடசத்திரம் என இவரை கூற முடியும்.

இரண்டாமவராக இஷ் சோதி, மூன்றாவமாவராக மார்க் கிரேய்க்  அணியில் உள்ளனர். மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள். எனவே நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சு பலம் பெற்றுள்ளதாக அமைந்துள்ளது. எனவே இந்திய அணி இலகுவாக துடுப்பாட முடியாது.  அழுத்தங்கள் அதிகம் இருக்கும். இதில் இந்திய அணியின் ஆரம்ப இடங்கள் பலமாக இல்லை. மத்திய வரிசையே பலமாக உள்ளது.

நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்டமும் கடந்த காலங்களிலும் பார்க்க பலமானது எனக்கூற முடியும். பிரெண்டன் மக்கலம் அணியில் இல்லை. ஆனால், கேன் வில்லியம்ஸன், றொஸ் டெய்லர் ஆகியோர் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மாத்திரமன்றி, ஆசிய ஆடுகளங்களிலும், இந்திய ஆடுகளங்களிலும் கூட சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். கேன் வில்லியம்ஸன், இந்தியாவில் தன் அறிமுகப் போட்டியில் சதமடித்தவர். டொம் லதாம் இந்திய ஆடுகளங்களில் முதற்தடவையாக களமிறங்குகிறார். நியூஸிலாந்து அணிக்காக சராசரியான ஆரம்பத்தை வழங்கி வரும் வீரர்.

பி.ஜெ.வொட்லிங் விக்கெட் காப்பில் மட்டுமல்ல, துடுப்பாடத்திலும் மத்திய வரிசையில் நம்பிக்கைகி தரும் வீரர். ஹென்றி நிக்கொல்ஸ் மத்திய வரிசையில் துடுப்பாடும்  வீரர். தென்னாபிரிக்க தொடரில் ஓரளவு சிறப்பாக துடுப்பாடியுள்ளார். ஜேம்ஸ்  நீஷம் சகலதுறை வீரர். இவர் நியூஸிலாந்து அணியை சிறப்பாக சமநிலைப்படுத்தும் வீரர். வேகப் பந்து வீசும் இவர், ஒன்பது போட்டிகளில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அதேவேளை, துடுப்பாட்டத்தில் , ஒன்பது போட்டிகளில் 612 ஓட்டங்களை பெற்றுள்ளார்.  இவர் விளையாடினால் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடனும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடனும் களமிறங்கலாம். இவர் அணியில் இல்லாத நிலையில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடியுள்ள லுக் ரொங்கி விளையாடுவார். இங்கிலாந்து அணிக்கெதிராக அறிமுக போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் 119 ஓட்டங்களை பெற்றார். ஆனால் பின்னர் விளையாடவில்லை.

இதுவே நியூஸிலாந்து அணி. அஷ்வினின் பந்துவீச்சை இவர்கள் சமாளித்து விட்டால் வெற்றிகளை நோக்கி சொல்லாவிட்டாலும், சமநிலை முடிவை நோக்கி செல்ல முடியும்.  இந்தியாவின் மற்றைய பந்து வீச்சாளர்கள், நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை எந்தளவுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்பது கேள்வியே. அஷ்வின் வழங்கும் அழுத்தம் நிச்சசயம் துடுப்பாட்ட வீரர்கள் மீது அழுத்தத்தை  ஏற்படுத்தும். அந்த அழுத்தம் மற்றைய பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பாக அமையும்.

இந்தியா அணி தமது துடுப்பாட்டம், அஷ்வினின் பந்து வீச்சு, விராத் கோலியின் துடுப்பாட்டம், ஆடுகளம் என்பனவற்றை அதிகம் நம்பியே களமிறங்குகிறது. ஆரம்ப ஜோடியில் லோகேஷ் ராகுல் நிச்சயம் இடம் பிடிப்பார். முரளி விஜய், ஷீகர் தவான் ஆகியோரில் ஒருவரே வாய்ப்பை பெறுவார்கள். வாய்ப்பை சரியாக பாவித்துக்கொள்பவர் அணியில் தொடர்வார். மூன்றாமிடத்தில் செட்டேஸ்வர் புஜாரா வாய்ப்பைப் பெறுவார். சரியாக வாய்பபை பாவிக்கா விட்டால், கோலி மூன்றாமிடத்தில் களமிறங்கி அவரை அணியால் வெளியேற்றும் வாய்ப்புகளும் உள்ளன. கோலி நான்காமிடம். ஐந்தாமிடம் அஜிங்கையா ரஹானே. இவர்களின் துடுப்பாட்டம், இடங்கள் பற்றியெல்லாம் எதுவும் யோசிக்கத் தேவையில்லை. இவர்கள் இருவருமே இந்திய அணியின் துடுப்பாட்ட முதுகெலும்புகள்.

அடுத்த இடம் இன்னமும் நிரந்தரமாகவில்லை. ஆனாலும் மேற்கிந்திய தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தொடரிலும் ஆரம்ப போட்டிகளிலும் வழங்கப்படும். வாய்ப்பை பாவித்தால் அணியில் இடம் தொடரும். அஷ்வின் சிறப்பாக பின் மத்திய வரிசையில் துடுப்பாடுவதனால், ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக இன்னுமொரு சுழற்பந்து வீச்சாளராக அமித் மிஷ்ராவை அணியில் இணைக்க முடியும். ரிதிமன் சஹா கடந்த தொடரில் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். இரவீந்திர ஜடேஜா அடுத்த இடம். ஆக இந்திய அணியில் எட்டு வீரர்கள் துடுப்பாட்ட வீரர்கள். இதுவே இவர்களின் பலம். ஆரம்பம் சிறப்பாக அமைந்தால் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்ககையை நோக்கி நகர முடியும்.

பந்து வீச்சில் அஷ்வின் முன்னிலையில் உள்ளார். அண்மைக்கால இந்தியாவின் வெற்றி நாயகன் இவரே. இந்த தொடரிலும் இவரையே இந்திய அணி தங்கள் துடுப்பாட்டத்திலும் பார்க்க நம்பியுள்ளது. இரவீந்தர ஜடேஜா இரண்டாம் சுழற்பந்து வீச்சாளர். கடந்த தொடர் சிறப்பாக அமையவில்லை. ஆனால் அமித் மிஷ்ராவிலும் பார்க்க இவரே இந்திய அணியின் முன்னிலை தெரிவு. வேகப்பந்துவீச்சில் மொஹமட் ஷமி நிச்சசயம் இடம் பிடிப்பார். அனுபவம் இஷாந்த் ஷர்மாவுக்கு அணியில் இடத்தை வழங்கும். உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ள போதும் சுழற்சி முறையில் வாய்ப்புகள் கிடைக்கலாம். யார் சிறப்பாக பந்து வீசுகின்றார்களோ அவர்களுக்கே அணியில் வாய்ப்பு தொடரும்.

இரண்டு அணிகளினதும் நிலைமைகள் இவ்வாறே உள்ளன. இரண்டு அணிகளும் சளைத்த அணிகள் அல்ல. ஆனால் முழுமை பெறாத இடங்களை எந்த அணி நிரப்புகின்றதோ அந்த அணி சிறப்பாக செயற்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா அணி பலமான அணியாகவே தென்படுகின்றது. தொடரை வெல்லும் வாய்ப்புகள் அதிகம் அவர்களுக்கு இருந்தாலும் இலகுவாக வெற்றி பெற முடியாது. 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் நியூஸிலாந்து தொடரை இந்தியாவில் சமன் செய்ததில்லை. இம்முறையும் அந்த வாய்ப்பு அரிதாகவே உளள்து. துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானங்கள் அதிகம் இந்தியாவில் உள்ளவை. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் அவை சாதக தன்மையை வழங்கும். அதனை நியூஸிலாந்து அணி சரியாக பாவித்து பந்து வீசினால் நிச்சயம் இந்திய அணியை தடுமாற வைக்க முடியும்.

முதற் போட்டி - செப்டம்பர்  22 முதல் 26, காலை 9.30 தொடக்கம் 4.30, கான்பூர்

இரண்டாவது  போட்டி - செப்டம்பர் 30 முதல் ஒக்டோபர் 04, காலை 9.30 தொடக்கம் 4.30, கொல்கொத்தா 

மூன்றாவது போட்டி - ஒக்டோபர் 08 முதல் ஒக்டோபர் 12, காலை 9.30 தொடக்கம் 4.30, இந்தூர்  

- See more at: http://www.tamilmirror.lk/182492/இந-த-ய-ந-ய-ஸ-ல-ந-த-ட-ஸ-ட-த-டர-#sthash.0XtiuD8w.dpuf
  • தொடங்கியவர்

ஒரு ரன்னில் க்ளீன் போல்டான தவான்'

 

19012_thumb.jpg

 

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். தொடக்க வீரர்களாக, முரளி விஜய் மற்றும் தவான் களமிறங்கினார்கள். ராகுலுக்கு பதில் கம்பீர் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தவானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய தவான் 10 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து மேட் ஹென்றி பந்தில் 'க்ளீன் போல்டு' ஆகி பெவிலியன் திரும்பினார்.

http://www.vikatan.com/news/flashnews/19012-india-vs-new-zealand-2-nd-test-dhawan-clean-bold-for-one-run.art

  • தொடங்கியவர்

கொல்கத்தா டெஸ்ட்: தவண், கோலி, ரோஹித் சோபிக்கவில்லை; இந்தியா திணறல்

 

 
  • டிரெண்ட் போல்ட்டிடம் அவுட் ஆகி விராட் கோலி ஏமாற்றத்துடன் வெளியேறும் காட்சி. | படம்: கே.ஆர்.தீபக்.
    டிரெண்ட் போல்ட்டிடம் அவுட் ஆகி விராட் கோலி ஏமாற்றத்துடன் வெளியேறும் காட்சி. | படம்: கே.ஆர்.தீபக்.
  • நியூஸி. வேகப்பந்து வீச்சாளர் ஹென்றியை பாராட்டும் வீரர்கள். | படம்: ஏ.பி.
    நியூஸி. வேகப்பந்து வீச்சாளர் ஹென்றியை பாராட்டும் வீரர்கள். | படம்: ஏ.பி.

ஈடன்கார்டன்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி இந்திய அணியின் 7 விக்கெட்டுகளை முதல் நாளில் வீழ்த்தி 239 ரன்களுக்கு மட்டுப்படுத்தினர்.

ஆட்ட முடிவில் விருத்திமான் சஹா 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 14 ரன்கள் எடுத்தும், ஜடேஜா ரன் எதுவும் எடுக்காத நிலையிலும் 2-ம் நாள் ஆட்டத்தில் நாளை களமிறங்குவர். நியூஸிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு என்றாலும் கேப்டன் பொறுப்பு எடுத்து கொண்ட ராஸ் டெய்லர் அருமையான களவியூகம் அமைத்ததோடு, பந்து வீச்சு மாற்றங்களையும் அபாரமாகச் செய்தார்.

டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்ததற்குக் காரணம் 4-வது இன்னிங்ஸில் இந்தப் பிட்சில் ஆட முடியாத நிலை ஏற்படலாம் என்பதற்காகவே என்று தெரிகிறது. ஏனெனில் முதல் ஒரு மணி நேரம் பிட்சில் நல்ல பவுன்ஸ், ஸ்விங் இருந்தது, பிறகு கொஞ்சம் நிர்வகிக்கக் கூடிய அளவுக்கு பவுன்ஸ் இருந்தாலும் ஒரே இடத்தில் பிட்ச் செய்யப்பட்ட இருவேறு ஷார்ட் பிட்ச் பந்துகள் வித்தியாசமாக நடந்து கொண்டன. ஒன்று அதிக உயரமாகவும் மற்றொன்று வயிறு வரை மட்டுமே எழும்பியது, இதனால் பேட்ஸ்மென்கள் மனதில் ஐயம் இருந்து வந்தது. சீரற்ற பவுன்ஸ் என்ற இந்த அம்சம் அடுத்த 4 நாட்களுக்கு பேட்ஸ்மென்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும் என்பது இன்று தெரிந்துவிட்டது.

விராட் கோலி ‘வொர்க் அவுட்’

நியூஸிலாந்து தரப்பில் அதிவேகப்பந்து வீச்சாளர் ஹென்றி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், டிரெண்ட் போல்ட், இந்திய கேப்டன் விராட் கோலியை வொர்க் அவுட் செய்து வீழ்த்தினார். ஏன் வொர்க் அவுட் என்றால், ஒரு கவர் டிரைவ் அற்புதமாக ஆடினார் விராட் கோலி எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரியைக் கடந்தது. அடுத்த 2 பந்துகள் கோலியை பின்னால் சென்று ஆடப் பணித்தார் போல்ட். பிறகு வைடாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒரு பந்தை டிரைவ் லெந்த் போல் தெரிவதாக வீசினார், கோலி நேர் பேட்டில் ஆடாமல் டிரைவ் ஆட முயன்றார் ஆனால் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு கல்லியில் லாதமின் அருமையான கேட்சாக முடிந்தது. கோலியை எதிரணியினர் ‘வொர்க் அவுட்’ செய்யத் தொடங்கி விட்டனர், இது அவருடைய பிரதான ரன் குவிப்பு ஷாட்டான கவர் டிரைவை அவர் தியாகம் செய்ய வேண்டி நிர்பந்திக்கலாம். இது அவருக்கு எச்சரிக்கை மணி. இங்கிலாந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் இப்படியாக ஆட்டமிழந்தது அவரது நினைவுக்கு வரவேண்டும், அல்லது கும்ப்ளே கோலிக்கு நினைவூட்ட வேண்டும்.

இதுதான் சச்சினுடம் இவரை ஒப்பிட வேண்டாம் என்று சிலர் கூறுவதற்குக் காரணம், ஏனெனில் சச்சின் ஒரு பந்துக்கு 2 ஷாட்களை வைத்திருப்பார். மேலும் ஆலன் டோனல்டு ஒரு முறை கூறியது போல் ஒருமுறை வீழ்த்திய பந்தில் உடனடியாகவே சச்சினை அடுத்த முறையும் வீழ்த்தி விட முடியாது என்பார், ஆனால் கோலி இன்று அவுட் ஆனது போல் எவ்வளவு முறை ஆட்டமிழந்திருப்பார் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

கம்பீரை ‘சும்மா’ தேர்வு செய்து விட்டு மீண்டும் ஷிகர் தவணிடம் சென்றது மதிக்கக்கூடிய முடிவாகத் தெரியவில்லை. 10 பந்துகளில் 8 பந்துகளை ஆடாமல் விட்டார், 1 ரன் எடுத்த நிலையில் ஹென்றியின் வேகத்தை கணிக்கும் முன்னரே கால்களை எந்த விதத்திலும் நகர்த்தாமல் இருந்த இடத்திலிருந்தே கட் செய்ய முடியாத பந்தை கட் செய்ய முயன்று மட்டையின் உள்விளிம்பில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார். அணியில் அவரது இடம் குறித்த கேள்விகள் ஏற்பட்ட ஒரு வீரரை பதற்றமான தொடக்க இடத்தில் இறக்குவது எப்போதும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்.

முரளி விஜய்யும் சோதிக்கும் சில பந்துகளை எதிர்கொண்டார். அதாவது ஹென்றியின் சில பந்துகள் உள்ளே வந்து பிறகு எதிர்ப்புறம் ஸ்விங் ஆனதில் விஜய் மட்டையை பந்துகள் கடந்து சென்றன. அவரும் 29 பந்துகள் சோதனைக்குப் பிறகு 9 ரன்கள் எடுத்த நிலையில் வைடு ஆஃப் த கிரீசிலிருந்து ஹென்றி வீசிய பந்து மீண்டும் உள்ளே வந்து பிறகு நேராகச் சென்றது, ஆஃப் ஸ்டம்பை கவர் செய்த விஜய் அதை ஆடியேயாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது, ஆடினார் விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது, அருமையான பந்து அது. இந்திய அணி 46/3 என்ற நிலையில் ரஹானே, புஜாரா இணைந்தனர்.

ரஹானே எப்போதுமே எந்த ஒரு டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில்தான் பிரமாதமாக ஆடியிருக்கிறார் என்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இன்றும் அவர் அபாரமாகவே ஆடினார். புஜாரா உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடி வரும் பலனை தொடர்ந்து பெற்று வருகிறார், இருவரும் இணைந்து 141 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். உணவு இடைவேளையிலிருந்து தேநீர் இடைவேளை வரை 31 ஓவர்களில் 79 ரன்களையே எடுக்க முடிந்தது என்றால் நியூஸிலாந்தின் பவுலிங் மற்றும் ராஸ் டெய்லரின் களவியூகமே காரணம்.

புஜாரா 219 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாக்னர் பந்தில் வெளியேறினார். ரஹானே 11 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்திருந்த போது ஜீதன் படேல் பந்தில் ஏமாந்து எல்.பி. ஆனார். முன்னதாக ரோஹித் சர்மா ஜீதன் படேலின் திரும்பி எழுந்த பந்துக்கு ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் வெளியேறினார்.

அஸ்வின் களமிறங்கி சாண்ட்னரை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார். இதில் ஒரு ஷாட் சரியாக சிக்காமல் எட்ஜ் பவுண்டரி என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு அவுட் ஆவதற்கு முதல் பந்தை ஹென்றியை அருமையாக ஒரு பேக்புட் ஷாட்டில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் எல்.பி. ஆனார். 26 ரன்கள் எடுத்து அஸ்வின் ஆட்டமிழந்தார்.

விருத்திமான் சஹா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 14 ரன்களில் உள்ளார், ஜடேஜா 6 பந்துகளில் ரன் எதையும் எடுக்கவில்லை. இருவரும் நாளை களமிறங்கி முதல் டெஸ்ட் போல் ஆடி 300 ரன்கள் பக்கம் கொண்டு செல்வார்களா என்பதை பார்க்க வேண்டும். நியூஸிலாந்து தரப்பில் ஹென்றி 3 விக்கெட்டுகள், ஜீதன் படேல் 2 விக்கெட்டுகள், போல்ட் பரிசு விக்கெட்டாக கோலியை வெளியேற்றினார்.

http://tamil.thehindu.com/sports/கொல்கத்தா-டெஸ்ட்-தவண்-கோலி-ரோஹித்-சோபிக்கவில்லை-இந்தியா-திணறல்/article9168865.ece

  • தொடங்கியவர்

2-வது டெஸ்ட்: இந்தியா 316 ரன்களுக்கு ஆல்-அவுட்

 

19120_thumb.jpg

 

இந்தியா - நியூஸிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 316 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது இந்தியா. புஜாரா 87 ரன்கள், ரஹானே 77, சாஹா 54 ரன்களும் குவித்தனர். நியூஸிலாந்து சார்பில் ஹென்றி 3 விக்கெட்டுகளும், வாக்னர், பவுல்ட், படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

http://www.vikatan.com/news/flashnews/19120-india-vs-new-zealand-2-nd-test-india-allout-for-316.art

  • தொடங்கியவர்
India 316
New Zealand 116/5 (31.1 ov)
New Zealand trail by 200 runs with 5 wickets remaining in the 1st innings
  • தொடங்கியவர்

புவனேஷ்வர் அபாரம்: நியூஸி. முதல் இன்னிங்ஸில் 128/7

 

 
படம்: ஏபி
படம்: ஏபி

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் முடிவில், நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

316 ரன்களுக்கு முதல் இன்னிங்க்ஸை இந்தியா முடித்த நிலையில், டாம் லேதம், மார்டின் கப்டில் ஆகியோர் நியூஸிலாந்து இன்னிங்க்ஸை துவக்கினர். இன்னிங்ஸின் 2-வது ஓவரிலேயே லேதம் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கப்டிலும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையில் நியூஸிலாந்து 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்க, 2-வது ஓவரில் புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை தடுத்தாட முயன்ற நிக்காலஸ் ஆட்டமிழந்தார். இதற்கு பின் ஜோடி சேர்ந்த டெய்லர் மற்றும் ரான்க்கி இருவரும் பொறுமையாக ஆடினர். பார்ட்னர்ஷிப்பில் 62 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரான்க்கி (35 ரன்கள்) ஜடேஜாவின் பந்தில் லெக் பிஃபோர் முறையில் ஆட்டமிழந்தார். அப்போது மழையால் ஆட்டம் தடைபட்டது.

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்களுக்குப் பிறகு ஆட்டம் தொடர இந்தியாவின் பந்துவீச்சு நியூஸிலாந்தை திணறடித்தது. தொடர்ந்து டெய்லர் (36 ரன்கள்), ஒரே ஓவரில் சாண்ட்னர் (11 ரன்கள்), ஹென்றி (0 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த மூன்று விக்கெட்டுகளையும் புவனேஷ்குமார் வீழ்த்தி மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

128 ரன்கள் 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் இன்றைய ஆட்டம் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

முன்னதாக இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து இந்திய அணிக்கு சாஹா பேட்டிங்கில் நம்பிக்கை அளித்தார். ஜடேஜா 14 ரன்களுக்கு ஜடேஜா, புவனேஷ்குமார் குமார் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், கடைசி விக்கெட்டுக்கு ஷமியுடன் ஜோடி சேர்ந்து 35 ரன்கள் அடித்தார். சாஹா 46 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தைக் கடந்தார்.

ஷமி 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்ஸில் 316 ரன்கள் எடுத்திருந்தது. சாஹா ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்திருந்தார்.

http://tamil.thehindu.com/sports/புவனேஷ்வர்-அபாரம்-நியூஸி-முதல்-இன்னிங்ஸில்-1287/article9173473.ece?homepage=true

  • தொடங்கியவர்

204 ரன்களுக்குச் சுருண்டது நியூஸிலாந்து; இந்தியா 112 ரன்கள் முன்னிலை

 

 
படம். | பிடிஐ.
படம். | பிடிஐ.

கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று நியூஸிலாந்து அணி தன் முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து இந்திய அணி 112 ரன்கள் முன்னிலை பெற்று இன்னும் சற்று நேரத்தில் 2-வது இன்னிங்சில் களமிறங்குகிறது. புஜாரா நீண்ட நேரம் பீல்டில் இல்லாததால் அவர் 3-ம் நிலையில் களமிறங்குவது கடினம் என்று தெரிகிறது. ஆனால் டிவி வர்ணனையாளர்கள் அவர் 3-ம் நிலையில் இறங்குவார் என்று தெரிவித்தனர்.

இன்று 128/7 என்று ஜீதன் படேல் 5 ரன்களுடனும், பி.ஜே.வாட்லிங் 12 ரன்களுடனும் இறங்கினர். இதில் ஜீதன் படேல் ஆக்ரோஷமாக ஆடினார் அவர் 9 பவுண்டரிகளுடன் 47 பந்துகளில் 47 ரன்கள் எடுக்க, இவரும் வாட்லிங்கும் சேர்ந்து 8-வது விக்கெட்டுக்காக 60 ரன்களைச் சேர்த்தனர்.

அஸ்வின் தன் ஓவரை வீச வந்தவுடனேயே அவரை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்றார் ஆனால் மிட் ஆஃபில் கேட்ச் ஆனது. முன்னதாக ஜடேஜா பந்தில் எல்.பி. ஆனார், ஆனால் அது நோ-பால் என்பதால் தப்பித்தார் ஜீதன் படேல்.

25 ரன்கள் எடுத்த பி.ஜே.வாட்லிங், ஷமியின் ரிவர்ஸ் ஸ்விங்கில் எல்.பி.ஆனார். காலை முன்னால் தூக்கிப்போட்டிருந்தால் காலில் வாங்கினால் கூட அவுட் கிடையாது ஆனால் வாட்லிங் அப்படிச் செய்யவில்லை.மிடில் ஸ்டம்புக்கு நேராக வாங்கினார்.

போல்ட் களமிறங்கி அஸ்வினை ஒரு சிக்ஸ் விளாசினார், நீல் வாக்னர், மொகமது ஷமியை லெக் திசையில் ஒரு சிக்ஸ் விளாசினார். கடைசியில் வாக்னர் 10 ரன்கள் எடுத்து ஷமி பந்தில் எல்.பி.ஆனார்.

போல்ட் 6 நாட் அவுட். நியூஸிலாந்து 53 ஓவர்களில் 204 ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் புவனேஷ் குமார் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்த ஷமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

http://tamil.thehindu.com/sports/204-ரன்களுக்குச்-சுருண்டது-நியூஸிலாந்து-இந்தியா-112-ரன்கள்-முன்னிலை/article9176062.ece?homepage=true

  • தொடங்கியவர்

கோலி, ரோஹித், சஹா பங்களிப்பில் மீண்ட இந்திய அணி: 339 ரன்கள் வலுவான முன்னிலை

 

 
சதக்கூட்டணி அமைத்த சஹா, ரோஹித் சர்மா ரன் ஓடிய காட்சி.| படம்: கே.ஆர்.தீபக்.
சதக்கூட்டணி அமைத்த சஹா, ரோஹித் சர்மா ரன் ஓடிய காட்சி.| படம்: கே.ஆர்.தீபக்.

கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று, நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி 2-வது இன்னிங்சில் 227/8 என்று மொத்தம் 339 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக திகழ்கிறது.

ஆட்ட நேர முடிவில் விருத்திமான் சஹா 39 ரன்களுடனும், சாண்ட்னரை மேலேறி வந்து அபார சிக்ஸ் அடித்த புவனேஷ்வர் குமார் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்குச் சுருண்டு இந்தியாவுக்கு 112 ரன்கள் முன்னிலையைக் கொடுத்தது.

தவண், விஜய் மீண்டும் ஏமாற்றம்:

2-வது இன்னிங்சிலும் டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி ஆகியோர் தங்கள் வேகம் மற்றும் ஸ்விங் மூலம் தவண், விஜய்க்கு கடும் சிரமங்களைக் கொடுத்தனர், குறிப்பாக முரளி விஜய்யின் கால் நகர்த்தல்களில் சந்தேகத்தை ஏற்படுத்தினார் மேட் ஹென்றி. விஜய் அடித்த முதல் பவுண்டரியே லேட் ஸ்விங்கில் மட்டையின் விளிம்பில் பட்டு கல்லி வழியாக அபாயகரமாக நான்கிற்குச் சென்றது.

போல்ட் பந்து ஒன்று உள்ளே வந்து சற்றே எதிர்பாராமல் எழும்ப தவண் கையில் அடிபட்டது. மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்த அடுத்த பந்தே மீண்டும் உள்ளே வந்த சற்றே பவுன்ஸ் கூடுதலான பந்தை எம்பி தடுத்தாடிய தவணின் மட்டை உள் விளிம்பில் பட்டு பின் தொடையைத் தாக்கியது. மீண்டும் அதே போன்ற பந்து உள்ளே புகுந்து போக விக்கெட் கீப்பர் கேட்சிற்காக ஒரு பெரிய முறையீடு எழுந்தது, ஆனால் பந்து மட்டையில் படவில்லை. தவண் தொடர்ந்து தடவு தடவென்று தடவினார்.

இந்நிலையில் 6-வது ஓவரை ஹென்றி வீச விஜய்யின் துன்பம் முடிவுக்கு வந்தது. மீண்டும் பந்து உள்ளே ஒரு கோணத்தில் வந்து சற்றே வெளியே லேட் ஸ்விங் ஆக விஜய் முன்னால் வந்து ஆட முயன்றார் அவ்வளவே, எட்ஜ் ஆகி 2-வது ஸ்லிப்பில் கப்திலிடம் சரணடைந்தது.

புஜாரா இறங்கி முதல் 2 ஹென்றி பந்துகளின் பவுன்ஸில் திணறிப்போய் விட்டார். இந்நிலையில்தான் தவண் போல்ட்டை 2 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை பெற்றார். இடையே புஜாரா ஹென்றியின் உள்ளே வந்த பந்தை கால்காப்பில் வாங்க எல்.பி.ஆனார். ஆனால் இது ஐயத்திற்குரிய தீர்ப்பாகத் தெரிந்தது.

தவண் 17 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் பந்து ஒன்று கூர்மையாக உள்ளே வர கால்நகர்த்தல்களை மறந்த தவண் கால்காப்பில் வாங்க எல்.பி.என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ரஹானே 1 ரன்னில் ஹென்றியின் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆட மட்டையில் பந்து சரியாக சிக்காமல் லெக் திசையில் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்தியா 43/4 என்று ஆனது.

கோலியின் மீட்பும் ரோஹித், சஹாவின் சதக் கூட்டணியும்:

இதற்கிடையே கேப்டன் விராட் கோலி ஹென்றியின் ஒரே ஓவரில் இரண்டு தன் பாணி கவர் டிரைவ் பவுண்டரிகளை அடித்து தொடங்கினார். கோலி பாசிட்டிவாக ஆடி ஜீதன் படேலின் ஒரே ஓவரில் மீண்டும் தனது கவர் டிரைவ் பவுண்டரி ஒன்றையும் லெக் திசையில் சற்றே அதிர்ஷ்டகரமான பவுண்டரியையும் அடித்து 65 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் வந்த நிலையில் போல்ட் பந்து ஒன்று ஷார்ட் பிட்ச் ஆகி மிகவும் தாழ்வாக ஆட முடியாத அளவில் வர கோலி கால்காப்பில் வாங்கி எல்.பி. என்று தீர்ப்பளிக்கப்பட்டார், பந்து கால்காப்பில் பட்ட இடம் லேசாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இருந்தது. கோலி அவுட் ஆனார்.

ஆனால் கோலி இறங்கியவுடன் போல்ட்டும், ஹென்றியும் அளித்த நெருக்கடியை மற்ற வீச்சாளர்கள் அளிக்கவில்லை. டெய்லரின் கேப்டன்சியும் அடிக்கடி மாற்றிய கள வியூகமும் கோலிக்குச் சாதகமாக அமைந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்களில் சாண்ட்னரிடம் எல்.பி.ஆனார். இதில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்தியா 106/6 இந்நிலையிலிருந்து நியூஸிலாந்து பிடியை தவற விட்டது என்றே கூற வேண்டும்.

ரோஹித் சர்மா இறங்கியவுடனேயே முதலில் ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் அடித்துத் தொடங்கினார். ரோஹித் சர்மாவும், சஹாவும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 103 முக்கியமான ரன்களை எடுத்தனர். ரோஹித் சர்மா 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 82 எடுத்த நிலையில் ரோங்கியிடம் கேட்ச் கொடுத்து சாண்ட்னரிடம் வீழ்ந்தார். அதே ஓவரில் ஜடேஜா இறங்கி ஒரு அபாரமான சிக்ஸரை அடித்து அடுத்த ஸ்லாக்கில் நீஷமிடம் கேட்ச் கொடுத்து இதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஆட்ட முடிவில் சஹா 39 ரன்களுடனும், புவனேஷ் குமார் ஒரு சிக்சருடன் 8 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர். இந்தியா 339 ரன்கள் முன்னிலை.

http://tamil.thehindu.com/sports/கோலி-ரோஹித்-சஹா-பங்களிப்பில்-மீண்ட-இந்திய-அணி-339-ரன்கள்-வலுவான-முன்னிலை/article9176320.ece

  • தொடங்கியவர்

இந்தியா 263 ஆல் அவுட்: நியூஸிலாந்துக்கு வெற்றி இலக்கு 376 ரன்கள்

 

19257_thumb.jpg

 

இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 82 ரன்களும், சாகா 58 ரன்களும் எடுத்தனர். நியூஸிலாந்தின் பௌல்ட், சான்ட்னெர், ஹென்ரி தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினர். 376 என்ற கடினமான வெற்றி இலக்குடன் களம் இறங்கி இருக்கிறது நியூஸிலாந்து. தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இந்தியா.

http://www.vikatan.com/news/flashnews/19257-new-zealand-need-376-to-win-this-test-match.art

  • தொடங்கியவர்

இந்தியா அபார வெற்றி: மீண்டும் நம்பர் ஒன்

 

19305_thumb.jpg

 

இந்தியா - நியூஸிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில், 2-வது இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி, நியூஸிக்கு 376 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதை எதிர்த்து விளையாட வந்த நியூஸிலாந்து தொடக்கத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், இந்திய சுழற்பந்து வீச்சில் சுருண்ட நியூஸிலாந்து,81.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஷ்வின், ஜடேஜா,ஷமி தலா 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் - 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 2-வது டெஸ்டில் அபார வெற்றி பெற்றுள்ள இந்தியா, 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் தர வரிசையில்,பாகிஸ்தானை முந்தி, முதலிடம் பிடித்து இருக்கிறது இந்தியா

http://www.vikatan.com/news/flashnews/19305-india-wins-again-leads-the-series-by-2-0.art

  • தொடங்கியவர்

நியூஸி.க்கு எதிரான தொடரை வென்று நம்பர் 1 ஆனது இந்தியா!

 

 
நியூஸிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் நம்பர் 1 இடம் பிடித்ததாக கோலி செய்கை செய்கிறார். இடம்: ஈடன் கார்டன்ஸ் கொல்கத்தா. நியூஸிலாந்து தோல்வி. | படம்: ஏ.பி.
நியூஸிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் நம்பர் 1 இடம் பிடித்ததாக கோலி செய்கை செய்கிறார். இடம்: ஈடன் கார்டன்ஸ் கொல்கத்தா. நியூஸிலாந்து தோல்வி. | படம்: ஏ.பி.

கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்தை 178 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தது இந்திய அணி.

இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 4-ம் நாள் காலையில் 263 ரன்களுக்குச் சுருண்டது. போல்ட், ஹென்றி, சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனையடுத்து 376 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து 115/2 என்று பிறகு தேநீர் இடைவேளையின் போது 135/3 என்றும் இருந்து தேநீர் இடைவேளைக்குப் பிறகு விக்கெட்டுகளை மடமடவென இழந்து 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியதோடு தொடரையும் இழந்தது. இந்திய அணித் தரப்பில் அஸ்வின், ஜடேஜா, மொகமது ஷமி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இலக்கைத் துரத்தும் போது நியூஸிலாந்து தொடக்க வீரர்கள் நிதானமாகவும் வலுவாகவும் ஆடினர். லேதம், கப்தில் இணைந்து 55 ரன்களைச் சேர்த்தனர். கப்தில் நல்ல இன்னிங்சிற்கு அடித்தளமாக 49 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். ஆனால் இவருக்கு மொகமது ஷமி பந்தில் பிளம்ப் எல்.பி. மறுக்கப்பட்டது. இந்திய அணியினர் கடும் ஏமாற்றமடைந்தனர். அஸ்வின் பந்திலும் டாம் லேதமுக்கு ஒரு பயங்கரமான முறையீடு எழுந்தது, ஆனால் இவையெல்லாம் நடுவரின் அழைப்புகள் எனவே இதில் பெரிதாகக் குறை காண எதுவுமில்லை. மறுக்கப்பட்ட எல்.பி.க்களை பற்றி கேப்டன் கோலி எரிச்சலடைந்தாலும், இந்த டெஸ்ட் போட்டியில் 15 எல்.பி.க்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா சார்பாக கொடுக்கப்பட்டது 8 எல்.பி.க்கள்!!

ஆனால் இன்னொன்று என்னவெனில் மொத்தம் 40 விக்கெட்டுகளில் 26 விக்கெட்டுகள் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர். எனவே குழிபிட்ச் ஸ்பின் பிட்ச் என்ற குறைபாட்டிற்கு இடமில்லை.

நல்ல தொடக்கத்திலிருந்து சரிவடைந்த நியூஸிலாந்து:

103/1 என்ற நிலையிலிருந்து 197 ரன்களுக்கு ஆல் அவுட் என்பது நியூஸிலாந்தின் அயராத போராட்டக்குணத்தை அறிவுறுத்தாது, ஆனால் அவர்கள் உண்மையில் போராடினர்.

குறிப்பாக லேதம் 148 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தது சதத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு இன்னிங்ஸ். காரணம் அஸ்வினின் ஆஃப் ஸ்பின்னர்களையும் நேர் பந்துகளையும் திறம்பட கணித்து சிறந்த உத்தியுடன் அடினார். ஸ்வீப் ஷாட்களை திறம்பட பயன்படுத்தினார்.

முதல் விக்கெட் இன்னிங்சின் 17-வது ஓவரில் அஸ்வின் மூலம் கிடைத்தது. மார்டின் கப்திலுக்கு (24) ஃபுல் லெந்த் பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு சற்று வெளியே பிட்ச் ஆகி உள்ளே வந்தது. எல்.பி தீர்ப்பளிக்கப்பட்டது. ஹென்றி நிகோல்ஸ் 66 பந்துகள் இந்தியப் பந்து வீச்சை அருமையாக எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து ஸ்கோர் 104ஆக இருந்த போது ஜடேஜாவின் பந்தில் எட்ஜ் செய்து ரஹானேயிடம் பிடி கொடுத்தார். இதன் பிறகு படபட விக்கெட்டுகள்.

அஸ்வின் 22 ஓவர்களைத் தொடர்ந்து ஒருமுனையில் வீசினார், இதன் பலனாக ராஸ் டெய்லர் அஸ்வினின் அபாரமான உள்ளே வந்து வெளியே டிரிஃப்ட் ஆன பந்தில் பிளம்ப் எல்.பியானார். டெய்லரின் மட்டை கல்லியிலிருந்து மிட் ஆன் நோக்கி வந்தது, இது தவறான உத்தி. ஆனால் அவர் இப்படித்தான் தொடர்ந்து ஆடி வருகிறார், இப்படிப்பட்ட உத்தியில் அஸ்வினின் இந்தப் பந்தை ஆடுவது கடினம்.

அருமையாக ஆடி வந்த லேதம் 74 ரன்களில் அடுத்ததாக சற்றே வைடாக வீசிய பந்தை டிரைவ் ஆடி எட்ஜ் செய்து சஹாவிடம் கேட்ச் கொடுத்தார். இடையில் லுக் ரோங்கி 2 பவுண்டரிகள் அடித்து 15 ரன்கள் வந்தார். ஆனால் சாண்ட்னர் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் வைட் ஆஃப் த கிரீசிலிருந்து வீசி உள்ளே கொண்டு வந்த பந்தில் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார்.

வாட்லிங்கிற்கு ஷமி அருமையான ரிவர்ஸ் ஸ்விங்கை வீசி பவுல்டு செய்தார். அடுத்ததாக 32 ரன்களுடன் நன்றாக ஆடி வந்த ரோங்கி ஜடேஜாவின் வேகமான பந்தை தடுக்கும் முயற்சியில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். படேலை புவனேஷ் குமார் பவுல்டு செய்தார். மேட் ஹென்றி 18 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தை கவர் திசையில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார். டிரெண்ட் போல்ட், ஷமியின் பவுன்சரை ஆக்ரோஷமாக அடிக்க முயன்றார் ஆனால் பந்து மேலே எழும்ப முதல் ஸ்லிப்பில் இருந்த விஜய் பின்னால் சென்று கேட்ச் செய்ய நியூஸிலாந்து 81.1 ஓவர்களில் காலியானது. இந்தியா நம்பர் 1 நிலைக்கு முன்னேறியது.

ஆட்ட நாயகனாக விருத்திமான் சஹா தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/நியூஸிக்கு-எதிரான-தொடரை-வென்று-நம்பர்-1-ஆனது-இந்தியா/article9180373.ece?homepage=true

  • தொடங்கியவர்

நியூஸிலாந்துக்கு அடி... பாகிஸ்தானுக்கு வலி... இந்தியா இப்ப நம்பர் 1

253028.3.jpg


கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தை 178 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. இதன் மூலம், டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்தது.

கடந்த 1988 ம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்றதே இல்லை. கொல்கத்தா ஈடர்ன் கார்டனில் நான்காவது இன்னிங்சில் அதிகபட்சமாக 325 ரன்கள் அடித்து பத்து ஆண்டுகளாகி விட்டது.  இந்த இரண்டு விஷயங்களும் நியூஸிலாந்து வீரர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும், வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 376 ரன்களை எட்ட முடிந்தவரை போராடிப் பார்த்தது. ம்ஹும் முடியவில்லை. 

இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. கான்பூர் டெஸ்டில் இந்தியா வெற்றி. இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தாவில் நடந்தது.  இதில் வென்றால், ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் - 1 என்ற சூழல்.

புஜாரா 87, ரஹானே 77, விக்கெட் கீப்பர் ரித்திமான் சாகா ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் அடிக்க, இந்தியா முதல் இன்னிங்ஸில் 316 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து தரப்பில் யாரும் அரை சதம் அடிக்காததால், 204 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆனால், இரண்டாவது இன்னிங்சில் நியூஸிலாந்து பவுலர்களின் கை ஓங்கி இருந்தது. இதனால், மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 227 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரோகித் மட்டும் 82 ரன்கள் அடித்திருந்தார். 

253019.jpg


நான்காம்நாள் ஆட்டம் இன்று 12,068 ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது.  ரித்திமான் சாகா ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் அடிக்க, மற்றவர்கள் யாரும் நீண்ட நேரம் நிற்கவில்லை. முடிவில் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 263 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், ஹென்றி, சான்ட்னர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 இரண்டாவது இன்னிங்சில் நியூஸிலாந்துக்கு 376 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஓபனிங் பேட்ஸ்மேன் டாம் லதாம் மட்டுமே அதிகபட்சமாக 74 ரன்கள் அடித்து போராடி பார்த்தார். ரெகுலர் கேப்டன் வில்லியம்சனுக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பேற்ற ராஸ் டெய்லர் 4 ரன்களில் அஸ்வினிடம் சிக்கினார். கப்டில், நிகோலஸ் தலா 24 ரன்களுடன் திருப்தி அடைந்தனர். லூக் ரோஞ்சி தன் பங்குக்கு 32 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் சொல்லும் படி ரன் அடிக்கவில்லை. 

கடைசி ஒரு மணி நேரத்தில் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் விழிபிதுங்கி நின்றனர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஒருபுறம் சுழலில் மிரட்டுகிறார்கள் எனில், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் இருவரும் ரிவர்ஸ் ஸ்விங்கில் அச்சுறுத்துகின்றனர். விளைவு, நியூஸிலாந்து 56 ரன்களை எடுப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்தது. 

முடிவில், இரண்டாவது இன்னிங்சில் நியூஸிலாந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியா 178 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் வென்றது. இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா, அஷ்வின், சமி மூவரும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் பாகிஸ்தானை விட அதிக புள்ளிகள் பெற்று இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியது. 

இரு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த ரித்திமான் சாகா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மூன்றாவது டெஸ்ட் வரும் 8 ம் தேதி இந்தூரில் நடக்க உள்ளது.

http://www.vikatan.com/news/sports/69116-india-beats-new-zealand-to-lead-series-and-top-test-rankings.art

  • தொடங்கியவர்

கொல்கத்தா டெஸ்ட் பிட்ச் பற்றி கோலி, டெய்லர் கருத்து

 

 
ராஸ் டெய்லர் அவுட் ஆகிச் செல்லும் காட்சி. | படம்: ராய்ட்டர்ஸ்.
ராஸ் டெய்லர் அவுட் ஆகிச் செல்லும் காட்சி. | படம்: ராய்ட்டர்ஸ்.

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று நம்பர் 1 நிலைக்கு உயர்ந்ததோடு, தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் பிட்ச் பற்றி இரு அணி கேப்டன்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விராட் கோலி வெற்றிக்குப் பிறகு பரிசளிப்பு மேடையில் கூறும்போது, “அருமையான டெஸ்ட் போட்டி, அபாரமான டெஸ்ட் பிட்ச். ஆங்காங்கே பவுன்ஸ் சற்று முன்பின் இருந்தது தவிர பிட்ச் போகப்போக இன்னும் நன்றாகி விடும்.

சஹா, புவனேஷ் குமார், ஷமி கடைசியில் செய்த பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது. சஹா அருமை! குறிப்பாக அவர் இப்போது நாட்டின் சிறந்த விக்கெட் கீப்பர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அருமையாக செயலாற்றி வருகிறார். மே.இ.தீவுகளில் அவர் எடுத்த சதம் அவரது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. பின்கள வீரர்களுடன் எப்படி பேட்டிங் செய்ய வேண்டுமென்பதை தற்போது சஹா புரிந்து கொண்டிருக்கிறார்.

முதல் இன்னிங்சில் தளர்வான சில ஷாட்களினால் விக்கெட்டுகளை தூக்கி எறிந்தோம் என்று புரிந்து கொண்டோம், 2-வது இன்னிங்சில் நியூஸிலாந்து பவுலர்கள் நல்ல நெருக்கடி கொடுத்தனர். ரோஹித் சர்மா நெருக்கடியை சமாளித்த விதம் மகிழ்ச்சியளிக்கிறது. ஈடன் கார்டன் மைதானத்திற்கும் அவருக்கும் இருக்கும் நேசம் நீங்கள் அறிந்ததே. அனைத்தையும் விட இன்று இந்த விக்கெட்டுகளைக் கைப்பற்ற ரசிகர்களின் ஆதரவுதான் முக்கியமாக அமைந்தது. குறிப்பாக ஷமி ஓடி வரும்போது ரசிகர்கள் குரல் எழுப்புவது பவுலருக்கு பெரிய உத்வேகமளிக்கக் கூடியது.

சீரான கிரிக்கெட்டை ஆடுவதே எங்கள் குறிக்கோள், தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்குச் செல்வதும், பின்னடைவதும் நம் கையில் இருப்பதல்ல, அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருப்பதால் இம்முறை நம்பர் 1 இடத்தைத் தக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

ராஸ் டெய்லர் கூறும்போது, “கடும் வெயிலும் ஈரப்பதம் நிரம்பிய வானிலையில் பவுலர்கள் அருமையாகச் செயல்பட்டது பாராட்டத்தக்கது. நாங்கள் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தோம் ஆனால் அவர்கள் மீண்டு எழுந்தனர். குறிப்பாக சஹா 2 இன்னிங்ஸ்களிலும் சிறப்புற்றார்.

நேர்மையாகக் கூற வேண்டுமெனில் பிட்ச் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தோம், ஒரு நல்ல கிரிக்கெட் பிட்ச். இந்தபிட்ச் இப்போதுதான் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இனிமேல் போகப் போக இன்னும் நன்றாகஆடும். 112 ரன்கள் பின் தங்கினால் எந்த அணிக்கும் நெருக்கடிதான். நாங்கள் சில விக்கெட்டுகளைக் கைப்பற்றினோம் ஆனால் சஹா, ரோஹித் எங்களிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துச் சென்றனர். டாம் லேதம் தனித்து நிற்கிறார் இன்றைய ஆட்டத்தின் மூலம். அடுத்த டெஸ்ட் போட்டி இந்தூர் என்ற இடத்தில் நடக்கிறது, இதற்கு முன்பாக அங்கு ஆடியதில்லை. அந்தப் பிட்ச் எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் பார்ப்போம். கேன் வில்லியம்சன் அடுத்த போட்டிக்காக நாளை வலைப்பயிற்சிக்கு வருவார்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/கொல்கத்தா-டெஸ்ட்-பிட்ச்-பற்றி-கோலி-டெய்லர்-கருத்து/article9180764.ece

  • தொடங்கியவர்

3-வது டெஸ்ட்: நன்றாகத் தொடங்கி ஆட்டமிழந்த கம்பீர்; இந்தியா 75/2

 

 
ஹென்றி பந்தை சிக்ஸ் அடித்த கம்பீர். | படம்: ராய்ட்டர்ஸ்.
ஹென்றி பந்தை சிக்ஸ் அடித்த கம்பீர். | படம்: ராய்ட்டர்ஸ்.

இந்தூர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முரளி விஜய், கம்பீர் விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் தவணுக்குப் பதிலாக கம்பீர், புவனேஷ் குமாருக்கு பதிலாக மீண்டும் உமேஷ் யாதவ் வந்துள்ளனர். நியூஸிலாந்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்குத் திரும்பியுள்ளார்.

விராட் கோலி 7 ரன்களுடனும் செடேஸ்வர் புஜாரா 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

புதிய இந்தூர் பிட்சில் நிறைய வெடிப்புகள் உள்ளன. முதல் நாளுக்குப் பிறகு பேட்டிங் மேலும் கடினமாகி விடும், ஏன் மோசமான பிட்ச் ஆகக்கூட வாய்ப்புள்ளது என்ற நிலையில் 3-வது முறையாக டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

முதல் 12 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எடுக்க அடுத்த 10 ஓவர்களில் கம்பீர் விக்கெட்டுடன் 15 ரன்களையே எடுக்க முடிந்தது.

முரளி விஜய் மீண்டும் 10 ரன்களில் படேலிடம் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். லாதமிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். போல்ட்டின் ஒரே ஓவரில் ஒரு கிளாஸ் கவர் டிரைவ்கள் மூலம் 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் மீண்டும் ஏமாற்றமளித்து வெளியேறினார்.

கவுதம் கம்பீர் அதிவேகப்பந்து வீச்சாளர் ஹென்றியை அடுத்தடுத்து புல் ஷாட்டில் ஸ்கொயர்லெக்கில் ஒரு சிக்சரையும் லாங் லெக்கில் ஒருசிக்சரையும் விளாசினார், இதில் 2-வது சிக்ஸ் அப்பகுதியில் பீல்டர் இருந்தும் தைரியமாக விளாசப்பட்டது. 53 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் தன்னம்பிக்கையுடன் ஆடிய கவுதம் கம்பீர் 29 ரன்கள் எடுத்து போல்ட் வீசிய இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆனார். பந்து கொஞ்சம் தாழ்வாக வந்தது. கோலி தனது வழக்கமான கவர் டிரைவ் பவுண்டரி அடித்தார்.

புஜாரா 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்தும் கோலி 7 ரன்களிலும் ஆடி வருகின்றனர். இந்தியா உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/3வது-டெஸ்ட்-நன்றாகத்-தொடங்கி-ஆட்டமிழந்த-கம்பீர்-இந்தியா-752/article9201389.ece

  • தொடங்கியவர்

கோலி 13-வது சதம் எடுத்தார்; ரஹானே அபாரம்: வலுவான நிலையில் இந்தியா

 

 
டிரெண்ட் போல்ட் ஷார்ட் பிட்ச் பந்திற்கு விரைவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு புல் ஆடும் விராட் கோலி. | படம்: விவேக் பெந்த்ரே.
டிரெண்ட் போல்ட் ஷார்ட் பிட்ச் பந்திற்கு விரைவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு புல் ஆடும் விராட் கோலி. | படம்: விவேக் பெந்த்ரே.

இந்தூரில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது 13-வது டெஸ்ட் சதத்தை அடித்து ஆட்டமிழக்கமால் இருக்கிறார், ரஹானே 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்து வலுவாகத் திகழ்கிறது.

4-வது விக்கெட்டுக்காக விராட் கோலியும், அஜிங்கிய ரஹானேயும் இணைந்து இதுவரை சேர்த்த 167 ரன்கள்தான் இந்தத் தொடரில் இருதரப்பினருக்கும் ஆகச்சிறந்த சதக்கூட்டணியாகும். ஆட்ட முடிவில் கோலி 103 ரன்களை எடுத்துள்ளார்.

விராட் கோலி 2013-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் முதல் சதம் எடுத்தார். பிட்ச் இரண்டகத் தன்மை கொண்டது. பந்துகள் மேலும் கீழுமாக வந்து கொண்டிருக்கிறது. ஸ்பின்னர்களுக்கு பந்துகள் சில இடங்களில் பிட்ச் ஆகும் போது நன்றாகத் திரும்பியது.

தொடக்கத்தில் கோலி பந்துகளை கணிப்பதில் சிரமம் கண்டார், ஆனால் போகப் போக அவரது கால் நகர்த்தல்களில் தன்னம்பிக்கை ஏற்பட்டது. பிறகு அவரது வழக்கமான ஆட்டம் தொடர்ந்தது. ரன்களையும் வழக்கம் போல் வேகமாக ஓடி எடுத்தார், சதம் எடுத்த ஒரு ரன் கூட ரிஸ்க் ரன் தான். நேர் த்ரோ ஸ்டம்பைத் தாக்கியது, 3-வது நடுவர் தீர்ப்பிற்குச் சென்றது, ஆனால் கோலி அதற்கு முன்னரே சதத்தைக் கொண்டாட ஆயத்தமானார். நாட் அவுட் என்று வந்த பிறகு பெவிலியன் நோக்கி கட்டை விரலை உயர்த்தினார்.

நியூஸிலாந்து பந்து வீச்சாளர்கள் நாளை உடையப்போகும் முதல் நாள் பிட்சில் தங்களால் இயன்றவரை அபாரமாக வீசினர், ஜீதன் படேல் தனது லெந்த், பிளைட், ஆர்க், டிரிப்ட் ஆகியவற்றின் மூலம் சில வேளைகளில் கடும் சிரமங்களை கொடுத்தார், சாண்ட்னரின் சில பந்துகளும் மிடில் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே திரும்பியது. ஜீதன் படேலின் திரும்பிய புல் லெந்த் பந்தில்தான் முரளி விஜய் நேராக ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்தார்.

கம்பீர் ஹென்றியின் ஓரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளை பைன் லெக் மற்றும் ஸ்கொயர் லெக் திசைகளில் இரண்டு சிக்சர்களை அடித்து நியூஸி.யை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். பிறகு ஒரு லெக் திசை பவுண்டரி, ஒரு அவர் பாணி கட் ஷாட் பவுண்டரி என்று 29 ரன்களுக்கு நன்றாகவே ஆடிவந்தார், இன்னும் கொஞ்சம் நின்றிருந்தால் ஸ்பின் பந்து வீச்சை எப்படி ஆட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்திருப்பார், ஆனால் அதற்குள் டிரெண்ட் போல்ட்டின் பந்து ஒன்று இன்ஸ்விங்காகி கம்பீரின் பின்காப்பில் தாக்க எல்.பி.ஆனார். பந்து சற்றே தாழ்வாக வந்தது. கம்பீர் தனது ஸ்டான்ஸில் சிறிய மாற்றம் செய்துள்ளார், சற்றே ஸ்கொயராக நிற்கிறார். அதாவது மொஹீந்தர் அமர்நாத், ஜாவேத் மியாண்டட், சந்தர்பால் ஆகியோர் பாணியில் நிற்கிறார் கம்பீர்.

புஜாரா நிதானமாகத் தொடங்கினார், நல்ல உத்தியுடன் தடுப்பாட்டம் ஆடி 21 பந்துகளில் 4 ரன்களையே எடுத்தார். பிறகு ஹென்றி ஆஃப் வாலி பந்தை வீசும் வரைக் காத்திருந்து கவரில் அற்புதமான பவுண்டரியை அடித்தார். அடுத்த பந்து நல்ல அளவில் வீழ்ந்து சற்றே பிட்சில் நின்று வந்தது, ஆனால் புஜாரா முழுக்கட்டுப்பாட்டுடன் மணிக்கட்டை தளர்த்தி ஆடியதால் பந்து எட்ஜ் எடுத்தாலும் இடைவெளியில் தேர்ட் மேனில் பவுண்டரி ஆனது.

பிறகு சாண்ட்னர், படேல் ஆகியோரையும் பவுண்டரி அடித்த புஜாரா 41 ரன்களில் சாண்ட்னரின் திரும்பிய பந்து ஒன்றில் பவுல்டு ஆனார். முன்னங்காலை இன்னும் நன்றாக நீட்டி ஆடியிருக்கலாம், ஆனால் இப்படிப்பட்ட பந்தை அவர் எதிர்பார்க்கவில்லை. ஜடேஜாவிடமிருந்து இத்தகைய பந்துகளை நியூஸிலாந்து இப்போதே நினைத்துப் பார்த்து அஞ்சியிருப்பார்கள்!

கோலி-ரஹானே சதக்கூட்டணி:

கோலி இந்த டெஸ்ட் போட்டிக்கு ரன் எடுக்கும் நெருக்கடியுடன் இறங்கினார். அரைசதத்திற்கு முன்னதாக படேல் பந்தில் எட்ஜ், பிறகு அரைசதம் கடந்த பிறகு ஜேம்ஸ் நீஷம் பந்தில் ஒரு எட்ஜ், மற்றபடி கோலி நிதானமாக, சாதுரியத்துடன் ரன்களைச் சேர்த்தார். அவர் மட்டையை நியூஸி. பந்துகள் அதிகம் கடந்து செல்ல முடியவில்லை.

செட்டில் ஆன பிறகு அவரது பாணி எக்ஸ்ட்ரா கவர் டிரைவ்கள் அபாரமாக வந்தது. லெக் திசையில் ட்ரெண்ட் போல்ட் பந்து ஒன்று ஷார்ட் பிட்ச் ஆக வந்து எதிர்பார்த்த அளவில் பவுன்ஸ் ஆகாத போதும் அதற்கேற்ப விரைவில் மாற்றி அமைத்துக் கொண்டு புல் ஆடியதும் அபாரம். பிறகு சாண்ட்னரை ஆன் திசையில் அடித்த பவுண்டரியும் வியப்புக்குரியது. டைமிங் அபாரமாக அமைந்தது.

மாறாக ரஹானேயை ஷார்ட் பிட்ச் பந்துகள் சோதனைக்குள்ளாக்கின. ஹென்றியின் ஒரு பந்து உடலைத் தாக்கி பின்னால் சென்றது பிடித்த நியூஸி வீரர்கள் கடும் முறையீடு செய்தனர், ஆனால் தர்மசேனா மசியவில்லை, பந்து கைக்காப்பில் பட்டுச் சென்றது. பிறகு டிரெண்ட் போல்ட் பந்து ஒன்றை புல் ஷாட்டை சரியாக ஆடாமல் மிட்விக்கெட்டில் ஹென்றி டைவ் அடிக்க முன்னால் விழுந்தது. நிறைய ஷார்ட் பிட்ச் பந்துகளில் அவர் தன் கண்களை எடுத்து விட்டு பந்தை ஆடாமல் விட்டார், நீஷம் பவுன்சர் ஒன்று முதுகைத் தாக்கியது. இது அவருக்குச் சோதனை காலகட்டம், ஆனாலும் கடுப்பாகாமல், பொறுமை காத்தார் ரஹானே.

அவ்வப்போது பவுண்டரி அடித்தார், ஸ்பின்னர்களை ஏறி வந்து அடித்தார், சாண்ட்னரை லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்தார், அரைசதத்திற்காக படேலை மேலேறி வந்து தூக்கி சிக்ஸ் அடித்தார்.

விராட் கோலி 108 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் எடுக்க ரஹானே 123 பந்துகள் எடுத்துக் கொண்டார். அரைசதத்திற்குப் பிறகு இருவரும் பிட்சின் தன்மைகளைப் புரிந்துகொண்டு இயல்பாக ஆடினர்.

நாளை இந்த கூட்டணி எதுவரை செல்லும் என்பதே நியூஸிலாந்தின் இன்றைய இரவின் கவலையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. கூட்டணியை உடைத்தாலும் மேலும் உடையும் இந்தப் பிட்சில் பேட்டிங் சுலபமில்லை என்பதும் நியூஸிக்கு பிரதான கவலையே.

http://tamil.thehindu.com/sports/கோலி-13வது-சதம்-எடுத்தார்-ரஹானே-அபாரம்-வலுவான-நிலையில்-இந்தியா/article9202302.ece?homepage=true

  • தொடங்கியவர்

  இந்தியா  391/3 (125.1 ov)

 விராத் கொஹ்லி  168

ரஹ்னே  144

  • தொடங்கியவர்

கோலி இரட்டை சதம் எடுத்து அபார ஆட்டம்

 

 
KOHLI_3038648g_303_3039521f.jpg
 

இந்தூரில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 347 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 200 ரன்களைக் கடந்தார். நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

தற்போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 446 ரன்கள் பெற்று விளையாடி வருகிறது.

http://tamil.thehindu.com/sports/கோலி-இரட்டை-சதம்-எடுத்து-அபார-ஆட்டம்/article9204179.ece?homepage=true

  • தொடங்கியவர்

இந்திய அணி 557 ரன்களுக்கு டிக்ளேர்... விராட் கோலி புதிய சாதனை!

Kholi
 

 

நியுசிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். இதன்மூலம் இந்திய கேப்டன்களில் இரு முறை இரட்டை சதம் அடித்தவர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

இந்தூரில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 267 ரன்கள் எடுத்து இருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. கேப்டன் கோலி 103 ரன்களுடனும், ரஹானே 79 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். தொடக்கம் முதலே இருவரும் சீராக ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய கேப்டன் கோலி 347 பந்துகளில் 200 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய கோலி, ஜித்தன் பட்டேல் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யு ஆகி 211 ரன்களில் வெளியேறினார்.

கோலியுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய ரகானேவும் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 188 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 557 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 51 ரன்களுடனும், ஜடேஜா 17 ரன்களும் எடுத்த நிலையில் களத்தில் இருந்தனர்.

http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/sports/10/61136/virat-kohli-becomes-first-indian-captain-to-score-two-double-centuries

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு 17 ரன், நியூஸி.,க்கு 5 ரன்: பெனால்டி வாங்கிய ஜடேஜா

 

19844_thumb.jpg

 

இந்தியா-நியூஸிலாந்து 3-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.கேப்டன் கோலி 211, ரகானே 188 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 356 ரன்கள் பார்ட்னர் ஷிப் எடுத்து அசத்தியது. முக்கியமாக நியூஸிலாந்து அணி களம் இறங்குவதற்கு முன்பே அந்த அணி 5 ரன்கள் எடுத்து விட்டது. நியூஸி., ரன் வேட்டையை தொடங்குவதற்குள்ளே நமது அணியின் ஜடேஜாவால் அந்த அணிக்கு 5 ரன்கள் போய்விட்டது. இந்தியா பேட்டிங்கின் போது, அம்பயர்கள் பல முறை வார்னிங் செய்தும் நம்ப ஜடேஜா பிட்சின் மேலயே ஒடி கொண்டிருந்தார். இதனால் பெனால்டி முறையில் அந்த அணிக்கு 5 ரன்கள் சென்று விட்டன. நியூஸி., முதல் இன்னிங்சில் 27 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

http://www.vikatan.com/news/flashnews/19844-jadeja-got-penalty-for-ran-on-the-pitch.art

  • தொடங்கியவர்

அஸ்வினின் அபாரப் பந்து வீச்சில் 299 ரன்களுக்குச் சுருண்டது நியூஸிலாந்து; இந்தியா மீண்டும் பேட்டிங்

 

 
டிரெண்ட் போல்ட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு அஸ்வின் கொண்டாட்டம். | படம்: ராய்ட்டர்ஸ்.
டிரெண்ட் போல்ட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு அஸ்வின் கொண்டாட்டம். | படம்: ராய்ட்டர்ஸ்.

இந்தூர் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் 557 ரன்களுக்கு எதிராக நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்சில் 3-ம் நாளான இன்று 299 ரன்களுக்குச் சுருண்டது. அஸ்வின் 6 விக்கெடுகளைச் சாய்த்தார்.

இந்தியா தன் 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது. கம்பீர் காயமடைந்து பெவிலியன் செல்ல புஜாராவும், விஜய்யும் களத்தில் உள்ளனர்.

258 ரன்களை முன்னிலை பெற்றிருந்தாலும் இந்தியா நியூஸிலாந்துக்கு பாலோ ஆன் கொடுக்கவில்லை. அஸ்வின், ஜேம்ஸ் நீஷம் (71) விக்கெட்டை எல்.பியில் வீழ்த்திய போது டெஸ்ட் போட்டிகளில் 20-வது முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவரானார்.

28/0 என்று தொடங்கிய நியூஸிலாந்து அணியில் மார்டின் கப்தில், டாம் லேதம் அபாரமாக ஆடினர், டாம் லேதம் 104 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்களை எடுத்து அஸ்வின் வீசிய அபாரமான மிக மெதுவான பந்துக்கு அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மட்டையின் முன் விளிம்பில் பட்டு அஸ்வினிடம் எளிதான கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டுக்காக கப்தில், லேதம் இணைந்து 118 ரன்களைச் சேர்த்தனர். மார்டின் கப்தில் 86 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

உணவு இடைவேளைக்கு முன்னதாக ஷமி, உமேஷ் யாதவ் நல்ல முறையில் வீசினர், ஆனால் ஜடேஜா பிளாட்டாக வீசினார், பந்தை ஏனோ அவர் தூக்கி வீசவில்லை, அஸ்வினையும் டாம் லேதம், கப்தில் நன்றாக கணித்து ஆடினர், அவ்வப்போது பீட்டன் ஆனாலும் மொத்தமாக நன்றாக எதிர்கொண்டனர்.

ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு பிட்ச் கொஞ்சம் விரிசலுற்றதும், பந்தும் கொஞ்சம் தேய திரும்பலானது. இதனால் 118/1 இலிருந்து 148/5 என்று ஆனது நியூஸிலாந்து. கேன் வில்லியம்சன் அஸ்வின் பந்தை படுக்கை வச மட்டையினால் ஆட முயன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார், அவர் நேர் மட்டையில் ஆடியிருந்தால் ஒருவேளை தப்பியிருக்கலாம், கேன் வில்லியம்சன் 8 ரன்களில் ஆட்டமிழக்க அஸ்வின் அவரை 3-வது முறையாக வீழ்த்தினார். ராஸ் டெய்லருக்கு அருமையான ஒரு பந்தை வீசினார், பந்து திரும்பும் என்று நினைத்தார் ராஸ் டெய்லர், ஆனால் அவரது மட்டைவந்த விதம் ஸ்பின் பந்து வீச்சை எதிர்கொள்ள போதுமானதல்ல, பந்து சற்றே நின்று நேராக வந்தது முன்னாலும் வராமல் பின்னாலும் செல்லாமல் மோசமாக ஆடி டெய்லர் ரஹானேயிடம் கேட்ச் ஆனார். ரன் இல்லை.

அதற்கு அடுத்தபடியாக 144 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்த மார்டின் கப்தில், ரோங்கி பேட்டிங் முனையில் இருந்து அடித்த அருமையான நேர் டிரைவை அஸ்வின் தடுக்கும் முயற்சியில் விரலில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது, கப்தில் கிரீசை விட்டு நகர்ந்திருந்தார் இதனால் ரன்னர் முனையில் ரன் அவுட் ஆனார். இதுவும் அஸ்வினின் ஒரு முயற்சியினால் உருவான அவுட்டே. துரதிர்ஷ்டவசமாக மார்டின் கப்தில் நல்ல இன்னிங்ஸிற்குப் பிறகு வெளியேறினார்.

அடுத்ததாக இந்தத் தொடரில் அருமையாக ஆடி வந்த லுக் ரோங்கி ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் எட்ஜ் எடுக்க ரஹானேயின் அபார கேட்சிற்கு வெளியேறினார். 148/5 என்று சரிவு கண்டது நியூஸிலாந்து.

ஜேம்ஸ் நீஷமும், வாட்லிங்கும் இணைந்து ஸ்கோரை 201 ரன்களுக்கு உயர்த்தினர். வாட்லிங் 23 ரன்களில் ஜடேஜாவிடம் ரஹானே கேட்சிற்கு வீழ்ந்தார்.

பிறகு சாண்ட்னர், நீஷம் ஜோடி 7வது விக்கெட்டுக்காக மேலும் 52 ரன்களைச் சேர்த்தனர், சாண்ட்னர் அருமையான 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் கோலி கேட்சிற்கு வீழ்ந்தார், இந்த இடத்தில் கோலியின் கேப்டன்சி பாராட்டுக்குரியது. ஜேம்ஸ் நீஷம் இந்தத் தொடரில் அதிகம் ஆடவில்லையென்றாலும் அருமையாக விளையாடி 115 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து அஸ்வினின் சாதுரியப் பந்துக்கு எல்.பி.ஆனார். அதன் பிறகு படேல் 3 பவுண்டரிகளையும் ஹென்றி 2 பவுண்டரி 1 சிக்சரையும் அடித்தனர். இந்நிலையில் ஜீதன் படேல் 18 ரன்கள் எடுத்த நிலையில் கப்தில் போலவே அஸ்வின் கையில் பந்து பட்டு ஸ்டம்பைத் தாக்க ரன்னர் முனையில் ரன் அவுட் ஆனார். ஹென்றி கவர் டிரைவ் ஆடும் முயற்சியில் தோல்வியடைய பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு அஸ்வினிடம் கேட்சாக வந்தது கேட்சை விட்டார் ஆனால் பந்து ரன்னர் முனை ஸ்டம்ப்பில் பட படேல் ரன் அவுட் ஆனார்.

டிரெண்ட் போல்ட் வருவது வரட்டும் என்று அஸ்வினை மேலேறி வந்து ஒரு ஷாட்டை தூக்கி அடிக்க சரியாக சிக்காமல் புஜாராவிடம் கேட்ச் ஆனது. போல்ட் டக் அவுட். அஸ்வின் 6 விக்கெட்டுகள். ஹென்றி 15 நாட் அவுட்டாக இருக்க 91-வது ஓவரில் நியூஸிலாந்து 299 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின் 27.2 ஓவர்களில் 5 மெய்டன்களுடன் 81 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 80 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அஸ்வின் 6 விக்கெட்டுகள் என்றாலும் இரண்டு ரன் அவுட்களிலும் அவரது பங்கு இருந்தது, மொத்தம் 8 விக்கெட்டுகள் சரிய அஸ்வின் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பீர் காயம்:

மீண்டும் இந்தியா தன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்க ஒரு அருமையான கட் ஷாட் பவுண்டரியுடன் 6 ரன்களில் இருந்த கம்பீர், போல்ட் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் பிளிக் செய்து விட்டு 2 ரன்களை ஓடினார், அப்போது டைவ் அடித்து ரீச் செய்ய வேண்டியிருந்ததால் மீண்டும் வலது தோளில் காயம் ஏற்பட்டது உடற்கூறு மருத்துவர் மைதானத்துக்கு வந்தார், கம்பீர் வலது கையை அசைக்குமாறு கூறினார், கம்பீரால் முடியவில்லை, பெவிலியன் திரும்ப புஜாரா இறங்கினார்.

விஜய் 11 ரன்களுடனும் புஜார 1 ரன்னுடனும் ஆட்ட முடிவில் களத்தில் இருக்க இந்தியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழக்காமல் 18 ரன்கள் எடுத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/அஸ்வினின்-அபாரப்-பந்து-வீச்சில்-299-ரன்களுக்குச்-சுருண்டது-நியூஸிலாந்து-இந்தியா-மீண்டும்-பேட்டிங்/article9206837.ece?homepage=true

  • தொடங்கியவர்

புஜாரா அசத்தல் சதம்

puraja%20test%20long.jpg

இந்தூரில் நடந்து வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 3டெஸ்ட் போட்டியில் புஜாரா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 557 குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் கோலி 211 ரன்னும், ரஹானே  188 ரன்னும் எடுத்தனர். நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 299 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. கெளதம் கம்பீர் 50 ரன்னும், முரளி விஜய் 19  ரன்னும் எடுத்தனர். புஜாரா அபாரமாக விளையாடி தனது 8வது சதத்தை நிறைவு செய்தார். தற்போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 101 ரன்னில் களத்தில் உள்ளார். முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசிய கோலி 17 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

http://www.vikatan.com/news/sports/69342-india-declare-with-pujara-ton.art

  • தொடங்கியவர்

அஸ்வின் சுழலில் நியூஸி.யை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

 

 
aswin_3040870f.jpg
 

நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தனது அபார பந்துவீச்சால் இரண்டாவது இன்னிங்ஸ்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், ஏற்கனவே 2 வெற்றிகளுடன் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது.

துவக்க வீரராக களமிறங்கிய லாதம் முதல் ஓவரின் 4-வது பந்தை அதிரடியாக சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் உமேஷ் யாதவ் வீசிய 2-வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். கப்டில் - வில்லியம்சன் ஜோசி தேநீர் இடைவேளையைத் தாண்டி களத்தில் நின்றாலும், இடைவேளை முடிந்த இரண்டாவது ஓவரில் வில்லியம்ஸன் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் வில்லியம்ஸன், அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழப்பது இது 4-வது முறையாகும்.

அடுத்து களமிறங்கிய ராஸ் டெய்லர், ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் தனது அதிரடியை தொடங்கினார். ஆனால் அவரும் நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை. 25 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று ஸ்டம்பை இழந்தார். 80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்த நிலையில் கப்டில் மட்டுமே சிறிது ஆறுதல் அளித்தார்.

ரான்க்கி 15 ரன்கள், நீஷம் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஒரு கட்டத்தில் கப்டிலும் 29 ரன்களுக்கு ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார். அடுத்த சில ஓவர்களில் சாண்ட்னர் 14 ரன்களுக்கு அஸ்வினின் ஆஃப் ஸ்பின் பந்தில் பெவிலியின் திரும்பினார். அஸ்வினின் அடுத்த ஓவரிலேயே புதிய வீரர் படேல் பந்தை ஸ்வீப் செய்ய முயல, பந்து மட்டையில் படாமல் ஸ்டம்பை தாக்கியது.

அதே ஓவரில் ஆஃப் ஸ்டம்பைத் தாண்டி வந்த பந்தை தூக்கி அடிக்க முயன்ற ஹென்றி, மிட் ஆஃப் பகுதியில் இருக்கும் முகமது ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், பவுல்டும் 4 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வினிடம் காட் அண்ட் பவுல்ட் ஆனார், இதன்மூலம் இந்த இன்னிங்ஸ்சில் அஸ்வின் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் 3-0 என்ற கணக்கில் இந்தத் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் வெற்றி பெற்றது.

வால்டிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்திருந்தார். 475 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 153 ரன்களே எடுத்து 321 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

புஜாரா சதம், காம்பீர் அரை சதம்

முன்னதாக 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்திருந்தது. துவக்க வீரர் முரளி விஜய் 19 ரன்களில் ரன் அவுட் ஆனார். நேற்று தோள்பட்டை காயத்தால் ஆடமுடியாமல் வெளியேறிய கவுதம் காம்பீர் தொடர்ந்து களமிறங்கினார். புஜாராவும் காம்பீரும் சீரான வேகத்தில் ரன் சேர்க்க, இந்தியாவின் 2-வது இன்னிங்ஸ் ரன் முன்னிலையும் உயர்ந்தது.

காம்பீர் 54 பந்துகளில் அரை சதம் எடுத்தார். ஆனால் அடுத்த ஓவரிலேயே படேல் பந்தில் ஆட்டமிழந்தார். காம்பீரும் - புஜாராவும் பார்ட்னர்ஷிப்பில் 76 ரன்களை சேர்த்திருந்தனர். அடுத்து கோலி களமிறங்க, மறுமுனையில் புஜாரா தனது அரை சதத்தை எட்டினார். இந்தத் தொடரில் அவர் அடிக்கும் 4-வது அரை சதம் இது. உணவு இடைவேளையின் போது இந்தியா 127 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இடைவேளைக்குப் பிறகு இந்தியா தனது முன்னணியை 400 ரன்களைத் தாண்டி எடுத்துச் சென்றது. முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் எடுத்த கோலி இன்று 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரஹானே புஜாராவுடன் இணைய இருவரும் நியூஸிலாந்தின் பந்துவீச்சை சோதிக்க ஆரம்பித்தனர்.

147 பந்துகளில் ஒரு பவுண்டரி மூலம் புஜாரா தனது சத்தைக் கடந்தார். அந்த ஓவர் முடிந்ததும் இந்தியா டிக்ளர் செய்வதாக அறிவிக்க நியூஸிலாந்துக்கு வெற்றி இலக்காக 475 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ரஹானே ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 216 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

http://tamil.thehindu.com/sports/அஸ்வின்-சுழலில்-நியூஸியை-ஒயிட்வாஷ்-செய்தது-இந்தியா/article9208086.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.